வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
திருப்புகலூர்த் திருநாவுக்கரசு நாயனார் பதிகம்
காப்பு
(நேரிசை
வெண்பா)
நல்லோர் மதித்ததிரு
நாவுக் கரசாய
வல்லோனைத் தென்புகலூர்
வாய்வழுத்தற் – கெல்லோங்கு
தொந்திவயிற் றானுஞ்
சுடர்வேன் முருகோனும்
வந்தினிய சொற்கண்
லகுவார்.
பதிகம்
(அறுசீர்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
செந்தமிழ் துதிப்பே
ராசைச்
சிவனிநாள்
சிறியேன் செப்புஞ்
சந்தவான் கவிக்குஞ்
சற்றுந்
தயைசெயா
திருப்ப தேனோ
வந்தநா ளமணர் செய்யு
மருந்துய
ரனைத்து நீங்கி
நந்தலி லருட்சீர்
தோய்ந்த
நாவினுக்
கரச னாரே.
(1)
காய்க்க குணமே போலுங்
கருநிறச்
சமணர் கட்குப்
போய்நீ ரெந்த வாறு
புராரிதாட்
புணைகொண் டீரோ
நேயமுந் துதியுந்
தொண்டு
நின்றவுறச்
செய்திட் டுய்ந்த
நாயன் மார்களின்
மிக்கோர்
நாவினுக்
கரச னாரே.
(2)
உமக்குநற் றவமுண்
டாவா
னுமையொரு
பாகற் போற்றுந்
தமக்கைபோ லெனக்கா
ரேனுந்
தலையெடுத்
திலரென் செய்வேன்
கமரக் கிடைசொரிபா
லென்னக்
காலம்வீண்
கழிப்போர் வெல்லா
நம்பபெருங் கலகந்
தீர்ந்த
நாவினுக்
கரச னாரே.
(3)
கங்கையஞ் சடையார் தங்கட்
கருணையங்
கடலின் மூழ்கிச்
சங்கையற் றுய்த னாடித்
தவித்துளேற்
றமுவொண் ணாதோ
கொங்கையுஞ் சிறிது
தோன்றக்
குறுநகை
விளைக்கும் விண்ணூர்
நங்கையர் தமையும்
வேண்டா
நாவினுக்
கரச னாரே.
(4)
வெள்ளிய நீற்றின்
மூழ்கி
விரிதலை
முடியா ராகிக்
கள்ளினு மினித்த
பாடற்
கழறுவார்
கணத்தென் றார்வே
னொள்ளிய மணியும்
பொன்னு
முறுத்துகற்
பறலிற் சேர்த்தே
நள்ளிடா தெரியும்
பான்மை
நாவினுக்
கரச னாரே.
(5)
பாகமோர் சிறிதுந்
தேறாப்
படியிற்றுரைப்
புலவர் போன்றே
யாகம் விட்டினியோர்
தேகத்
தடைவுறா
விதஞ்சொற் றாள்வீர்
சோகமோர் சிறிதுந்
தோயாத்
தொண்டனார்
மகனைக் கொன்ற
நாவல் விடமுந்தீரத்
தீர
நாவினுக்
கரச னாரே.
(6)
கௌவியப் பெருமை தேறாக்
கடையர்போற்
காலிக் கூட்டம்
வெவ்வினைப் பதிதா
தம்மான்
மெலியுநாள்
வீடும் வேண்டே
னௌவியத் தருகர் நாண
வலைக்கட
னடுவி லன்றோர்
நவ்வியிற் கருங்கல்
லூர்ந்தீர்
நாவினக்
கரச னாரே.
(7)
விசையன் வில்லடிக்கும்
வேண்டல்
விரைந்தருள்
விமல மூர்த்தி
யிசைகொளென் றுதிச்சொற்
கியாது
மீந்திடா
திருப்ப தேனோ
திசையுணர் வேதக்
காப்புத்
திறந்திடச் செய்த வாறே
நகையெலா முடிக்க
வல்லீர்
நாவினுக் கரச னாரே.
(8)
அவிர்சடை பரமன் றானே
யாதியென் றுணர்த்து மான்ற
கவிமிகப் பகர்ந்தீர்
நம்பிக்
கவன்றுளேன் களிப்பச் செய்வீர்
செவியிரு பதுபெற்
றானவன்
சிந்தையாங் குவப்ப வோர்சொ
னவில்பெருங் கருணைப்
பண்பீர்
நாவினுக் கரச னாரே.
(9)
தானமால் களிற்றுச்
சென்னித்
தலைவனுங் குகனும் போல்வர்
ரானநால் வரின்மூத்
துள்ளீ
ரடியனெற் கருள்செய் யீரோ
பானம் புகன்றசீர்
குன்றாப்
பணைத்திரு புகலூர்க் கோயின்
ஞானநா யகனுட் சேர்ந்தீர்
நாவினுக் கரச னாரே.
(10)
தெம்பறா மனத்தோர்
போற்றத்
திருப்புக லூரில் வாழு
நம்பனார் வடிவிற்
சேர்ந்த
நாவினுக் கரச னாரை
யெம்பரும் வாழ்தல்
வேண்டி
யெழிற்றிருப் புகழோன் பாடல்
கம்பலை முழுதுந்
தீர்த்துக்
களிப்புமுற்
றிக்கு மன்றே.
(11)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக