வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
திருவரங்கத்
தமிழ்விலைப் பதிகம்
காப்பு
(நேரிசை
வெண்பா)
அமிழ்தனைய காவிரிப் போற்றரங்கர் வென்சொற்
றமிழ்விலைப்பொன் னிக்கணமே தந்தா – ளிமிழ்திரைத்தண்
வாயிக் கரையிலொரு வாரணத்தின் வாயொலிபோற்
பாவிக்கிற பாவமன்றப் பா.
பதிகம்
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
அமரரும் பெரிது போற்று மரங்க மாளிகையி னாளுந்
தமரொடு வாழ்தற்கா மெய்தவஞ் செய்வார் தனம்போன் றுற்றா
யெமரொடு பெரிது நொந்தே னிருகலைப் பிணக்குத் தீர்ந்த
சமரச ஞானத் தென்சொற் றமிழ்விலைப் பொருளீ வாயே.
(1)
மாரனைப் பயந்தா யென்ன வழுத்திலார் தமையுங் காத்துச்
சீரவி ரரங்கக் கோயிற் றென்முகங் கொடுவாழ் வானே
பாரதி முதலா முண்மை பாவலர் பலர்கொண் டாடுஞ்
சாரமுற் றிலகுஞ் செஞ்சொற் றமிழ்விலைப் பொருளீ வாயே.
(2)
வீடணன் றன்னா லந்நாள் வியன்மதி ளயோத்தி விட்டுப்
பீடணைத் தருசோ ணாட்டுப் பெருந்தி யிடையுற்
றோனே
யாடரா முடியும் வேதத் தந்தமு மணக்கு மம்பொற்
றாடரா விடினு மிந்நா டமிழ்விலைப் பொருளீ
வாயே.
(3)
ககபதி யுருவங் காட்டுங் கத்திகை வாழி யென்னப்
பகலுட னிரவுஞ் சொல்வார் பழிச்சுமூ தரங்கத் தோனே
யிகலறுத் துறவோர்க் கின்ப மீவது குறித்து வந்தேன்
சகமெலாம் வியக்கு மாறென் றமிழ்விலைப் பொருளீ வாயே.
(4)
அக்கர முழுது நின்பே ரருட்குறி யெனத்தேர்ந் துள்ளா
ரெக்கணத் தினுங்கொண் டாட விலங்குசீ ரங்கத் துற்றாய்
செக்கரஞ் சடையா னாதித் தேவநி யாவரும்போற் றுன்கைச்
சக்கரத் தானை யென்வாய்த் தமிழ்விலைப் பொருளீ வாயே.
(5)
அரதன மிளிருஞ் சூட்டோ ராயிர முடைய பாம்பில்
விரதமா தவர்கண் டேத்த விளங்குமூ தரங்க நாதர்
வரதமன் றளித்த வாறு வாழ்வியல் விடினு மின்னே
சரமெங் கணுநன் கோங்கத் தமிழ்விலைப் பொருளீ வாயே.
(6)
அளவிறும் வளமைத் தாகி யரனற் காவிரியி னாப்பண்
களவருனென் றிகழ்கின் றார்க்குங் கருணைசெய் கடைக்கண் ணானே
தளவமென் முகைநேர் மூரற் றையலார் முதலோர் நல்குஞ்
களமெலாந் தவிரு மாறென் றமிழ்விலை பொருளீ வாயே.
(7)
விண்முகத் தடற்கை நீட்டும் வேழமொன் றுய்யக் காத்து
வண்முகப் பொன்னி யாற்றோர் மாசுணத் தலைவாழ் வானே
கண்முகத் தானை யென்னுட் கருத்து நாதனுள் காணச்
சண்முகன் வியந்த தாமித் தமிழ்விலைப் பொருளீ வாயே.
(8)
ஒருவனீ யெனநன் கோடு முணர்வுடைச் சிறுவன் வாழ்வான்
கெருவவா டதனைக் கீன்று கிளர்திரு வரங்க மாலே
யருவவா திகளுமேச வகங்குலைந் தமுங்க லாமோ
தருவல ரன்றிருவும் வேண்டேன் றமிழ்விலைப் பொருளீ வாயே.
(9)
வஞ்சமில் கருணை பூத்த மாறனோ பதின்மர் போற்றோ
ரஞ்சனக் கிரிபோற் பொன்னி யாற்றிடைத் துயில்கொள் வானே
பஞ்சநோய்க் கலிய நெஞ்சம் பதைபதைத் திடமுற் றோன்றிச்
சஞ்சல முழுதுந் தீரத் தென்றமிழ் விலைப்பொருளீ வாயே.
(10)
பத்தியிற் பெரியோர் நாளும் பரவுசீ ரரங்க மால்பாற்
சத்திய மறிய வென்வாய்த் தமிழ்விலைப் பொருளீ தென்று
சித்திமுத் தியும்வேட் டுள்ள திருப்புகழ்ப் புலவன் பாடுந்
துத்தியப் பதிகங் கற்போர் சுகமிகப் பெறுவா ரன்றே.
(11)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக