தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த
ஆவாரம்பாளையம்
இஷ்டசித்தி விநாயகர் பதிகம்
காப்பு
(நேரிசை வெண்பா)
சீரனைத்தும்
நல்குமிட்ட சித்தி விநாயகனைப்
பாரவிரும்
சோபனவூர்ப் பண்ணவனை - நேரவிர்ந்து
போற்றும்
பதிகம் புகல வருள்வழங்கித்
தோற்றுமவன் தாளே
துணை.
(1)
நூல்
(எழுசீர்
ஆசிரிய விருத்தம்)
திருவளர் கருணை பொழிவிழி மலரும்
சிந்துர முகமும் வண்செவியும்
மருவளர்
கொன்றை தும்பைவெண் மதிதோய்
மணிமுடிம் கவினும் மாமலர்நேர்
குருவளர்
பாதத் துணையுமென் விழிநேர்
குலவிடக் காட்சியீந் தருள்வாய்
தெருவளச்
சோப னப்பதி இட்ட
சித்திவி நாயக மணியே.
(2)
நல்வர
முன்பால் பெறுவது கருதி
நாள்மல ரிட்டவர் தமக்கும்
வில்வமோ
டறுகு பச்சிலை யாதி
விருப்பமோ டணிபவர் தமக்கும்
பல்வளங்
களும்தந் தருள்வாய் குகற்குப்
பரிவுறும் துணையெனா அவிர்ந்தாய்
செல்வம்நீள்
சோப னப்பதி இட்ட
சித்திவி நாயக மணியே.
(3)
பந்தபா
சத்தில் சிக்கிவீண் போது
பலகடத் திடினுமுன் றன்னைச்
சிந்தையி
னன்போ டொருகண மேனுந்
திருவடி தொழும்நல மருள்வாய்
வெந்தெடுத்
திட்ட வுண்டியின் வகையும்
மிக்ககாய் கனியுமுண் டுவப்பாய்
செந்தமிழ்ச்
சோப னப்பதி இட்ட
சித்திவி நாயக மணியே.
(4)
கொன்றுமவ்
வூனைத் தின்றும்வா ழாமல்
குலவுமன் போடுனைப் போற்றும்
நன்றமை
யன்பர் நாடிய யெவையும்
நாள்தொறும் நல்கிடச் சலியாய்
பொன்றனை
நிகர்க்கும் பூவினம் மலர்ந்து
பொலிமண முடன்வரும் மேன்மைத்
தென்றலார்
சோப னப்பதி இட்ட
சித்திவி நாயக மணியே.
(5)
நாடிநாள்
தோறும் வணங்கிடு மவரும்
நல்விர தத்தின மதனில்
கூடியேத்
துநரு மின்னிசை யோடு
குலவிட நல்த்துதிப் பாடல்
பாடிடு
வோரும் பணிசெய்வோர் தாமும்
பலனுற வருள்செய்வா யன்பர்
தேடிவந்
திடுசோ பனப்பதி இட்ட
சித்திவி நாயக மணியே.
(6)
நம்பிரா
னென்ன நம்பிநிற் பரவும்
நம்பியாண் டானெனும் நம்பி
வெம்டபிடா
வாறு தும்பியங் கரத்தால்
விரும்பெலா வுணவுமுண் டிடுவாய்
கொம்பிலங்
கிடுசீர்க் குஞ்சர முகனே
கும்பிடு பவர்க்கெலாம் நலம்சேர்
தெம்பிசை
சோப னப்பதி இட்ட
சித்திவி நாயக மணியே.
(7)
கைவயிற்
கொம்பும் கணியும்வைத் திருமேற்
கையினில் பாசவங் குசமும்
மெய்வலி
மூடி கத்தினில் திகழ்ந்து
மேவவுங் காணும்நா ளென்றோ
செய்தவப்
பெரியோர் போற்றும்முன் னவனே
தேவரை தியருமேத் தெடுக்குந்
தெய்வமே
சோப னப்பதி இட்ட
சித்திவி நாயக மணியே.
(8)
காலனைக்
கடிந்த கண்ணுத லளித்த
கடவுளே ஐங்கரப் பரனே
ஞாலம்
தொவ்வோர் காலமும் வந்து
நண்ணியன் போடுவா லிபரும்
பாலரும்
கோல மாதரும் விருத்தப்
பான்மையோ ரும்தொழ வருள்செய்
சீலனே
சோப னப்பதி இட்ட
சித்திவி நாயக மணியே.
(9)
காரணி மேனி மாயனோ டுதித்த
கவுரியம் கவினுறு கங்கை
நீரணி
வேணிப் பரமனும் விரும்பும்
நின்மலக் களிற்றுமா முகனே
சீரணி
யாம்மெய்த் திருவருட் பேற்றைச்
சேர்ந்திட நாடிமெய் யன்பர்
சேரணிச்
சோப னப்பதி இட்ட
சித்திவி நாயக மணியே.
(10)
பாவனைத்
தேத்திப் பரவிய ஒளவை
பரமன்வாழ் கயிலைமால் வரையில்
மேவமுன்
தூக்கி விட்டதைப் போல
மெய்ந்நெறி யாம்பெறப் புரிவாய்
ஆவலாய்
நினக்குத் தொண்டுசெய் பவர்களுக்கு
அளவிலா நலந்தினம் புரியும்
தேவனே
சோப னப்பதி இட்ட
சித்திவி நாயக மணியே.
(11)
நூற்பயன்
(நேரிசை
வெண்பா)
சிரவையினில்க்
கௌமாரர் சேகரமா மன்னும்
குரவன்
அருள்சிரத்தில்க் கொண்டு - விரவுதவச்
சுந்தரப்பேர்
தோயடியேன் சொற்றவிப்பாக் கற்பவர்க்கு
வந்தமையும் மேலாம்நல்
வாழ்வு.
திருப்புகழ்
தத்தனத்
தத்தன தானனத் - தனதானா
மைப்பகட்
டில்த்திரி ஏமனுக் - கயராதே
மட்டில்சிட் டிப்பிர மானெனைக் - கருதாதே
செப்பலர்க்
கைச்சமர் மாரனுக் - கிளையாதே
சிற்பரத் துற்றவிர் ஞானமெய்ப் - பதமீவாய்
கைப்பகட்
டுத்திரு மேனியுற் - றவிர்வோனே
கட்புலத் துக்கெளி தாவரத் - தரும்நாதா
எய்ப்பகற்
றத்தரு சோபனப் - பதியூடார்
இட்டசித் திக்கண நாதநல்ப் – பெருமாளே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக