தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த
சிங்காநல்லூர்
செல்லாண்டியம்மன் பதிகம்
காப்பு
(நேரிசை
வெண்பா)
செல்லாண்
டிலகுபொழில்ச் சிங்காநல் லூர்மருவுஞ்
செல்லாண்டி
யம்மைதுதி செப்புதற்கு - மல்லாண்ட
திண்தோள்ப்
பரமனருள் சிந்தூர மாமுகவன்
வண்டார்பூஞ் சேவடிகா
வல்.
(1)
நூல்
(எண்சீர்
ஆசிரிய விருத்தம்)
பொருவறுசீர்த்
திங்கள்நிகர் வதனமும்மெய்க் கருணை
பொலிவிழியுங் கனிவாயும் பொற்கமல மலர்நேர்
உருமருவுந்
திருத்தாளு மழகுதிகழ் மற்றை
ஓங்குறுப்பெல் லாமிலகப் பாங்குடன்வந் தருள்வாய்
தருவருக்கம்
மலியிமய மலையரசன் மகளாய்ச்
சார்ந்துபரன் றனைமணந்து சரிபாதி யானாய்
திருவருளே
வடிவாகச் செழுங்கருணை புரிவாய்
சிங்காநல் லூர்மருவுஞ் செல்லாண்டித் தாயே.
(2)
மொய்தவழ்பல்
மணமலரா லுனையருச்சித் தேத்தும்
முத்திநெறிப் பத்தர்களை நத்திவணங் கறியேன்
பொய்தயங்கு
முலகியல்பை மெய்யெனக்கொண் டமைவேன்
புன்மையினைக் கருதாமல் நன்மையுறப் புரிவாய்
வைதவர்க்கு
முயர்பேறு மகிழ்ந்தருளி மயிலூர்
வண்குமரன் கைவேலாய் வயங்குபரா சத்தீ
செய்தவத்துப்
பெரியர்மனக் கோயிலிடத் தவிர்வாய்
சிங்காநல் லூர்மருவுஞ் செல்லாண்டித் தாயே.
(3)
ஞாலமிசைச்
சேயாகிக் குமரனென வளர்ந்து
நரைதிரைநோய் மூப்பிசைய நலிகிழவ னாகிக்
காலனுக்கா
ளாய்ப்பிரமன் காமனெனு மிவர்தம்
கையடைத்து நையாமல் கண்ணருளால் காப்பாய்
கோலமுறும்
மதுரைமல யத்துவச மன்னன்
குயிற்றுமழல் வேள்வியினில் குழந்தையுருக்
கொண்டு
சீலமுறு
மீனாட்சி யாய்யாட்சி செய்தாய்
சிங்காநல் லூர்மருவுஞ் செல்லாண்டித் தாயே.
(4)
காஞ்சனம்மண்
மகளிரெனக் கழறிடும்மூ வாசைக்
காற்றினில்ப்பஞ் சாயலைந்து கண்கலங்கா துனையே
நோஞ்சளமெத்
தனைவரினுந் தளராமல் போற்றும்
நுண்ணியர்தோய் புண்ணியர்சீர் நண்ணிடவந்
தருள்வாய்
தாஞ்சடலம்
விடுத்திடும்நாள் முத்திதரும் காசித்
தலம்காண விரும்புகவி ராசனுளம் மகிழத்
தீஞ்சுவைப்போ
னகம்சமைக்க மகளுருவாய் வந்தாய்
சிங்காநல் லூர்மருவுஞ் செல்லாண்டித் தாயே!.
(5)
வஞ்சகம்பொய்,
சூதுகொலை புலைகளவு காம
வசப்படுவோ ருடனிணங்கி மயங்கியறி விழந்தேன்
துஞ்சவரு
முடலினது நிலையாமை யறிந்துந்
துதித்துன்னைப் பணியாது துயரம்மிக வடைந்தேன்
அஞ்சலென
நீயெனக்கோ ரருட்சேவை வழங்கி
ஆண்டிலையே லீண்டெனக்கோ ராதரம்வே றுளதோ
செஞ்சரணக்
கஞ்சமதே தஞ்சமெனக் கொண்டேன்
சிங்காநல் லூர்மருவுஞ் செல்லாண்டித் தாயே.
(6)
ஆவியுடல்
பொருளென்னும் மூன்றினையு முனக்கே
அளித்தருளில்க் குளித்துமனக் களிப்படையா
தடியேன்
பாவிகள்போல்
மாயவலைப் பட்டுளம்கெட் டலைந்தேன்
பழிப்பறுமுன் விழுமித்துணையில் பார்த்தருளப்
பணிந்தேன்
காவிமலர்
அனையவிழிக் கவுமாரி! சூலம்
கைப்பிடித்து மயிடனுயி ரைக்குடித்துப்
பரமன்
தேவியென
இடப்பாகத் திலங்கிடுவாய் பொழில்சூழ்
சிங்காநல் லூர்மருவுஞ் செல்லாண்டித் தாயே!.
(7)
அவனவளோ
டதுவுமென அவிர்மூன்றா யுலகம்
அனைத்தும்நிறைந் திடுபரமற் கவிர்மனைவி
யாகி
புவனமெலா
மீன்றருளுந் தாயாகி விளங்கும்
புவனையே திரிபுரையே போற்றெழிற் சீகாழித்
தவமெனவந்
தருள்ஞான சம்பந்தன் தனக்குத்
தந்தருள்பா லமுதிலொரு சற்றெனக்கீந்
தருளச்
சிவபெருமா
னுடன்விடையில் திருக்காட்சி நல்காய்
சிங்காநல் லூர்மருவுஞ் செல்லாண்டித் தாயே.
(8)
கங்கணமு
மரைஞாணுங் காதணியாம் குழையுங்
கட்செவியென் றணிபரமன் கவினுருவில் பாதி
பங்குபெற்றுச்
சிவனொடுநீ வேறல்லா ஞாயம்
பத்தரறிந் துய்வுறச்செய் பண்பையறி கில்லேன்
கங்குலுறு
மமாவாசை யன்று முழு நிலவாம்
காலமெனக் கழறுமடி ராமபட்டர்க் கிரங்கித்
திங்கள்வரக்
குழையையெறிந் துலகுணரச் செய்தாய்
சிங்காநல் லூர்மருவுஞ்செல்லாண்டித் தாயே.
(9)
இச்சையுடன்
கிரியையுயர் ஞானமெனும் மூன்றாய்
இலகலுற்றாய் சிவனோடு மிணைபிரியா தவிர்ந்தாய்
கொச்சைமனச்
சிறியனுனைப் போற்றுந்நெறி அறியேன்;
குலவருளா லடியேன்மு னிலகிவரந் தருவாய்
பச்சைநிறத்
திருமாலுள் மெச்சுதங்கை யானாய்
பாம்பணிவார் மனம்மகிழும் சாம்பவிசா முண்டீ
செச்சைமலர்க்
குகனையைங்கைக் குஞ்சரத்தைப் பெற்றாய்
சிங்காநல் லூர்மருவுஞ் செல்லாண்டித் தாயே.
(10)
வெங்கண்ணசு
ரச்செயலாய் நின்திருமுன் பலவா
மேவுமுயிர்க் கொலைபுரியும் வீணர்களை யடக்கித்
துங்கமுறு
கனிமுதலா வனதொகுத்துப் பரவுந்
தூய்மையை வேட்டனர்மெய்த் தொண்டர்பலர் சிறிதே
பொங்கமுற்ற
தெனினுமின்னம் மக்கள்மனம் கருணைப்
புனிதமுற வில்லையவர் பொருந்துமனம் திருந்தச்
செங்கனல்கண்
சிங்கமிசை வந்துவரந் தருவாய்
சிங்காநல் லூர்மருவுஞ் செல்லாண்டித் தாயே.
(11)
தாயாகு
முன்சமுகஞ் சேயாகு மடியேன்
சாற்றுமொரு விண்ணப்ப மேற்றருள வேண்டும்
பேயாக
யெனையசைக்கும் மனமடங்க வேண்டும்
பேசுவதுன் புகழாகும் பெருநிலை வேண்டும்
வேயாகுந்
தோள்மகளிர் நினதுவடி வென்ன
வேநினைக்கும் நிலைவேண்டும் வேண்டுமென துளத்தில்
சீயமிசை
யென்னாளும் நீயிலக வேண்டும்
சிங்காநல் லூர்மருவுஞ் செல்லாண்டித் தாயே.
(12)
கொங்கிலணி
தங்கும்வளக் கோவைநகர்க் கீழ்ப்பால்
கோலம்நிறை நூலாலைச் சீலம்மிகக் கொண்டே
செங்கமல
மங்கையும்வெண் பங்கயமா தவிரும்
சிங்காநல் லூர்மருவுஞ் செல்லாண்டித் தாயைக்
கொங்குமலர்ச்
சோலைவளச் சிரவையிற்கௌ மாரக்
குருகந்த சாமிமுனி திருவடித்தா மரையே
மங்கலமார்
செல்வமெனக் கொளுஞ்சிறியேன் புகல்பா
வழுத்துமவர் பலநலமும் வயங்கிடுவார் தாமே.
(13)
திருப்புகழ்
தந்தாதன
தானன தானன - தனதானா
கொங்காரல
ராலணி மாலைகள் - புனைமேலோர்
கொண்டாடுமு னாதிசை பாடியுள் - மகிழேனோ
வெங்காலன்வ
ராமுனம் யானருள் - பெறுமாறே
மின்போலொளிர் சேவையை நீதர - இசைவாயே
கங்காளம
யேசுர னார்மகிழ் - வடிவாளே
கண்டோடுவி ராவிய பால்நிகர் - மொழியாளே
சிங்காரம
னேகம்நி லாவிய - உயர்சீர்தோய்
சிங்காநல வூரிடை மேவிய – உமையாளே.
தய்யாந்தன
தானன தானன - தனதானா
மையார்ந்திடு
வாள்விழி மாதரை - மிகவாயே
வைதேங்கிடு தீவினை போயுனொர் - வடிவாநேர்
மெய்யாம்தவ
மாதவர் தாள்பணி - தவம்நாயேன்
மெய்தாங்கிடு மாறருள் நீசெயல் - விழைவேனே
கையேந்திடு
நீள்கழை யானவில் - உடையாளே
கள்ளேய்ந்தகு ராயணி வேள்மகிழ் - அனையாளே
செய்யோங்கிட
நீள்மழை நீர்தரும் - இசையாலே
செல்லாண்டியெ னாவரு பேர்பெறும்– உமையாளே.
வாழி வெண்பா
(நேரிசை
வெண்பா)
சிங்காநல்
லூர்வாழ்க! சேரு மவ்வூர்க் கோயிலிடந்
தங்குமியல்
செல்லாண்டித் தாய்வாழ்க - மங்களமாய்ச்
சென்றுபணி
வோர்வாழ்க சீலநெறி யாளரெலாம்
என்றுமிக
வாழ்க இனிது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக