வியாழன், 24 செப்டம்பர், 2026

தென்பேறு நெடுமால் பதிகம்

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

தென்பேறு நெடுமால் பதிகம்

(காப்பு)

(நேரிசை வெண்பா)

காதலித்து மார்பிற் கமலமல ராளைவைத்த

மாதவனே தென்பேற்று மாநகரி – னீதஞ்

செலுத்துகின்ற சங்காழிச் செங்கை நெடுமாலே

யலுத்துவந்தேனாட் கொண்டரு ளே.

(பதிகம்)

(கொச்சகப் கலிப்பா)

ஐயமின்றி நின்னடியார்க் கடிமைசெய்யு மவர்பணியே

மெய்யருட்சீர் நல்குமென விரும்புவது மறியாயோ

யையர்விற் றுயிர்கூரும் பச்சைமுகி லனையானே

செய்யவளுக் கினியோனே தென்பேற்று நெடுமாலே.

(1)

மூவகைய திருநாம முழுதுமிட்டுன் முன்னின்றென்

னாவலெல்லாஞ் சொலக்கேட்டு  மருள்புரிய விதமியாதோ

காவர்தங் குணங்கோது கண்டிருக்குங் கார்முகிலே

தேவர்களுக் குயிரனையாய் தென்பேற்று நெடுமாலே.

(2)

கந்தரம்போன் மிகநல்கிக் களிகூரும் புகழ்வேண்டி

வந்தவெனக் கிரங்காத வன்மையுனக் குந்தாமோ

மந்தரத்தைக் கடலிலிட்டு மதித்துவிண்ணூர் வாழவைத்தாய்

செந்தமிழ்ப்பின் சென்றுவந்தாய் தென்பேற்று நெடுமாலே.

(3)

எல்லவர்க்கு மாதரமா யிலங்காழிப் படையேந்தும்

வல்லவுனைப் பரவாதார் மாட்டுமிர்ந் துழல்வேனோ

நல்லவா ரமைவான்று ஞாயமிலார் பாலிரக்கச்

செல்லவிடு தூதரனாய் தென்பேற்று நெடுமாலே.

(4)

காலையினு மாலையினுங் கருநிலை மலைநேருன்

மேலைநினைத் துருகார்போல் வெதும்பவெனை விடலாமோ

பாலைநிகர் மொழிகுளறிப் பதறியழுத் தழைத்தாட்குச்

சேலைமிகக் கொடுத்தோனே தென்பேற்று நெடுமாலே.

(5)

மொய்த்தமலர் பலதூவி முகுந்தாவென் றிறைஞ்சுமவர்

பித்தனெனத் தமியேனைப் பேசாத பேறருள்வாய்

கைத்தலை மெட்டுடைய தொருகான்முளையை யீன்றபின்பு

சித்தசனைப் பெற்றோனே தென்பேற்று நெடுமாலே.

(6)

பாலோங்கு மொழிநல்லார் பரிசுகண்டுள் ளஞ்சாது

மாலோங்கப் பெறுவேனு மகிழ்கூரப் புரிவாயோ

வேலோங்கும் பரகாலன் வெருட்டலிற்போய் வெருளுற்றாய்

சேலோங்கும் வயல்சூழுந் தென்பேற்று நெடுமாலே.

(7)

கவலையெனும் பிணிக்கொண்டுன் கண்ணருளை மிகநாடித்

தவமுயலுந் தமியேனைத் தளரவிடத் தகுங்கொல்லோ

வவனியனென் றுரையாம லாதியெனு மானையின்முன்

சிவனயன்கண் டொல்கவந்தாய் தென்பேற்று நெடுமாலே.

(8)

செங்கனக வரைபோலுந் திற்றகலுழன் மிசைதோன்றிப்

பங்கயத்தோன் முதலாய பாகவதரு டன்வைத்தாள்

வெங்கண்ண னாந்தகுவன் விறலழியத் துணைவிட்டோர்

சிங்கமெனக் குதித்தோனே தென்பேற்று நெடுமாலே.

(9)

உறங்காத புளிநிழலு டையானோ டுள்ளவர்போற்

பிறங்கார்வம் பெறவேண்டும் பெருமைபெற்றும் பிழைப்பட்டேன்

கறங்காழிப் பெருமானே கனற்கோபத் தகுவரிடந்

திறங்காட்டும் புயத்தானே தென்பேற்று நெடுமாலே.

(10)

தேனமரு மலர்ச்சோலைத் தென்பேற்று நெடுமாலை

வானவரும் புகழவேணு வனத்தொருவன் பகர்பாட

லானபத்து மறவர்மே யநுதினமும் பகர்வரை

யீனமுறும் வினைப்பேயினி கல்சிறிது மணுகாதே.

(11)

முற்றிற்று.


 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக