வண்ணச்சபரம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
திருப்புகலூர்த் திருவருட் சிவன் பதிகம்
காப்பு
(நேரிசை
வெண்பா)
தென்புகலூர்ப் பாகிறி யேன்றுதிபு ணைந்தீண
டின்புதவ வேண்டு மிகழாதே – முன்பு
கணிகை மகட்கீவாற்குங் காசறு பொற்செங்க
லணியளித்தா யன்றோ வறை.
பதிகம்
(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
சாகரத் தொருகருங் கல்லுட னழிவான்
றனையெடுத்
தாண்டது சத்திய மானாற்
சூகரத் திறைச்சியும் பசுநிணந் தானுந்
துய்ப்பவர்ச்
செறுந்திறந் தோய்த்தெனை யாள்வாய்
மாகரஞ் கலித்திறைஞ் கிடுந்தொறு மவர்க்காம்
வகைபுரி
வாய்மலை மங்கையங் குடையாய்
சீகரப் புனற்சடைப் பவளவெற் பனையாய்
தென்புக
லூர்வளர் திருவருட் சிவனே.
(1)
கொங்கை மங்கையர் மயற்கடலிடை நாளுங்
குளிப்பினு
நின்னருட் கொள்ளைகொண் டுலகோர்
சங்கையிலா நலம்பெற் றுய்யச்செய் வானற்
வித்துள
னாலெனைத் தள்ளிட வேண்டாங்
கங்கையுங் கொன்றையுந் தும்பையு மறுகுங்
கட்செவி
யுடன்புனை கவின்சடை யானே
செங்கையின் மான்மழு வணிதரு விமலர்
தென்புக
லூர்வளர் திருவருட் சிவனே.
(2)
உத்தமப் பத்தியில் லார்சிலர் தாமு
முன்னி
யவர்பய னுற்றவிப் பாரி
லித்தனை வாறடியே னறுயர்ப் படக்கண்
டிருப்பதென் னோவுன தெண்ணமெத் தகைத்தோ
பித்தனென் றிகழ்ந்தவர் தம்மையு மேனாள்
பேணியும்
புகழ்புனை பெருந்தகை யோனே
சித்தர்தங் கணத்தினுக் கோரர சானாய்
தென்புக
லூர்வளர் திருவருட் சிவனே.
(3)
அங்கணச் சேற்றுழல் சூகர மனையர்
ராவணவ்
நோய்மலிந் தகஞ்செருக் குதலோர்ந்
திங்கருந் தவர்மிக வாடுதல்கண்டு மிரக்க
மொரணுத்
துணையென செய்கின் றிலையோ
புங்கவ ரென்பணிந் தாடவல் லானே
புரமொரு
மூன்றும்வெண் பொடிபட நகைத்தாய்
சிங்கமும் புலியும்வல் வேழமு முரித்தாய்
தென்புக
லூர்வளர் திருவருட் சிவனே.
(4)
சொற்சுவை யணுத்துணை யறிகிலா தம்மேற்
சுபகரத்
தமிழ்க்கவி சொல்லியன் னவர்தம்
பிற்சுணங் கனிற்றிரி தருபுல வோரும்
பேயனென்
றிகழெனைய பேணியென் றருள்வாய்
விற்சு வணக்கிரி யாகவென் றெடுத்தாய்
வெண்கடற்
கார்விட மிளிர்தரு மிடற்றாய்
சிற்சு கவர்ரிதி யருளவும் வல்லாய்
தென்புக
லூர்வளர் திருவருட் சிவனே.
(5)
அன்னையுந் தந்தையுங் குரவனுந் தேவு
மாகிநின் றவிருநின் னடித்துணை வேட்கும்
பொன்னை முற்படப் பகரேடணை மூன்றாற்
புலரவிட்
டாயிதோர் புதுமையன் றேயோ
மன்னையு மதிக்கிலர் மனவெளி யூடே
மால்விடைப் பரிமிசை மனைவியொ டவிர்வாய்
தென்னையும் பூகமும் வாழையு மலிகீர்த்
தென்புக
லூர்வளர் திருவருட் சிவனே.
(6)
என்றன் தகவெளி யூடொருக் கானீ
யெழில்விடைப் பரிமிசை யிலங்கிய துண்டே
னன்றறி வார்முழு தின்புற வேனோர்
நலவுறச்
செயும்படி நனவினும் வருவாய்
பொன்றலும் பிறத்தலு மநுபவித் தறியாய்
போகனுக்
கருளிய புனிதச் சங்கரனே
தென்றல்வெற் பிறையவ னனையவர்க் கெளியாய்
தென்புக
லூர்வளர் திருவருட் சிவனே.
(7)
காணியு முலகினுக் காநலங் கருதாக்
கள்ளநெஞ்
சினரினுங் கடைப்படுந் தமியேற்
பேணிநின் னடியவர் தம்மொடு சேர்ப்பான்
பெற்றமொன்
றின்மிசை பிறங்கலெக் கணமோ
வாணிகொ ணகன்றலைக் கலந்திரந் துண்டாய்
வன்குணத்
தகுவர்க்கும் வரந்தரும் வள்ளால்
சேணிறை மகன்கை வில்லடியுமன் றேற்றாய்
தென்புக
லூர்வளர் திருவருட் சிவனே.
(8)
ஐயமின் றியமொழி சொல்லியேற் றேற்று
மானையு முற்பிறப் பறைதரு குகனும்
வையமெச் சிடுஞ்செயல் வழங்கிலா நொந்துன்
மலரடி
போற்றினன் வாழ்வளித் தருள்வாய்
மெய்யடி யவர்விருப் பனைத்துநன் கருள்வாய்
விறகுமொ
ரடியவன் மேம்படச் சுமந்தாய்
செய்யவள் கொழுநனுக் காழியொன் றளித்தாய்
தென்புக
லூர்வளர் திருவருட் சிவனே.
(9)
பால்வனப் பொடியினை யிகழ்தரு பொல்லார்
பாழ்படக்
கவுணியப் பாலகன் முதலா
நால்வருக் கருளினை யானின் முய்யவா
னானொரு
வனுக்கரு னல்கவொண் ணாதோ
வால்வயிற் குருபர னாவுருச் சமைந்தன்
றயன்றரு
புதல்வருக் காம்பொரு ளறைந்தாய்
சேல்வள நீர்த்தடஞ் சூழ்தரு பழமைத்
தென்புக
லூர்வளர் திருவருட் சிவனே.
(10)
சங்கனி காதொரு பத்துடை யானைச்
சகளநிட்
களப்பொதுத் தன்மையி னானைத்
திங்கடொ றொவ்வொர் விழாநலங் காட்டுந்
தென்புக
லூர்வளர் திருவருட் சிவனைப்
பங்கய னவரைதரு விதியினை மதியாப்
பண்புடைத்
திருப்புகழ் பாவலன் பாடல்
கொய்கவிழ் கொன்றையொப் பர்மென மதித்துக்
கூறவல்லார்க்
கொருகுறை யும்வா ராதே.
(11)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக