வியாழன், 24 செப்டம்பர், 2026

திருப்புகலூர் ஞான விநாயகன் பதிகம்

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

திருப்புகலூர் ஞான விநாயகன் பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

வானவரும் போற்றும் வளஞ்சேர் திருப்புகலூர்

ஞான விநாயகனா நாதனே – யீனக்

கருத்தோரை வெல்லக் கருதிக் கவன்றேன்

றிருத்தோர் நனவிற் றிகழ்ந்து.

 

பதிகம்

(கலித்துறை)

பொன்மை நிறப்புக ராலணிமிக் குறுபூட்கை யுருக்கொடநாள்

வன்மை புறத்தும கத்தரு ளுங்கொள்வழக் கறிவித்திலையோ

மென்மை மொழிக்கிளி யனன்தொர வல்லவைமே வியபாகமுளாய்

நன்மை மிகப்பொலி யும்புக லூர்வளர்ஞான விநாயகனே.

(1)

பாலரி னத்தொடெ னைத்தழு விக்கொலைபாத கருக்கெமனாஞ்

சீலம ளித்திடி னல்லது மற்றோதிருத் தியெய்தேனறிவர்

யாலமி டற்றிறை செய்தவ சால்வரு மானைமுகத்தரசே

ஞானமு ணர்ந்தபு கழ்ப்புகலூர் வளர்ஞான விநாயகனே.

(2)

ஆர்வமு டன்றுதி செய்திடு பேறுமளித் திலையாகுலமா

நீர்வயின் மூழ்கின னென்றினி யென்றனிரப் பொழியப்புரிவாய்

பூர்வ வினைப்பய னிற்றியருட் கடல்புக்கு லவத்தளர்மெய்ந்

நார்வளர் தொண்டர்வரும் புகலூர்வளர் ஞான விநாயகனே.

(3)

பாக நயத்தமிழா லுனைநன்கு பழிச்சு கிலார்சிலரும்

போக மனந்தநுகர்ந் திடல்கண்டு புழுங்கு வதென்றொழிவேன்

கோக னகன்றிருமான் முதலோர்குடி கொண்டு றுபண்டியினமே

னாக மணிந்தவனே புகலூர்வளர் ஞான விநாயகனே.

(4)

கொஞ்சு மொழிச்சிறுமங் கையர்பற்பலர் கோல நினைத்துழலென்

னெஞ்சு ளுனாதுருவுஞ் சிலவேளை நிலவி யதில்லைகொலோ

பிஞ்சு மதிச்சடையா தியசீர்பல பிஞ்ஞ கனிற்கொடுகார்

நஞ்சு மருந்தியுய்வாய் புகலூர்வளர் ஞான விநாயகனே.

(5)

எள்ளு மொழிக்கொரிலக் கெனவேநிக ழென்னொ டுநீயொருநாள்

விள்ளு மொழிப்பயனெய் திடினல்லது வேத நிசப்படுமோ

வள்ளு ரமுங்கொள்புலைக் கொடியோரத மகிழ்ச்சி யறச்செயலே

நள்ளு மவர்க்கெளியாய் புகலூர்வளர் ஞான விநாயகனே.

(6)

வண்ண மிகுங்கனகக் கிரியின்றுனி வல்லை யிலைகெனுமென்

னெண்ண மறிந்துமிரங் குகிலாய்நினி சைக்கி துவுந்தகுமோ

புண்ண யிலத்தகுமென் றுமிகப்பொரு புத்தர் முதற்பலரா

நண்ண லரைச்செறுவார் புகலூர்வளர் ஞான விநாயகனே.

(7)

கதியி னுமிக்கதுகா லிபுரந்து கடற்பு வியின்புறநல்

விதிக ளனைத்துநிறுத் தலெனத்தெளி வேனை வெறுத்துவிடேல்

பொதிய மலைக்குறு முனிவன்பணி போத விழைந்ததனா

னதிக ளிரண்டருள்வாய் புகலூர்வளர் ஞான விநாயகனே.

(8)

வேண வையாவுமெய் யன்பர்களெய்த விரைந்த ருளத்தகுநீ

யாண மிலேனதுநெற் றியில்வெண்பொடி யன்று தரித்திலையோ

பாண விழிக்குறமின் குகனைப்புணர் பான்மை விளைக்கவுமுண்

ணாண முமெய்துகிலாய் புகலூர்வளர் ஞான விநாயகனே.

(9)

பல்லிலதாய் மெல்வாயுறு மௌவை பகர்ந்த சொலத்தனையுஞ்

செல்லிலி கத்தொலி தந்திட முன்புரி சீல மறந்தனையோ

வல்லி மலர்ப்பிரமா மொழியேனும் சட்ட தெனிற்றழுவா

நல்லி தயத்தினர்சூழ் புகலூர்வளர் ஞான விநாயகனே.

(10)

ஏக மயப்பிர மத்துரு வர்நிகழி யானையை யீன்றெய்தா

நாக ரிகத்தினர் வாழ்புக லூர்வளர் ஞான விநாயகனைத்

தேக முடன்கதி சேர்வது நத்துதி ருப்பு கழோனுவல்பாட

மூகமு டைத்தென நண்ணி வழுத்திலு வப்பு மிகத்தகுமே.

(11)

முற்றிற்று.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக