வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
திருவரங்கத் துயில்நீத்தெழுவாய் பதிகம்
காப்பு
(நேரிசை
வெண்பா)
தென்கலைநா மம்புனைந்து
செங்கையிலோர் தண்டேந்தி
யென்கனவில் வந்தவனை
யானறிவே – னின்கருணைத்
தேசிகன்பொற் பாதஞ்
சிரத்தணியுஞ் சீரியாவர்
யேசினு மாரவங்கொ
ளண்ணலே.
கோயிற் றிருவரங்கங்
கொண்டுவளர் கோமானின்
சேயிற் றுதித்துமிகச்
சிந்தித்தேன் – வாயிற்
றலைச்சிகரி நான்குமுற்றுந்
தன்மையினு மேலாம்
விலைத்தமிழை யெள்ளி
விடேல்.
பதிகம்
(அறுசீர்க்கழிநெடிலடி
ஆசிரிய விருத்தம்)
சித்தியு முத்தியும்
வேட்டளவி னறிய
தெய்வங் களைப்போற்றிச்
சத்திய முண்டெனக்
கண்டபினி னறுதித்
தமிழ்கொண் டுனையடைந்தேன்
பத்திசெய் கின்றவர்
வேண்டிப் பேரருள்
பரனமைத் திருவரங்கா
துத்தியா ரவனையிற்
றினமுங் கொள்பொய்த்
துயினீத் தெழுவாயே.
(1)
காம்பினைத் தோண்மலர்
மங்கையுள் தண்கடற்
கலைபூண் டவிர்மாதுந்
தாம்பிணங் காது பதந்தொடக் காவிரித்
தனிமா நதியுற்றாய்
பாம்பினைத் திற்றலை
யரமனந் தன்றனைப்
பாயிற் கொடுமந்தோ
கோம்பினர் போற்கிடக்
கின்றணை யேயறி
துயினீத் தெழுவாயே.
(2)
பாசுரம் பத்துரைத்
தன்றுவ ணங்கொரு
பாணன் றனையாண்ட
நீசுர ரூரமிழ் தேநிகர்
பாப்பல
நிறைப்பாரை யௌவாயோ
மாசுடைத் தீயர் பசுக்கொலை
செய்துணு
மாபா வம்வளர்ந்துந்
தூசுடைக் கார்மலை
போற்கிடங் குங்கொடுந்
துயினீத் தெழுவாயே.
(3)
பல்வகைத் தேவினத்
தொன்றெனக் கைதொழும்
பாலப் பருவரையு
நல்வா மெய்தப் புரந்தருள்
செந்தகை
நழுவாத் திருவரங்கா
வெல்வயிற் றொட்டெவர்
கொல்வயிற் றோறு
நின்னிசைவே யுறலோர்வேன்
றொல்லழுத் தீர்ந்துயச்
செய்யவின் னேவிழித்
துயினீத் தெழுவாயே.
(4)
பாக நயக்கவி யாயிர
நிற்குநின்
பாரிக் கொருநூறுஞ்
சேகர மாக்கொடு வந்துள
நான்மனந்
திகைக்கச் செயலாமோ
நாகணைச் சிந்திகழ்
நல்லாங் கர்புவி
நாரோ டுய்ச்சிலகாற்
சூகர மானது முண்டெனி
லிக்கணந்
துயினீத் தெழுவாயே.
(5)
வண்கவிக் கோவுறழ்
வண்ணமும் பாற்பல
வனைந்துள் ளவென்றன்னுட்
புண்கலந் தாலொரு
வெண்கவிப் பின்செலும்
புகழ பாடுமன்றோ
பெண்கவி னுந்திரு
மார்பரங் காவிடிப்
பேரோசை கொள்பாம்பிற்
றுண்கலி யெய்திவ
சங்கெட நியிளந்
துயினீத் தெழுவாயே.
(6)
தன்மமுஞ் சந்திய
மும்பயந் தோடிய
கண்டா ளவெங்காலத்
தென்மன மித்தனைபே
றிரந்தேங் குறவேன்
றானிய கசினையோ
நன்மனத் தொண்டர்
பராவிய சீரங்க
நாதா வொருநாள்காந்
தொன்மறைக் கூட்டழி
யாவண் மிக்கணந்
துயினீத் தெழுவாயே.
(7)
பம்மிய நான்மறைச்
சட்சம யங்களும்
பிரிக்கின் றநினருளை
நம்பிய நானொர் மதக்குறும்
பாளரு
நகநோம் படிசெய்யதா
யம்பிகை யோடுதித்
தாயெனப் போற்றினு
மருளுந் திருவரங்கா
தும்பியொன் றொத்தடியே
னுய்யச் செய்யவித்
துயினீத் தெழுவாயே.
(8)
பாணினி யுங்குறு
மாமுனியு புகழ
பரமென்
றுனைநம்பிப்
பேணிய வென்னையொ ரோர்கலைத்
தொண்டரும்
பெரிதே சிங்கரமே
வாணிகொண் கனபுகழ்
பேறருள் வான்டன
மடங்கற் றனியேறாத்
தூணில் வந்தாங்கு
திடீரென விக்கடுந்
துப்பினீத் தெழுவாயே.
(9)
பத்தும கத்துவத்
தொண்டர்முன் பாடிய
பனுவற்றிரள் பூரணமே
பித்துடை யார்புரை
யென்றமிழ்ப் பாட்டினும்
பேராசை யெய்தினையா
லெய்த்து வருந்துறு
மித்தரு ணந்தொந்
தெழிலார் திருவரங்கா
துய்த்துமிழ் பார்முழு
துய்திறஞ் செய்திடத்
துயர்னீத் தெழுவாயே.
(10)
பொல்லவர் கோமெ னாந்திற
மேமிகப்
புகலுந் திருப்புகழோன்
றொல்லாங் கேசனைச்
செந்தமிழ்ப் பாக்கொடு
துயினீத் தெழுவாயென
றில்லற முந்துற வுந்தொடா
வன்றுய
ரெய்திப் பகர்பதிகம்
வல்லவ ராரெனி னுங்கரு
தும்பயன்
வளமிக்
குறுவாரே.
(11)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக