வியாழன், 24 செப்டம்பர், 2026

திருப்புகலூர்ச் சித்தர் திருப்புகழ்

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

திருப்புகலூர்ச் சித்தர் திருப்புகழ்

காப்பு

(நேரிசை வெண்பா)

வாசிவிடைக் கேதனச்சீர் மன்னுந் திருப்புகலூர்த்

தேசிகர்க்காஞ் செஞ்சொற் றிருப்புகழைப் – பேசி

யணியத் தருவா ரவரீன்ற ஞான

மணியனைய பால ரிருவர்.

 

சித்தர் திருப்புகழ்

அருட்குறி யோரா தடர்ந்த விகுட்குழ

னமரனார் சிவந்த வடித்துணையே

பேணி வம்பில் யாதீயேன்

சுத்தமெலா மாறி யன்ப ரினத்துடனே

கூடி யென்று மறத்துணையே

யான மங்கையுட னீர்வாழ்

மருக்கமழ் சீரா லயந்தொ றடிக்கடி

போயின வஞ்சா மதக்களை

போமாறு தொண்டு புரியேனோ

மழத்தகை மாறாத வென்றி விடைப்பரி

மீதேறி யும்பர் வளைத்தர

மாதேவ வென்க வருவீரே

குருக்களெ னாவால் தன்க ணிருப்பவரே

மார னென்ற குணக்கனையோர்

பார்வை கொண்டு முனிவாரே.

குதட்டிய வாயானை யொன்றை யுரித்தவரே

வீர னென்று குதித்தொரு

தீவேள்வி குன்ற வருவாரே.

தெருட்டிய பாமாலை தந்தமுழுப்

புலவோர் நால்வர் விந்தைசெயப்

புரிவாரே நிறைந்த சிவனாரே.

செகத்திலு ளாரியர் வருஞ்சொன் மகத்துவ

நாடோறு மிஞ்சு திருப்புக

லூர்வாழ் நின்ற பெருமானே.

(1)

கிறிபேசும் வஞ்ச நெஞ்ச மடவாரி

டந்திரிந் துகெடு வார்களுந்

திரண்டு பழியாதே

கிளர்தீப மென்ற நின்கண் மணியான

                        கந்தன் வந்துகிளி தானெனுஞ்

சொல்வம்பி லொழியாதே

யறியாமை மிஞ்சி நொந்த புலவோர்களுந்

துணிந்தெ னருகா யிருந்து

வென்றி புகலாதே

            யடியார் கண்முன் படைந்த பொதுஞான

                        விஞ்சை யென்ற வருளாழி

                        யின்பமின்று தருவாயே

மறியே றிடங்கை யொன்று மழுவாழு

                        மங்கையொன் றுமவர்தா பயங்களுங்

கொடவிர தோளா

            மதுசூத னன்புயங் கவணை யானுடன்

                        பிறந்த மகமாயி கொஞ்சு

மின்சொன் மணவாளா

பொறியா வையுங் கடந்த வநுபூதி

                        துன்றுமன்பர் புகழ்போ லிலங்கும்

                        வெண்பொன் மலையானே

            புலவோர்கள் வந்துகவி பாடும் வென்றி

                        கொண்ட புகலூர் விளங்க

                        நின்ற பெருமானே.

(2)

ஆடக மேதுணை யாநித நாடலி

னாது லார்மென் வலையாதே

            யாரண நூன்முடி வோர்பவர் போன்மகி

ழாகிய ஞானிகள் பெருகாதே

வாடலி லாதலா தாமரை நேர்முக

                        மாதர்க ளாசையின் முழுகாதே

            மாதரி யாரிட பாலுற நீமழ

                        மால்விடை மீதெதிர் வருவாயே

பாடக மோலிடு மோகினி நாடிய

                        பார்வையின் மால்கொடு புணர்வோனே

            பாரத மேருவின் மேல்வரை வானையொர்

                        பாலக னாகமு னருள்வோனே

யோடத னோடிள மாதரெலா மதியோ

                        கையி னாடிட வருவோனே

            யூறு படர்வடி யார்பலர் சூழ்புக

 லூரிடை மேவிய பெருமானே.

(3)

சனகன் முதலிய சதுரர் வடநிழலி

                        லடையுமொரு சமரச நனிலை

                        யதனை யருள்வாயோ

            தடிமுரடர் மனைகடொறு மினிய தமிழ்கொடு

கொடிய தன்மய லொடினு

                        மலைய விடுவாயோ

வனவர் தமுனது யதமலர் கருது

தமிழ்விரக னடியவர் களொடு

பசுவு மழறீரவர்

            னடிமை முயல்வது பிழைகொலெ னதுமன

மசைவது னையல திலையென

                        மறைமொழிகள் பழுதாமோ

கனக வரையெனு நெடிய சிலைகொடு

                        வலவுணறு கடிமதி கர்கள்

                        பொடியநகை புரிவானே

            காட மதகரி யினொடு புலியு

                        முயலகனும் விடுகரு மியர்க

                        ளறிவரிய நிலையோனே

புனல்வய லினமும் வளையி னமுமலர்

                        குவளையொடு புதிய கமலமு

                        நிலவு புகலூரர்

            புரிசடை யின்மதி யும்வாந் தியுமறு

கிதழி யொடுபொறி யாவு

மருவவளர் பெருமானே.

(4)

மயிலெனு மொயிலொடு குறுநகை திகழ்தர

                        வெதிராய் விழியெனும் வலைவீ சிடுமவர்

முலைபுணர் கலவியி  லுயர்சுக மிலையென

நினைவர ரரசா தமர சாகிய

வெனைமறி கடலு லகிலு னடியவர்

குழுவொடு தமிழ்பா டியசில ரொடுபே

சிடவர மருள்வாயோ

மரைபசு முயலய மெறுழிமு தலியபன்

மிருகாதி களுணர் வெனவோ தியுமிரு

மருமை யமதலை கள்கத றிடவுயிர்

நிலையதன் மேலுறு தொலிகளை தீயவர்

முதன்மரு ளுறுச மயிக ளனைவரு

மிடியா லிமிகு போதவி யுறுமா

வரகிட நினைவதீதோ.

வயில்கொடு மலைதொறு முலவு நின்மக

னெனலரு ணாபுரி முதலிய வரயிர

மிடவகை களிலெனை யவனணி தருகிளி

யெனமொழி வரசக மதின்மகிழ் தீமை

யினிடை யளவற விளைதரு துயரமு

மகன்மு தலிய சோகமு மறிகிலையோ

பருவமெய் திலனேயோ

வடல்வழு தியினரை கொடுசெலும் வழியினும்

மணவர் தனையிடை படுபோ தினுமற

லிடைமுழு கினனெழ நினைதலின் முத்தி

யினுமூ ரவரிடை மணநா டலின்மகிழ்

மைய மதினும் வருபரு வமெனிட

மிலையெனி னான வண்மலை மிசைபோ

யுருடின் மடியேனோ.

குவிநிகர் கருநிற மொழியுடை யவளிம

வரன்மிக முயறவ மாகிய மகளிரு

பொழுதினு மடியவர் மனவெளி யுடையரி

யேற தன்மிசை வருபார் வதியுமை

குமார னுமத கயமுக வனுநனி

நுகரமு தாகர முலையுடை யாள

பிரிவரு மணவாளர்.

குழலிசை தருமணி யதர மெய்திய

முகிலிமை யார்மகிழ் வுறவசு ராதிய

ரொடுசமர் புரிநெடி யவனலை கடன்மிசை

துயில பெருமாள் கமல மெனமலர்

நேரொரு விழிகொடு விழிபட வும்விழி

யொடுபரி தியைநிக ராழியு முதவிடுசீர்

புகல்பவ ருள்மோவாய்.

கயில மதனை யொருசிலை யெனவணி

பவதன் னாதன் தனவென நாடக

முய்பெரி புரசர ணயுகள் பரசிவ

வாந்தி வாழ்சடை முடியிறை வர்வென

நனிதமிழ் கொடுதுதி செயுமவன் விழைவுறும்

விலைமகள் வாசலி லிருவிசை போய்வரு

புகழு டையோனே.

தவசிகள் வதிதரு மடநிலை களுமுயிர்

வதைதீ ரமக முயலருள் வேதிய

ருறைமனை களுமிக லடுமர சரக

ளரண்மனை களும்வா ணிபரு தொழிலோர்

முதலினர் தறுகிய மனைகளு மளபற

மலிதரு தகைசால் புகழ்புனை புகலூர்

நடுவளர் பெருமானே.

(5)

இருள்வீட் டிடையே ராசிறு பொருள்போட்

                        டலைவா னெனவிடைவேற்

கருளாகிய வொளிதரார்

            எழில்வாய்ச் சிறுசே யொடுபசு மாய்த்தயி

                        லவராமிசை யிடிபோற்பொரு

மாணவமி கைதாராய்

கருகாச் சுவைதோய் தருதமிழ் வாக்கிய

                        மோர்பவர் கலியாற்றள

ராதுசெய் வலிதாராய்

            கடனீர்க் கிடைதீ யிடையிடு பாட்டை

                        யெலாமொரு கண்மீட்டிட

லாதிய புகழ்தாராய்

திருவாக் குடையார் சிலர்செயல் கேட்டி

வணவாடிய சிறியேற்குளு

மேவிய பெரியோனே

            திணைமாத் தருவாண் மலரடி போற்றிய

                        வேணிகர் செயல்வேட்ட

மகராதர் மறவானே

பொருணாட் டமுறா துயரரு ணாட்டம்

                        தேயுறு புலவோர்க் கொடுதாயினு மினியானே

            புதுநீர்த் தடவா விகள்பல தோற்றிய

                        சீர்திருப் புகலூர்க் கரசாகிய பெருமானே.

(6)

சைவநெறி யுண்மைப் பாங்கறிந்

திலர்பாற் பழகாதே

            தையலர்கள் கொம்மைக் கோங்கரும்

                        பினைவேட் டுருகாதே

பொய்வழி யைநண் ணிப்போந்த

வஞ்சகர்நூற் படியாதே

            புள்ளிமயில் வண்மைச் சேந்தனென்

                        றொளிர்பாக் கியமீவாய்

கைவளைகொள் பெண்ணிற் றோன்றுமம்

                        புயல்போற் றியதாளர்

            கைதைமலர் தன்னைக் காய்ந்தயன்

                        பிழையாற் களைவானே

தெய்வமுத லென்னத் தேர்ந்த

                        சிந்தையர்பாட் டணிவானே

            செல்வமிக மன்னித் தீங்கறும்

                        புகலூர்ப் பெருமானே.

(7)

அருளே வடிவாகிய நீயொரு போதடி

                        யேனெதிர் மால்விடை மேலே

            யறவோர் புடைசூ ழதர்நோ கிலையே

                        யதனா னிகழ்தீ தறியாயோ

பொருளே துணையா மெனநா டியநீர்

                        புணர்பா தகர்மே லிடலாமோ

            புலையோர் குடைநிழ லிலேபல நாள்புவி

                        மாதழுதோ லிடலாமோ

மருளே றினர்போ லிரவர் மடவார்

                        வளைசோர் வுறமா மயலீவாய்

            மழுமா னவிர்தொ ளிறைவர் பிறவா

                        மகனே யிறவா மணியானாய்

புருகூ தனைவே தனைமா யனைநேர்

                        புலவோர் திரளியா வையுமாள்வாய்

            புகழ நீடிய பாவலர் பேணிதோர்

                        புகலூர் நடுவாழ் பெருமானே.

(8)

கருணை யொருகடுக ளவுமில ரான

வஞ்சாது குடைநிழலி லடிமை யுறுதுயர்

நீயறிந்து மொருகனவில் வரலென நனவில்

வரவே னிசைந்திலை கொன்மட மானார்

            கமட நிகர்வருட முலைமார் பழுந்த

                        விதழமு தமுணவகல கடியின் மதநீர்

                        கலுழந் துருகுகலவி செய்நித நினையு

                        நினைவா லுழைந்திடவு மவிட லாமோ

வருணை யினிலுமையு மறிதா நீறு

                        தந்திட லுமதுரை யினில்வ ழுதிதரு

                        மகளா லுணர்ந்ததுவும் விரக னசபை

                        யினிடை கவியாயி ரஞ்சொல் கையின்

            மகவா னோடமரர் முனிவரர் பனவர்

                        முதலோர் களின்பமுறு மொருசரி தமினி

                        நடவுகி றதாமொழிந் திடலு மனையபல

                        விபவமு மெயெனநானறிந் துகொள்விளை யாடாய்

தருமன் மணிமுடிபு னைய வெனவே

முயன்ற தவ்விசய னதுசிலை யடிலி

லுடனே மகிழ்ந்திணையி லசரமு தவியருள்

பரமசி வனேசெழும்ப வளமலை போல்வாய்

            தகுவர புரமுழு தெரிய நகுவாய்

மதம்பொழி யுமிபவடிவு கொடுபிடி யில்வரு

தேவி யுந்தியிடை சகல கலைகளு

மறியு மொருபோதகந் திகழ்வருள் வோனே

புருவ நடுவிழியி லுமிழ்தரு மாறு

                        செம்பொறி யிலறுமுக மொடொரு மதலை

                        தருவா யணிந்துரைசெய் புலவன் மகிழ்வுற

                        விலையிலமை யாத்தங்க மிகவினி தாயே

            புணர பாவைபுல விதொறு மிடுவாய்

                        நினைந்துரு குமடியவர் கள்பணி புரிய

                        விளையா யெனவெண்சொ லிசைபுனை புனித

                        புகழ்பெருகு புகலூரிடங் குடிகொள் பெருமானே.

(9)

களப குங்கும மிக்கணி கோமள

                        முலைமடந் தையர் சொற்படி வேலைசெய்

                        கடையர் தங்களை மெச்சிய

பாவல ரிகழாதே

            கருணை யின்றி யுயிர்க்கொலை யேபுரி

                        கொடியர் மிஞ்ச லின்மிக் கழுபார்

மகள்களி பொருந்த நினைத்துள்

மாதவர் சலியாதே

தளதே யென்றொளி கொட்டுவ தாகிய

                        மழுவ ணிந்த வலக்கர மாதிய

தகைவி ளங்க விடத்துறு

பார்வதி யுடனேநீ

            தவள வென்றி விடைப்பரி மேலவர்

                        விழையு நெஞ்ச மறித்தவ னாரொரு

                        தலைவ னுன்றனை விட்டுள

                        னோமறை பிழைத்தானோ

வளகை யம்பதி யிற்கர சாம

                        வனுறவ னென்று துதிப்பி னும்வீ

டருள்மல சங்கா வத்தியி

னீருரி யணிதோளர்

            வயன்மு கங்கள ளித்துள நால்வரு

முதிர்பசுந் தமிழிற் புகழ நால்வரு

மறித ரும்பெரு மைக்குரு

தேசிக னெனவாழ்வாய்

வளவன் மங்கை குலச்சிறை நாயனே

                        னிருவர் நெஞ்சு முவப்பவெ ணாயிரர்

மதுரை யின்கணி றக்கவ

நாற்செயு மருளாளர்

            மதுர புஞ்ச மெனக்கவி மாரிபெய்

                        புலவ ரின்ப மிகப்பெற லாதி

யவள்நி றைந்த திருப்புக

                        லூரமர் பெருமானே.

(10)

கருப்புவில் வேளுக் கயராதே

            கலிக்கிடை வாடித் தவியாதே

விருப்புறு நீலக் குயிலோடே

            விடைப்பரி மீதுற் றருள்கூர்வாய்

பொருப்புடை யானைப் பெறுவோனே

            புலைத்தகை யோருக் கிகலாமோர்

திருப்புகழோ னத்திய பாதர்

            திருப்புக லூரிற் பெருமானே.

(11)

முற்றிற்று.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக