வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
பழனி படைவீட்டுத் திருப்புகழ்
கனியை நேரித ழாரிள நகையினான்
மயலா யிருகணை களாம்விழி
யானமன முடையாதே
கருணை
யோரணு வாயினு மருவிடா
முழுலோ பியர்கடைக டோறுமெ
நேரமு மலையாதே
யினிய தேன்மிக நாணிய மதுர
கோமகள் சாகரமென நிலாவிய
பாடல்கள் பலவாலே
யிடைவிடா
துனையே புகழ்முறை மையால்
வழிபாடு செய்திணை யிலாதுயர்
வீடது பெறுவேனோ
மனித வேடுவ னாமென வுருவ
மாறியு மோர்கவி மகிழுமாறு
முனாடிய குமரேசா
வகுள மாலிகை
மாரனு மவனை
யீனிய மாயனு மனதுநா
ணுறநீடற் குடையானே
பனிகு லாவிய மால்வரை யுதவு
வாண மடிதோய் தருபதுமமே
நிகராகிரு கழலோனே
பாவை சூழ்புவி
மேல்வரு முனிவர்
தாரக மாகிய பழனி மாலை
மீதுறை பெருமாளே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக