வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
பழனிமலை சிவகுரு தேசிகன் பதிகம்
காப்பு
(நேரிசை வெண்பா)
அழைத்தபடி வந்தே னருட்பழனி யப்பா
வுழைத்ததலையுந் தீமை யொழித்தாண் – டிழைத்தபிழை
யெல்லாம் பொறுத்திகலோ ரீடழிக்கு மாண்மைநல்கிச்
சொல்லாப் பொருணிலையுஞ் சொல்.
பதிகம்
(எண்சீர் ஆசிரிய விருத்தம்)
அன்றுமயிற் பரிமீது குறத்தியொடு வந்து
மடிபணியுந் தமியேனோ டாசியஞ்சொற் றுள்நீ
யின்றுநின்மாட் டெனையழைத்த காரணமென் னேயோ
வெண்ணியபே
றத்தனையு மீயநினைத் தனையோ
நன்றுலகம் படும்பாடு முழுதுமறி வாயே
னான்முயன்று
வருந்துகின்ற ஞாயமறி யாயோ
சென்றுபுரம் பொடியாக நக்கபிரான் மதலாய்
தென்பழனி
மலையில்வளர் சிவகுருதே சிகனே.
(1)
பாதகஞ்செய் வார்பலர்க்கு மிறுமாப்பு மிஞ்சப்
பரிந்துதவம்
புரியுமவர் பரதவிக்கச் செய்யு
மேதமுறுங் கால்பலமுன் னில்வலி தென்பார்க்
கிடைக்கின்றேன்
களிகூரற் கேற்றன்செய் யாயோ
காதலுற்ற வர்றுதவி யாண்டருள வேனென்னக் கழறிய
சொன்மறந்த
னையோக ருணையிழந்த னையோ
சீதளசந் திரவதனக் கவுரிதரும் புதல்வா
தென்பழனி
மலையில்வளர் சிவகுருதே சிகனே.
(2)
அங்கணிலத் தினரிகழப் பாறையினிற் கிணறொன்
றமையெனவே
வினையிசைந்தே னதையுமுடித் தில்லாய்
பைங்கனக மயலுடையா ரெனவலையக் கண்டாய்
பனிமொழியா
ராசையினும் பட்டுழலச் செய்தா
யிங்கழைத்தாய் வந்துற்றே னின்னமென்செய் குவையோ
வெனையுனது
கிளியெனநீ யிசைத்ததுண்டே லருளாய்
செங்கமல மலர்மடந்தை கணவன்மரு கோனே
தென்பழனி
மலையில்வளர் சிவகுருதே சிகனே.
(3)
அத்தமுதற் பகர்தருமூன் றேடணையுந் தாண்டி
யடியவர்தங்
கூட்டமுட னாலயந்தோ றேகிப்
பத்தருக்கும் பாவலர்க்கு மானந்தம் விளைத்தும்
பரலோகத்
தமரர்களும் பரவவிளை யாடிப்
புத்தர்முதற் புலைநெறியோ ரனைவருக்கு நமனாம்
புகழ்சூடி
நின்பதத்திற் புகும்பெரும்பே றருள்வாய்
சித்தர்குழா மத்தனைக்குந் தாரகமா முருகா
தென்பழனி
மலையில்வளர் சிவகுருதே சிகனே.
(4)
வந்திறைஞ்சிப் போற்றுமென்னை யன்றுதிருச் செந்தின்
மாநகர்க்கே
கெனவனுப்பும் வகைமுதலாம் பிறவும்
பிந்திவருந் தொண்டர்குலம் பேசியுவப் புறநான்
பிரியமுற்ற
வாறருளிற் பெருமைகுன்றுங் கொல்லோ
நொந்திகத்தோர் படும்பாடெப் படிச்சகிக்கின் றாயோ
நோற்றபய
னென்னளவு நூற்றிலொன்று மிலையோ
சிந்தியநீர்த் தெள்ளருவி திசைதொறுமார்த் திழிசீர்த்
தென்பழனி மலையில்வளர் சிவகுருதே சிகனே.
(5)
உம்பர்பெரு வாழ்வினையுங் கனவெனநன் குணர்ந்திட்
டுண்ணியவர்
விளையாடி யுள்ளபர வெளியி
லிம்பர்களுங் கண்டுவப்பத் தேகமொடு கரைதற்
கிச்சைகொண்
டுன்பதம்போற்று மெனக்களவி லமையாத்
தெம்பருமளி மறைந்துவருத் திடன்முறையாங் கொல்லோ
சிகிப்பரியின்
னவிலின்னே சேவையளித் தாள்வாய்
செம்பவள வரைநாணத் திகழுமெழிற் குமரா
தென்பழனி
மலையில்வளர் சிவகுருதே சிகனே.
(6)
முற்பவஞ்சிற் சிலவுணர்த்தி யதிலுமத வாத
முழுமையுந்தீர்ந்
துள்ளபடி முன்னவளித் ததிலும்
பொற்பணமே லாகுமென்றோ வூர்கடொறும் போய்போய்ப்
புலர்ந்திரக்கப்
பார்த்திருந்தாய் போதவுஞ்நின் றந்தை
நற்பனுவற் புலவருக்கு நடந்தமைகேட் டேனு
நான்விரும்பு
மவைசிறிது நல்கிடவொண் ணாதோ
சிற்பரதத் துவமாகி நிறைந்திருந்து மெமக்காத்
தென்பழனி
மலையில்வளர் சிவகுருதே சிகனே.
(7)
சாகாநே ரமணர்களைக் கழுவிலிட்டோன் போலுந்
தமிழ்ப்புலவ
னொருவனிந்நா டறையிடத்திற் றோன்றிக்
காகநிகர் வஞ்சநெஞ்சக் கயவர்களை நூறிக்
கருணையுள்ளா
ரனைவரையுங் காக்கவரு ளென்னத்
தாகமொடு நனியிரக்குந் தமியேனை யழைத்த
தயைவிளங்கப்
புரியாமற் றனைமறந்து நில்லேல்
சீகரநீர்ச் சரவணப்பூந் தாமரையிற் றோன்றித்
தென்பழனி
மலையில்வளர் சிவகுருதே சிகனே.
(8)
மருக்கமழ மென்குழன்மட வார்பலர்க்கும் தன்றொன்
னூல்வழியு
வகைக்கடல்பெருக் கிவண்டாபலர் போற்றுந்
தருக்குடையான் மதவேழங் கொன்றுகளி யுணப்போய்ச்
சாற்றலன்ன
பலவியற்றிச் சலித்துநிற்கின் றாயோ
பெருக்குமவர் மருவுமென்னை யேனழைத்தா யின்னே
பெரியவிளை
யாடலொன்று பிரியமொடு புரிவாய்
திருக்கைவடி வேற்படையாற் சூத்தடிந்த கந்தா
தென்பழனி
மலையில்வளர் சிவகுருதே சிகனே.
(9)
சலசமலர்ப் புங்கவனைப் புடைத்ததிலு நெடியோன்
றாரகன
பாலிழந்த பெருஞ்சக்கர மீட்டலு
மலகில்புகழ்த் தாதையுய்யப் பிரணவஞ்சொற் றதிலு
மடியனேற்க
ருள்புரித லதிபெரும்பா ரமதோ
விலகுமறைத் தொகையொடுமா நிலமழுந்தீங் கொழிக்க
வெண்ணுமிச்சை
யெனக்கேன்ன றிசைதரச்செய் தனையோ
திலகநுதற் குஞ்சரியும் வள்ளியுஞ்சே ரொருவர்
தென்பழனி
மலையில்வளர் சிவகுருதே சிகனே.
(10)
மறுவில்கவித் தொடைவனைந் துன்றாதைதன் றாட
கணிந்துவடலூரி
லிருந்தவன்றன் வாஞ்சையினிற் சற்றும்
பெறுதலின்றிப் போனானென் றுலகிகழக் கேட்டுப்
பெரிதிடைகின்
றேனெனைநின் பெற்றியேன்செய் திடுமோ
வுறுதிகொண்டு மெய்யடியார் பதத்துகளைத் தலைமே
லுறப்புனைந்து
நான்படும்பா டுணர்ந்திலைகொ லருளாய்
சிறுவடிவப் பெருமுனிவற் கருள்புரியு மெந்தாய்
தென்பழனி
மலையில்வளர் சிவகுருதே சிகனே.
(11)
மன்பதையு மறிதரப்பல் லாடல்புரி வானை
மயிலேறி
யயிலேந்தி வானில்வரு வானைத்
தென்பழனி மலையில்வளர் சிவகுருதே சிகனைத்
திருப்புகழ்ப்பா
வலன்றுதித்த தெளிதமிழ்ப்பாட் டிவையுள்
ளன்பதனாற் பரவுநாக்குங் கேட்குமவர் தமக்கு
மானந்தப்
பெருங்கடலின் னமுதமெனத் தக்க
வின்பமுழு மையுங்கொடுத்துப் பிறப்பிறப்பென் போறது
மிரண்டுமற்ற
தனிவீட்டி லிருத்துமென்ன லாமே.
(12)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக