வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
திருப்புகலூர்ப் புண்ணிய
மாலை
காப்பு
(நேரிசை
வெண்பா)
நண்ணியபே றத்தனையு நன்கருள்வர் தென்புகலூர்ப்
புண்ணிய மாலை புகல்வதற்குத் – திண்ணியசீர்ப்
பைந்தமிழ்நா வுக்கரசும் பாடுமினென் றேவியசொற்
சுந்தரனுந் நல்ல துணை.
புண்ணிய மாலை
(கலி விருத்தம்)
வேதங்களு மடல்வாக மக்கூட்டமும் விள்ளரிதாய்ப்
போதங்கடந்த மெஞ்ஞான ரநூபூதிப் பொருந்தநல்காய்
மாதங்கத் தோலும்புலித் தோலும்பூண்ட பொன்மால்வரைபோற்
பூதங்கள் சூழநின்றாய் புகலூர்வளர் புண்ணியனே.
(1)
சிங்காரமங் கையர்கொங் கையினாசையிற் சிக்குமென்சொற்
கிங்காசை யுற்றனையி துலகோரறிந் தேத்தலென்றோ
சங்காழி மானமுதற் றேவரெல்லா மஞ்சச்சற்பமுமிழ்
பொங்காழி நஞ்சயின்றாய் புகலூர்வளர் புண்ணியனே.
(2)
எள்ளத்தனை யன்வேண்டு மென்னஞ்ச கமித்துயாங்
கொள்ளப்புரி வதுநீதிகொல் லோமழைக்கொண் டல்வெட்கும்
வள்ளற்ற கையைமறந் தனையோநெடு வாய்கிழித்தோ
புள்ளட்ட மால்பணிசீர்ப் புகலூர்வளர் புண்ணியனே.
(3)
மன்போன்ற கோலத்துச்சுந் தரப்பாடற் குமரனழைதந்தா
யென்போன்றவர்க் கென்னநல்குவை யோவென்ன வேத்தலுற்றேன்
மின்போன்ற செஞ்சடையுங் கங்கைநீரும் விதுவும்விடாப்
பொன்போன்ற மேனியெந்தாய் புகலூர்வளர் புண்ணியனே.
(4)
நாகப்பட நிகரல்குன மின்னார்களைந் ததுமென்னெஞ்
சேகப்பொரு ணிலைதோவ தென்றோநின் னிடத்துறைவர்
ளாகப்பசு மைமுலைத்தோற் றமொணகளத் தாக்கமெய்தும்
பூகப்பொ ழின்மலிதென் புகலூர்வளர் புண்ணியனே.
(5)
வல்லரானே கரருட்பே றடைந்தவிம் மாநிலத்தியான்
புல்லாரிகழ்ப் புழுங்குகின்றேன் வம்பிற்பொன் றச்செய்யேல்
கல்லால நிழலிற்றே சிகனாகியுங் காசினிக்காப்
பொல்லார புரமெரித்தாய் புகலூர்வளர் புண்ணியனே.
(6)
வானகமங் கையர்க்கண் ணினும்வேண்டிலர் மன்னுநின்றா
ளீனமின்னார்க் குமயல்கூ ரென்சென்னியி லேறுங்கொலோ
பானலங் கண்ணியர்பல வோருருகிப் பரிந்திடுநற்
போனகமுண் டுனுந்தாய் புகலூர்வளர் புண்ணியனே.
(7)
சித்தேறச் செய்துபுலை நெறியோர்களைச் சீறுமெய்ச்சீரித்
தெத்ததெய்வத் தரவேண்டும் வீணிலிறக்க விடேலுத்தே
லுத்தேசித் துள்ளபயன் யாவுங்கைக்கொண்டு வந்துவந்து
புத்தேளிர் போற்றியபூம் புகலூர்வளர் புண்ணியனே.
(8)
இன்றமிழச் சாரமறி யாதுளறு மிளங்களுஞ்
ரென்றனைத்தம் மொடுகூட்டா தவாறாரு ளென்றருள்வாய்
நின்றழுதன் னைபலவ ரவருந்த நிகழ்பிறப்பும்
பொன்றலுங் கண்டறியாய் புகலூர்வளர் புண்ணியனே.
(9)
அடியர்தங் கூட்டத்துட னேகிநீவைகு மால்யந்தோ
றொடிவறுநல் லிசைப்பாமா லைகாத்து முயர்ச்சிநல்காய்
கடிகமழ்சந் தனச்சேறணி வார்கண்டு கண்டுளொல்கப்
பொடியணிந் தாடுமெந்தாய் புகலூர்வளர் புண்ணியனே.
(10)
நின்னாசை யென்னதுபா டலிற்றோய்ந்த நிசத்தையிந்நா
ளென்னாவிலுற் றமின்னேயறி வாணமற்றிங் கியாரறிவார்
பன்னாகப் பூணும்புனை வாய்விடைகொடிப் பண்ணவனே
புன்னாகச் சோலைதிருப் புகலூர்வளர் புண்ணியனே.
(11)
சொல்வல்ல நாவுக்கர சன்னற்ளளித் தொடங்கிலேறி
கல்வல்ல செல்வமென்றெண் ணாமலென்னைக் கடைகணித்தாள்
செல்வல்ல வோசையொடு தீயிற்றோன்றிச் சினந்தெரித்த
புல்வல்ல பங்களைந்தாய் புகலூர்வளர் புண்ணியனே.
(12)
மாதங்கத் தேறியவள் வோர்திருவு மதிக்ககில்லே
னேதங்க லியற்படலா குமோவென்னை யென்றுகொள்வாய்
சீதம்பொலி யுங்கடன் ஞாலமுற்றுஞ் சிருட்டிசெய்த
போதன்றலை கவர்ந்தாய் புகலூர்வளர் புண்ணியனே.
(13)
ஆவேத னைப்படக்கொன் றுதின்பாரை யழிக்கினல்லான்
மாவேதச் சென்னியினின் னோடுவைக்கினும் வாழ்கலன்காண்
சேவேறி விண்ணிற்றிகழ் வாய்மதியொடு செய்யகொன்றைப்
பூவேய்ந்த சென்னிநம்பர் புகலூர்வளர் புண்ணியனே.
(14)
சிற்றரமன் னகட்சேயி ழையார்மயற் சேற்றுறுமென
சொற்றரஞ்சூ டிடத்தக்க தன்றேலெனைத் தூண்டுவையோ
முற்றரண்மூன் றும்பொடித்தாய் விடங்கலுழ முள்ளெயிற்றுப்
புற்றரவம் புனைந்தாய் புகலூர்வளர் புண்ணியனே.
(15)
மகமிக்க வானவன்செந் தாமரைமிசை வாழ்பிரம
னகலத்த மருமனையா னன்னார மகிழ்ஞ்சனலகித்
திகழத்தகங் கணமாகிய பாம்புமுன் செய்ததவம்
புகலத்த காத்துவோ புகலூர்வளர் புண்ணியனே.
(16)
காசையின் பூநிகர்மா துடனன்றென் கனவில்வந்த
வோசையிப் பாரினன்வூடு காண்டற்குன் னல்வம்போ
மாசைவென் றார்பலபச் சிலையிட்டு வணங்குமுண்மைப்
பூசையினா சைமிக்காய் புகலூர்வளர் புண்ணியனே.
(17)
சாலோக மாதியமூ வசைப்பேறுந் தணந்துனது
மாலோகத் துன்றவ்வடி வூடுசேர்ந்துய்யும் வாஞ்சையுற்றேன்
காலோகத் தாரொல்கவாழ் வித்தவ்வாறு கலந்துகொண்டாற்
பூலோக முய்யுமன்றோ புகலூர்வளர் புண்ணியனே.
(18)
அத்திரம் வேண்டித்தவம் புரிந்தான்வில் லடியினுமென்
சித்திரச்செந் தமிழ்ச்சந்தக் கவியினந் தீயவன்றாற்
சத்திரச்செங் கைமயில் வாகனக்குகன் றன்னையன்ன
புத்திரனாக் கிக்கொள்வாய் புகலூர்வளர் புண்ணியனே.
(19)
கற்பரந்த காலங்கண் மாகநின்பொற் கழல்கருதி
நிற்பாரை யோரளவுமஞ் சேனையாள் நினைவைகொல்லோ
வெற்பரமென் றோங்கிமதி நாணுமாறு வெளுத்தவிளம்
பொற்பார் விடைப்பரியாய் புகலூர்வளர் புண்ணியனே.
(20)
தேனடு பாலொடு சேர்ந்தாங் கினிக்குமென் செந்தமிழை
யெண்ணிகின் றிலையோ வந்தநாளொ ரியற்புலவன்
றானகமின் புறச்செங்கற் பொன்னீந்தொற் றிற்ரையலிடம்
போனதுபொய்க் குங்கொலோ புகலூர்வளர் புண்ணியனே.
(21)
காரண மென்றுநின்சேய் சொன்னமாற்றங் கருதிநொந்தோ
வாரணக்கூட் டத்தரியே றொத்தார்க்கு மகிழ்ச்சிநல்கா
யாரணன் மைந்தரொடு நால்வர்க்கன்று கல்லாலடியிற்
பூரணச் சீர்தெரித்தாய் புகலூர்வளர் புண்ணியனே.
(22)
அழியாத கீர்த்தியுமா னந்தவாழ்வு மருளெனக்கேட்
டொழியாத மெய்யன்பினாற் றொழுவாருட் னொக்கவைத்தாள்
விழியா மெனக்கதிரம் புலியங்கி விளங்கநின்றாய்
பொழிலாருந் தண்பனைத்தென் புகலூர்வளர் புண்ணியனே.
(23)
அலையார்த்த கங்கைச்சடை யாய்வெண்ணீற் றணியந்தனனே
சிலையாக கிரிவளைத்தா யெனும்பாடற் றினந்தொகுப்பே
நிலையாக்கை யென்றெணிக்கொன் றுகொன்றின்புறு நீகர்கொடும்
புலைநீக்கும் வாழ்வருள்வாய் புகலூர்வளர் புண்ணியனே.
(24)
கச்சார்த்த கொங்கைச்சிறு மியராசைக் கடற்கடந்து
மெய்ச்சாத்திய ரொடுகூடு வனோவம்பில் விடுவனோ
வச்சாக்கிய னெறிகல்லை யும்பூவி லணிந்தளித்தாய்
பொச்பாப்பிலார் பலர்வாழ புகலூர்வளர் புண்ணியனே.
(25)
புதுபானை யிற்பகுமீப் போல்வாடிப் புழுங்குறுநான்
மதுப்பானை யன்னநின்னா னந்தமெய்த வர்ந்தருவாய்
கதுப்பாடி முத்தம்விற்பார் பொருள்வேட்டோர் கவிஞன்சொன்ன
பொதுப்பாட லும்புனைந்தாய் புகலூர்வளர் புண்ணியனே.
(26)
எண்டரிகத் தரிற்றாழந் தலைந்தேங்கு மெனையிகவோர்
துண்டரிகத் தரியேறெ னப்போற்றருட் டோற்றநல்காய்
கண்டரிகத் தண்ணலேத ழன்மேனிச் சதாசிவனே
புண்டரிகத் தடஞ்சூழ புகலூர்வளர் புண்ணியனே.
(27)
சேற்றும்மீறி மடியாது மெய்யருட் சித்தியெய்தி
வேற்றுட லின்றிநின்னோ டொன்றலர்முதல் வீடருள்வாய்
கூற்றுவன் மாய்ப்பதநீட் டினாய்தமிழ் கொண்டுதினம்
போற்றுநர்க் கோரெளியாய் புகலூர்வளர் புண்ணியனே.
(28)
நூற்பயன்
(நேரிசை வெண்பா)
பெண்ணிலவோர் சென்னி விமலன் றிருப்புகலூர்ப்
புண்ணிய மாலை புனைந்தபாட் – டெண்ணி
லருபதிற்றெட் டாமிவற்றா லேத்தவல்லார்க் கெல்லாஞ்
சொருபமுத்தி யெய்துமெனச் சொல்.
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக