வியாழன், 24 செப்டம்பர், 2026

பழனி படைவீட்டுப் பதிகம்

 

வண்ணச்சரபம்  தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

பழனி படைவீட்டுப் பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

காட்டுப் பரண்குறத்தி காவலவன்கைக் கொள்படை

வீட்டுப் பதிகம் விளம்புமெனக் – காட்டுப்

பரியிரண்டு மோரிரண்டு பால்வா ரணமு

மரியிரண்டு முற்றுதுணை யாம்.

 

பதிகம்

(கலித்துறை)

அலகோ தருமொழி நீவலி தறையப் பெறுமடியே

னுலகோ ரிகழக் கண்ட யாவுற்றே னறியாயோ

வலகோ ழிநெடுங் கேதனம் வைத்தாய் மயலூர்வாய்

பலகோ டிபுகழ்ச் சீர்திகழ் பழனிக் குருபரனே.

(1)

கோலத் துணைநிகர் வண்மை கொடுத்தா யருளாடற்

சீலத் துமவர் றிங்கொரு சிறிதுந் தருகில்லாய்

வேலத் தவினோ தகுக வேளே மதனவெந்த

பாலத் தழல்விழி யார்தரு பழனிக் குருபரனே.

(2)

எல்லோர் களுமிகழத் தொடுமென் கூப மதிடைபொன்

வில்லோ னதுசென்னிப் புன்ன மிளிருந் தினமுளதோ

சொல்லோ தையுநா ணத்தொனி செய்யுந் தகரூர்வாய்

பல்லோ ரருள்வாழ் வெய்திய பழனிக் குருபரனே.

(3)

நெல்லைக் கினிதே கென்று நிகழ்த்துஞ் சொலைநினையிற்

கல்லைத் தொடவிட் டிங்கு கலங்கச் செயன்முறையோ

வில்லைப் பொருநுதல் வேடமின் வகிர்தா முதுவெய்யோன்

பல்லைக் கவர்பவர் கண்ணருள் பழனிக் குருபரனே.

(4)

வந்தென் றனுளத் துட்புல வன்றா னெனநின்றா

யிந்தென் றொளிர்கோ லத்தெதி ரிலகுந் தினமென்றோ

நந்தெஞ் சலில்கரை யிற்பல நல்லார் விளையாடும்

பைந்தெண் புன்னமடு மிக்கவிர் பழனிக் குருபரனே.

(5)

உன்னா ணையெனக் குன்னரு ளொன்றே துணைகண்டா

யென்னா கமிளைக் குந்துய ரெய்தச் செயலேனோ

பொன்னா டுடையர் ராதிய புலவோ ரெவருக்கும்

பன்னா ளுநலஞ் செய்துயப் பழனிக் குருபரனே.

(6)

உலகைத் தெரியாய் நீயென வோதும் பலர்தஞ்சொற்

கலகத் தினைவெல் லும்படி கல்லிற் புன்னல்காய்

சிலகற் பனைநூ லோரிகழ் தெய்வக் குமரேசா

பலவைப் புலவரு நாடிய பழனிக் குருபரனே.

(7)

காழிக் கவுணி யனிற்புவி கழறுந் திறலெய்திப்

பாழிற் கதறு நர்பொய்ந் நெறிபாற்ச் செயலருள்வா

யேழிக் குற்ழிசை நாரத னின்புற் றுய்வென்றோர்

பாழித் தகர்மிசை யேறிய பழனிக் குருபரனே.

(8)

நீசூ னியமே யென்பவர் நேருற் றிடிலோல்கி

யாசூ கமுளா ரிற்பெரி தகலச் செயலழகோ

மாசூ தமுதற் சொல்பல வடிவங் கொடுகடலுட்

பாய்சூர் கெடவிடும் வேல்புனை பழனிக் குருபரனே.

(9)

அகழ கற்கிண றதனுட் புனலா றெய்திடுமாகிற்

சகளத் துயர்பொரு ணீயெனல் சாதப் படுமன்றோ

விகன முத்தலை வேல்கொண் டெதிரெமனுக் கெமன்முதலாப்

பகர்முக் கடவுளர் மெச்சிய பழனிக் குருபரனே.

(10)

கெண்டைக் கயழ்விழி யார்தரு கேடுற் றயராதுன்

றண்டைப் பதமலர் நாடிய தவமென் றடைவேனோ

விண்டைச் சடையின் னமுத்தமி ழிறையா தியசிலர்பாற்

பண்டைப் பொருணிலை யோதிய பழனிக் குருபரனே.

(11)

தவமிக் குற்பெரி யோருணர் தடுத்த துவமுடிவாய்ப்

பவளக் கிரியென நீடிய  பழனிக் குருபரனைக்

கவலைக் கடனடு நின்றொரு கிற்றொட் டுழல்கள்வன்

புவனத் துரைசெயு மித்தமிழ் புகழ்வா ரிதிதருமே.

(12)

முற்றிற்று.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக