வியாழன், 24 செப்டம்பர், 2026

திருப்புகலூர்ச் சிவன் பதிகம்

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

திருப்புகலூர்ச் சிவன் பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

சூரைத் தடிந்தானோ சுந்தரன்சொற் கொண்டு

புகலூரைத் துதிக்கவிப்போது துன்னினே – னாரைப்

புனைந்தவ்வூ ராள்சிவ னைப்போற்றி யதனா

னினைந்தபய னெய்திடக் காணேன்.

 

பதிகம்

(எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

சயில மேகுடை யாக வேந்து

கடக்கை மாயனை யன்னவர்க்

கயிலு மாழியும் வாளு மாதி

யவர்யு தந்தரு மண்ணலூர்

மயில னேகம் விண்மாதர் நாணுற

மாமுகிற் றிரள்காண் டோறு

மொயில குலாவிய நாட கஞ்செயு

மொண்பொ ழிற்புக லூரதே.

(1)

சீத நாண்மலர்ப் புங்க வன்புரி

சிட்டி யின்றிறங் குன்றலாற்

போத வாதரஞ் செய்த லோர்ந்து

புதுக்கு மாதி புராணனூர்

வேத மும்பல வாக மங்களும்

வேறு முள்ள பனூல்களு

மோத வாதிரி யென்ன நாடோறு

மோலி டும்புக லூரதே.

(2)

எத்த வித்தி னருக்கு மோரா

சென்றுதென் பொதியைக் கண்வாழ்

முத்த னைத்தனொ டொப்ப னென்று

மொழிந்த னுப்பருண் மூர்த்தியூர்

பத்த ரைப்பசு வைப்ப ணிந்தகல்

பார்நலம் பெறச்சிந் தைசெ

யுத்த மர்க்கொரு தஞ்ச மாகி

யொளிர்ந்த சீர்ப்புக லூரதே.

(3)

மலர வன்றன் முகங்க ளாற்பெற

வந்த மாதவர் நால்வருங்

கலக மின்றிய ஞான மெய்திடக்

காட்டு முத்திரைக் கையனூர்

புலவ ராதியர் வந்து வந்தருட்

போக முத்தி கொள்பொற்பினர்

லுலக முற்று முணர்ந்து சொல்லிசை

யோங்கு தென்புக லூரதே.

(4)

வாண னாமொரு தான வன்பெரு

வம்பு செய்து முனிந்திடா

தாண மோரந் தவனட்ட பேறு

மளித்த வானவ னாளுமூர்

நாண மின்றி யிரந்த ருந்துபு

நற்ற வம்புரி வார்களுக்

கூண ளிப்பதிற் சோர்வு றாதவ

ருற்ற தாம்புக லூரதே.

(5)

வேங்கு ணம்பெரி தெய்து மக்கினி

வேண்டு நாளில் வெறுத்திடா

தேங்கு தீங்கொ ழித்த தன்னவன்

பெயரேற் றுமின்புறு மீசனூர்

காங்கு போன்று செங்கண் கொடங்க

சனகர் கள்பெரு மாண்புதோய்ந்

தோங்கு மாங்குயிற் கூவு மோசை

யுலப்ப ரும்புக லூரதே.

(6)

ஆழி சூழ்புவி யோடு விண்ணு

மங்கல செய்ய வுணப்பொலார்

வீழி னுந்தவ மிஞ்சு நாளருள்

வெள்வி டைச்சிவன் மேவுமூர்

பாழி மால்களிற் றானும் வேதனும்

பச்சை மாலு மளக்கொணா

வூழி கண்டதொர் புன்னை நன்னிழ

லோங்கு தண்புக லூரதே.

(7)

கண்க ளாயிர முற்று ளான்றரு

கானமு ளைக்கவன் கைதொழும்

வண்க ழற்பெரி யோரை யுஞ்செறும்

வாளி நல்கிய வள்ளலூர்

வெண்க டற்பிறந் திட்ட மங்கையர்

வெட்கு பற்பல வியன்குலர்

முண்கண் மாதர் தமரடல் பாடல்க

ளோய்வு றாய்புக லூரதே.

(8)

ஆனை மாமுகன் றன்னை வேல்புனை

யங்கை வேளை யளித்ததால்

வானை மாநிலத் தோடு வாழ்வுற

வைத்த வாதி மயேசனூர்

தானை யார்சிகி யன்ன சீர்கொளச்

சிப்பெ ணின்பம் விழைந்துமோ

ரூனை யுங்கை யிற்றீண் டிடாநலத்

தோர்கள் வாழ்புக லூரதே.

(9)

பால்வ னத்திரு நீற்றின் மேன்மை

யிப்பா ரினீட விளக்கினார்

நால்வர் சொற்றுதி சூடி யென்கவி

            நண்ண நானமி னம்பனூர்

சேல்வ ளந்தடம் பூவின் மோதலிற்

            சிந்தை நொந்தவை விட்டிழிந்

தோல்வ ளைத்திர ளூரும் வீதி

            யொழுங்கு சால்புக லூரதே.

(10)

சுக்கி ரன்றொழும் பாளா னன்வரச்

            சுட்டி டுந்தொழிற் காசைகூ

ருக்கி ரந்தரு வான்வி டைக்கொடி

யோவு றாப்புக லூரினைச்

சக்கி ரித்தகை நண்ணி யேங்குறுந்

            தண்ட பாணியன் சாற்றும்பாட்

டக்கி ரப்பய னல்கு மென்று

            கொண்டா தரித்திட லாகுமே.

(11)

முற்றிற்று.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக