வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
அருளிச் செய்த
வீரை
மாதவன் வகுப்பு
தானதன
தந்ததன தானதன தந்ததன
தானதன தந்ததன – தான னாதனனா
ஆயிரம
னந்தமென நீடுமுல கங்கள்செயு
மாரணன்வ ருங்கமல
- நாபி தோய்பெரியோ
னாயிழைம
டந்தைகளி கூர்வதுநி னைந்துதின
மாடல்புரி யும்பரம – னாவி
நேருறவோ
னாகுலம
லிந்துதள ராமலட லிந்திரன
தாள்கையிலொர் பங்கணிய – நாணு
றாவருளோ
னாகநிலை யென்றுமழி யாநலமு றும்படிமு
னாழியமு தம்புலவ – ரார வேயிடுவோன்.
வாயினிடை
வெங்கடுவு நூலுரைக ளும்பொலியு
மாசுணம தன்றலையெ – நாளு மேதுயில்வோன்
மாசுறும னங்கொள்கன காசுரன ழிந்துமகன்
வாதனைத விர்ந்திடவோர் – தூணி
லேவருவோன்
வாரணமு யும்படிக ராவினைத வஞ்செய்பெரு
வாகைமொழி கின்றவர்பி – னேகும்
வேலையினான்
மாவலியி டஞ்சிறிய பாலனிலி ரந்துபுவி
மாகமொட ளந்தபத – மான தாமரையா
னீயினமெ
றும்பினமு மீறநுக ருங்கலவி
யேயினிதெ னுஞ்சிறுவர் – நாடொ
ணாமுதல்வோ
னேடனைத விர்ந்தமகிழ் மாறனுவ லுங்கவிக
ளேயெனம ணங்கமழ்து – ழாய்செய்
மாலிகையா
னீரிருபு யங்களிலோ ராழியொடு சங்கபய
மோவரத மொன்றுறநி – லாவு பான்மையுளா
னேனவடி வுங்கொடுத ராதலமு யுந்திறல்செய்
தேழுலக மும்பருகும் – வாயி
னாலுமிழ்வோன்.
வேயினையி
கழ்ந்திலகு தோளிருவர் தங்கணவன்
மேதகுத னஞ்சயன்வெண் - மாவி
னீருணர்வோன்
வேனிலில ழுங்குமயில் போலழவோர் பெண்கலைகொள்
வீணரும றிந்தவிளை – யாடல்
கோடியினான்
வேசடைத விர்ந்தவநு பூதிநல மின்றியவென்
மீதுமருள் கொண்டுசில – வாறு
ளேதிகழ்வோன்
வேன்மருத னென்றவித யாலயன்ம கன்பணிசெய்
வேளைவர வென்றுமுயல் – வீரை
மாதவனே.
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக