வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
அருளிச் செய்த
படைவீட்டுப்
பதிகம்
1.திருச்செந்தூர்
(காப்பு)
(நேரிசை
வெண்பா)
1.
காட்டுப்
பரண்குறத்தி காவலவன் கைக்கொள்படை
வீட்டுப் பதிகம்
விளம்புமெனக் – காட்டுப்
பரியிரண்டு மோரிரண்டு
பாலவா ரணமு
மரியிரண்டு முற்றதுணை
யாம்.
(அறுசீர்
ஆசிரிய விருத்தம்)
2.
அருள்வலி
தருவா யென்றன்
றறைந்தபாட் டனைத்துங் கேட்டும்
பொருள்வளம் பெறலு
மின்றிப்
போகவிட்டி ருந்தா யன்றே
சுருள்வரி யுடற்பாம்
புண்ணுந்
தோகையம் பறவை யூர்வாய்
தெருள்வலார் பலர்வந்
தேத்தத்
திகழ்திருச் செந்தூ ரானே.
(1)
3. பாணனீ ளுவனென் றுள்ள
பத்தர்தம் பேறு மின்றி
நாணடைந் துழல்வேன்
றன்பா
னவின்றசொன் முழுதும் பொய்யோ
கோணல்வெண் பிறைக்கோட்
டானைக்
குலமகள் கொழுநற் குன்றிற்
சேணளந் துயர்பொன்
மாடந்
திகழ்திருச் செந்தூ ரானே.
(2)
4. தத்திரத் தருட்சீர் வேண்டுந்
தமியனேற் கிரங்கி டாம
லித்திரத் தொருகற்
கீன்றிங்
கிடையவிட் டிருந்தா யந்தோ
சத்திரத் தடங்கை
யானே
தவளமால் களிறோன் றூர்வாய்
சித்திரச் சிகரி
கோடி
திகழ்திருச் செந்தூ ரானே.
(3)
5. இன்றமிழ்த் துதிசொல் வேனுக்
கித்தனை மகிழ்ச்சி யுண்டே
லுன்றன துளத்திற்
கேட்டு
முவகைசற் றுதித்தி டாதோ
பொன்றலின் முதல்வர்
தீக்கட்
பொறியெனப் புவிமேல் வந்தாய்
தென்றலங் கிரியான்
போற்றத்
திகழ்திருச் செந்தூ ரானே.
(4)
6. பொன்னவர் முதலாந் துன்பம்
பொறுக்கமி தாதி நொந்திட்
டென்னகம் படும்பா
டோர்ந்து
மிரங்கிடா திருக்க லாமோ
வன்னமென் னடைக்கொம்
பன்னா
ளரிமுகந் தவிர்த்த நட்பாற்
றென்னர்பற் பலர்கொண்
டாடத்
திகழ்திருச் செந்தூ ரானே.
(5)
7. பந்தவே தனையும் பொல்லாப்
பாறைவன் கிணறும் பைம்பொன்
றந்தவெந் துயருந்
தீர்க்குந்
தகுதிநிற் கிலையோ சாற்றாய்
சந்தனப் பொதியைக்
குன்றத்
தடங்குவட் டுறைவா னல்குஞ்
செந்தமிழ்க் கினிதாந்
தொல்சீர்
திகழ்திருச் செந்தூ ரானே.
(6)
8. முன்னமெண் ணறுபல் கோடி
முனிவருக் கருள்செய் தாயிங்
கென்னளவி னுங்கற்
சிந்தை
யெங்குகண் டெடுத்தா யையா
கன்னலஞ் சிலையான்
றங்கை
கரந்தொடுந் தினைச்சிற் றுண்டி
தின்னவோர் கிழவ
னாகித்
திகழ்திருச் செந்தூ ரானே.
(7)
9. குடத்துளென் பொருபெண் ணாகக்
கூறினாற் குந்தை காட்டு
நடத்தைநீ யெனக்குக்
காட்டி
னானிலம் பழிக்குங் கொல்லோ
கடத்தவா ரணமூர்ந்
தும்பர்க்
காவல்செய் கவினும் வேண்டாத்
திடத்தின ருருவம்
போன்றுந்
திகழ்திருச் செந்தூ ரானே.
(8)
10. கருத்துணர்ந் ததற்கு மேற்சொற்
கைவரைந் திடுஞ்சீர் கண்டும்
வருத்தமுற் றிடையு
நெஞ்ச
மகிழுநாள் வருவித் தாள்வாய்
பருத்தமா மாத்தைக்
கொன்று
பசியமூங் கிலைக்கரத் தப்பாற்
றிருத்தகு வேங்கை
யாகித்
திகழ்திருச் செந்தூ ரானே.
(9)
11. மாவனத் தின்றகர் மற்றோர்
வடிவெடுத் தருணீ மூங்கிற்
காவரு மெனையிவ்
வாறு
கலங்கிடக் காண லாமோ
மூவரும் பரவு
மூவர்
முதல்வனா முருகா முன்னைத்
தேவரூர்க் கொருதா
யென்னத்
திகழ்திருச் செந்தூ ரானே.
(10)
12. தூசினற் வருந்தத் தோகை
தொடும்வட புணர்ந்தாய் சோர்வி
லாசியோ ரிருக்க
நிந்தை
யறைகுவேற் புரக்கொண் ணாதே
மாசிலா மணியே
வேற்கை
வாதனே மறுத்தீர் ஞான
தேசிகர்க் கொருகோ
வாகித்
திகழ்திருச் செந்தூ ரானே.
(11)
13. திரிசுதந் தாரா லேற்றந்
திகழ்திருச் செந்தூ ரானைக்
கரியகற் கிணற்றி
னன்னீர்
காணுறக் கருதுந் தொண்ட
னரிதுபோற் றிசைக்கும்
பாட
லனுதினம் பகர்வார்க் கெல்லாம்
விரிகடற் புவனி
யேத்து
மெய்ப்புகழ் மிகவுண் டாமே.
(12)
முற்றிற்று.
2.திருப்பரங்குன்றம்
(கலித்தாழிசை)
14. அங்கடியே னுற்ற நலமத் தனையுஞ்சொற் றுள்நீ
யிங்ககிலத்
தோரு மிகழவைத்தா யென்செய்வேன்
றுங்கவடி
வேலணிமற் றொண்முருகா சொல்லருஞ்சீர்ச்
செங்கமல
வாவிசுற்றுந் தென்பரங்குன் றாதிபனே.
(1)
15. நஞ்சனைய கண்ணார் நலங்குறித்து நானிலத்திற்
சஞ்சலமுற்
றேங்குந் தமியேனை யாள்வதென்றோ
குஞ்சரியாள்
கொண்கா குளிர்நீருங் கொன்றையுஞ்சேர்
செஞ்சடிலத்
தார்புதல்வா தென்பரங்குன் றாதிபனே.
(2)
16. காமனிலும் வஞ்சகக் கலியினிலும் பொல்லாதே
யாமபிமா
னத்தாலயர்ந் தேனருள் புரிவாய்
கோமளக்
குன்றன்ன குமாரகு யிசைக்குந்
தேமலர்ப்பைங்
காவடருந் தென்பரங்குன் றாதிபனே.
(3)
17. முன்னம் புகன்றமொழி முற்றுநிச மாகாம
லின்னம்பொய்
போன்றே யிருப்பதனுக் கென்செய்வேன்
கன்னங்
கரியகுறக் கன்னிபுணர் சாங்கேயா
தென்னன்ற
வம்போலுந் தென்பரங்குன் றாதிபனே.
(4)
18. கங்கை யருள்சிறிதென் கற்கிணற்றெய் தாதல்கண்டு
மங்கை
யருமே சமருண்டேன் மனமிரங்காய்
தங்கைமகிழ்
நூலறிவாய் சண்முகத்தோர் தற்பரமாஞ்
செங்கை
வடிவேலா தென்பரங்குன் றாதிபனே.
(5)
19. அங்கட் புவிமா தறியத் தொடுங்கிணற்றால்
வெங்கட்
கொடியோர் மிகவிகழ் வெட்குற்றேன்
றிங்கட்
பிறையுந் திரைப்புனலுஞ் சேர்சடையார்
செங்கட்
பொறியானாய் தென்பரங்குன் றாதிபனே.
(6)
20. அந்நாளிற் சற்று மருந்தமிழிற் போற்றிசையாச்
சந்நாசிக்
குங்கருங்கற் றண்ணீரூற் றீந்திலையோ
வெந்நா
ளெனக்கருள்வா யேழெழுவர்க் கோர்சரஞ்
செந்நா
வலற்புரந்தாய் தென்பரங்குன் றாதிபனே.
(7)
21. இச்சைமுற் றுந்தீர்த்தாள் வாயென்றடுத்த வென்மனங்கற்
றச்சைவிட்டு
நீங்கித் தவஞ்செயுமா றென்றருள்வாய்
கொச்சைநகர்ப்
பாவலவர் கூதாள முங்கடம்புஞ்
செச்சையுந்
தோணமீதணிந்தாய் தென்பரங்குன் றாதிபனே.
(8)
22. ஈரமில்பாழ் நெஞ்சினர்க்கு மெய்துநன்னீ ரென்கிணற்றுள்
ளோரருவி
போல்வந் துதிக்குநா ளென்றுரையாய்
சூரனஞ்சச்
செற்ற சுடர்வேலா தொண்டரன்பாற்
சீரனந்தங்
கோடிதிகழ் தென்பரங்குன் றாதிபனே.
(9)
23. பத்தனல் னானாலும் பாவனையுள் ளேனதனா
லித்தறையோ
டுன்னைவிட்டிங் கென்னையிக ழாரிரங்கா
யத்தன்
றிருநெடுமா லாரணத்தோ னாதியராஞ்
சித்தர்பலர்
போற்றிசைக்குந் தென்பரங்குன் றாதிபனே.
(10)
24. ஞாலத்தோர் போற்றவொரு நன்னீருற் றெய்தலின்றே
னீலத்
தனிச்சிகிமே னீவாலோர் நிச்சயமோ
காலத்தை
வென்றபிரான் கண்மணியாய்க் கைக்குவிக்குஞ்
சீலக்
குரவனுமாந் தென்பரங்குன் றாதிபனே.
(11)
25. அன்மருவு கண்டத் தரனாடற் சீர்மலியுந்
தென்மதுரைப்
புண்ணிய மாநகர்தென் பரங்குன்றாதிபனை
வன்மனநேர்
கல்லிலருண் மானுநன்னீர் வாஞ்சைகொள்வான்
சொன்மதுரப்
பாடற் றுதிப்பார் துயரறுமே.
(12)
முற்றிற்று.
3.பழனி
(கலித்துறை)
26. அலகோ தருமொழி
நீவலி தறையப் பெறுமடியே
னுலகோ ரிகழக் கண்ட யாவுற்றே னறியாயோ
வலகோ ழிநெடுங் கேதனம் வைத்தாய் மயலூர்வாய்
பலகோ டிபுகழ்ச் சீர்திகழ் பழனிக் குருபரனே.
(1)
27. கோலத் துணைநிகர்
வண்மை கொடுத்தா யருளாடற்
சீலத் துமவர் றிங்கொரு சிறிதுந் தருகில்லாய்
வேலத் தவினோ தகுக வேளே மதனவெந்த
பாலத் தழல்விழி யார்தரு பழனிக் குருபரனே.
(2)
28. எல்லோர்
களுமிகழத் தொடுமென் கூப மதிடைபொன்
வில்லோ னதுசென்னிப் புன்ன மிளிருந் தினமுளதோ
சொல்லோ தையுநா ணத்தொனி செய்யுந் தகரூர்வாய்
பல்லோ ரருள்வாழ் வெய்திய பழனிக் குருபரனே.
(3)
29. நெல்லைக்
கினிதே கென்று நிகழ்த்துஞ் சொலைநினையிற்
கல்லைத் தொடவிட் டிங்கு கலங்கச் செயன்முறையோ
வில்லைப் பொருநுதல் வேடமின் வகிர்தா முதுவெய்யோன்
பல்லைக் கவர்பவர் கண்ணருள் பழனிக் குருபரனே.
(4)
30. வந்தென்
றனுளத் துட்புல வன்றா னெனநின்றா
யிந்தென் றொளிர்கோ லத்தெதி ரிலகுந் தினமென்றோ
நந்தெஞ் சலில்கரை யிற்பல நல்லார் விளையாடும்
பைந்தெண் புன்னமடு மிக்கவிர் பழனிக் குருபரனே.
(5)
31. உன்னா ணையெனக்
குன்னரு ளொன்றே துணைகண்டா
யென்னா கமிளைக் குந்துய ரெய்தச் செயலேனோ
பொன்னா டுடையர் ராதிய புலவோ ரெவருக்கும்
பன்னா ளுநலஞ் செய்துயப் பழனிக் குருபரனே.
(6)
32. உலகைத் தெரியாய்
நீயென வோதும் பலர்தஞ்சொற்
கலகத் தினைவெல் லும்படி கல்லிற் புன்னல்காய்
சிலகற் பனைநூ லோரிகழ் தெய்வக் குமரேசா
பலவைப் புலவரு நாடிய பழனிக் குருபரனே.
(7)
33. காழிக் கவுணி
யனிற்புவி கழறுந் திறலெய்திப்
பாழிற் கதறு நர்பொய்ந் நெறிபாற்ச் செயலருள்வா
யேழிக் குற்ழிசை நாரத னின்புற் றுய்வென்றோர்
பாழித் தகர்மிசை யேறிய பழனிக் குருபரனே.
(8)
34. நீசூ னியமே
யென்பவர் நேருற் றிடிலோல்கி
யாசூ கமுளா ரிற்பெரி தகலச் செயலழகோ
மாசூ தமுதற் சொல்பல வடிவங் கொடுகடலுட்
பாய்சூர் கெடவிடும் வேல்புனை பழனிக் குருபரனே.
(9)
35. அகழ கற்கிண
றதனுட் புனலா றெய்திடுமாகிற்
சகளத் துயர்பொரு ணீயெனல் சாதப் படுமன்றோ
விகன முத்தலை வேல்கொண் டெதிரெமனுக் கெமன்முதலாப்
பகர்முக் கடவுளர் மெச்சிய பழனிக் குருபரனே.
(10)
36. கெண்டைக்
கயழ்விழி யார்தரு கேடுற் றயராதுன்
றண்டைப் பதமலர் நாடிய தவமென் றடைவேனோ
விண்டைச் சடையின் னமுத்தமி ழிறையா தியசிலர்பாற்
பண்டைப் பொருணிலை யோதிய பழனிக் குருபரனே.
(11)
37. தவமிக் குற்பெரி
யோருணர் தடுத்த துவமுடிவாய்ப்
பவளக் கிரியென நீடிய
பழனிக் குருபரனைக்
கவலைக் கடனடு நின்றொரு கிற்றொட் டுழல்கள்வன்
புவனத் துரைசெயு மித்தமிழ் புகழ்வா ரிதிதருமே.
(12)
முற்றிற்று.
4.திருவேரகம்
(கலித்துறை)
38. கலங்கு பாழ்மனக் கற்கிணற் றருட்பு
னற்கண்டு
துலங்கு மெய்ப்புக ழடையு நாளென்று கொல்சொல்லா
யலங்க னீபமுங் குரவமுஞ் செச்சை யுமணிந்தா
யிலங்கு பொன்மதி ளுடைத்திரு வேர கத்திறையே.
(1)
39. மாச டைந்தபுன் மனத்தினேன் றனைப்புவி
மாந்த
ரேசல் கண்டநீ யிரங்கி யாண்டரு நாளென்றோ
பேச ரும்பிர ணவப்பொரு ளுண்மை யைப்பெறலா
லீச னும்பர வியதிரு வேர கத்திறையே.
(2)
40. கன்றொ டானறுத் துண்ப வர்களு
மிகழகால்
நின்றொ ழும்பி னெற்கெய் திடன்முறை கொலாநீக்காய்
துன்றொ னார்குல மறக்க ளைந்தவிர் சுடர்வேலா
வென்றொ டம்புலி சூழ்திரு வேர கத்திறையே.
(3)
41. கொள்ளொ ணாக்கருங் கற்கிணற்
றாலு ளங்குலைவேன்
விள்ளொ ணாப்புக ழுறச்செய ரல்லை கொல்விளம்பாய்
தள்ளொ ணாச்சம ரசநிலை யுணர்ந்த மெய்த்தவத்தோ
ரெள்ளொ ணாநலம் புனைதிரு வேர கத்திறையே.
(4)
42. நஞ்சு நேர்விழி நாரியர் நலம்வி
ழைந்தவரைக்
கெஞ்சு மென்னைநீ கிளியெனப் புகன்ற தாற்கெட்டேன்
கொஞ்சு மென்மொ ழிக்குற மகண்மரு வியகுழகா
வெஞ்சு றாவளந் திகழ்திரு வேர கத்திறையே.
(5)
43. முத்த மிழ்க்கி னியவ னெனுமுது
புகழினையென
சித்த நேர்வத னிமித்தம் விட்டிருந் தேன்செப்பாய்
பைத்த பாம்ப ணிப்பசு மரத்த மயிற்பரியா
யித்த லத்துய ரிசைத்திரு வேர கத்திறையே.
(6)
44. பாடி னார்பலர்க் கருளிய நீயெ
னைப்படியில்
வாடி யேங்கி டப்படுத் தலுந்திரு வருள்வழக்கோ
நாடி மாதவ முடித்த வான்கழைக் குயிர்நல்கு
மீடில் காவிரிக் கரைத்திரு வேர கத்திறையே.
(7)
45. கழும லப்பதிக கவுணிய னாமெ னக்கவின்று
பழுத றும்புகழ் படைப்பவ னெவன்கொ லோபகராய்
முழுது ணர்ந்த மெய்ப்புலவ னாமுதி ரருண்முருகா
வெழுதொ ணாமறை யொலித்திரு வேர கத்திறையே.
(8)
46. வீர வேல்பெருஞ் சூத மொன்றடுந்
திறல்விழைவேன்
சீர ழிந்திடத் தகுங்கொ லோவிரைந் தருட்செய்வாய்
பார திக்கு முன்னூல் பயிற்றிடுங் குருபரனே
யீர நாண்மலர்ப் பொழிற்றிரு வேர கத்திறையே.
(9)
47. பாவ நோக்கரும் பாறை தொட்டுள
மிகப்பதைப்பே
னாவ றீர்நன் னீர்ப்பெருக் கருளு நாளுளதோ
மூவ ரிந்திரன் வானவ ராதி யர்மொழியு
மேவ ரும்பர வியதிரு வேர கத்திறையே.
(10)
48. நயம்பு கன்றறி யார்மனைக் கடைதொறு
நனிபோய்க்
கயம்பு ரைந்த பேராண்மை கெட்டிரப்ப தென்கடனோ
சுயம்பு வரம்பி ரணவப் பொருணிலை யினைத்தொண்டர்க்
கியம்பு தேசிக னேதிரு வேர கத்திறையே.
(11)
49. ஏத மில்லவர் தொழுந்திரு வேர
கத்திறையைச்
சீத நீர்விருப் பாலொரு கற்றொ டுஞ்சிறுவன்
போத வேண்டுமிப் பதிக மேபுகல் பவர்புவிமேற்
சாத றீர்புக ழுடற்கொடு விளங்கு நர்தாமே.
(12)
முற்றிற்று.
5.பழமுதிர்சோலை
(கலித்துறை)
50. தளவே னெனமுனி
வர்ரெதிர் தனிநின் றிரவாமல்
வௌவே ழமுளா னெய்தரு மெய்ச்சீ ரருள்வாயோ
களவே டுவர்தவ மன்னவள் கழல்பே ணியகுழகா
வொளவே லணிதோ ளர்பழ முதிர்சோ லையுளானே.
(1)
51. கெடுவார்
பலரிக ழும்படி கிணறொன் றகழ்வேனு
நெடுமால் புகழ்வாழ் வெய்தவு நீசெய் யவலாயோ
நடுவார் சமரச நன்னிலை ஞானக் குமரேசா
வுடுமா தர்கைமத லாய்பழ முதிர்சோ லையுளானே.
(2)
52. குளிர்நீர்
விழைவா னெஞ்சு கொதித்தொல் றேவிட்டாய்
கிளிநீ யென்முன் னம்பகர் கிருபைக் கணியீதோ
களிமால் வரையூர் வான்மகள் கற்பொன் றியகணவா
வொளிகூர் முருகை யாபழ முதிர்சோ லையுளானே.
(3)
53. ஞானத் தலைவரின்
முந்துனை நண்ணுஞ் சிறியேனை
யீனத் தொழிலினர் பற்பல ரிகழச் செயலெவனோ
கானக் குறமகள் சேரமுது கதையோ துநர்தம்மை
யீனப் படவொட் டாய்பழ முதிர்சோ லையுளானே.
(4)
54. பாகைப் பொருசொல்
லாரொடு பழகுந் தமியேனை
நீகைத் துவிடா துன்னரு ணெறியுய்க் கவலாயோ
வானைச் சமர்மலி குக்குட மருவும் புயவாதா
வோகைக் கடலழு தேபழ முதிர்சோ லையுளானே.
(5)
55. பன்னு தமிழ்கொடு
நின்புகழ் பாடிப் பணியார்போற்
பொன்னும் புவனியு மாதரும் புரிதீங் குறலாமோ
மின்னுஞ் சுடர்வேல் வித்தக வேளே கதிவிழைவா
ருன்னும் பொருடரு வாய்பழ முதிர்சோ லையுளானே.
(6)
56. தன்னா யகனென
மற்றொரு தலைவற் றொழுமவர்பா
லென்னா ணவமொரு கற்றினி திலகுந் தினமென்றோ
நின்னா றுமுகந் தானரு ணெறியா றெனலுணரா
வொன்னா ரையுமுனி யாய்பழ முதிர்சோ லையுளானே.
(7)
57. வாவிக் கிடைமூழ்
குந்தவன் மதலைக் கருள்வள்ளற்
காவித் துணைநீ யென்ப தறிந்த ளர்வேனோ
காவிக் கலைமுழு நீறணி கவுமார் கள்பவநோ
யோவிக் கதியருள் வாய்பழ முதிர்சோ லையுளானே.
(8)
58. குறுவோ வவிர்நுதன்
மங்கையர் கொங்கைக் கயர்வோரு
மிறுமாப் புறுமுல கத்தெனை யிவண்வைத் திடன்முறையோ
கறுவா ணவ்விதை யாலசல் கடல்கோ வெனநடுநீ
டுறுமா வற்வென் றாய்பழ முதிர்சோ லையுளானே.
(9)
59. ஆரார் சடையோ
னுந்திரு வமர்மார் புடையானும்
பாரா திசெய்தா னும்பகர் பதமென் றருள்வாயோ
தாரா ளமதா கக்கொடை தருமைந் தருவளர்பொன்
னூரார் மனமொல் கப்பழ முதிர்சோ லையுளானே.
(10)
60. கண்மைச்
சிறியவர் கைப்பொருள் கருதித் தளர்வேனும்
வண்மைத் தவமுடி வாகிய வாழ்வெய் தலுமுளதோ
தெண்மைப் புனல்ணீ சென்னிகொள் சிவனா தியர்பலர்சூ
ழுண்மைக் குருபர னேபழ முதிர்சோ லையுளானே.
(11)
61. உம்பர் திரள்பர
வப்பழ முதிர்சோ லையுளானை
யிம்பர்க் கொருகோ மாளியெ னக்கல் லகழ்கின்றோ
னம்பற் புதமெய் தும்படி யறையுந் தமிழ்விழைவார்
தம்பக் குவமறி கின்றவர் தவமிக் குடையோரே.
(12)
முற்றிற்று.
6. குன்றக்குடி
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
62. நந்தாருங்
காதினன்போ னானிலத்தில் வாழுநல
நண்ணு மென்னை
நொந்தாருட் டலையாக்கன் முறைகொல்லோ வருட்கடைக்கண்
ணோக்கி யாள்வா
யிந்தாருஞ் சடைப்பெருமான் றருமதலாய் வடிவேலொன்
றெடுத்த கையாய்
கொந்தாரு மலர்க்கடப்பந் தண்சோலை குலவுகுன்றக்
குடிக்கோ மானே.
(1)
63. நீதயைசெய்
யாக்கொடுமை மலிந்ததனாற் பரதவித்து
நெஞ்சம் புண்ணாய்ப்
பாதகரு மிகழவொரு கரும்பாறை தொடுமெனைக்கண்
பார்க்க வேண்டுஞ்
சீதமலி கங்கைதரு சிறுவனே வெண்சேவற்
றிருக்கை யானே
கோதறுமா தவமுடையார் பெருங்கூட்டங் குலவுகுன்றக்
குடிக்கோ மானே.
(2)
64. வேதாளத்
தினுங்கொடிய மனப்பேயாற் பரதவித்து
வெதும்பு மென்னைப்
பாதாளம் படுபாறைக் கிணறுதொடென் றுரைத்துமிக
படுத்த லாமோ
மாதாளங் கொடுபொதுவி னடம்புரிவார் விழிக்கனலில்
வருஞ்செவ் வேளே
கூதாளம் புனைவேடர் குலம்பரவக் குலவுகுன்றக்
குடிக்கோ மானே.
(3)
65. திக்குமுழு
மையுமறியத் தொடும்பாறைக் கிணற்றினிடை
தெண்ணீ ருண்டாய்
நெக்குருகித் தொழுமடியா ரனைவருக்கு மொருபெருமை
நிகழ்நா ளென்றோ
முக்குணமுங் கடந்தபர மோனபரா னந்தநல்கு
முருக வேளே
குக்குடகே தனமியலுந் திருவிழாக் குலவுகுன்றக்
குடிக்கோ மானே.
(4)
66. பக்தர்களுக்
கெளியானென் றருமறையு மாகமமும்
பகர்சீ ருள்ளாய்க்
கித்தனைபா டடியனேன் படுமளவும் பொறுத்துறும்வல்
லிதய மாமோ
முத்தமிழ்மா முனிபரவு முருகாவிண் ணவர்படைக்கோர்
முதல்வா மொய்ப்பூங்
கொத்தலர்மென் குழன்மடவார் விளையாடல் குலவுகுன்றக்
குடிக்கோ மானே.
(5)
67. அஞ்சலளித்
தாண்டாயென் றிறுமாந்த பெருமைமுற்று
மழிந்திட் டொல்கிப்
பஞ்சரிக்கின் றேனதுசொற் பன்னிருகா தினும்புகுதாப்
பாரங் கொல்லோ
கஞ்சமலர்த் தொட்டிலிடஞ் சரவணவா வியிற்றுயின்ற
கந்த வேளே
குஞ்சரிவௌ வியகொழுநா குறைவறுசீர் குலவுகுன்றக்
குடிக்கோ மானே.
(6)
68. அறமொருசற்
றானாலும் விழையாதார் களுமிகழ
வடியே னுள்ளத்
திறநெகிழப் படுத்துகின்றா யிதுதகுதி யலக்கருணை
செயத்தான் வேண்டும்
பெறலரிய மெய்ஞ்ஞானக் கடலமுதே யாறிருதோட்
பெருக்கத் தெந்தாய்
குறமகளுக் கினியநல முயல்வோனே குலவுகுன்றக்
குடிக்கோ மானே.
(7)
69. இச்சைமுழு
தொழித்தருள வல்லாய்நீ யெனவடுத்தே
னெனையெல் லோருஞ்
சைச்சையெனற் காமாறு செயவிடுத்தா யிதுவுமொரு
தருமந் தானோ
செச்சைமலர்த் தொடைசூடுந் திருத்தோளெம் பெருமானே
தெண்ணீர்ப் பொய்கைக்
கொச்சைநகர்ப் புலவோனே குளிர்தமிழ்ச்சீர் குலவுகுன்றக்
குடிக்கோ மானே.
(8)
70. கடுங்கோடைத்
துயர்தவிர்ப்பத் தொடுங்கிணற்றிற் கரும்பாறை
காணச் செய்தீண்
டிடுங்கோதென் றொழித்தருள்வா யெனக்கிரங்கா திருப்பதுவு
மிசைதான் கொல்லோ
நெடுங்கோலத் தினன்மகிழு மருகோனே யறுமுகத்தோர்
நிலம வேளே
கொடுங்கோபச் சூர்தடிந்த கொற்றவனே குலவுகுன்றக்
குடிக்கோ மானே.
(9)
71. உன்னிருபங்
கயமலர்த்தாள் கருதியருள் புரிவாயென்
றுறுதி கொண்டு
பன்னியபாட் டத்தனையும் பயனறுபாழ் படுமெனிலெப்
படியீண் டுய்வேன்
சென்னியைந்து ளான்றிருமா லயன்முதலோர் களும்பரவச்
சிகண்டி யூர்வாய்
கொன்னிமிர்வேற் படைப்புகழே கூறுவார் குலவுகுன்றக்
குடிக்கோ மானே.
(10)
72. ஒருபரநீ
யேயெனநன் குணராதார் சிலர்க்குமரு
ளுதவு முன்ற
னிருபதமே கருதுமெனை யிப்படிச்சோ திப்பதற்கு
மிசைந்தா யந்தோ
சொருபநிரா மயமுடிவாம் பிரணவத்தின் பொருள்விரித்துச்
சொல்லுஞ் ஞானக்
குருபரனே யுருவனந்தங் கொள்வானே குலவுகுன்றக்
குடிக்கோ மானே.
(11)
73. கோடாநு கோடிவளங்
குன்றாது குலவுகுன்றக்
குடிக்கோ மானைத்
தேடாத நெஞ்சனைய கரும்பாறை தொடுமொருவன்
றெண்ணீர் வேண்டிப்
பாடாகித் தமிழ்ப்பதிகம் பரவுவா ரெவரேனும்
படியிற் சற்றும்
வாடாத பேறடைந்து வானகத்து மிந்திரன்போல்
வசிப்பா ரன்றே.
(12)
முற்றிற்று.
7. திருவுருமாமலை
(அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
74. தெள்ளிய
முத்தமி ழாலுனைச் சொல்வது
தீதென் றிகழாமற்
கொள்ளியல் புள்ளவெ னெஞ்சக மிப்படிக்
குலையச் செயன்முறையோ
வெள்ளிய சேவலொன் றைப்புயத் திற்புனை
வீரா வடிவேலா
வொள்ளிய செம்புந் திக்கனி யாந்திரு
வுருமா மலையானே.
(1)
75. அப்படி வந்தெனை
நின்கிளி யாமென
வறைகின் றிலையாகி
லிப்படி யிற்பெரி தாணவ மெய்தியு
மிவ்வா றுழல்வேனோ
துப்பவிர் மேனியு டைக்குக னேதுதி
சொல்லித் தொழுவாருக்
கொப்பறு மெய்ப்புக ழைத்தரு நற்றிரு
வுருமா மலையானே.
(2)
76. சித்த மருட்சியு
டைச்சிறி யோரெனத்
திரியுங் கொடியேனைப்
பத்த ரனேகர் நடுக்குல வும்புகழ்
பாலித் தருள்வாயோ
சத்த முதற்பக ரைம்புலன் வென்றுயர்
தவயோ கியர்க்காளா
முத்த மருக்கொரு தாரக மாந்திரு
வுருமா மலையானே.
(3)
77. பாத கரும்பழிக்
கும்படி யிங்ககழ்
பாறைக் கிணறதனுட்
சீத மிகும்புன லூற்றுதிக் கும்படி
செய்யுந் திறலின்றோ
கோதறு செந்தமிழ் மாமுனி யும்புகழ்
குகனே யுமைமகனே.
(4)
78. ஆழ்விய னார்கருங்
கற்கிணற் றிற்பெருகற்
லூற றருள்கிலையே
லேழ்வித மாம்பிற விக்கட லின்கரை
யேறச் செயனிசமோ
தாழ்விய லாதெழுத் தாறுகொண் டுத்தமத்
தவமே முயல்வார்தம்
மூழ்வினை யைத்தவிர்க் குந்திறன் சேர்திரு
வுருமா மலையானே.
(5)
79. சோகையொப்
பாகுமெ னெஞ்சினு ணீயொரு
சொற்சொ லியதுணிவுண்
டாகையி னால்வினைக் கஞ்சுகி லேனெவ
ணாமோ வறிகில்லேன்
பாகைநி கர்த்த தமிழ்க்கவி வல்லவர்
பலரன் பொடுபாடி
யோகைமி கப்பெறு தற்கிட மாந்திரு
வுருமா மலையானே.
(6)
80. மெய்யறி
வில்லவர் தம்முற வான்மிக
மெலிவுற் றுழல்வேன்பால்
வையமுற் றும்பழிக் கத்தகு புன்றொழில்
வருவித் ததுமுறையோ
செய்யபொன் மேனியு டைச்சிவ னார்விழித்
தீநல் கியசெல்வா
வுய்யவல் லார்பலர்க் குந்துணை யாந்திரு
வுருமா மலையானே.
(7)
81. சண்பை முனிக்கிணை
யாமெனத் தக்கதோர்
தமிழ்நா வலன்வந்து
புண்பொரு மூனுகர் தீயவர் புன்னெறி
பொன்றச் செயலென்றோ
விண்பிடி மேவிய தோளர் சேபுன
வேடக் கொடிபாகா
வொண்படு தோகை நிகழ்கும ராதிரு
வுருமா மலையானே.
(8)
82. கோரம னத்தை
நிகர்த்தகற் பாறையிற்
கூபந் தொடவிட்டாய்
காரண மாகுமெ னக்கன விற்பகர்
கருணைக் கணியீதோ
சூரனை வென்றம ராபதிக் காவலன்
றுயர்தீர் தரக்கண்டா
யோரமி னீதியு டைக்குக னேதிரு
வுருமா மலையானே.
(9)
83. பாவம னந்தமுருக்
கொள்லொத் ததுறுப்
படிறே னுனதடியா
ரேவன்ம யன்றுக ளிப்புறு நற்றின
மெய்தப் பெறுவேனோ
மூவர்மு தற்பல ரும்பர வத்தகு
முருகா வறுமுகவா
வோவரு மெய்க்கரு ணைக்கட லேதிரு
வுருமா மலையானே.
(10)
84. என்னுயி
ருக்குயிர் நீயென நாடுறு
மியல்பைக் கருதார்போற்
பின்னுறு மாயை வலைக்கிடை விட்டதுன்
பெருமைக் கழகாமோ
பன்னும றைக்குல மாதிய நூல்பல
பகரவும் பரிசோர்வ
ருன்னுமு ருக்கொள ருட்குரு வேதிரு
வுருமா மலையானே.
(11)
85. உம்பர்கு
ழாம்வியக் கும்பொரு நைந்திரு
வுருமா மலையான்சொ
னம்பலுற் றுத்தொடுங் கற்கிணற் றுட்புன
னலனெய் துறநாடிச்
செம்பது மத்தடஞ் சூழுநெல் வேலியிற்
சிறுவன் பகர்பதிகங்
கம்பலை முற்றுமொ ழித்துவ கைப்பெருங்
கடனல் குவதாமே.
(12)
முற்றிற்று.
8. திருமலை
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
86. உன்னது சந்நிதி யிற்றமி யேன்மன
வுறுதிகொ
டுருணாளி
லென்னது டற்சிதை யாதருள் கின்றிலை
யெனிலிவ
ணுழல்வேனோ
பன்னக மீதுந டஞ்செயு மாலுறழ்
பச்சைம
யிற்குகனே
தென்னவ னாடுசெ யுந்தவ மென்றொளிர்
திருமலை
முருகோனே.
(1)
87. கற்கிண றொன்றுதொ டும்படி யேவினை
காசினி தனிலுள்ளோ
ரெற்கிழி வோதுத லேதொழி லாயின
ரென்றருள் புரிவாயோ
பொற்கிளி யும்பொரு குட்குட மும்புனை
புயநிரை யுடையானே
தெற்கிறை வன்சமர் தீருந லந்தரு
திருமலை முருகோனே.
(2)
88. சங்கட மிக்குனை நம்பிவ ணங்கிய
தமியனை யருளாமற்
பங்கய வேதன்வி திப்படி விட்டது
பழையநி னியல்பாமோ
துங்கம யிற்குக னேவடி வேலணி
தோளொரு நாலுடையாய்
திங்கண்மு கத்தர மங்கையர் வந்தமர்
திருமலை முருகோனே.
(3)
89. தோதறு செந்தமிழ் கொண்டுநின்
மெய்ப்புகழ்
கூறுகி லாரெனவிங்
கேதமி குத்தடி யேன்மெலி கின்றவி
ளப்பமு னக்கிலையோ
நாமமும் விந்துவு மொன்றுக லந்தந
லந்திகழ் சண்முகவா
சீதந றும்புனல் வாவிகு லாவிய
திருமலை முருகோணே.
(4)
90. பத்தர்க ளுக்கொரு தொண்டனெ னத்திகழ்
பண்புவி ரும்பியநா
னித்தறை யிற்றொடு கூபம தாலிழி
வெய்தலொ ழித்தருள்வாய்
முத்தமிழ் கற்றுமு றைப்படி யேகுறு
முனிமொழி வழிசெல்லுஞ்
சித்தர்த மக்கரு மைத்தவ வாழ்வரு
டிருமலை முருகோனே.
(5)
91. பங்கய னெண்கையெ ழுத்தழி யப்புரி
பதமல ருடையாயென்
றங்கரு ணைக்கிளி சொல்லிய சொல்லும்
சத்திய மாகுமதோ
பொங்கர வம்புனை யும்பெரு மான்முயல்
புண்ணிய வடிவானாய்
செங்கன கக்குவ டும்பெரி யதொல்கிய
திருமலை முருகோனே.
(6)
92. என்றனி மித்தமெ னக்கினி யார்சில
ரிடமொழி தருமாறுந்
துன்றமு டித்திலை யாயின முனாள்பகர்
சுருதிக ணிசமாமோ
குன்றரு முத்தமி ழைப்பொரு நைப்பெயர்
கொளுநதி யொடுநல்குந்
தென்றல்வ ரைக்குமு னின்றருள் சீர்திகழ்
திருமலை முருகோனே.
(7)
93. கொச்சைந கர்ப்புல வன்புகழ்
நாடிய
கொள்கையு டைத்தமியே
னிச்சைமு டித்தரு ளுந்திற லில்லைகொ
லித்தனை தாமதமேன்
கச்சைய ரைத்தணி வேடுவ னென்றொரு
கவிதைபெ றச்சென்றாய்
செச்சைமி குத்தவிர் சாரனி லாவிய
திருமலை முருகோனே.
(8)
94. சூரனை வென்றம ராபதி வானவர்
துன்பமொ ழித்தாய்நின்
னீரமி குந்தமி யேன்வினை வேரற
வென்றுசெ யத்துணிவா
யாரண ணைச்சிறை யிட்டுல கத்துயி
ரத்தனை
யுந்தருவாய்
தீரமி கும்பல வீரர்ப ராவிய
திருமலை முருகோனே.
(9)
95. பூவல யத்தின ரேசுறு புன்மைபொ
ருத்திய கற்கூபத்
தியாவரு மெச்சிவி ரும்புந றும்புன
லிக்கண மருள்வாயோ
மூவரு மன்புசெ யக்கரு ணைத்திறன்
முற்றுமு ழுப்புலவா
தேவரு மாதவ ரும்பெரி தின்புறு
திருமலை முருகோனே.
(10)
96. பவளமெ னத்திக ழுனதுரு வத்தொடு
பழகிய வெனதுள்ளங்
கவலையி டைப்படன் முறையல விற்பனர்
கருதும்வி யப்பருள்வாய்
தவளநி றத்தொரு சேவலி ருந்தொலி
தருபுய முடையானே
சிவனொடு முத்தமிழ் முனியுணர் சொற்பதற்
திருமலை முருகோனே.
(11)
97. தேரணி வீதிகொள் பண்பைப டுத்துள
திருமலை
முருகோனைக்
காரண மொன்றத னால்வள நீடிய
கழைவன நகர்வந்தோன்
பாரறி யத்தொடு கின்றகி ணற்றிடை
பைம்புனல் வருமாறுள்
ளீரமி குத்துரை செயுமிவை கற்பவ
ரின்னலொ ழிப்பவரே.
(12)
முற்றிற்று.
9. வள்ளியூர்
(கலித்துறை)
98. கோங்கார
முலைக்கன்னி மாரிச்சை வழிசென்று குலைக்கின்றநா
னீங்காம லுன்னைத்தி யானிப்ப தற்கான நெறிநல்குவாய்
தீங்காள ருணராம லெங்கெங்கு நிற்கின்ற சிறுதெய்வமே
யோங்கார வட்டத்தில் விளையாடு வாய்வள்ளி யூர்வேலனே.
(1)
99. திண்மைக்
கருங்கல்லி னிடைகூபம் வெட்டச்செயுந் தெய்வநீ
வண்மைப் புனற்பேறு நல்கா திருக்கின்ற வகையென்கொலோ
வெண்மைத் திற்றசேவ லங்கேத னங்கொண்டு மிளிர்கந்தனே
யுண்மைத் தொழும்பர்க் கொருயிராகு வாய்வள்ளி யூர்வேலனே.
(2)
100. செப்பொன்று
கொங்கைத் துணைப்பொற்புளார் தஞ்சொறித் திக்கைபோய்க்
கைப்பொன்று நாளொன்றும் வருவிக்க வல்லாய்கொல் காண்கின்றிலேன்
றுப்பொன்று மேனித் துதிக்கைப் பிரானுக்கொர் துணையாகினா
யொப்பொன்று மின்றிச் சிறக்கின்ற தாம்வள்ளி யூர்வேலனே.
(3)
101. மன்னுந் துயரப்பட்டு
வாடாம லென்புன் மனத்தூழுநீ
பன்னுஞ் சொன்மெய்யா கின்னறிக் கடற்சுற்று பாருய்யுமோ
பின்னுஞ் கடைக்கற்றை யந்தம் பிரானார் பெறுங்கந்தனே
யுன்னுங் கருத்துக்கு முண்ணின்று ளாய்வள்ளி யூர்வேலனே.
(4)
102. அன்னைக்கு
மேலா மருட்டெய்வ நீயென்ற டுத்துன்னுவேன்
றன்னைக்க ருங்கற் றொடச்செய் துறுக்கத் தகாதையகோ
வென்னைச்சொல் வாரென் றிரங்காதி ராதே யிகத்தூடுநன்
குன்னைப்ப ழிபாரு முண்டல்ல வோவள்ளி யூர்வேலனே.
(5)
103. நீதந்த காவிக்
கலைச்சீர் விளங்குண்மை நெறியெய்திடா
தேதந்த ருங்கற்கி ணற்றாலி ளைத்தேனி ரங்காய்கொலோ
மாதங்க மூர்வான் மகட்கின்ன லொன்றாத வண்ணந்தனித்
தோதந்த ரங்கத்து வஞ்சத்த னாம்வள்ளி யூர்வேலனே.
(6)
105. கொள்வா ருளாரோ
வெனச்செந் தமிழ்ப்பாடல் கூறும்போலேற்
கொள்ளார் தமுன்றிற் றோறும்போய் வருந்துன்ப மின்னந்தரேல்
கள்வார் மலர்க்கொந் தளக்குஞ் சரிக்கான் கவினானளென்
றுள்வார் மனத்தூடு றுந்தெய்வ மாம்வள்ளி யூர்வேலனே.
(7)
106. பாழிற் கருத்தைப்
பதித்துப் பதித்துப் படும்பாடுளார்
கோழிக் கொடிச்சீர் விழைந்தேனை நிந்திக்கை கூடுங்கொலோ
காழித் தமிழ்க்கொண்ட லர்வந்து பீலிக் காத்தாரைமுன்
னூழிக் கன்றபஞ் செனச்சேய் தவர்வள்ளி யூர்வேலனே.
(8)
107. ஈரங் கொடேகங்கு
தாழென்ற சீயன்சொ லேறாததோர்
சூரன் பராவுஞ்சொ ரூபங்கொ டென்முன்பு தோன்றாய்கொலோ
மாரன் கணாணுங்க லாபங்கு லாவும்பொன் மயிலேறுவா
யோரஞ் சொல்லார்தங் குழாமிஞ்சு சீர்வள்ளி யூர்வேலனே.
(9)
108. கும்பக் களிற்றைப்
பொருந்தீர் முற்றுங் குலைந்தெய்த்துளேன்
செம்பக் குவத்தொண்ட ரோடுற் றுவக்கின் றதின்முள்ளதோ
நம்பற்கு மாயற்கு நாலான னத்தற்கு நலநல்குவா
யும்பர்த் தலத்தின்ப முன்னோர்கள் வாழ்வள்ளி யூர்வேலனே.
(10)
109. தீங்குண்ட
நெஞ்சம் பொருங்கற் றொடுந்தன்மை சேரச்செயும்
பாங்குன் புகழ்க்காகு மோநற் புனற்றந்து பாலித்திடாய்
வீங்குந் துணைக்கொங்கை மின்னன்ன மானார் விரும்புங்குகா
வோங்குந் தமிழ்ச்சீர் தருதேசி கர்வள்ளி யூர்வேலனே.
(11)
110. ஓயாது பாடுந்
தமிழ்ச்சீலர் புகழ்வள்ளி யூர்வேலனை
தீயாரி கழ்ச்சிக்கு ளஞ்சாத கவுமாரர் சிந்தைக்கெலா
மாயாச மெய்தாது கற்கூப நீர்காண வறைகின்றசொற்
காயாம லர்க்கொத்தை நிகர்வானில் வாழ்கின்ற களிநல்குமே.
(12)
முற்றிற்று.
10. கழுகுமலை
(அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
111. அடியார் பலரு
ளொருவருஞ்செய்
தறியாப் பிழைசெய் தகங்கரிக்குங்
கொடியே னெனினுமெ னைத்தடுத்தாட்
கொண்டா லுனக்கு றைவருமோ
நெடியோன் மருகா புனங்காக்கு
நீலக் குறத்தி மணவாளா
வடிவே லணிந்த புயத்திறைவா
வளஞ்சேர் கழுகு
மலையானே.
(1)
112. பொல்லா ரிகழ
வகிலாண்டப்
பொய்கைப் புனலிற் போட்டதமி
ழெல்லா மெடுத்துத் தரும்பெருமை
யெய்தா யெனிலிங்
கெவணுய்வேன்
கல்லா லடியிற் சிவனுதற்கட்
கனலூ டுதித்த கான்முளையே
வல்லார் பாவத் திகழ்கருணை
வரதா கழுகு மலையானே.
(2)
113. யானோ வதற்கு
நாயகமென்
றியம்பு மொருவன்
மொழிநிசமே
லேனோ கருங்கற் றொடுமிளப்ப
மெனைச்சார் தருமென்
றிசையேனோ
மீனோங் கியகட் சிவைமுலைப்பால்
விரும்பிக் கமல
மிசையழுதாய்
வானோர் பலருந் தொழும்பரமன்
மதலாய் கழுகு மலையானே.
(3)
114. சிலைக்கோன்
முருட னெனக்கானிற்
சென்றோர் கவியேற்
றணிந்தாயென்
சொலைக்கோ தெனநீத் திருத்தனையேற்
றோட முனைச்சூழ்
தருங்கண்டாய்
முலைகோ கனக முகைத்துணையார்
மோகித் தணைதோண்
முருகையா
மலைக்கோ னுதவும் மகள்பயந்த
மைந்தர் கழுகு மலையானே.
(4)
115. புண்பா டுறுமென்
கவிபலவும்
பொய்யா மொழிமுன்
புகன்றுளதோர்
வெண்பா வினுந்தாழ் வெனச்சொன்னால்
வேறிங் கெவருன்
றனைப்புகழ்வார்
கண்பா வியசீர்க் கவிகைநிகர்
கவின்றோய் கலப்ப
பரியூர்வாய்
மண்பா ருலகிலி ணையிலதாய்
மறுத்தீர் கழுகு
மலையானே.
(5)
116. உருப்பூ ரணங்கொண்
டான்றவத்தா
லொளிரும் பொருணீ யெனவுணர்ந்தும்
விருப்பூ ரவர்கைப் பொருண்மிசைபோய்
வெதும்ப வெனைநீ
விடலாமோ
பொருப்பூ டுருவத் தொடும்வேற்கைப்
போரே றனைய புகழ்க்குமரா
மருப்பூங் கமலத் தடஞ்சூர்சீர்
வயங்குங் கழுகு
மலையானே.
(6)
117. திண்ணப் படுபாறை
யிற்கிணறு
செய்கென் றுரைத்துத்
தெளிநீரூற
றுண்ணக் கொடுத்தாண் டிலையிதுநின்
றுயர்ச்சிக் கழகோ
வுளமிரங்காய்
கண்ணக் கலப மயிற்பரியைக்
கதிர்வேற் படையைக்
கருதிமகிழ்
வண்ணப் புலவர் புகழ்போலும்
வான்றோய் கழுகு
மலையானே.
(7)
118. சிலமந் திகள்வான்
றருமிசைபோய்த்
திரும்பும் பொழிற்சீர்
திகழ்காழிப்
புலவன் றனைப்போல் வாழுநலம்
புரிந்தா லுலகம்
பொறுக்காதோ
கலகஞ் செயுங்கண் மடவாருட்
கவின்றோய் களியிற்
பவனிவரும்
வலவன் றினங்கண் டுளநாணும்
வனப்பார் கழுகு
மலையானே.
(8)
119. பாவை யனையார்
மொழிவழிபோம்
படிறே னெனினும்
பரவுநர்க்குத்
தேவை முழுதுந் தருமுனருட்
டிருத்தொண் டரைப்போற்
றிகழ்கின்றேன்
காவை வெருளப் படுத்தியகல்
கடலைக் கலக்கிக்
கறுவுசின
மாவை வகிர்ந்த முனைவேலா
வளருங் கழுகு மலையானே.
(9)
120. தெரியற் கடம்பர்
தியபோலுஞ்
சிறியேன் றமிழென்
றுரைத்துளநீ
கிரியிற் கிணறொன் றமைக்கவிட்டு
கெடுத்தா யருட்சீர்
கொடுத்தாள்வாய்
கரிபட் டொருவெற் பற்ப்பொருதாய்
கமலன் முதன்மூ வருக்கிறைவா
வரிமிக் குளகாற் சமர்ச்சேவர்
வலத்தாய் கழுகு
மலையானே.
(10)
121. தறையோ ரிகழத்
தொடுங்கிணற்றிற்
றண்ணீர் பெருகித்
தனிப்புகழ்ச்சீர்
நிறைவா ரந்திடப் பெற்றிலனாகி
னின்னா ளெனுஞ்சொ
னிசப்படுமோ
பிறைவாழ் சடிலத் தானுதற்கண்
பெறும்பா லகனே பிழைதவிர்ந்த
மறையா கமத்தின் பொதுக்குருவா
வருவாய் கழுகு மலையானே.
(11)
122. வல்லிக் கொடிநே
ரரமகளிர்
மகிழ்சீர்க் கழுகு
மலையானைக்
கல்லிற் கிணறொன் றகழ்ந்துழலுங்
கழைமால் வனத்துக்
கவுமாரர்
னல்லிக் குறழு நீரூற்று
நனிபெற் றுவப்பா
னறுந்தமிழாற்
சொல்லித் துதிக்கு மிவைகற்போர்
துயர்தீர பரம சுகத்தினரே.
(12)
முற்றிற்று.
11. வாசகிரி
(கலி விருத்தம்)
123. வேதமுட னாகமம்வி
தித்தவழி செல்லும்
போதமுற மேலவர்பு கழ்க்கடல ளித்தாற்
சூதனுரு வாயொருதொ ழும்பனைய ளித்த
மாதவனெ னக்குலவும் வாசகிரி யானே.
(1)
124. பானல்விழி
மங்கையர் பழக்கமிகு பண்பர்
லீனருமி கழ்ந்திருவி ளைத்தன்னி ரங்காய்
கானமற மங்கைமகிழ் காமுகவி னோதர்
வானவர்கு லம்பரவும் வாசகிரி யானே.
(2)
125. பொய்ப்பொருள்வி
ருப்பமொடு புல்லர்மனை தோறுற்
றெய்ப்பொடுதி ரும்பும்வினை யென்றொழியு மந்தோ
மெய்ப்பொறையு ளாருணர்வின் மேவியவி சாகா
மைப்பொழில்வ னப்பவிரும் வாசகிரி யானே.
(3)
126. சிந்தனையி
லுன்பெயர்தி னங்கருது மென்ற
னிந்தனைய மெய்ப்புகழு நின்னதெனல் வம்போ
பந்தனைய கொங்கையுமை பால்பருகும் வாயாய்
வந்தனைசெய் வார்மகிழும் வாசகிரி யானே.
(4)
127. கீறரிய கல்லகழ்கி
ணற்றினிடை நன்னீ
ராறதுவி ளங்கநின ருட்டிறல்செ யாதோ
கோறலறு மாதவர்கு றிப்புணர்கு கேசா
மாறனணி நாடுபுகழ் வாசகிரி யானே.
(5)
128. நெஞ்சரிய
நின்னருணி கழ்த்துமொழி யெல்லாஞ்
சஞ்சலம விளைத்துத வந்தருள்வ தென்றோ
குஞ்சரிய ணைந்துமகிழ் கோலமண வாளா
வஞ்சரணு கற்கரிய வாசகிரி யானே.
(6)
129. காரணமெ னப்புகலல்
கட்டுரைய தாகிற்
சீரணமு றாதபுகழ் சேரவரு ளாயோ
நாரணனு வந்துதவு நங்கையர்கள் பங்கா
வாரணமு லாவுமெழில் வாசகிரி யானே.
(7)
130. காழிநகர்
வந்தமர்க விப்புலவ னன்னா
ராழிவளை யும்புவிய திற்றிகழ்வ தென்றோ
கோழியெழு துங்கொடிகு லாவியகு மாரா
வாழியபு கழ்ச்சிமிகும் வாசகிரி யானே.
(8)
131. பாரதிமு தற்பலர்ப
யிற்றுபுகழ் பாடி
யீரமொடு னைத்தொழுமெ னக்கினிதி ரங்காய்
சூரனைம டித்தமரா தொல்சிறைவி டுத்த
வாரமுடை யாய்பொருவில் வாசகிரி யானே.
(9)
132. வாதுபுரி
யும்புலைம தத்தினரை யெல்லா
மோதும்வலி நல்கியருண் மூவரொடு சேராய்
காதுதொழி லில்லவர்க ருத்திலுறை கந்தா
மாதுமைம கிழ்ந்துதவும் வாசகிரி யானே.
(10)
133. ஆசிபக ருந்திறல
ளித்தவித மந்நாள்
பேசியத றிந்துமுறு பீழையற லென்றோ
பூசியவெ ணீறுமலி புண்ணியர்த மக்கோர்
மாசிலுப தேசமருள் வாசகிரி யானே.
(11)
134. கண்டவர்ந
கைக்கமுது கற்றொடுமொ ருத்தன்
மண்டலமெ லாமறியு மாண்புனல்வி ரும்பி
வண்டமாம லர்ப்பொழில்கொள் வாசகிரி யானை
விண்டதமிழ் கற்பவர்வி னைப்பிணியி லாரே.
(12)
முற்றிற்று.
12. இலஞ்சி
(கலித்துறை)
135. காத்துயி
ருக்குயி ராகிக் கவின்றருள்வா யெனக்கமழ்சொற்
பாத்துதி சொற்றடுத் தேனைப் பரதவிக்கப் படுத்தாதே
கூத்துடை யாற்கணி யேனக் கோடளித்தாய் குலக்கிளியொன்
றேத்துதி ருப்புக ழானே யிலஞ்சியில்வா ழிலஞ்சியமே.
(1)
136. பன்னகப் பைமிசை
யாடும் பகவனெனப் பாருலகிற்
றுன்னவைப் பேனென் றொருக்காற் சொல்லியசொற் சோர்ந்தனையோ
முன்னருட் டென்மது ரைநகர் முதுபுலவ ரேழெழுவ
ரின்னலொ ழித்தியல் சொற்றா யிலஞ்சியில்வா ழிலஞ்சியமே.
(2)
137. காத கருநகைத்
தேசக் கற்கிணறு தொடுகின்றேன்
சீத மிகும்புன லூற்றுத் திறந்தருளற் கிரங்காயோ
போத னழப்புடைத் தோனே புரமெரித்தோன் றருமதலா
யேதமில் சீர்க்கரங் கேயா விலஞ்சியில்வா ழிலஞ்சியமே.
(3)
138. சொன்மதுர
மறியா தார்து திக்குமுன்னா ளருள்செய்தாய்
கன்மனங் கொண்டிந் நாளிற் கழிவுபடத் தகுங்கொல்லோ
பொன்மருவு மார்பு டையான் புகழ்ந்தோதப் பொரும்வீரா
வென்மதி யம்புகு பொழிற்சீ ரிலஞ்சியில்வா ழிலஞ்சியமே.
(4)
139. பாநுவல் வார்க்கருள்
வழங்கும் பழையகுண மிழந்தாய்போன்
றாநுக ரும்பொல் லார்க்கு மஞ்சவென்னை விடுத்தாயே
தூநுரைத் தெண்டிரை வாவித் தொகைதோறுஞ் சோலைதொறு
மேநுனி கண்டனங் கன்மகி ழிலஞ்சியில்வா ழிலஞ்சியமே.
(5)
140. கொஞ்சிய வாய்க்கினி
யென்முற் கூறியுங்கற் கூபமதா
லஞ்சிமெ லிந்திடச் செய்தா யறலூற்றென் றருள்வாயோ
செஞ்சிகி யூர்ந்துல கைவலஞ் செயுங்குமரப் பெருமாளே
யிஞ்சியு மஞ்சளும் பெரிதோங் கிலஞ்சியில்வா ழிலஞ்சியமே.
(6)
141. சகலசித் துந்தனி
வீடுந் தரவல்லா யெனச்சார்ந்தே
னகழ்கருங் கற்கிண றொன்ருல் லமரச்செய் திடலாமோ
திகழ்வடி வேற்படை யேந்துந் திருத்தோணான் குடையானே
யிகதலத் தோர்களும் புகழு மிலஞ்சியில்வா ழிலஞ்சியமே.
(7)
142. காழி நகர்க்கவு
ணியனிற் கடலுலகத் தினர்கூறப்
பூழி யன்னனார் மகிழப் புலைநெறிமாய்ப் பவனாரோ
வீழி நறுங்கனி யிதழார் விரும்புமெழிற் குமரேசா
வேழிசை நான்மறை யார்க்கு மிலஞ்சியில்வா ழிலஞ்சியமே.
(8)
143. தந்திர நூற்றிரள்
கொள்வார் தமைச்சார்ந்து தவியாதுன்
மந்திர சடாக்கர மேவ ழுத்துமெனை மறந்தனையோ
சந்திர சேகரன் வரந்தோய் தனிச்சூதந் தறித்தோனே
யிந்திர னூர்வள நாணு மிலஞ்சியில்வா ழிலஞ்சியமே.
(9)
144. பாவ மிகப்புரி
தீயர் பலரேசப் பரிசழிந்தே
னோவருங் கற்கிணற் றிடைநீ ரூற்றுதிக்கச் செயலென்றோ
மூவரு மெச்சிய முருகா முனிக்கோனன் குணர்முதல்வா
வேவரும் போற்றிசைக் குமெழி லிலஞ்சியில்வா ழிலஞ்சியமே.
(10)
145. குயவர் மனையோட்
டிரந்து குறைதவிர்மெய்த் தவஞ்செய்யா
தயல்வ ரேசிடக் கிணறொன் றகழ்ந்துற்றே னருள்புரிவா
யுயர்கரு ணைக்குரு வேயென் னுயிர்க்குயிரா மொண்பொருளே
யியமனை வென்றார் தவமே யிலஞ்சியில்வா ழிலஞ்சியமே.
(11)
146. காரிணுக்
கொப்பெனத் தோன்றுங் கரும்பாறைப் பெருங்கிணற்றி
னீரிய லும்புகழ் நாடி நெல்லைநகர்க் கவுமார
னீரிரு தோண்மழ களிறொத் திலஞ்சியில்வா ழிலஞ்சியத்தின்
பேரியம் புமிவை கொள்வார் பிறப்பறுக்கப் பிறந்தோரே.
(12)
முற்றிற்று.
13. வேள்வி மலை
(கலித்துறை)
147. அன்றுவந்து
கனாவி லாடிய வாடலும்பி ழையாகவோ
வின்றுசற்று மிரங்கி டாமலி ருக்கும்வன்மை யிசைந்துளாய்
மன்றுளாரொ ருபங்கில் வாழ்குயின் மைந்தனேமன மாயையை
வென்றுய்வா ருணர்கந் தனேயெ ழில்வேள்விமா மலைவேடனே.
(1)
148. இத்தறைக்
கொருபார மாகு மெனப்பிறந் துழலீனரும்
பித்தனென் றிகழச்செய் தாயருட் பேறளித் தருளாய்கொலோ
சுத்தஞான திவாக ராமது சூதனன் புகழ்சொற்குகா
வித்தகர்க் குயர்தெய்வ மாகிய வேள்விமா மலைவேடனே.
(2)
149. பன்றிபின்
றொடர்தம் பிரானருள் பால்னீ யெனலுண்மையே
லென்றியக்க மறிந்தொ ராட லியற்றிடா விதமெனகொலோ
குன்றிமாலை யணிந்த மென்முலைக் கோகிலம் புணர்கொற்றவா
வென்றிவேல் புனைவீர னேமுது வேள்விமா மலைவேடனே.
(3)
150. எய்த்தடைந்
துள்தொண்டனேனை யிகத்துளார் பலரேசவோ
பொய்த்த சொற்பல சொற்றுளா யிதுபுண்ணியத் தொடுநண்ணுமோ
நெய்த்த கூதளமுங் கடம்பு நிறைந்ததோள் கொளுநித்தனே
மெய்த்தவர்க் கொருதஞ்ச மாகிய வேள்விமா மலைவேடனே.
(4)
151. தண்ணுலா மதியம்
புனைந்துயர் தம்பிரான் விழிதந்தநீ
யெண்ணுமென் றயர்கண்டு நெஞ்சமி ரங்கிடா மலிருப்பதேன்
மண்ணுலோ கமும்வாழு மாறு வடித்தவேல் வலம்வைத்தவா
விண்ணுளார் பரவக் குலாவிய வேள்விமா மலைவேடனே.
(5)
152. நாணிலத் தினரேச
னீங்கி நலம்பெறும் படிநண்ணீனே
னேனிரக்க மிலாத நெஞ்சரி லிந்தவா றிருக்கின்றையோ
வானிடத் துவிலன்ன வாணுதல் வள்ளிமின் மணவாளனே
வேனிலவே ளுளநாணு மாடல்செய் வேள்விமா மலைவேடனே.
(6)
153. பஞ்சிலிட்ட
நெருப்பெனப் பலபாவ மேல்வெகுள் பார்வையா
லஞ்சிகற்செறு ஞான வாழ்வில மைக்கவல்லை கொல்லலையோ
கொஞ்சிமுத்த மிடுங்கு றத்திகு றிப்பறிந் தொழுகுங்குகா
வெஞ்சிலைக்கை விசாக னேயணி வேள்விமா மலைவேடனே.
(7)
154. தள்ளையாமென
நீறணிந்தவர் தம்மை யாண்டருள் சண்பையூர்ப்
பிள்ளைபோ லொருதொண்ட னிங்கு பிறங்குநாளவர்ச் செய்வையோ
கொள்ளைவண் டமிழ்ப்பாடல் சூடிய கோமளக் குமரேசனே
வெள்ளைவா ரணக்கே தனந்திகழ் வேள்விமா மலைவேடனே.
(8)
155. சூரனாதி யர்தம்மை
வென்று சுரேசனா தியரின்பவாழ்
வாரநல் கியவுன்னை நம்பியு மஞ்சினே னறியாய்கொலோ
பாரதிக் கருள்பரவ லாமுது பாண்டரங் கர்பயந்தவாள்
வீரருக் கொருமுன் னவர்தனி வேள்விமா மலைவேடனே.
(9)
156. பாலலோச னன்மாய
னான்முகப் பண்ணவன் புகழ்பண்பனா
ஞாலமீது விளங்கு மாசை நலங்கொடுத்த வனியாவனோ
நீலமா மயிலேறு வாய்மலர் நீபமாலிகைத் தோளின்மேல்
வேலணிந்த விர்மீளி யேவியன் வேள்விமா மலைவேடனே.
(10)
157. தள்ளருங்
கிணற்றாசை யான்மிகத் தட்டழிந்து தவித்துளேன்
கொள்ளரும் புனற்றாரை வந்து குதிக்குநாளை யுணர்த்திடாய்
கள்ளரும்பிய செச்சை மாலை கவின்றதோ ளுடைக்காவலர்
விள்ளரும் பொருட்டே சிகர்தவ வேள்விமா மலைவேடனே.
(11)
158. வில்லிலங்
கெழில்வானி னீடிய வேள்விமா மலைவேடனை
நெல்லினுக்கு முனவேலி யிட்டவர் நின்றவூ ரினில்வந்தவன்
கல்லினூட் கழுங்கி ணற்றிடை கங்கைநீர் வரச்செய்யெனச்
சொல்லிடுங் கவிகற்று வப்பவர் சோர்வுறா மனத்தீரரே.
(12)
முற்றிற்று.
14. திருவரிப்பாடு
(எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
159. அருணை யூர்க்கிளி
தானென வெனைய
றைந்தவ ரரத்தைமெய் யாகுமென் றெண்ணிப்
பொருவி லார்வமுற் றிருந்தமை யெல்லாம்
போக்க வந்ததோர் புதியகற் கிணற்றிற்
பெருகு நீர்வரத் தெய்திடி னன்றிப்
பேதை யேன்பிழை யேன்பெரி யோருட்
பருவ மாமுகிற் போன்றருள் பொழிகட்
பார்வை யாயரிப் பாட்டமா வானே.
(1)
160. ஐயகோ வெனையித்
தனைதுயர்த் தழுத்த
னீதி யன்ற ருட்கணாற் பாராய்
பொய்ய னந்தமு மெய்யெனக் கருதிப்
புலர்ந்துளே னினிப்பொ றுக்கவொண் ணாது
நெய்ய ளாவிய மலர்கொடுன் பூசை
நிதமுஞ் செய்திடி னோபய னீதோ
பைய ராமிசை யாடிய தோகைப்
பரியு ளாயரிப் பாட்டமா வானே.
(2)
161. கோணல் வெண்பிறைக்
கோட்டிபங் கறுவக்
குலையு நாளருட்
கோலமுற் றெய்து
மாண றிந்திறு மாந்தமை முழுது
மறைக்க வந்ததோர் வலியகற் கிணற்றாற்
சேண ளாவிய துயரமுற் றிடைந்தேன்
றிருக்கணா லொருசிறிது
பார்த்தி ரங்காய்
பாணர் பாடிய புகழுடைக் குமரா
பழுதில சீரரிப்
பாட்டமா வானே.
(3)
162. கான வேட்டுவ
னுருக்கொடன் றொருக்காற்
கனவி லாடிய காரணங் கருது
மான முற்றறப் படுத்துதல் வேண்டா
மனத்தி லித்தனை
வம்மைநிற் காமோ
வான வாணரும் பெறலரு நன்னீர்
வழங்கி டாய்மயில்
வாகனத் தரசே
பான னேர்விழிக் குறமகள் கணவர்
பனவர் சூழரிப் பாட்டமா
வானே.
(4)
163. அருட்பயன்
பெறுவார் பகரொரு வாற்றையு
மாறு ணரத்தா வல்கொண்
டுளநீ
யிருட்கு லாவுகற் கிணற்றிடை மதிநே
ரினியநி ருதவா மைநல் லியல்போ
வொருத்த னீயல தின்றெனக் கருது
முண்மையும் பிழையோ வுலகி டத்துப்
பருப்ப தந்தொறு மாடிய முருகர்
பாத மோங்கரிப் பாட்டமா வானே.
(5)
164. உன்னு டைத்திரு
வருட்க யற்றே
வருளறென் றோதுந ருரைநிச மாமோ
வென்னு ளத்தினுட் கற்றொடப் பகர்ந்தோ
னியாவனோ வவனீ ரைதந்
தொழிற்பாற்
றுன்னு மார்வமு ளான்கொனீ விலக்குந்
துணிவிலாய் கொண்மெய்
சொற்றருள் புரிவாய்
பன்னு நான்மறை யோலிடும் வளமை
பழகு மாணரிப் பாட்டமா
வானே.
(6)
165. உந்தை நால்வருக்
கருளிய பேறீண்
டுதவு வாயெனக் கென்னவுன்
னியவென்
சிந்தை நொந்தது கண்டிலை கொல்லோ
திருக்க ணாலொரு
சிறிதுபார்த் திரங்காய்
மந்தை வாய்நிலைக் கல்லென வுன்னை
வகுத்த நூலினர் வாய்நகைக் கயர்ந்தேன்
பந்தை நேர்முலை யார்நட மாடும்
பரிசு நீடரிப் பாட்டமா வானே.
(7)
166. சீல வேதியர்
வேள்வியிற் கொலையுந்
தீதென் றோர்ந்திகழ்
திறன்பொலி கருணை
சால நல்கினை யான்றொடுங் கூபந்
தசையுண் பாரதிற்
றாழ்வுறத் தகுமோ
நீல மாமயிற் பரிமிசை வடிவே
னிலவு தோளுட னேர்வாற்
கிரங்காய்
பால றாமழ வாய்முழுப் புலமைப்
பாவ லர்வரிப் பாட்டமா
வானே.
(8)
167. ஊர னந்தமு
கைத்திடக் கற்றொட்
டுறுக்க ணுற்றுள தொன்ற லத்தனாற்
சேர லாந்துய ரெத்தனை யென்பேன்
றிருக்க ணாலிவை
தீர்தரப் பாராய்
சூர னஞ்சுறப் பொருதவேற் பூ சைத்
தொழும்பு செய்பவர் தோய்பய னீதோ
பார ணங்கெழின் முகமெனப் பொலியும்
பழமை சாலரிப் பாட்டமா
வானே.
(9)
168. செங்கண் மாலெனப்
புவனியில் வாழ்ந்து
சிவனில் வானிடை
திகழ்தரத் தருசீர்ப்
பொங்க மிப்பெரும் பாறையின் கிணற்றாற்
புழுங்கும் வெந்தயர்ப்
புணரிகொல் புகலாய்
சிங்க நேர்முதல் வீரன்வந் துரைக்கச்
செய்த வாற்றினுந்
திருட்டுறன் முறையோ
பங்க யாதன் னழப்புடைத் துலகைப்
படைத்த வர்வரிப்
பாட்டமா வானே.
(10)
169. முன்றிருப்
புகழ்ப்பனு வல்சொற் றவன்பரன்
முதிருமன் புடையே னைநீ யவன்றா
னென்றியம் பினையவ னுடற்சுடு நாளி
ருந்தவர் றிருந்தி ளைக்கவிட் டிந்தக்
குன்றிடங் கிணறமைத் தழக்கண் டாய்குரவர்
கோவெ னுங்கொள் கையித்த கைத்தோ
பன்றியொன்று கொன்றெழின் மருப்பொ சித்த
பால கர்வரிப் பாட்டமா
வானே.
(11)
170. நீல வான்முகில்
படர்கழை மலிசீர்
நெல்லை யூர்முழு
நீற்றணிச் சிறுவன்
கால னன்னகற் பிளந்துசெய் கிணற்றிற்
கங்கை நீர்வரக்
காண்பத னிமித்தஞ்
சேல றாவய றறிவரிப் பாட்டிற்
றிகழும் வேலனைச் செப்பிய பதிகஞ்
சால நன்றுநன் றென்பவர் பலருந்
தவமு முத்தமிழ்த் தகையு மெய்துநரே.
(12)
முற்றிற்று.
15. சிவகிரி
(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
171. வெள்ளியநீற்
றணிநிறையு மேனி யானை
வியனரைக்கோ வணத்தொடுகீ ணமிலைந்திட் டானைப்
புள்ளியமா மயிற்றோகை நீழ லானைப்
பொருவேலுங் குக்குடமுப்
புனைதோ ளானை
வள்ளியரு டினைமாச்சிற் றுண்டி யானை
மலைக்குறவர் பூசனைக்கு
மகிழ்வான் றன்னைத்
தெள்ளியமுத் தமிழ்ப்புலவர்க் கெளிய கோவைச்
சிவகிரியிற் பரவில்வினை
தீரு மன்றே.
(1)
172. பத்தர்மொழிப்
படிநடத்தச் சலித்தி டானைப்
பவளமலை போற்குலவும்
படிவத் தானை
மத்தகமால் களிறதனுக் கிளையான் றன்னை
மகந்தருசெந் ததரேறும்
வண்மை யானைப்
புத்தமுத மொழியார்நெஞ் சுருக்கு வானை
புனலிகடம் பாதியபல
வூவுள் ளானைச்
சித்தருக்கோ ராதரமென்றி லங்குஞ் சேயைச்
சிவகிரியிற் பரவில்வினை
தீரு மன்றே.
(2)
173. கங்கையரு
ளாலுருக்கொண் டுயர்ந்திட் டானைக்
கார்த்திகைபான்
முலைபருகுங் கனிவா யானைத்
தங்கைமகிழ் நூலறிந்த புலமை யானைச்
சரவணரவி யின்மலருஞ்
சலசத் தானைக்
கொங்கையணிக் குஞ்சரியாள் கொழுநன் றன்னைக்
கரவணியும் பன்னிருதோட்
குன்றத் தானைச்
செங்கையிற் றோய்தரும்பய வாதத் தானைச்
சிவகிரியிற் பரவில்வினை
தீரு மன்றே.
(3)
174. காதளவோ டியநெடுங்கட்
குறத்தி யானைக்
கனகநகர்த் துயர்தீர்க்குங்
கருணை யானைச்
சூதளவர் முலையாட்கோர் காமீந் தானைச்
சுடர்ச்சூட்டு வாரணப்புட்
டொனிகேட் பானைக்
கூதளமா லிகைக்குறவர் சேர்க்கை யானைக்
குறிச்சிதொறு நடமாடுங்
கழகன் றன்னைச்
சீதளப்பூங் கடம்பணிந்த புயத்தம் மானைச்
சிவகிரியிற் பரவில்வினை
தீரு மன்றே.
(4)
175. அஞ்சலென்ற
டியவர்க்கு முன்னிற் பானை
யருணெறியோ ராறுமுக
மாயி னானைக்
கெஞ்சேனென் றிறுமாப்போ ரறியொண் ணானைக்
கிளிபகர்முத் தமிழ்ப்பனுவல்
கேட்கின் றானை
மிஞ்சேதந் தவிர்க்குமிலைத் திருநீற் றானை
வீராதி வீரருக்குண
மேலா வானைச்
செஞ்சேவற் கொடியணியுந் தேரூர் வானைச்
சிவகிரியிற் பரவில்வினை
தீரு மன்றே.
(5)
176. முக்கணுடைத்
தருவுதவுங் கனியா னானை
மூவிருமா முகத்தினொரு
முதலா வானைத்
தக்கமிடு வாரறிவிற் கேட்டா தானைச்
சகளமொடு நிகடகள
முந்தா னானை
யக்கரந்தோ றொவ்வொருவாற் மாந்துள் ளானை
யகிலசரா சாத்துநிறைந்
தாடு வானைச்
செக்கருஞ்செங் கதிருமன்ன கோலத் தானைச்
சிவகிரியில் பரவில்வினை
தீரு மன்றே.
(6)
177. பங்கயப்பூங்
காதொருபெண் வலம்வைத் தானைப்
பசுங்குவளைக் கையினள்செய்
பணிகொள் வானைச்
கொங்கவிழ்கற் பகச்சோலைக் காணா வானைக்
குறுஞ்சடிலத் தணியுநறுங்
குரவத் தானைச்
சிங்கமுக னடுநடுங்க வதட்டி னானைத்
தீவெருள்வா ளியைப்பிடித்த
செங்கை யானைத்
திங்களுகிர்த் திருஞான வேழத் தானைச்
சிவகிரியிற் பரவில்வினை
தீரு மன்றே.
(7)
178. பச்சைநெடு
மால்புகழும் வீரத் தானைப்
பருப்பதங்கள் பலகோடி
படைத்துள் ளானைக்
கொச்சைநகர்க் கவுணியன்செய் தவமா னானைக்
கொடியசம ணற்பதிகங்
கூறி னானை
யிச்சைமுற்றுந் தவிர்த்தருட்சீர் தரவல் லானை
யியல்விரும்பி யலகையுட லீர்ந்திட் டானைச்
செச்சைமலர் மாலைபுனை மருமத் தானைச்
சிவகிரியிற் பரவில்வினை
தீரு மன்றே.
(8)
179. துய்யநிறச்
சேவலம்புட் கொடியுள் ளானைச்
சுரபதிக்கு மணிமகுடஞ்
சூட்டி னானை
வெய்யகுணச் சூர்தடிந்தவி திரவே லானை
வினைப்பிணிக் கோர்மருந்தாய்
வெண்ணீற் றானை
யையமறப் பிரணவத்தின் பொருளோர் வானை
யயனலற்ம லைக்குகையி
லடைத்திட் டானைச்
செய்யவள்கண் டுளங்களிக்கு மருகன் றன்னைச்
சிவகிரியிற் பரவில்வினை
தீரு மன்றே.
(9)
180. மூவரும்போற்
றிசைக்குமெழின் முருகோன் றன்னை
முதலாகி நடுவாகி
முடிவா னானைப்
பாவலவர்க் கோர்துணைவ னாகி னானைப்
பரசமையத் தினர்தாமும்
பரவு வானைச்
சாவதுவும் பிறப்பதுவுந் தவிர்த்தாள் வானைச்
சமரசமெஞ் ஞானநிலை
தரவல் லானைத்
தேவர்பிரான் மகள்விரும்பி யனைதோ ளானைச்
சிவகிரியிற் பரவில்வினை
தீரு மன்றே.
(10)
181. பாசிவடம்
புனைந்தகுறப் பேதை யானைப்
பன்னிருகை யினும்பலவாம் படைவைத் தானை
யாசிபகர் வார்க்கிரங்கி யருள்செய் வானை
யருணையிலோர் தூணிடத்தன்
றவிர்ந்திட் டானை
வீசியகைக் குன்றுரித்தார் மதலை தன்னை
விளங்குதமிழ் வரைமுனியுண்
மேவி னானைத்
தேசிகர்க்கோ ரரசாகித் திகழ்கின் றானைச்
சிவகிரியிற் பரவில்வினை
தீரு மன்றே.
(11)
182. நெல்லைநகர்க்
கோயிலகத் துறைவார் பங்கி
னிலவும்வடி வாயியரு
ணெறியால் வந்தோன்
கல்லையகழ்ந் தனிடைநன் னீரூற் றெய்தக்
கருதிவருந் திடுநாளோர் கனவி னாற்றாற்
செல்லைநிகர் தொனித்தகரூர் முருக வேளைச்
சிவகிரியிற் பரவில்வினை
தீரு மென்னுஞ்
சொல்லைநனி போற்றிசைக்க வல்லார்க் கெல்லாந்
துயரொழிந்த பரமசுகந்
தோயு மன்றே.
(12)
முற்றிற்று.
16. எட்டுக்குடி
(கலி விருத்தம்)
183. பொழிமா முகில்விட்
புலமுற் றிலல்கண்
டுழியா டிடுமா வுடையா னுறுமூர்
விழியா யிரமே யவனா தியர்சூ
ழெழிலார் தருசீ ரெட்டுக் குடியே.
(1)
184. கவளங் கவர்கா
ரவுணக் கரியைக்
குவடொன் றொடுகொன் றகுகன் கொளுமூர்
தவருந் தமிழ்வித் தகரும் புவனத்
தெவரும் புகழ்சீ ரெட்டுக் குடியே.
(2)
185. கானந் தருகன்
னிகருங் கணவனப்
பானந் தமவிர்ந் தவயிற் கரனூர்
மோனந் திகழ்மா முனைவோர் வரலா
லீனந் தவிர்சீ ரெட்டுக் குடியே.
(3)
186. துன்பன் பலவுந்
தொலையத் தொழுமெய்
யன்பர்க் கருளா றுமுகத் தவனூர்
பின்பற மறுபிறப் பறுபீ டுறும்வீட்
டின்பம் பொலிசீ ரெட்டுக் குடியே.
(4)
187. மயலற் றமனோ
லயச்சாத் தருள்
ளயலொன் றுமிலா தவிர்ந்த ணனூர்
வயமிக் குளவேன் மயிலென் பவரவர்
ழியல்புற் றுயர்சீ ரெட்டுக் குடியே.
(5)
188. நஞ்சா ரமுதா
கநயந் திறவா
வஞ்சான் னன்ன றருள்சண் முகனூர்
நெஞ்சா ரநெறிப் பிழைசெய் கிலரா
லெஞ்சா தொளிர்சீ ரெட்டுக் குடியே.
(6)
189. நமையா ளுடைநா
யகனா கியுநல்
லுமையா ளணியொக் கலையூர் பவனூர்
தமையார் கலிவெந் தளைவிட் டமைசொற்
றிமையார் பணிசீ ரெட்டுக் குடியே.
(7)
190. அமரே சனுமஞ்
சமுனிந் தவன்முற்
சமண வாதை தவிர்த்தயர் பரனூர்
குமரா வெனவெண் ணிலாகூ றொலியா
லெமனார் வெருள்சீ ரெட்டுக் குடியே.
(8)
191. மாதங் கவலா
ரியின்வல் வினைநேர்
சூதங் கெடவேல் விடுத்தோ ளின்னூர்
சீதந் தருசிந் தையுடைத் தவர்தம்
மேதங் களைசீ ரெட்டுக் குடியே.
(9)
192. மூவர்க் குமுதற்
பொருளா கியபின்
றேவர்க் கொருசே கவனா னவனூர்
சாவற் றதனிப் புகழைப் பெறுமா
றேவத் தகுசீ ரெட்டுக் குடியே.
(10)
193. கொல்லா விரதங்
கொளுநன் னெறிதோய்
நல்லார் கரவர்க் கொருநா யகனூர்
பொல்லா தபிறப் பொடுபொன் றுறுதீ
தில்லார் வருசீ ரெட்டுக் குடியே.
(11)
194. நற்கூ தளமா
லைநலந் திகழ்சே
யிற்கூ டியசீ ரெட்டுக் குடியைக்
கற்கூ பமுளான் கழறத் தகுசெஞ்
சொற்கூ றிடுவார் துயரில் லவரே.
(12)
முற்றிற்று.
17. எண்கண்ணூர்
(கலி விருத்தம்)
195. மால வன்புணர்
மங்கையர் மானுசீ
ரேல வார்குழ லார்மிகு மெண்கணூர்
சூல பாணி சுடர்விழிக் கண்வருங்
கோல மேனிக் குகன்றிருக் கோயிலே.
(1)
196. முந்தி கற்பிணி
முற்றொழித் திட்டதா
லிந்தி ரன்றுதித் தேத்திய வெண்கணூ
ரந்தி வண்ணத் தான்றரு பாலனா
மந்திரக் குமரன் றனிவாழ்க் கையே.
(2)
197. சந்த வார்கடற்
றானையம் பூமிமீ
தெந்த வூரு மினிதுசொ லெண்கணூர்
மந்த மாருத மால்வரைச் செந்தமிழ்க்
கந்த நாறுங் கழற்குகன் காவலே.
(3)
198. நாறு பங்கய
நாண்மலர்ப் புங்கவ
னேறு ளானையி றைஞ்சிய வெண்கணூர்
நீறு பூத்த நெடுந்தழல் வெற்பைநே
ராறு மாமுகத் தானரு ளாட்சியே.
(4)
199. கஞ்ச மாமலர்க்
கன்னியர் நண்ணலா
லெஞ்ச றீர்வள மெய்திய வெண்கணூர்
நஞ்ச ராநடுங் கத்தொனி செய்வதாம்
பஞ்ச வன்னப் பரிக்குகன் பற்றலே.
(5)
200. பாடுவார்
துயரப் பற்றறுக் கின்றதா
லீடு மேலுமி லாதுள வெண்கணூர்
கோடு வார்குழை யாருறை குன்றுபோ
னீடு சேவற் கரத்தின் னிற்பதே.
(6)
201. கார ணத்தொடு
காரியங் கண்டுதே
ரீர நெஞ்சத் தினர்புக ழெண்கணூர்
நார ணன்றரு நங்கையர் கண்கணோ
கூர வேற்கரக் கொற்றவன் கொள்வதே.
(7)
202. கழைக்கை வேள்வெரு
ளக்கன மாதவ
மிழைக்கை யுள்ளவ ரெய்திய வெண்கணூர்
தழைக்கை யாரழி யத்தனி நீறெழின்
மழைக்கை யாலிடு வான்மிக வைகலே.
(8)
203. தாம நாபித்
தனிமுகி றங்கையோ
டேம வெற்பிறை யின்புறு மெண்கணூர்
காமர் வாரிக லங்கக் கன்னறெழு
மாமரந் தறித்தான் முழுவாஞ் சையே.
(9)
204. ஆண்ட ணுப்புரை
யாசையு மற்றவ
ரீண்ட டைந்தயர் வெய்துந் லெண்கணூர்
பாண்ட ரங்கன் படியளந் தோன்விதி
வேண்டவாழ் குகவேண் மனவேட் கையே.
(10)
205. ஆசி கூறி
யடுத்திடும் பாவலர்க்
கேசி லின்ப மெளிதரு ளெண்கணூர்
மாசில் சந்த வரைக்குறு மாமுனி
தேசிகப் பெருமா ளெழிற்சேர்க் கையே.
(11)
206. ஏத மின்றி
யிலங்கெழி லெண்கணூர்
கூத ளங்கொள் ககன்பதி யாமெனப்
பாத லந்தொடு பாறையினீர் கொள்வா
னோதனன் குணர்வார்க் கில்லை யூனமே.
(12)
முற்றிற்று.
18. விராலிமலை
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
207. இத்தனைக்
காலமு நம்பி
யெத்தனை யேபணி செய்தும்
பொய்த்த சொல்லா யிரஞ்சொல்லிப்
புண்படுத் தத்தகுங் கொல்லோ
கைத்தலத் துக்கதிர் வேலா
கானக் கடம்பணி மார்பா
மெய்த்தவத் தோர்துணை யாவாய்
விராலி மலைக்குக வேளே.
(1)
208. பாலக னாகுமென்
றென்னைப்
பலவிசை சொல்லியும் வம்பிற்
சீலம ழிந்திடக் கண்டாய்
சிந்தைநொந் தேனருட் செய்வாய்
கோல மயிற்பரி யானே
குஞ்சரி யாள்புணர் கொண்கா
லேணி யுந்திருத் தோளா
விராலி மலைக்குக வேளே.
(2)
209. காரண மொன்றுள
தென்று
கல்லி னிடத்தொரு கூபம்
பாரறி யத்தொட விட்டாய்
பைம்புன னல்குவ தென்றோ
நாரணன் றன்மரு கோனே
நல்லருட் சண்முக நாதா
வீரவெண் சேவலு ளானே
விராலி மலைக்குக வேளே.
(3)
210. வள்ளியைப்
போற்கறுத் துள்ள
வண்டமிழ் பாடிய கீர
னுள்ளிய வாறருட் செய்தா
யுன்னிறத் திற்சொலொ ணாதோ
தெள்ளிய நூன்முழு தோர்ந்தாய்
செங்கனற் குன்றது போல்வாய்
வெள்ளிய மால்களி றூர்வாய்
விராலி மலைக்குக வேளே.
(4)
211. முத்தமிழ்ப்
பாடல்க ணின்றாண்
முண்டகத் துக்கணி யார்போற்
சித்தம ருண்டுழல் கின்றேன்
றீவினை தீர்த்தரு ளாயோ
பத்தருக் கோரெளி யோனே
பன்னிரு காதுடை யானே
வித்தக முத்திரைக் கையா
விராலி மலைக்குக வேளே.
(5)
212. தொண்டருட்
சீரியர் போலுந்
தோற்றமட் டும்பெறு வேனை
மண்டலத் தோரிக ழாமே
வந்தருட் செய்வதெந் நாளோ
குண்டலக் காதுடை யானே
குஞ்சரத் துக்கிளை யோனே
விண்டலத் தார்பணி பாதா
விராலி மலைக்குக வேளே.
(6)
213. உன்னது நெஞ்சமிவ்
வண்ணத்
துள்ளதென் றோர்கில துற்றே
னின்னமுஞ் சோதனை செய்யே
லிக்குண முன்றனக் காமோ
பன்னரும் பல்புக ழானே
பங்கய னைச்சிறை யிட்டாய்
மின்னலை நோவடி வேலா
விராலி மலைக்குக வேளே.
(7)
214. வீழிந றுங்கனி
வாயார்
வெள்ளிய மென்மொழி நாடிப்
பாழிலு ழைத்துழ லாதே
பங்கயத் தாண்முடி சூட்டாய்
காழிந கர்ப்புல வோனே
கார மணர்க்கொரு காலா
மேழியந் தாளினர் பாலா
விராலி மலைக்குக வேளே.
(8)
215. பாருல கம்பழி
யாதென்
பாறையி னீர்வரப் பண்ணி
நாருடன் சொல்லிய வாறு
நல்கிட வுஞ்சலிப் பானேன்
காருடற் சூரனை வென்றாய்
கணபதி னெட்டுடைக் கந்தா
மேருவஞ் சப்புடைத் திட்டாய்
விராலி மலைக்குக வேளே.
(9)
216. ஏவரு மேசிட
கண்டா
யிக்கணத் தென்கிணற் றென்று
மோவரு நீர்வரச் செய்தா
லும்பர் களும்புக ழாரோ
மூவர் களும்பணி பாதா
மொய்ம்மலர்க் கூதள வேடா
வீவரு மேலவர் கோவே
விராலி மலைக்குக வேளே.
(10)
217. பாடலொன் றும்பக
ராத
பத்தருக் குந்தயை செய்வாய்
நாடறி யத்தமி யேற்கோர்
நன்மையு நல்கவொண் ணாதோ
வேடலர் செங்கடம் பாரா
வீசனன் றீன்றகு மாரா
வீடருள் சற்குரு நாதா
விராலி மலைக்குக வேளே.
(11)
218. விற்றொரும்
வானிடை நீடும்
விராலி மலைக்குக வேளை
நெற்றொடும் வேலிய தாய
நெல்லை நகர்க்கவு மாரன்
கற்றொடு மோர்கிணற் றூறு
கங்கை வரச்செயப் பாடுஞ்
சொற்றொடு நாவின ரெல்லாந்
துன்பமி லாச்சுகத் தோரே.
(12)
முற்றிற்று.
19. மயிலாசலம்
(கலித்துறை)
219. இந்தமட்டுஞ்
சலித்தே னுளத்தி ரக்க மில்லாயோ
சொந்தமென் றென்னைமுந் நாணமிகச் சொன்ன சொல்லும்பிழையோ
செந்தமிழ்க் குன்றுடை யான்பணி சீருடைத் தாளானே
யந்தரத் தோர்துணை வாமயி லாசலத் தம்மானே.
(1)
220. உன்னைமுன்
னீன்றபி ரான்றொழு மொருவற் கீந்ததுபோற்
பொன்னைநல் கத்தெரி யாயொரு பூவையைத் தந்தனையே
மின்னையொப் பர்மிடை சேரிரு மெல்லிய லார்கணவா
வன்னையு மரவா னேமயி லாசலத் தம்மானே.
(2)
221. கற்கிணற்
றாலடி யேன்கொளுங் கட்டமெல் லாந்தீர்ந்துன்
னற்கிரு பைக்கா ளாந்தின் நானிலத் தெய்தாதோ
சொற்கிளி யொன்றுடை யாயருட் சோதி வடிவேலா
வற்கிடை வந்தொளிப் பாய்மயி லாசலத் தம்மானே.
(3)
222. பந்துறழ்
கொங்கைநல் லார்தரு பாசம திற்கொடிதாம்
வெந்துயர்க் கற்கிணற் றான்மிக மெலிந்து ளேனிரங்கா
யிந்துறை யுஞ்சடை யார்விழி யீன்றரு ளும்புதல்வா
வைந்துவன் னச்சிகி யாய்மயி லாசலத் தம்மானே.
(4)
223. காண மிரந்தலைந்
தேன்றனைக் கற்றொ டவிட்டதனா
னாண மிகுத்து ழன்றேன் புன்னல்கி யளித்தருளாய்
வேண வரந்தரு வாய்குற மின்கொடி தன்கொழுநர்
வாணமுள் ளார்க்கெளி யாய்மயி லாசலத் தம்மானே.
(5)
224. நீறுபுனிந்
தறியார் பகர நிந்தை சுடர்த்தளர்ந்தே
னூறுபுனற் கொடுத்தாண் டெனை யன் னடியா ருள்வைப்பா
யேறுடை யார்புதல் வாதக ரேறு மிளங்குமார
வாறுமு கத்தர சேமயி லாசலத் தம்மானே.
(6)
225. பூரணமெய்ப்
பொருணி யெனப்பு கன்று நாடிலாபோற்
சீரண மாகா மலருள் சிறிது நல்காயோ
வாரண கேதனத் தாய்மலை மடந்தை கைம்மதலா
யாரண னைப்புடைத் தாய்மயி லாசலத் தம்மானே.
(7)
226. இம்மனி தர்க்கெதிர்
நீயெனை யிப்படி வைத்திடலுன்
மெய்ம்மனச் சம்மத மன்றென விளக்கு வானெவனோ
செம்மலை நேர்முரு காபசுந் தினைப்பு னக்கிழவா
வம்மண ரைக்கெடுத் தாய்மயி லாசலத் தம்மானே.
(8)
227. ஏழிசைச் செந்தமி
ழோர்க்கரு ளிறைவ ரின்னருளால்
வாழிய சேயா நீயெனை வருத்தல் வண்மையதோ
கோழிய ணிக்கொடி யாயிளங் குறத்தி தோள்புணர்வா
யாழியிற் சூர்தடிந் தாய்ம யிலாசலத் தம்மானே.
(9)
228. பாவனை யேபொரு
ளாமெனப் பகரும் பண்புடையார்
நாவடங் கும்படிக் காம்புகழ் நல்கவல் லாயல்லையோ
மூவகை யாந்தொழி லோர்தொழு முருகனே முனிவோரக்
காவலெல் லாந்தரு வாய்மயி லாசலத் தம்மானே.
(10)
229. இருட்க ருங்குழ
லார்மய லெய்தியி டைந்துளநான்
பொருட்பொல் லாங்குமுற் றேனினிப் பொறுக்கொண் ணாதிரங்காய்
தெருட்கொள் சீரியர் வாய்த்தமிழ்ச் சீர்விழை யும்புயத்தா
யருட்பெ ருங்குர வர்மயி லாசலத் தம்மானே.
(11)
230. அந்தண மலர்ச்சோ
லைமயி லாசலத் தம்மானைச்
செந்தமிழ் நெல்வே லிநகர்த் திருப்பு கழ்க்கார
னிந்தனைச் சூடா றச்செயு நீர்விழைந் தோதியபர
நந்தமக் கேற்றமென் பார்பெறு நன்மை மிகப்பெரிதே.
(12)
முற்றிற்று.
20. திருத்தணிகை
(கட்டளைக் கலித்துறை)
231. தண்பொழி திங்கட்
கதிர்சு மென்றாள் சமனாணும்
கண்பொழி நீர்சற் றொழிகிளள் செம்பொற் கலைபேணாள்
விண்மொழி மேகக் குழன்மலர் சூடாள் வெருளுற்றாள்
வண்பொழி னீடுந் தணிகைம லைக்கோன் மயலாளே.
(1)
232. மேனைம கட்கோ
ரருமகவு வென்பாள் விண்ணோர்தஞ்
சேனைபு ரக்குந் திறலின னென்பா டிருவாலோர்
மானைவ தைத்தோன் மருமக னென்பாண் மழையோவா
வானய ளாவுந் தணிகைம லைக்கோன் மயலாளே.
(2)
233. கந்தர நாணுங்
குழலுலை யக்கண் கடைசோரச்
சந்தமு லைக்கண் டிதலைகு லாவத் தளிர்மேனி
நொந்தணை யிற்புண் படவணை நிந்தை நுவல்கின்றாண்
மந்தர மொக்குந் தணிகைம லைக்கோன் மயலாளே.
(3)
234. திங்கணி றத்தோர்
சேவலு றுங்கைச் சேயென்னுங்
கொங்கவிழ் செச்சைத் தாரவிர் மார்பக் குகனென்னுந்
தங்கம லைக்குச் செண்டுசெ லுத்துந் தகையென்னு
மங்கள மிஞ்சுந் தணிகைம லைக்கோன் மயலாளே.
(4)
235. கொங்கும லர்ப்பஞ்
சணையைவெ றுத்தாள் குயில்கூவிற்
செங்குழை பூணுஞ் செவியைய டைத்தா டெளிதேனும்
பொங்குறு பாலுஞ் சிறிதும்வி ரும்பாள் புலர்கின்றாண்
மங்குலு லாவுந் தணிகைம லைக்கோன் மயலாளே.
(5)
236. குஞ்சர மொன்றுக்
கிளையவ னென்றாள் குகனென்றா
ளஞ்சல ளிக்குஞ் சரவண னென்றா ளயிலென்றாள்
கஞ்சம லர்ச்சண் முகமுரு கென்றாள் கலுழ்கின்றாண்
மஞ்சடர் சோலைத் தணிகைம லைக்கோன் மயலாளே.
(6)
237. அன்னம ருந்தாள்
விழிதுயில் வெய்தா ளலர்நாணாள்
கன்னல்வி லானைப் பெரிதிகழ் கின்றாள் கவினாரு
பொன்னணி சிந்திக் கூடல்கு றிப்பாள் புயலூர்வான்
மன்னர்ப ராவுந் தணிகைம லைக்கோன் மயலாளே.
(7)
238. பொன்படு தோகைப்
பரியிவர் பாலன் பொருவேலா
னன்பர்க ளக்கோ ரெளியவன் மாறா வருளாள
னென்பத னிற்பெண் ணுருவம மைத்தோ னெனநாணாண்
மன்பதை கூடுந் தணிகைம லைக்கோன் மயலாளே.
(8)
239. தேவின முய்யக்
கடலொடு நங்கோன் செறமாயுங்
கோவினன் நண்ணுங் குயிலொலி நஞ்சிற் கொடிதென்னும்
பூவின நாணக் குளிர்தரு நீபப் போதென்னு
மாவின நீடுந் தணிகைம லைக்கோன் மயலாளே.
(9)
240. பங்கய வேதன்
றலையி லிடிக்கும் பரனென்னுஞ்
செங்கண் முராரிக் கினிதருள் செய்யுஞ் சேயென்னும்
பொங்குழன் மேனிப் புரதக னன்கட் பொறியென்னு
மங்கரு மேன்மைத் தணிகைம லைக்கோன் மயலாளே.
(10)
241. கொஞ்சமு முண்மைக்
குருபர னென்னக் குறியாம
லெஞ்சலில் காமச் சிறைவிடு விப்போ னெனனாடி
யஞ்சகி மாரைத் தூதுசெ லீரென் றறைகின்றாள்
வஞ்சமொ ழிக்குந் தணிகைம லைக்கோன் மயலாளே.
(11)
242. வளமலி சீலத்
தணிகைம லைக்கோன் மயலாளென்று
வுளமதை வைத்துக் கற்றொட லிடைநீ ருறவேண்டித்
தளர்கவு மாரன் சொல்லிய வண்மைத் தமிழ்கொள்வா
ரளவறு ஞானத் தலைவர்க ளாயிங் கவிர்வாரே.
(12)
முற்றிற்று.
21. திருப்போரூர்
(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
243. வெள்ளைநிறச்
சேவலொடு மயிலும் வாழி
வேன்முதலாம் படைவாழி
விண்ணூர் மாதுங்
கிள்ளைநிகர் குறக்கொடியும் வாழி யென்னக்
கிளத்துமென்னை யுலகறியக்
கெடுக்க லாமோ
வள்ளைநெடுஞ் செவியணிப்பார்ப் பதியாள் கொங்கை
மணிநெருடி யமுதநுகர்
வாயுள் ளானே
புள்ளையகல் வாய்விளந்தோன் மருகா வுண்மைப்
புலவர்பலர் பரவுதிருப்
போரூ ரானே.
(1)
244. கருவிலய னெழுதும்விதிப்
பிழையை நின்பொற்
கழலழிக்கு மென்றமொழி
கருதி வந்தே
னிருவினையு மலதொருகற் கிணற்றா லுண்டா
மெண்ணில்வினைக்
காளாகி யிடைய லாமோ
வருவியணிக் கன்றுதொறுந் தினம்போய் மீள
வாயாறி ரண்டுகோள்பொறுக் கும்மல் வேளே
பொருவிலருள் விளையாட லியற்று மெந்தாய்
புலவர்பலர் பரவுதிருப்
போரூ ரானே.
(2)
245. ஆதரவோர் சிறிதுமிலாக்
கொடிய னேனை
யகிலமுன தாளெனநன்
கறையச் செய்த
நீதருண மறியார்போற் படுத்துந் துன்ப
நிறைவொழிவ தெந்நாளோ
நிகழ்த்த வேண்டும்
வேதனழப் புடைத்தகைமுந் நான்குள் ளானே
வினையொழிந்த மேலவர்க்குள்
விளங்கும் பாதா
பூதகணப் படைப்பெருமா னுதவு மைந்தர்
புலவர்பலர்ப் பரவுதிருப்
போரூ ரானே.
(3)
246. எத்தனையோ
வதிசயங்கண் மனக்கண் கண்டு
மிக்கதலதோர் துணிந்தேச
வெனவிக் கூபத்
தித்தனைபா டெனைப்படுத்தத் துணிந்தா யந்தோ
வினிமேலு மிரங்கார்போ
லிருக்க வேண்டா
முத்தமிழ்மா முனிபாடும் புகழ்க்கோ மானே
முனைவேற்கைப் படையேந்து
முருக வேளே
புத்தமுத நிகர்மொழியா ரிருவர் பாகா
புலவர்பலர் பரவுதிருப்
போரூ ரானே.
(4)
247. வேங்கலியு
மேடணைத்துன்ப முங்கொன் றுண்கை
விரும்புமவர் பெரும்பகையும்
விலக்கி டாம
னீங்கருங்கற் கிணற்றின்னல் தனமேற் றந்தாய்
நின்னுளத்தித் தனைகடுத்த
நேர லாமோ
வோங்கலெங்கு நடம்புரியு மொருபெரி மானே
யொளிர்வேல்கொண்
டெழிற்சிகிமீ துலவு மெந்தாய்
பூங்கமலக் கண்முகுந்தன் மகளிர் கேள்வா
புலவர்பலர் பரவுதிருப்
போரூ ரானே.
(5)
248. நண்ணியவா
றருள்புரிய வல்லா யென்று
நம்பினேன துபிழையே
னவினி ராசைத்
திண்ணியரிற் கூடியுய்கைக் கவணா னாலுந்
தெளிநீரூற் றொன்றுதவி
செயத்தான் வேண்டுந்
தண்ணியலுங் கூதளப்பூ மாலை யானே
சரவணவா வியின்மலர்மேற்
றவழ்ந்த பாலா
புண்ணியநன் னெறியினர்க்கோர் பொதுவா மெந்தாய்
புலவர்பலர் பரவுதிருப்
போரூ ரானே.
(6)
249. தவளநிறப்
பொடிப்பூசி யக்கம் பூண்டு
தழனிகர்கல் லாடைசுற்றித்
தவஞ்செய் வோர்க
ளெவருமதித் திடச்சிலநாள் வைத்த பின்னு
மிவ்வகைத்துன் பங்களெல்லா
மீய லாமோ
கவணெறிக்கைக் குறத்திமுன்னோர் கணியா நின்றாய்
கதிர்வேலுஞ் சூலமுங்கொள்
காத்தம் மானே
புவனிமுற்று முண்டுமிழ்ந்தாற் காழி யீந்தாய்
புலவர்பலர் பரவுதிருப்
போரூ ரானே.
(7)
250. பாழியசெந்
தகர்வாலு நார தாதிப்
பழையமுனி வோர்வெருண்டு
பதைக்கு மந்நா
ளாழியுல கறியமுன்னின் றளித்தா யிந்நா
ளடியேங்கட் கிரங்காமை
யறந்தான் கொல்லோ
வீழிவிட்டோர் சுருளோலை நிமித்தம் வந்து
மிடைதருஞ்சா ரணர்க்கெமனாம்
வெண்ணீற் றின்பம்
பூழியனா டத்தனையும் பொலியக் கண்டாய்
புலவர்பலர் பரவுதிருப்
போரூ ரானே.
(8)
251. இத்தேகத்
துடன்மலைமீ துருளு மந்நா
ளெடுத்தாண்ட திக்கிணற்றா
லிடையச் செய்வித்
தெத்தேயத் தருமிகழ்சொற் கேட்க வென்றோ
விதனாலுன் புகழ்க்கடற்கோ
ரேற்றங் கொல்லோ
மைத்தேகத் தடற்சூரன் மாயை யாமர்
மாத்தைத்த றித்துதிர
வாரி காட்டிப்
புத்தேளிர் பொன்னகரிற் புகுதக் கண்டாய்
புலவர்பலர் பரவுதிருப்
போரூ ரானே.
(9)
252. மாமறையா கமத்துணிவீ
தெனநன் கோர்ந்தும்
வாசனையாற் பரசமைய
வழக்குற் றாற்போற்
காமருபொன் னகர்ப்போகங் கசந்து மிந்தக்
கற்கிணற்றி னாசைவந்து
கலக்க நொந்தேன்
றேமலர்க்கை மாரனொல்கு மழகுள் ளானே
திருப்புகழ்ப்பைங்
கிளியுலவுந் திண்டோட் கந்தா
பூமனரி யான்முதலோர் பணியும் பாதா
புலவர்பலர் பரவுதிருப்
போரூ ரானே.
(10)
253. என்னுள்ளத்திற்
குருபரனா மெனப்பல காலவந்
திலங்கியநீ யொருக்காற்கண்
ணெதிரிற் றோன்றி
முன்னுரைத்த வாறுமுற்று மெய்மை யாக
முடித்தருளா திருப்பதுவு
முறைதான் கொல்லோ
பன்னுகளா சத்தருத்தங் கண்டு தேறிப்
பணிபுரிவா னொருவனுய்யப்
பார்வை யொன்றாற்
பொன்னுதவு சிதம்பரப்பேர் முனிவ னாதிப்
புலவர்பலர் பரவுதிருப்
போரூ ரானே.
(11)
254. பூட்கையொலி
யெனத்தமிழாற் கவிதை பாடும்
புலவர்பலர் பரவுதிருப்
பேரூ ரானை
வேட்கைமிகத் தரும்பாறைக் கிணறு தொட்டு
மேதினியோ ரிகழ்வதனால்
வெதும்பும் பொல்லான்
கேட்கைதிகழ் பதிகமிது நன்றென் றன்பாற்
கிளத்துமவ ரெவரேனுங்
கிடைநீர் வைப்பில்
வாட்கைவய வேந்தருக்கு மஞ்சா ராகி
வானகத்திந் திரன்மதிக்க
வாழ்வா ரன்றே.
(12)
முற்றிற்று.
22. திருவேங்கடம்
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
255. எந்தவி தத்தெவர்
நண்ணினு மவ்வண
மிலகும் பொருணீயென்
றந்தரங் கத்துண ருந்தமி யேனையு
மயரச் செயலாமோ
கந்தம லர்க்கடம் புங்குர வும்புனை
கருணா கரமுருகா
செந்தமிழ்ப் பாவலர் பற்பலர் மெச்சிய
திருவேங் கடத்தானே.
(1)
256. போத மிகுபொதி
யைக்குறு மாமுனி
புகனூல் வழிசென்றுன்
பாதம டைந்துள் பைங்கிளி யென்றெனைப்
பலகாற் சொலல்பொய்யோ
வேதமி றங்களி னத்தினு மாறுபட்
டிகலுங் குணத்தோராஞ்
சீதர னன்பரை யும்பணி கொண்டுயர்
திருவேங் கடத்தானே.
(2)
257. அங்கத மாவுருக்
கொண்டுவந் தானென
வடியே னுலகோருட்
சங்கட வாதமி கும்படி செய்கிலன்
சற்றுன் னருணல்காய்
செங்கண்மு ராரியு மீசனு மாதிய
தெய்வங் களொராறுந்
திங்கண்மு கங்களெ னக்கொடு நீடிய
திருவேங் கடத்தானே.
(3)
258. அம்புய வேதன்ம
றைக்கய லாநெறி
யடையும் பலதீயோர்
வம்புமு ழுக்கவொ ழித்திட மெய்யருள்
வலியென் றருள்வாயோ
பைம்புயன் மேனியி னற்கிளை யாடரு
பாலர் மலைபோலுஞ்
செம்புகர் வேழமு லாவிய சீர்திகழ்
திருவேங் கடத்தானே.
(4)
259. தண்டமுஞ்
சக்கர முந்திரி சூலமுந்
தனிவேன் முதலாய
வொண்டரு பல்படை யும்புனை யுந்தகை
யுடையா னெவனென்னின்
மண்டலத் தூடுய ரும்பொதி யைத்தமிழ்
வளநாட் டினர்வாழ்வான்
செண்டத னான்மக மேருவை மோதிய
திருவேங் கடத்தானே.
(5)
260. வெட்டிய வாள்விழி
மங்கையர் மையலில்
வீணா மெலிவேனுக்
கட்டியின் மெய்யருட் சீர்தரு வான்வலி
தாண்டா னையறிந்தேன்
கிட்டிவந் தார்பொருட் கொள்வதிற் பாவலர்
கேட்கின் றவைதாலிற்
செட்டியு மன்னனு மாகிவி ளங்கிய
திருவேங் கடத்தானே.
(6)
261. கொன்றவை தின்றிட
லின்றிய நல்லவர்
கூறும் பரமெல்லா
மென்றல தின்றென நன்குண ருந்தவ
ருள்ளத் தனையோதி
லென்றர னாதிய ரைத்தொழு துய்தரு
மிருமூ வருமொப்பச்
சென்றவர் கன்மம றுங்குறி காட்டிய
திருவேங் கடத்தானே.
(7)
262. தாயொடு தந்தை
சகோதர மற்றுள
தமரா தியராரும்
வாயொடு நெஞ்சினு மென்றனக் கிங்கொரு
வன்றா னவன்றன்பேர்
பாயொடு பீலிவி ரும்பிய சாரணர்
பலர்மா யவுறப்பாடற்
றீயொடு நீரிலி டுஞ்சிசு வாவரு
திருவேங் கடத்தானே.
(8)
263. பாவம னைத்துந்தி
ரண்டுரு வரமொரு
பாறைக் கிடைவேண்டு
மோவரு மூற்றுநன் னீருத வுந்திற
லுன்றற் கிலைகொல்லோ
சேவலங் கேதனக் கைக்குக னேயயிற்
றிரண்டோண் முருகோனே
தேவருய் யக்கொடுஞ் சூர்தடிந் தாயெழிற்
றிருவேங் கடத்தானே.
(9)
264. அஞ்சலென்
றத்தின நீவிளக் குங்குறி
யறியுங் களிப்பாரு
நெஞ்சகத் திக்கருங் கற்கிணற் றின்றுயர்
நிறையச் செயலாரோ
பஞ்சவன் னச்சிகி மாவல னேதகர்
பரியே றியவீரா
செஞ்சடை யான்முதன் மூவருங் கைதொழுந்
திருவேங் கடத்தானே.
(10)
265. தூயம றைக்குர
வன்றிரு மாலரன்
றொழில்வென் றுயநாடு
நேயம ளித்துமிக் கல்லிடை நீர்வர
னேடித் தளர்கின்றேன்
பாயரு விப்பல குன்றுதொ றாடிய
பாதர தமிழ்ப்பன்னுநீ
தேயம தன்வட வெல்லையென் றோங்கிய
திருவேங் கடத்தானே
(11)
266. சித்தரு ஞானிக
ளும்பணி பொற்புறுந்
திருவேங் கடத்தானை
முத்தமிழ்க் குன்றடுக் குந்திரு நெல்லையின்
முழுநீ றணிதொண்டன்
பத்தர்மெச் சுங்கருங் கற்கிணற் றிற்புனல்
பாலித் திடப்பாடு
மித்தமிழ் கற்பவ ரின்னலெல் லாமறுத்
தின்மம் பெறுவாரே.
(12)
முற்றிற்று.
23. சத்திமலை
(கலித்துறை)
267. கண்ட வர்நகைக்
கவொரு கற்றொடு மெனக்கீண்
டண்ட ருமதிக் குமரு ளாண்மை யருள்வாயோ
சண்ட னையெனக் குதவ லாமோ சிறியபாலர்
தண்ட மிழ்வளங் குலவு சத்தி மலையானே.
(1)
268. சிந்த னையினுட்
பலதி டுக்க முறுமாறிங்
கிந்த விதவா தனையெ னக்கு தவலாமோ
வந்த ணருணைக் கிளிய றைந்தணி வதாகுஞ்
கந்த முருகா பொருவில் சத்தி மலையானே.
(2)
269. நீய றிவிலா
யெனநி கழ்த்து மவர்முன்னென
வாய துலரும் படிவ ருத்தன் முறைகொல்லோ
சேய தமிழ்கொண் டுதுதி செய்ப வர்தமக்கோர்
தாய கமெனக் குலவு சத்தி மலையானே.
(3)
270. எண்கு டிகொள்சிந்
தைம கிழ்வெய் தநிதநீயென்
கண்கு ளிர்வந் தெதிர்க வின்ற ருளொணாதோ
வண்கு றவரே னல்வளர் வள்ளி மணவாளா
தண்கு லவுசோ லைமலி சத்தி மலையானே.
(4)
271. பந்த வினைகொண்
டுயிர்ப தைக்கு மெனைநீயுன்
சொந்த மெனவைத் துயர்தொ ழும்பு கொளலென்றோ
வந்தார் பார வுமெழி லாறு முகவேலா
தந்த மலையோ தைமலி சத்தி மலையானே.
(5)
272. பித்து டையர்
போன்மிகு பெரும்பி ழைமுயன்றேன்
றத்து றுதுயர்க் கடற ணந்த ருள்வதென்றோ
முத்து றழ்நகைக் குறமின் மோக முருகேசா
சத்து வகுணா லாவரு சத்தி மலையானே.
(6)
273. கார ணமெனா
வொருக னாவி னினமொழிந்தா
யார ணமுடிப் பையரு ளாதவி தமியாதோ
வார ணம்வ ரைந்த கொடிவாழ் முயன்மைந்தா
தார ணியினிற் பெரிய சத்தி மலையானே.
(7)
274. வெண்பை யிலடைக்
குமிள மேனி யொடுவந்து
மண்பயி லுறாது கொளென வாஞ்சை யறியாயோ
பெண்பழ கிடத்தி னர்பெறுஞ் சிறியபிள்ளாய்
சண்பை யதிபர் விணையில் சத்தி மலையானே.
(8)
275. ஞான முறநா
டியுனை நம்பு மெனைவம்பி
லீன ருநகைத் தெளிதி கழ்ந்தி டவிடாதே
வான வர்நடுங் கநெடு வாரி யிடைமரவாந
தான வனைவென் றுவரு சத்தி மலையானே.
(9)
276. வாணு தல்வ
னப்பி னிருமா தருகெய்தப்
பூணும் வடிவே லொடிரு போது மெதிர்வாராய்
சேணு லகவா ணர்புகழ் தெய்வ முருகையா
தாணு முதன்மூ வருணர் சத்தி மலையானே
(10)
277. கற்கு டைதருந்
துயர்க ழிந்துன் னடியராபர
னிற்கு நிலையெய் தவரு ணீரு தவியாளாய்
மற்கு ருகுலா வுபல வாகு டையஞானச்
சற்கு ருபரா நெடிய சத்தி மலையானே.
(11)
278. சத்த மறையும்
பரவு சத்தி மலையானை
வித்த கர்மிகுந் திருநெல் வேலி யிலொருத்தன்
புத்த முதுறும் படிபு கன்ற மைவிரும்புஞ்
சித்த முடையார் களொடு தீவினை பொராதே.
(12)
முற்றிற்று.
24. நட்சேத்திரமலை
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
279. வம்பொன் மானிடர்கள்
வாழு
மனைதொறும் வலியச் சென்று
பைம்பொன் வேட்டுழன் றிடாமற்
பரிசெனக் கருள்வ தென்றோ
வம்பொன் வார்சிலை யார்நெற்றி
யழல்விழிப் பொறியா வந்தாய்
செம்பொ னூர்பர வுநட்சேத்
திரமலைக் குமர வேளே.
(1)
280. பாவலர்க்
குதவும் பான்மை
பறிகொடுத் தவன்போன் றென்னை
யோவருந் துயரத் துய்த்தா
யுனக்கிது முறைதான் கொல்லோ
காவளர் குமரி பாகா
கருங்குறச் சிறுபெண் மோகா
சேவலங் கொடிதோய் நட்சேத்
திரமலைக் குமர வேளே.
(2)
281. ஐந்துவெம்
பொறியால் வாடி
யலமருந் தமிய னேற்கு
வெந்துயர் போதர தென்றோ
விளைந்தகற் றோடவிட் டுற்றாய்
கொந்துமென் மலர்த்தண் சோலைக்
குரங்கினங் குலையக் கோடி
சிந்துரம் பிளிறு நட்சேத்
திரமலைக் குமர வேளே.
(3)
282. பத்தருட்
கடையா வேனைப்
பதமலர் சூட்டி யாண்டு
வித்தகப் புனிதர் கொள்ளும்
விறலளித் தருள்வாய் கொல்லோ
முத்தமிழ் முனிவ னன்பான்
மூவகை நலமுந் தோய்ந்த
சித்தர் வந்துலவு நட்சேத்
திரமலைக் குமர வேளே.
(4)
283. ஏதமிக் கெனக்கீந்
தாலு
மெனையுமோர் பொருளாக் கொள்வார்
நோதறீர்த் தருளென் றுன்பா
னுவன்றசொல் வினவி லாயோ
பூதல மளந்து வானம்
புதைபட வலத்தா ணீட்டுஞ்
சீதர னனைய நட்சேத்
திரமலைக் குமர வேளே.
(5)
284. தந்திரத்
தொழில்செய் வோரிற்
றாழ்ச்சியுற் றடியேன் வாட
வெந்திற்ற கலிநோய் தன்னை
விடுத்தநீ விலக்கொண் ணாதோ
மந்திர முதலோர் வரனே
வடித்தவேல் பிடித்த மைந்தா
செந்திரு மருகா நட்சேத்
திரமலைக் குமர வேளே.
(6)
285. களிறெனக்
குலவு மாண்மை
கருங்கல் வன்கிணற் றான்மட்கி
யெளிமையுற் றன்னன் னீருற்
றினிதளித் திடன்தான் வேண்டு
மளிமலி வழியீ ராறு
மன்றகணோ ராறு முள்ளாய்
தெளிதமிழ் வளஞ்சேர் நட்சேத்
திரமலை குமர வேளே.
(7)
286. கழிமடிக்
கயவ ரேசக்
கல்லலோர் கிணறு கெல்லிப்
பழிமிகப் படைத்து நொந்தேன்
பரிந்தருள் புரிந்தின் றாள்வாய்
பொழின்மலி மதுரை மூதூர்
புகழ்பெறப் புனித நீற்றாற்
செழியனைப் புரந்தாய் நட்சேத்
திரமலை குமர வேளே.
(8)
287. தூயமெய் யறிவி
லாரிற்
றொடலருங் கிணற்றா னொந்தே
னீயரு ளுடையா யென்னி
னிறைபுன லளித்தின் றாள்வாய்
காயகக் கவுணர் ராப்பக்
கடவுளர் வெருள மர்வாந்
தீயசூர்ச் செற்றாய் நட்சேத்
திரமலை குமர வேளே.
(9)
288. வண்டமிழ்க்
கிரங்கா நெஞ்சும்
வழங்கலில் கரமு மென்னாற்
கொண்டனை கொல்லோ முன்னைக்
குணத்தையெங் கொளித்தா யையா
முண்டக நிறமுங் கண்ணு
மூவலின் மனையுங் கொள்வார்
தெண்டனிட் டிறைஞ்சு நட்சேத்
திரமலை குமர வேளே.
(10)
289. கூசிநொந்
துழலச் செய்யுங்
கொடியகற் கிணற்றிப் போதே
காசியின் புனலே போலுங்
கங்கைவந் துறச்செய் தாள்வாய்
மாசின்மெஞ் ஞான நல்கி
மறுபிறப் பின்றிக் காக்குந்
தேசிகர்க் கிறைவர் நட்சேத்
திரமலைக் குமர வேளே.
(11)
290. திறைபல ரளக்கு
நட்சேத்
திரமலைக் குமர வேளை
நிறைபுகழ்ப் புனையு தொல்சீர்
நெல்லையூர் முருக தாசன்
கறைமலி பெருங்கற் கூபங்
கங்கையிற் புனித மெய்த
வறையுமிப் பதிகங் கொள்வார்க்
கருட்டிறன் மிகவுண் டாமே.
(12)
முற்றிற்று.
25. திருவருணை
(அறுசீர்க்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
291. சகளச தாசிவன் விழியில்வ ருஞ்சிறு
சாமியெ னப்பகரார்
நிகரமெ லிந்துல கிற்சுழ லும்படி
நீயெனை விடலாமோ?
வகவிய செஞ்சிகி யிற்கதிர் வேலுட
னவிர்தரு மாரமுதே
சிகரந லம்பெறு கோபுர நீடிய
திருவரு ணைக்குகனே.
(1)
292. சத்திர மொன்றுசெ யும்படி நாடிய
தலமதி லகழ்கூபங்
குத்திர மாயது கண்டுமி ரங்கிலை
குளிர்புன்ன மிகைநல்கா
யத்திர மேவிய தாருக னாணுற
வதையொரு கைக்கொண்டாய்
சித்திர கூடநெ ருங்கிய வீதிகொ
டிருவரு ணைக்குகனே.
(2)
293. அங்கணி லத்திடை மற்றையர் தாமும
றிந்துசொ லச்செயுமா
றிங்கடி யேனுளு மோதிய நீயினி
யென்றருள் புரிவாயோ
பங்கய னொவ்வொரு சென்னியு மூன்றிடி
பட்டுய ரக்கண்டாய்
செங்கம லத்தட மிஞ்சிய சீர்திகழ்
திருவரு ணைக்குகனே.
(3)
294. பூதல மீதுபி றந்துள மைந்தர்பு
ரிந்தறி யாதகொடும்
பாதக மெத்தனை செய்யினு நின்றுதி
பகர்தலி னொழியாதோ
மாதவ னொஞ்சம யிற்பரி யேறிவ
ரும்பெரு மைக்குமரா
சீதம திக்குவ டைந்துறும் வெற்பவிர்
திருவரு ணைக்குகனே.
(4)
295. ஆறுமு கத்தொரு தெய்வம தேபர
மாகுமெ னத்தெளியார்
கூறுமி கழ்ச்சிஎ டச்எட நொந்து
கொதிப்பது சம்மதமோ
நீறுமி கப்புனை யும்கவு மாரர்நி
னைத்தவ ரந்தருவாய்
தேறுத மிழ்ப்புல வோர்பல ராலுயர்
திருவரு ணைக்குகனே.
(5)
296. கல்வரை யன்னம னத்தினர் தம்மொடு
கலக நிதஞ்செய்து
பல்வகை யின்னல்ப டுந்துய ரென்றுப
றித்தெறி யத்துணிவாய்
நல்வரம் வேணப டிக்குத வுங்கரு
ணைக்கட லாமுருகா
செல்வமி கப்பொலி யப்பெறு சீர்திகழ்
திருவரு ணைக்குகனே.
(6)
297. புண்ணிய மில்லவர் நெஞ்சுறழ் பாறைபு
னற்றரு மென்றடியே
னெண்ணிய துன்னுரை யாலெனு முண்மையி
லங்குவ தெத்தினமோ
நண்ணிய வாறுரு வங்கொடு தொண்டர்ந
டுக்குல வுங்குமரா
திண்ணிய மாதவர் பற்பலர் கூடிய
திருவரு ணைக்குகனே.
(7)
298. பூரண மாகிய நீஎனுள் நின்றுபு கன்றவை
பொய்த்திடி லிங்கு
ஊரவர் தேர்கில ராயினும் நின்திரு
வுள்ளம்ம றந்திடுமோ
கோரமி கும்பல சாரணர் வாதுகு
லைந்திட வென்றவனே
தேரணி வீதிவி ழாமலி வெய்திய
திருவரு ணைக்குகனே.
(8)
299. பாவனை யிற்பதி யாமலுன் மெய்ப்புகழ்
பாடும்வி ருப்புறுநெஞ்
சேவரும் நித்தமி கழ்ந்திட நாணுமி
ளப்பமு னக்கிலையோ
மாவல றித்தரை மேல்விழ வெட்டிவ
ருங்கதிர் வேன்முருகா
தேவர்ப திக்கிடை யூறுத விர்த்தரு
டிருவரு ணைக்குகனே.
(9)
300. நம்புமெ னைப்பல சோதனை செய்வது
ஞாயம லதமியேன்
வெம்புறு சோகமி குத்ததொ ழித்தருள்
வெள்ளமு ழுக்கருள்வா
யம்புய வேதன ழும்படி குட்டிய
வன்றொழில் செய்தவனே
சிம்புளு ருக்கொடு சீயம டர்த்தவர்
திருவரு ணைக்குகனே.
(10)
301. சொற்பன மத்தியி லென்றனை யுன்னது
தோளிலு றுங்கிளியென்
றுற்பன மாகவு ரைத்துமிவ் வண்ணமு
ழன்றிட விடலாமோ
கற்பனை நூல்கள்வி ளம்பரி தாகிய
காரண நிலைநல்குஞ்
சிற்பர தத்துவ தேசிக னாவரு
திருவரு ணைக்குகனே.
(11)
302. செய்யவ ளுங்கலை மங்கையு நன்கமர்
திருவரு ணைக்குகனைப்
பொய்ய ரிகழ்ச்சிபொ றுத்தொரு கற்றொடு
புகழ்புனை நெல்வேலிப்
பையல திற்புன லெய்தவி ளம்பிய
பதிகமி கப்பகர்வார்
வையமும் வானும திக்குந லங்கொடு
வாழ்வது நிச்சயமே.
(12)
முற்றிற்று.
26.
சோமாசிபாடி
(அறுசீர்க்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
303. இத்தனைநா ளன்னமின்றி யொருகிணற்றூற் றிரந்துமளித்
தில்லா யின்ன
மெத்தனைநா
ளிரங்காம லிருப்பாயோ வறிகில்லே
னியானென் செய்வேன்
சித்தருக்கோ
ரருண்மகவாஞ் செவ்வேளே வேலணியுந்
திருத்தோ ளானே
பத்தருக்கோ
ரெளியானே பழுதறுஞ்சீர்ச் சோமாசி
பாடி யானே.
(1)
304. எங்களுக்கின் றருள்வழங்கா திருந்தனையென் முன்பலருக்
கீதல் பொய்யாய்
மங்கலுறும்
பின்னடிமைப் படுவாரு மிலராவார்
வம்பு செய்யேல்
செங்கணெடு
மான்மருகா சிவன்புதல்வா கவுரிமுலைத்
தீம்பா லுண்டாய்
பங்கயப்பூ
வாவிதொறும் வளைமுழங்குஞ் சோமாசி
பாடி யானே.
(2)
305. என்னிருகண்
ணேமணியே யின்னமுதே யெனத்தினமு
மிசையாற் போற்றுஞ்
சொன்னிருப ருடனெனைக்கூட் டிடற்குதியன் றுகொல்லோ
சுகந்தந் தாள்வாய்
வன்னிருதாக் கெமனான வடிவேலப் பாகல்பம்
மயிலூர் வானே
பன்னிருகை சண்முகசுந் தரமுருகா சோமாசி
பாடி யானே.
(3)
306. சிந்தனையி
லுன்னையன்றிப் பலதேவுண் டெனக்கருதுஞ்
சிறியேன் றன்னுள்
வந்தனைத்து நானேயென் றுரைத்தநீ யிந்தவண்ணம்
வருத்து வானே
னிந்தனைய பளிங்கதனாற் சமைந்திலகு மேடைதொறு
மிடைவி டாமற்
பந்தனைய கொங்கைநல்லார் நடமுயலுஞ் சோமாசி
பாடி யானே.
(4)
307. ஏனுனக்கா
ளானோமென் றெண்ணுமட்டுந் துயர்செய்தா
யின்னஞ் செய்யே
னானுமென்ற னெஞ்சகமு நாவுமுன்னைப் பிரிவரிதே
நலந்தந் தாளாய்
வேனுனியான் மலையேழும் பொடித்தொருசெய் யாறழைத்த
விமல வேளே
பானுவுந்திங் களுநுழைய வளர்சோலைச் சோமாசி
பாடி யானே.
(5)
308. செச்சைகுர
வங்கடம்பு கூதாளங் கவளைபிச்சி
செருந்தி யாதிக்
கிச்சைவைத்த நின்றிருத்தோ ளெனதியற்சொல் வெறுப்பதுண்டே
லியானென் செய்வேன்
கச்சையரைக் கருமறவ னெச்சுரத்தி லேகியன்றோர்
கவிகொண் டோனே
பச்சைமயிற் பரியூரும் பவனியனே சோமாசி
பாடி யானே.
(6)
309. அரண்கெடுக்கும்
புலையர்மகிழ் வுறுகாலத் தெனைப்படைத்த
தன்றிப் பொல்லா
முரண்கலிலோர் கிணறமைக்க விடுத்துநன்னீ ருதவாமை
முறைதான் கொல்லோ
சரண்சரனென் றிமையவர்போற் றியமுருகா மலைமுழுதுந்
தாங்கும் பாதா
பரண்குறத்தித் தருந்தினைமா மிகவுண்டாய் சோமாசி
பாடி யானே.
(7)
310. நெருங்கும்விண்
ணோர்களுக்கிரங் கிச்சிறைதவிர்த் தாண்டருள்புரியு
நீயென் னேயஞ்
சுருங்குறத்தோன் றியருங்கற் கிணற்றிடைநீர் வருத்தும்வலி
தோய்ந்தி லாயோ
வருங்குழவி யெனக்காழிக் கவுணியப்பெண் பெறவிளங்கு
மக்கா லத்தும்
பருங்குடத்தென் பொருமகளா
வாப்படித்தாய் சோமாசிப்
பாடி யானே.
(8)
311. இரவினிற்காண்
டகுகன்வைத் திருவுளச்சீட் டினைப்பலசோ
திடர்தஞ் சொல்லைக்
கரவெனநீப் பதற்குளஞ்சிக் கல்லிடைநீர் விழைந்துழன்றேன்
கருணை செய்வா
யரவணிவா னறருமவர்த் தாலிறுமாந் துடலினிடை
நின்றண் டமுட்டிப்
பரவுகொக்கொன் றிருபிளப்பா கிடப்பொருதாய் சோமாசி
பாடி யானே.
(9)
312. காண்டன்முற்று
நின்னுருவே யெனக்கருதிக் களிகூர்வேன்
கருத்துட் டோன்றி
வேண்டலிற்கேற் பன்பகரு மவைகளுநீ யல்லையென்றால்
வேறென் செய்வேன்
றூண்டருஞ்செம் மணிவிளக்கே துரியநிலைக் கப்புறத்துந்
தோய்ந்து நின்றாய்
பாண்டரங்கன் முதன்மூவர் பணிகொள்வாய் சோமாசி
பாடி யேனே.
(10)
313. காமருவு வேற்படையுந்
திருமேனிக் கவினுமிரு
கன்னி மாரு
முரமயின்மேற் காண்பதெண்ணுந் தமியேனிவ் வணம்புவிமீ
துழல லாமோ
சரம்சரமெனு மிருபாற்று யிர்க்குமொரு பொதுமுதலாத்
தழைக்கும் பான்மைப்
பரமகுரு பரமுருகப் பெருமாளே சோமாசி
பாடி யானே.
(11)
314. பாவலர்க்கோ
ராதரமென் றிலங்குமெழிற் சோமாசி
பாடி யானைச்
சேவலங்கே தனமொன்றெ செயஞ்செயமென் றிறுமாந்து
திரியுந் தொண்ட
ரியாவருக்கு மொருதொழும்ப னாவதெண்ணுந் திருப்புகழோ
னிருங்கற் கூபத்
தோவருநீ ரூற்றுதிப்பா னுரைக்குமிவை கருதுமவர்க்
குறுதி யுண்டோ.
(12)
முற்றிற்று.
27.அவலூர்மலை
(கலித்துறை)
315. கொடியோ ரிகழ்வத
னாலுடல் கூசுந் துயர்தீர்வா
னிடியே றென்நிலை வுந்தி லொன்றைக் கருள்வாயோ
வடியார் கதிர்வே லாமணி மயிலே றியவயவா
வடியார் பலர்விளை யாடிய வவலூர் மலையானே.
(1)
316. இறுமாப் பறவரு
பாறை யிடத்தின் புனலெய்தப்
பெறுமா றுரையா மற்பல பிழைகூறு தன்முறையோ
சிறுமா னருள்குற மான்முலை சேரும் புயவேளே
யருமா முகமுடை யாயணி யவலூர் மலையானே.
(2)
317. முன்னம் பகர்தரு
மாறுமு டிக்கத் துணியாதே
பின்னம் பருவா னல்குத லேனோ வறிகில்லேன்
பொன்னம் பதுமப் பூமிசை பொலியுந் திருவினர்போன்
றன்னம் பயில்வயல் சூழ்தரு மவலூர் மலையானே.
(3)
318. மானைப் பொருகண்
ணார்மயல் வலையிற் படுமென்னைத்
தானைக் கடலுல கம்புகழ் தவவாழ் வடையாதோ
மோனைக் கவினில குந்தமிழ் மொழிவா ருணர்முருகா
வானைத் திரண்மலி சாரல்கொ ளவலூர் மலையானே.
(4)
319. என்னெஞ் சதனூ
டேனு மெழிற்றோகை யின்மேல்வந்
துன்னெஞ் சறியச் சொற்றவை யுதவா விதமியாதோ
கன்னெஞ் சரெனக் காணுறு கருணா லயமுருகா
வன்னெஞ் சினரணு காதுய ரவலூர் மலையானே.
(5)
320. நீதா னவணுரை
யாயெனி னிறைபா றையினடுநா
னேதா லொருகூ பந்தொட லிசைவே னெவரறிவார்
காதார விழியர் மங்கையர் கவினா ருலகதனுக்
காதார மெனத்தே ரய்தரு மவலூர் மலையானே.
(6)
321. நானா னெனவோ
திக்கெடு நவைதோய் தருதமியேன்
மேனா ளவணுற் றேனென்ன மெய்யோ முதிர்பொய்யோ
வானா டர்பரா வுஞ்சிவன் மதலா யருண்முதல்வா
வானா நலமருள் வாயெழி லவலூர் மலையானே.
(7)
322. வெறிநாண்
மலர்கொடு பூசனை மிகவும் புரிவேனைக்
கிறியூர் வரசெய லுன்னது கிருபைக் கணியாமோ
பறிபாழ் முடியினர் நேரிகழ் பதிகம் பகர்வானே
யறியா நிலையடை யத்தரு மவலூர் மலையானே.
(8)
323. மயிலார் கழல்விழை
யாதிஙன் மறைகற் செறலுற்றேன்
கயிலா திபனடி மைக்கிது தகுமென் கிலருலகோர்
கையில் வாளுடன் வருசூரு யிர்கவருந் திறல்கொடுநீ
டயில்வேல் புனைதோ ளாவள ரவலூர் மலையானே.
(9)
324. குரவார் திருவடி
நாடுதல் குலைவுற் றொருகூபந்
திரநீர் பெறவிழை யும்படி செய்தோ னெவனையா
பரணமேல் வளர்குற மங்கை பதம்பே ணியபாலா
வரன்மா லயன்வழி பாடுகொ ளவலூர் மலையானே.
(10)
325. சருவும் பரசம
யம்பல தழைகின் றதுகண்டு
வெருளுந் துயரிடை முங்கிய வினையி ரிதுவினவீர்
கருதுங் குறிவழி நின்றுல கந்தோ றுள்தொண்டர்க்
கருளுங் குருபர தேசிக னவலூர் மலையானே.
(11)
326. ஆடுங் கவின்மயின்
மேல்வரு மவலூர் மலையானை
நீடுங் கழைவன் மார்திரு நெல்லைக் கவுமார
னாடுங் கதியுறழ் கற்புன் னனியெய் திடன்ணணிப்
பாடுங் கவிபகர் வாருயர் பத்திக் குரியோரே.
(12)
முற்றிற்று.
28. சித்தர் மாமலை
(எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
327. குன்றவர்
மகளுட் களிப்புணர்ந் திமையார்
குலமகள் வருந்துறப் புரிசை
யென்றருந் தமிழாற் றுதிப்பவர் பலர்க்குமிரங்
கியாண்டருள் செய்வா னிடமால்
பொன்றறை மடவா ரெனச்சொலே டணையாற்
புலர்தரு புன்மைதீர்ந்
தருகிற்
சென்றவ ரெவர்க்குந் திருவருட் பெருஞ்சீர்
தெரித்தருள் சித்தர்மா மலையே.
(1)
328. மன்றலங் கடுக்கை
யாரிடத் தமருமாகத்
மடந்தை பால ருந்திக்
குன்றலில் வளஞ்சேர் சரவணத் தடத்திற்
குலவுவான் குடிகொளுங்
கோயி
லன்றலைக் கடலுண் டமரர் கோன்வென்
றகமகிழ் வடையுமா றளிக்குந்
தென்றலங் கிரியான் முதலிய பெரியோர்
தினம்வரு சித்தர்மா
மலையே.
(2)
329. ஐந்து கைத்தமை
யனுடன் பெரிதிகலி
யகிலமற் றொருவல மாக
வந்து தன்றாதை மனம்வெ ருண்டயர்
வழக்கிடு மழமகன் வைக
லிந்துவுங் கதிருநு ழைந்துபோம் படிநீ
டெழிற்பொழி லிடந்தொறு
மெரிகட்
சிந்துரம் பிளிறக் குரக்கினம் வெருள்சீர்
திகழ்தரு சித்தர்மா
மலையே.
(3)
330. பாவலிப் புலவோர்
விரும்பிய வாறே
பரிசுதந் தருளுமோர்
பழைய
காவனான் கலபம யின்மிசை வடிவேற்
கரத்துட னிருந்துசெய்
காவல்
பூவணி யிலகச் சிறையறை தந்தமார்
புழுக்கமற் றின்புறக்
கூவுஞ்
சேவலங் கொடியைத் தினந்தினம் புகழ்வார்
திரண்டுறுஞ் சித்தர்மா
மலையே.
(4)
331. பங்கயர் தன்னகை
விதியினுக் கஞ்சிப்
பரவுவார் பாவனைப்
படிவந்
தங்கவர்க் கருமா மறைப்பொரு ளுரைக்கு
மறுமுகன் மாந்தினி
தாள்கை
கொங்கவிழ் பொழிலுங் கோபுர மணிப்பொற்
கோயிலுங் கொளுங்குவ
டறியாத்
திங்களுங் கதிரும் வலமிடஞ் சுழலத்
திகழ்தரு சித்தர்மா
மலையே.
(5)
332. தங்களுக்
கினிய வாறெலா முதவத்
தகுபரன் சண்முகக் குகனென்
றங்கண மாநிலத் திற்றினஞ் சொலிமகிழ்
வராகம் தேநிக ரெனவ்விரத
றுங்கமால் பலர்கொலென் மார்முழு துந்துய
ருறத்தொடு கணைச்சி
லைக்கைச்
செங்கண் வேடுவர் மிக்குல வியசராற்
சிறப்புறு சித்தர்மா
மலையே.
(6)
333. காவுடைக்
கடவு ளாசையு மதியாக
கருத்துறுந் திற்றகவு
மாரா
பாவுறப் புனையும் பன்னிரு தோளான்
பதத்தொடு நாடொறும்
பழகல்
பூவுல களந்து பொன்னுல கினையும்
பொருக்கென வளந்தமெய்ப்
புகழ்தோய்
சேவுகைப் பவர்கைச் சிலையதே போலத்
தெரிதரு சித்தர்மா
மலையே.
(7)
334. கன்னிபா லருந்திக்
களித்தநா ளொருதன்
கரத்தினாற் பரமனைக்
காட்டி
யின்னிசைத் தமிழ்சொன் மதலையா யிகலோ
ரீடழித் துயர்ந்தவே
ளிருக்கை
வன்னியொத் தெரிந்த சடைக்கரு மலைபோன்
மயிடமூர்ந் துயிர்பல
வதைதகுந்
தென்னிலத் திறைவ னணுகரு மகிமைத்
திருவளர் சித்தர்மா
மலையே.
(8)
335. காரடங் கலுமோ
ருருக்கொளல் கடுப்பக்
கடனடு வொருமர மான
சூரடங் கிடச்செற் றிமையவர்க் கவரூர்ச்
சுகமளித் தவனருட்
டோய்தல்
வாரடங் கருமென் முலையர் மகளிர்
மகிழ்ச்சியே யாதியர்
வகுக்குஞ்
சீரடங் கலுமுற் றிமயமால் வரைபோற்
சேண்டொடு சித்தர்மா
மலையே.
(9)
336. பூவகத் துதித்தோன்
புதுத்துழ யணிவோன்
புரமெரித் தவனெனப்
புகலு
மூவரும் பரவிப் பணிசெய் மகிழ
முருகவேண் மூவலில் வாழ்க்கை
காவளங் கழித்துத் தளிர்த்துயில் விரும்பிக்
கருநிற வேட்டுவர்க்
கோகிலத்
தேவரு மவரூர் மாதரும் பொழிலிற்
றினம்வரு சித்தர்மா
மலையே.
(10)
337. நவ்வியங்
கண்ணா ராதியே டணையா
னலிவுறா நலம்பெறத்
திருத்தித்
திவ்விய தனிவீட் டினுமுறப் புரியுந்
திருக்கைவேற் குருபரன்
சேர்க்கை
யௌவியந் தவிர்வா ரருணையூர்ச் சிகரி
யதன்வட பாலரு ளடைந்த
செவ்விய புலவன் முதலினோர் பரவுஞ்
சீருடைச் சித்தர்மா
மலையே.
(11)
338. தென்புல மடையா
துயர்கதி வழங்குந்
திருவருட் சித்தர்மா
மலையை
யின்புறு மிருவர் நடுவொரு மயின்மீ
தெழுந்தருள் குகனிட
மென்ன
வன்புயர் கருங்கற் றொடுங்கிணற் றிடைநீர்
வருதலே கருதிய வம்ப
னன்புட னுவல பாட்டொரு பதிற்றொன்று
மறைபவர் பெறுவர்நல்
லறமே.
(12)
முற்றிற்று.
29. வேலுடையான் பட்டினம்
(நெய்வேலி)
(கலித்துறை)
339. ஆவுகைத் துவான
கத்தில விருமெழி லந்தணன்பான்
மேவுபசுங் கொடியாய் வேலு டையான் பட்டினமே
பூவுலக முதலா கப்புகலு முலகி னந்தோறும்
பாவுரைப் பார்சந் ததமும் பரவுதற்கா கியதலமே.
(1)
340. சென்னியிரு
மூன்று கொளுஞ்செக் கரைவிட் டகலாத
மின்னினைப் போன்றொளிர் கின்றவே லுடையான் பட்டினமே
பொன்னிலத் தோர்முத லானபுனி தருக்கோ ராதரமாய்
வன்னிரு தாரதி யர்க்கோர் மறலியென வயங்குவதே.
(2)
341. காராரு நெடுமே
னிக்கம லமலர் கண்ணன்முதல்
வீராதி வீரர்புகழ் வேலு டையான் பட்டினமே
சீராதி யாப்புக லுஞ்சிறப் பனைத்து மிகவோங்கி
யாராலுஞ் சயிப்பத னுக்கரி தாகிய விரவதுவே.
(3)
342. கற்பேறுங்
கவுரி மனங்களி கூரப் புனலழைப்பான்
வெற்பேழும் பொடித்து வரும்வே லுடையான் பட்டினமே
சொற்பேதத் தாலுழ லுதொடக் கார்புன் சமையத்தோர்
முற்பேசிச் சயங்கொள் ளுமுனி வர்பலர் மொய்ப்பதுவே.
(4)
343. மண்ணாட்டிற்
பாத லத்தில் வாழ்வோரு மழையார்க்கும்
விண்ணாடர் களும்போற்றும் வேலு டையான் பட்டினமே
பண்ணாரு மறையா திப்பனு வல்பல பகர்வாணிப்
பெண்ணாள சென்றவட் கானபெரு நூல்கற் றுவப்பதுவே.
(5)
344. பொய்த்த மயற்பிணி
நீங்கிப் பொருவில் பரகதிவேண்டும்
வித்தகர்க்கோ ராதரமாம் வேலு டையான் பட்டினமே
பைத்தபணப் பரந்தண்மிசை பள்ளி கொள்வா னெனவாழுஞ்
சித்தர்பலர் வந்து வந்துதினம் போற்றச் சிறந்ததுவே.
(6)
345. காத்தருளு
நெடுமாயன் கண்ணிடை நின்று தித்தோராம்
வேய்த்தடந் தோளியர் விழிநேர் வேலுடையான் பட்டினமே
பூத்தமலர்ப் பூரணை யும்புட் கலையும் புணர்திண்டோட
சாத்தன் மிகப்பணி செய்து சாரூபம் பெற்றதுவே.
(7)
346. செய்யபுகழ்க்
கவுணிய னாத்திரு மதுரைத் தலத்தேகி
வெய்யசமண் வேர்க ளைந்த வேலுடையான் பட்டினமே
பொய்யாது சேர்க்கையி னாற்புல ராத புண்ணியர்க்கு
மெய்யருளுந் தனிப்பு கழுமேன் மேலும் விளைப்பதுவே.
(8)
347. காலையிற்
செங்கதிர் போற்போய்க் காரிருட் காடெனநீண்ட
வேலையிற் சூர்மா வையடும் வேலுடையான் பட்டினமே
சோலைமலி நெடுஞ்சா ரற்றொல் பொதியைத் தூயதமிழ்
மாலைபல தொடுக்கின் றோர்மகிழ் கூர்ந்து வைகுவதே.
(9)
348. போதவ மார்பதி
யோர்புல ராமற் புரந்ததனால்
வேதன முதன்மூ வர்புகழ் வேலுடையான் பட்டினமே
சீதளப் பூங்கடம் பணியுந் திணிதோள் கண்டளிகூரு
மாதரன்ன மெய்த்தொண் டர்வருங் கோயில் வனப்பினதே.
(10)
349. முத்தமிழ்ப்
பாமிகச் சூட்டுமுனி வருக்கோர் மொழிகூறும்
வித்தகச் சற்குரு வாகும் வேலுடையான் பட்டினமே
பத்தரெ னச்சலிப் பின்றிப் பாவனை விட்டகலாத
சித்த ருக்கும் பெறலரிய திருவருட் பேறளிப்பதுவே.
(11)
350. விற்ற படைகட்
கரசாய் வேலுடையான் பட்டினமே
பெற்ற கரியநலங் காட்டும் பெருமையி னதெனும்பாட்
றிற்ற கருங்கற் றொடுகூபஞ் செயுநெல்லைத் திருப்புகழோ
னற்ற கருதிச்சொல்ல கற்பா ரருளாண்மை யடைவாரே.
(12)
முற்றிற்று.
30. பெறும்பேறு
(கலித்துறை)
351. காணு மாந்தர்
மிக்கிகழ் தருகற் கிணறொன்றா
னாணு கின்றன் னல்ல நீரூற் றுறநல்கா
யாணு மல்லவை யிரண்டும் வேற்குக னெனவன்பாற்
பேணு வார்மகிழ் பெயர்ப்பெறும் பேற்ற மர்பிரானே.
(1)
352. அறங்க ளில்லவர்
தாமு மிக்கிகழ் தலினடியேன்
கறங்கவிட் டதுன்கரு ணையின் பெருமை கொல்கழறா
யுறங்கறிர் பரனொ ருகரத் தேந்தும் வில்லுறமும்
பிறங்க லொன்றில கியபெறும் பேற்ற மர்பிரானே.
(2)
353. கொள்ளை முத்தமி
ழாலு னைப்புகழ் தொழிற்கொண்டுங்
கிள்ளை யென்றெ னைநீ மிகக்கழ றியுங்கேட்டேன்
வள்ளை வார்குழைப் பார்ப்பதி வலத்தி னர்மலர்க்கட்
பிள்ளை யாவரு வாய்பெறும் பேற்ற மர்பிரானே.
(3)
354. கோடு வார்குழை
யார்வி ழிக்கன லருள்குழவி
பாடு வார்களைக் கெடுப்ப வனெனும் பழிபடையேல்
வாடு றாதுகை மமரத்தரு மிருவர் தோண்மருவும்
பீடு சான்முரு காபெரும் பேற்ற மர்பிரானே.
(4)
355. இன்ப வாரியி
னமுத நீயென் றுனரென்னைத்
துன்ப நோய்பல சூழ்தர விடுப்ப தேன்சொல்லாய்
வன்பர் பாழ்நெறி வலிகெ டத்தவஞ் செயும்வல்லார்
பின்பல வாறுசெல் வாய்பெறும் பேற்ற மர்பிரானே.
(5)
356. வரியா ரவணை
யானெனப் புவனி யில்வாழ்கைக்
குரிய நானிவ ணுழன்றி டத்தகுங் கொலோவுரையாய்
கிரிய னேகமுங் கண்டு கண்டருந் தமிழ்கிளத்தும்
பெரியர் பற்பலர் சூழ்பெறும் பேற்ற மர்பிரானே.
(6)
357. பழைய நாளவ
ணிருந்தது நிசமெ னிற்படிறேன்
றழையும் வெந்துய ரநுபவித் திடத்த குங்கொல்லோ
வுழைமி னாள்பணி புரிபவ னெனத்தி னமுரைப்பார்
பிழையெ லாந்தவிர்த் தருள்பெறும் பேற்ற மர்பிரானே.
(7)
358. அத்தம் வேண்டி
மிக்கயர் வுறுமெனைக் கிணறதனாற்
சித்த நேர்வு றப்படுத் தலுமுறை கொலொசெப்பாய்
பத்தர் வாழ்வுறப் பறிதலை யினர்கெ டப்படித்தாய்
பத்த னார்புதல் வர்பெறும் பெற்ற மர்பிரானே.
(8)
359. நீர்வர மலிந்தி
யான்மி கத்தொட் டுழணெடுங்கற்
சூரன் மார்பினும் வலிய தன்றயில் கொடுதுளையா
யீர வான்பொழி லிமகிரி மேனை பாலியம்பும்
பேர னாங்கும ராபெறும் பேற்ற மர்பிரானே.
(9)
360. ஊழை நேர்கரும்
பேயை யட்டொரு வனைப்புரந்தாய்
மாழை வேல்கொ டென்னெதிர் வரிலுனக் கதோர்வசையோ
வேழை பங்குடை யான்றிரு மாலய னிறைஞ்சப்
பீழை தீர்த்தளித் தாய்பெறும் பேற்ற மர்பிரானே.
(10)
361. சரண டைந்துளேன்
றனைத்துயர்ப் படுத்து மித்தடங்கற்
புரண போக மொப்பாம் புனற்பொழி யுநாள்புகலாய்
மரண வாதையும் பிறப்புமற் றுய்யும் வாழ்வளிக்கும்
பிரண வக்குர வர்பெறும் பேற்ற மர்பிரானே.
(11)
362. பேச ரும்புகழ்ச்
சீர்ப்பெறும் பேற்ற மர்பிரானைப்
பாச மன்ன கல்லகழ்ந் துழனெல் லையூர்ப்பத்த
னாச றும்புன லெய்துறத் தொடுக்கு மீதறைவார்
நாச மின்றிய நலம்பெ றபிறந் துளநாரே.
(12)
முற்றிற்று.
31. கல்லாலம் பூண்டி
(கலி விருத்தம்)
363. அன்பர்கண்
மருவு கல்லாலம் பூண்டியூர்க்
கொன்படு மலைப்பெருங் குவட்டிற் கொற்றவா
நின்பணி விரும்பியு நெடிது வாடினே
னின்பமோர் சிறிதளித் தெனைக்கண் பார்த்திடே.
(1)
364. ஆரண முழங்கு
கல்லாலம் பூண்டியூர்
வாரணக் கொடித்திரு மலையின் வானவர்
சீரணப் படப்புகழ்ச் செறுங்கற் கூபநன்
னீரண புறும்படி நினைக்க வேண்டுமே.
(2)
365. ஆனினம் பெருகு
கல்லாலம் பூண்டியூர்
வேனிரு பரவுனை விரும்பிப் போற்றிடு
நானிவண் வருந்துறன் ஞாய மன்றருட்
பானிலைத் துயர்பெரும் பான்மை நல்கிடே.
(3)
366. அல்லியந்
தடங்கொள் கல்லாலம் பூண்டியில்
வில்லியர் பரவிய வேல னேயெனைக்
கல்லினன் னீர்வரற் கருத விட்டனை
நல்லியற் றொண்டுளார் நடுவைத் தாண்டிடே.
(4)
367. அந்தணர் மருவு
கல்லாலம் பூண்டியில்
வந்தமர் குமரநின் வனசத் தாண்மலர்ச்
சிந்தனை யெக்கிலர் சிரிப்ப நான்மிக
நொந்தன னருட்கணா னோக்கி யாட்கொளே.
(5)
368. அண்டர்வந்
திறைஞ்சு கல்லாலம் பூண்டியிற்
றொண்டர்பற் பலர்நடுத் துலங்குந் தூயவர்
தண்டணி கரத்தொடுன் றனையெந் நேரமுட்
கொண்டநெஞ் சிவவணங் குலைதல் பாவமோ.
(6)
369. ஆனையார்த்
துலவு கல்லாலம் பூண்டியிற்
றேனைநேர் தமிழ்கொடு திகழுஞ் சேந்தனே
நானையோ வுன்றனை நம்பல் பொய்கொலோ
வேனையா விப்படி யிளைக்க விட்டதே.
(7)
370. அம்புயன்
பரவு கல்லாலம் பூண்டியிற்
கொம்புடைத் தகரிவர் குகநின் றாள்களை
நம்புமென் மனமிக நலித்தீ ரத்தருட்
செம்புகழ்க் கவுணியச் சேயில் வாழ்வியே.
(8)
371. ஆவணத் தணிகொள்
கல்லாலம் பூண்டியின்
மாவடும் வேல்புனை வயவ நின்றிருச்
சேவடி கருதிய சிறிய னேன்மனப்
பாவனை பாழ்படிற் பழிப்புண் டாகுமே.
(9)
372. ஆசிலா துயர்ந்த
கல்லாலம் பூண்டியில்
வாசிமா மயின்மிசை வளர்கு காவுனைப்
பேசிய மூவர்தம் பேறு நல்கெனைக்
கூசிடா திரக்குநீர் கொடுத்த தியாவனே.
(10)
373. அனங்க னாடரிய
கல்லாலம் பூண்டியிற்
றினங்குடி கொளுங்குரு தேசி காவெனை
யினங்கலிற் சுரங்கம் வைத்திட விடேல்புன்ன
மனங்களிப் புறக்கொடு வைய முய்யுமே.
(11)
374. அந்த மிக்குடைய
கல்லாலம் பூண்டியூர்ச்
செந்தகைக் குமரனைத் திருநெல் வேலியில்
வந்தவன் கற்றொடும் வருத்தந் தீரநீர்
தந்தரு ளெனச்சொலுந் தமிழ்கற் றுய்ம்மினே.
(12)
முற்றிற்று.
32. உடுப்பைச் சுப்பிரமணியம்
(கருநாடகம்)
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
375. பன்னா கத்தினி
லாடுமோர்
பசிய மயிலின் மீதுவந்
தென்னா சைப்படி முடிக்கு நாளின்
றோவுண் டுகொலி யம்புவாய்
தென்னாட் டுக்கொரு தலைவனாத்
தேவேந் திரனைச் செயங்கொண்டா
யென்னார் தங்குல காலனே
யுடும்பைச் சுப்பிர மணியனே.
(1)
376. மையார் கட்சிறு
மாதரார்
மயலி னான்மிக வருந்தினேன்
கையா ரத்திரு நீறுநீ
கருதி நல்கலெக் காலமோ
பொய்யா மொழியைப் புரந்துளாய்
பொருவி லாமுழுப் புலவனே
யொய்யா ரச்சிகி மாவலர்
வுடும்பைச் சுப்பிர மணியனே.
(2)
377. வாழூ ரெங்குள
தென்றுபோய்
வருந்திப் பற்பலர் மனையினுந்
தாழூ றத்தனை யுஞ்சொலித்
தவித்திடா தருடரு வையோ
காழூர் வேங்கை யதாகியுங்
கரிய மறத்திமுன் னின்றா
யூழூ ழென்பவ ருணரொணா
யுடும்பைச் சுப்பிர மணியனே.
(3)
378. ஆங்கா ரத்துயர்
தீயரா
லடிய னேன்படும் பாடெலா
நீங்கார வத்தையென் றருள்வையோ
நின்னா ளெனுஞ்சொற் பிழைகொலோ
கோங்கார மென்முலைக் குறத்திபாற்
குலவுங் கோமள வேடுவா
வோங்கா ரத்தினின் றாடுவா
யுடும்பைச் சுப்பிர மணியனே.
(4)
379. தீயார் தங்கடை
வாயிலிற்
றினமுஞ் சென்றுசென் றிரக்குமென்
வாயாற் சொல்லிய துதியெலாம்
வம்பர் மென்றிகழ்ந் தனைகொலோ
காயாமென் மலரனை யளபாற்
கைம்மா விரந்த காமுகா
வோயா மற்கொடை நல்குவா
யுடும்பைச் சுப்பிர மணியனே.
(5)
380. பன்னுந் தமிழ்வித்
தகரெலாம்
பரவு நின்புகழ் பாடுவேன்
மன்னுங் கருங்கற் கிணற்றினால்
வருந்து கின்றதை மாற்றுவாய்
பொன்னும் புவியு மாதரும்
பொருவில் செல்வமென் றுருகிடா
ருன்னுங் கரும முடிப்பவர்
வுடும்பைச் சுப்பிர மணியனே.
(6)
381. புலிய னென்றுள
நாயின்மேற்
பொல்லேன் வைத்துள் கருணைபோன்
மலியு மன்பினென் மீதுநீ
வைத்தா லித்துயர் வருங்கொலோ
பலியுண் பார்தரு பாலனே
பங்கேரு கனைப்பு டைத்தவா
வொலிகொள் சேவலொன் றெடுத்தவா
வுடும்பைச் சுப்பிர மணியனே.
(7)
382. காழி நகரிற்
புலவனோ
கவிஞ னொருவன் வருவதாற்
பூழி யன்சுர மனையதோர்
பொல்லாங் கொழியப் புரிவையோ
கோழி யங்கொடிக் கையனே
குன்று தோறுநின் றாடுவா
யூழி யனந்தங் கடந்தவர்
வுடும்பைச் சுப்பிர மணியனே.
(8)
383. தவள வாணியை
யனையசீர்த்
தமிழ்வல் லாரொடு கூடியே
புவனி மீதுவப் பெய்தநீ
புகன்ற நன்மையென் றுதவுவாய்
கவள வெண்களி றேறுவான்
கன்னி யுவகை கருதியே
யுவரி மாவறத் தடிந்தவர்
வுடும்பைச் சுப்பிர மணியனே.
(9)
384. பிறங்கு மெய்ப்புகழ்ப்
பெருமைபோய்ப்
பிழைபட் டின்னலுற் றன்னையோ
மறங்கொள் கற்கிணற் றிடைநன்னீர்
வருவித் தின்புற வைத்திடாய்
கறங்குநெஞ் சினரறி யொணாக
காமத கன்ன புதல்வனே
யுறங்கு மாலய னனையாசூ
ழுடும்பைச் சுப்பிர மணியானே.
(10)
385. நித்த நின்றிரு
வுருவமே
நெஞ்சி னுட்கொளு நெறிவிடாப்
பத்தர் தம்மொடு கூடிவாழ்
பரிசு நல்கலும் பாரமோ
வத்த னும்பணி பாதனே
யறுமு கக்கும ரேசனே
யுத்த மக்கு நாதனே
யுடும்பைச் சுப்பிர மணியனே.
(11)
386. ஒல்லை யாண்டரு
டெய்வமா
முடும்பைச் சுப்பிர மணியனை
நெல்லை மாநகர்த் தவமெனா
நிலவு முத்தமிழ்ப் புலவனோர்
கல்லை வென்றுநன் னீர்கொள்வான்
கழறு மின்னிசைக் கவிகளாஞ்
சொல்லை நன்குணர் வாரெலாந்
துரிய நிட்டையிற் றோய்வரே.
(12)
முற்றிற்று.
33. கதிர்காமம் (புதுச்சேரி)
(கலித்துறை)
387. பலியுண்டு
தவமேசெய் துயர்சீல ரொடுநன்கு பழகாமையா
னலிகின்ற வெனைநின்க ணருள்வாரி யதனூடு நனைவித்திடாய்
கலியொஞ்ச வுலகொரு நனிபேச முனிவோர்கள் களிகூர்மாண்
மலிதுங்க விளையாடல் பலமேவு கதிர்காம வடிவேலனே.
(1)
388. மானோடு நிகருகண்
மடவாரை நனிநாடு மயலுற்றுமிங்
கியானோர்த லுனதன்பர் புகழன்றி வேறில்லை யிதுவுண்மைகாண்
டேனோவெனத் தக்கதமிழ் பாடுவார் பின்பு திரியுங்குகா
வானோரும் வழிபாடு செயநீடு கதிர்காம வடிவேலனே.
(2)
389. கன்மாயை யினைவென்ற
தவயோகி யரைநிந்தை கழறும்பொலேன்
மன்மானு மொருகல்லி லருளன்ன புனலென்று வருவிப்பையோ
புன்மானுண் மகிழ்கூர மழவேட னுருவங்கொள் புகழாளனே
வனமாத ருள்நாண மயிலாடு கதிர்காம வேடிவேலனே.
(3)
390. பிறையார்
சடைத்தம் பிரானுக் களித்திட்ட பேறானதைத்
தறையாதி யுலகெங்கு மறியக்கொ டுத்தென்ற னைக்கைக்கொளாய்
குறையாது மின்றிச்சி றக்குங்கு காவெண்ணில் கோலத்தனே
மறையாக மத்தோதை மலிகின்ற கதிர்காம வடிவேலனே.
(4)
391. கொஞ்சத் தொழிற்றீ
நெறித்துட் டாதுசிந்தை குலைவுற்றுமிக்
கஞ்சப் பொருந்தீர் முதவாம லெனையிங் கழுங்கச்செயேல்
கஞ்சத் தனைக்குட்டி யந்நாள் விலங்கிட்ட கருணாகரா
வஞ்சத் தினர்க்குள்ளி ரங்காத கதிர்காம வடிவேலனே.
(5)
392. ஏணிக்கு ளானின்ன
லேயின்ப மாமென்றியம் பும்பொல்லார்
நாணிக் கவிழ்ந்தெய்த் திடக்காணும் வாழ்வென்று நானெய்துவேன்
வேணிக் கடுக்கைப் பிரானன்று தரவந்து விளையாடினாய்
மாணிக்க நதியொன்று திகழ்கின்ற கதிர்காம வடிவேலனே.
(6)
393. பந்தாடி யம்மானை
யாடிக் கழங்காடு பருவத்தராற்
சிந்தாகு லத்திற்படுந் துன்பநோ யென்று தீருங்கொலோ
கொந்தார் மலர்ச்செச்சை யந்தோள்க ளீராறு கொள்ளுங்குகா
வந்தா ருவக்கச் செயுஞ்சீர்கொள் கதிர்காம வடிவேலனே.
(7)
394. தழைகொண்ட
கைச்சாரணர்க் கேமனென வந்த தமிழ்நாவலன்
பிழையின்றி நுவல்செஞ்சொ லெனவென்புன்
மொழிமேன்மை பெறுநாளெதோ
குழைதுன்று செவியா றிரண்டெய்து மலையன்ன குமரப்பனே
மழைமிஞ்சு சாரற்சிறப் பொன்று கதிர்காம வடிவேலனே.
(8)
395. சேவற் கொடிக்கே
செயஞ்சொல்லு மென்னைச் சிரிக்கின்றவூர்
நாவச்ச மெய்தக் கரும்பாறை யுட்கங்கை நல்காய்கொலோ
தேவர்க் கிடுக்கண் செயுந்தீமை முற்றிச் செருக்கொன்றுபொய்
மாவட்ட விரத்தனே யெங்கள் கதிர்காம வடிவேலனே.
(9)
396. உலகோர்க ளெல்லக்
கரும்பாறை யிடைகெல்லு மொருகூபநன்
னலமேவு மாறங்கதற் கானநீ ரென்று நனிநல்குவாய்
பலவீரர் மெச்சும்புகழ்ச் சேவகர் திண்கைப் பனிரண்டுளாய்
மலர்வேதன் மூவர்பணி கொண்ட கதிர்காம வடிவேலனே.
(10)
397. ஒருவாத மெய்யன்பு
கொண்டோர்க ளனைவர்க்கு முயர்ஞானசற்
குருவாகி வருமுன்னை நம்பித் துதித்துங் குலைந்தேனையோ
வருவாத ருருவாதர் பொதுவாய் திரையே ழவிர்ந்திட்டதான்
மருவார் பொழிற்றில்லை நிகரான கதிர்காம வடிவேலனே.
(11)
398. மதவேழ மிசையேறி
வருகின்ற கதிர்காம வடிவேலனை
நிதநாடி மகிழ்கூரு நெல்வேலி யூரன் பணிவம்பொரும்
பதசார மதுகொண்டு கற்கூப நீரெய்தல் பாலித்திடேன்
றிதமாக நுவல்பாட லிவைகற்றி டீரின்ப மெளிதெய்துமே.
(12)
முற்றிற்று.
34. கந்தமாதனம் (இமயமலை)
(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
399. ஞான மில்லவர்
தம்மொடு கூடியே
நானி லத்தின லியுமிப் பாவியை
யேன மன்னமு னுய்ந்துள வூரில்
வாழ்வெய்து பைங்கிளி யென்றவ னியாவனோ
போன கந்தரு வான்மரு காவொரு
பூனை யுய்யப்பு ரிந்தருள் புண்ணியா
கான வேட்டுவக் கன்னிம ணாளனே
கந்த மாதனத் துக்கதிர்
வேலனே.
(1)
400. செங்கை முத்திரை
யுங்குற வள்ளியுந்
தெய்வ மின்னுந்தி
கழ்தரத் தோன்றிநின்
றங்கை யிற்கனி போலநு பூதி
தந்தார்வ மெய்தவ ருள்வதெக் காலமோ
மங்கை பார்ப்பதி யார்முலைப் பாலுணும்
வாய்க ளாறுடை யாய்மயில்
வாகனா
கங்கை யூடுருக் கொண்டுயர் கந்தனே
கந்த மாதனத் துக்கதிர்
வேலனே.
(2)
401. பூம னார்கை
யெழுதிய பாழ்விதி
போக்கி நல்லருட் போதமுண் டாக்கிநின்
மாம னாமெனச் சொல்லிய வாறுயர்
வாழ்வ ளிக்கம னமிரங்
காததே
னேம னார்க்கெம னார்தரும் பாலனே
யிந்தி ரன்மகட்
கேற்றசிங் காரனே
காம னாணுங்க வின்கும ரேசனை
கந்த மாதனத் துக்கதிர்
வேலனே.
(3)
402. முட்செறித்
தவனம் போலும் பன்மனை
முற்றில வாய்பெரு
மூச்செறிந் தேற்கைபோ
யுட்செழிப் பொடுவாழ் நதிக லோரை
வென்றோகை ஞானமுறு நாளொன் றுள்ளதோ
புட்செலுத் தும்புல வருண மேலவர்
பொய்யர் போற்றரும் புண்ணிய மூர்த்தியே
கட்செவிப் புயத்த ராதரு பாலகர்
கந்த மாதனத் துக்கதிர்
வேலனே.
(4)
403. பாடல் பற்பல
வாறுசொற் றேத்திநின்
பாத மர்ந்துணைப்
பங்கய நாடியு
நாட வர்க்குள மாயைவெந் நோய்கெடு
ஞான வாரிந டுச்சோப்
பெற்றிலே
னேட லாந்தக டம்பாரத் தையனே
யெண்ணி ரண்டுருக்
கொண்டொளி ரேகனே
காட டைந்தொரு கன்னியை வேட்டவர்
கந்த மாதனத் துக்கதிர்
வேலனே.
(5)
404. சற்ப லோகந
டுங்குறக் கூவுமோர்
சந்த மாமயின் மேற்றனித்
தென்னெதிர்
நிற்ப தாகநி னைக்குமிப் பாவனை
நிந்தை கோடிநி றைப்பதற்
கென்செய்வேன்
பற்ப லாயிரம் வெற்புடைப் பண்ணவர்
பன்னி ரண்டுப ணைத்தோள்
பரபசுங்
கற்ப கப்பொழி லார்தொழுந் தெய்வமே
கந்த மாதனத் துக்கதிர்
வேலனே.
(6)
405. எண்வ கைப்படு
சித்தியுஞ் செய்துநல்
லேற்ற மெய்தியி
னிப்பிற வாதுநின்
விண்வ யிற்புக நாடுகின் றேனைக்கை
விட்டிடேல் விடில்வேறெ
வர்கைக் கொள்வார்
பண்வ ழாமறை யோனழக் குட்டிய
பாலகர் நுதற்பா
லுறுமா றலாக
கண்வ ழிந்தக ருணையங் காங்கெயர்
கந்த மாதனத் துக்கதிர்
வேலனே.
(7)
406. ஊழி கோடி
தவம்புரிந் தார்களுக்
கோது முண்மை யுணர்த்தியு
மென்மனம்
பாழி லோர்கருங் கற்கிணற் றாற்றுயர்
பட்டி ளைத்திடப் பார்ப்பது நீதியோ
வாழி மேற்றுயில் வான்மரு காவெனை
யாண்டு கொண்டவ ருட்செழுங்
கொண்டலே
காழி மாநகர்ப் பாவல னானவர்
கந்த மாதனத் துக்கதிர்
வேலனே.
(8)
407. ஓர்கணத் தையுக
மாக்கும வன்றுய
ருற்றிளைத் தன்னுன்
னருட்பார் வையாற்
சீர்க வின்றவென் கற்கிணற் றிற்புன்ற
செல்வ மெய்துறச்
செய்திட வேண்டுமால்
வார்க லாபமயி லேனுஞ் சேவகர்
வள்ளி கைத்தினை மாநுகர் வாய்க்குகா
கார்க டற்கொடுஞ் சூர்கெடச் செற்றவர்
கந்த மாதனத் துக்கதிர்
வேலனே.
(9)
408. வஞ்ச னைக்கொடி
யோர்பகை மிஞ்சலால்
வாடி யேங்கிநின் வண்பத நம்பிய
நெஞ்ச னேனையிக் கல்லிடை நீர்கொள்
வானீ வருத்திட னீதியு மாகுமோ
வஞ்ச னக்கறைக் கண்டர்தம் பாலகர்
வாழி மாயனுக் கன்றரு
ளண்ணலே
கஞ்ச னோலிடக் குட்டிய கைக்குகா
கந்த மாதனத் துக்கதிர் வேலனே.
(10)
409. ஆர ணத்தினி
லாகமத் திற்சொலு
மந்த ஞாயம றிந்திடச் செய்தநீ
பூர ணப்படு மெய்யநு பூதியிற்
புக்கு வாழப் புரிந்திலை யையகோ
நார ணற்கொரு நன்மரு காவிரு
நங்கை மார்புணர்
ஞானவி னோதனே
கார ணக்குரு வாவரு முன்னவர்
கந்த மாதனத் துக்கதிர்
வேலனே.
(11)
410. காசின மெய்ப்புக
ழோடரு ணீடிய
கந்த மாதனத் துக்கதிர்
வேலனைத்
தேசிலங் கெழிலார் திருநெல் லையூர்ச்
செல்வி நல்குந்
திருப்புகழ்ப் பாவலன்
மாசில் வண்புனர் கல்லினுட் பெற்றதால்
வம்பரி நிந்தை மறைந்திடக்
கண்டுய்வான்
பேசிடுந் தமிழ்க்கற் பவரி யாவரும்
பேற னந்தம் பெறுந்தவத்
தோர்களே.
(12)
முற்றிற்று.
35. பலமலை
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
411. என்னி டந்தனித்
துநீவந்
தியம்பிய மொழிக ளெல்லா
மன்னிய ரறியா ரேனு
மசத்திய மாக லாமோ
சென்னி யோரா றுள்ளானே
சேவ லங்கொடிச் செவ்வேளே
பன்னிரு தடந்தோ ளையா
பலமலைக் காவ லானே.
(1)
412. நீவலி துரைக்கு
மாற்ற
நினைத்த வண்முயலு மென்னை
யாவரு மிகழ்ந்தா லந்த
விளப்ப முன்றனைச் சேராதோ
தேவர் தஞ்சிறை மீட்டோனே
தினைப்புனக் குறத்தி கேள்வா
பாவலர்க் கெளிய வேலா
பலமலைக் காவ லானே.
(2)
413. கெண்டையங்
கண்ணார் பேசுங்
கிறிபடு மெனைநின் றன்கைத்
தொண்டைவாய்க் கிளிதா னென்னத்
தொடுத்துரைத் தவன்மற் றாரோ
கண்டையுந் தண்டும் வேலுங்
கவின்றரு காத்தம் மானே
பண்டைவல் வினைநோய் தீர்ப்பாய்
பலமலைக் காவ லானே.
(3)
414. கீரன்முன்
சிறைப்பட் டாற்போற்
கினற்றின தபிமா
னத்தாற்
கோரவன் றுயர முற்றேன்
குளிர்புன லளித்தின் றாள்வாய்
வாரணக் கொடிக்கை யானே
வயங்கெழு வடிவே லப்பா
பாரதி வணங்கும் பாதா
பலமலைக் காவ லானே.
(4)
415. அத்தனை யகவற்
கூறு
மவற்கருள் புரிந்த நீதர்
னித்தனை பாடற் பாடு
மெனக்கினி திரங்கா
தேனோ
முத்தணி நகைத்தெய் வானை
முயங்கிய முருக
வேளே
பத்தர்சொல் வினவுங் காதா
பலமலைக் காவ லானே.
(5)
416. ஊனுடற் கழுகுக்
கூட்ட
லுவகை யாமளவுந்
துன்புற்
றியானுயிர் வகிக்கச் செய்தா
யிரக்கமோர் சிறிது
மின்றோ
மானுறழ் கருங்கண் வேட
மகள்புணர் மருமத்
தோனே
பானுவு மதியும் போல்வாய்
பலமலைக் காவ லானே.
(6)
417. அந்தரத் தமரா
தாமு
மறியநின் னடிமை
யாவான்
வந்தவென் றனைக்கற் கூபம்
வகுக்கவிட் டிருக்க
லாமோ
செந்தகைக் குமர வேளே
செழுங்கடம் பணிந்த
மார்பா
பைந்தமிழ்ப் புலவர் கோவே
பலமலைக் காவ லானே.
(7)
418. கொச்சையூர்ப்
புலவன் போலுங்
குழகனீண் டொருவன் வந்தென்
னிச்சைதீர்த் தருளு நன்னா
ளிலங்கிடச் செயமாட்
டாயோ
செச்சையந் தொடையல் சூடுந்
திருமுடி யாறுள்
ளோனே
பச்சைமான் மகளிர் பாகா
பலமலைக் காவ லானே.
(8)
419. கரவின்மெஞ்
ஞான னந்தக்
கடல்விழைந் தடுத்துள்
ளேனை
யுரமிகுங் கருங்கற் கீன்றிங்
குழல்விட் டிருந்தா
யந்தோ
வரவமென் படநேலர் குலரி
வைய ரிருவர் பாகா
பரவையிற் சூரமர் வென்றாய்
பலமலைக் காவ லானே.
(9)
420. நச்சிய வாறென்
கூப
நடுப்புண லூற்றொன்
றெய்தச்
சிச்சியென் றிகழ்ந்தார் நாணிச்
சிரங்குனிந் திடச்செய்
யாயோ
முச்சிலங் குறப்பெண் மோகா
மூவரும் பரவு மொய்ம்பா
பச்சிலைத் திருநீ றுள்ளாய்
பலமலைக் காவ லானே.
(10)
421. நின்னு ளத்தருட்
பேராழி
நிறைவுள தெனச்சொற்
றுள்ளேன்
றன்னுரங் குலையு மின்னற்
றணந்திலாய் சரிதான்
கொல்லோ
மன்னுசற் குரவர் கோவை
மயிற்பரி யுக்கும்
வாழ்வே
பன்னுநான் மறைக ளார்க்கும்
பலமலைக் காவ லானே.
(11)
422. பகரரும் வளங்கள்
காட்டும்
பலமலைக் காவ லானை
நிகரறும் பெருமை தோய்ந்த
நெல்லையூர்ப் புலவ
னன்பர்
லகழ்தரு கிணற்றி னன்னீ
ரமைதரத் துதித்த
பாடற்
புகழ்நல மெனக்கைக் கொள்வார்
புண்ணியப் புனிதர்
தாமே.
(12)
முற்றிற்று.
36. கவுமாரர் சொல்லிய பதி
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
423. மயின்மீது
வள்ளயு மகவானூர்
மடமாது மையல்கொ டருகோவா
வொயிலார் வொள்ளிய வடிவேலோ
டுனைநாளு முள்ளுத லுணராயோ
வெளியாணு நல்லொளி மிகைதோய்வாய்
வினையோட வெள்ளிய பொடியீவாய்
கயிலாய முன்னவர் தருபாலா
கவுமாரர் சொல்லிய பதியானே.
(1)
424. பெருகூழின்
வல்லப மதனாலே
பிழைகூட வுள்வரு கனவானா
னொருகூபம் வௌவிய வினைதீர
மாறுமைபால் தொவ்விய
புனலீவாய்
புருகூதனை துயர கெடமேனாள்
பொரும்வீர மல்கிய
புயவீரா
கருகூல நல்கிடு முருகோனே
கவுமாரர் சொல்லிய
பதியானே.
(2)
425. புவியோரு
மையரு மழுமாறே
புலையாளர் கைவலி
மிகலோமோ
செவிரூப மில்லவ ரரசூரோர்
சிகியேறி யொல்லையில் வருவாயே
யவிர்சூல வல்லவர் தருபாலா
வடியார்கள் வையினு
மகிழ்வோனே
கவிகோடி செய்பவர் துணையாவாய்
கவுமாரர் சொல்லிய
பதியானே.
(3)
426. எளியோர்க
ணைத்தொழின் முயறீயோ
ரினிதாளும் வையக
மளிகூர்வா
னொளிமீறு மெஃகுடன் மயின்மீதே
யொருசேவை நல்கிட
நினைவாயே
கிளியேறி வைகிய புயவீரா
கிளர்நீல வள்ளிமின்
மணவாளா
களிறூரு மைவண்ண மகிழ்சீலா
கவுமாரர் சொல்லிய
பதியானே.
(4)
427. மலிதீமை சொல்பவர்
பகையாலே
வளர்பாறை கெல்லிய
துயராலே
மெலியாது னல்லருள் பெறுமாறோர்
விளையாடல் செய்யமுன்
வருவாயே
பலிதேறும் வள்ளல்க ணருள்பாலா
கோடிக லவரை யுடையோனே
கலிநாண வெல்சில ருறவாவாய்
கவுமாரர் சொல்லிய
பதியானே.
(5)
428. அதியாசை வெள்ளம
திடைவீழ
வேனடர்கோர் வெவ்வினை வலியாலே
சதிகோடி யெய்தியு மெலிவேனோ
தமிழ்சூடி மெய்யரு
டருவாயே
யெதிராடு பஃறலை யரிமாநே
ரிடியேறு மொல்கொலி
தரும்வாயாய்
கதிசேர வௌவுந ருணர்தேவா
கவுமாரர் சொல்லிய
பதியானே.
(6)
429. இருவேளை யுள்ளலு
முணராயோ
வினிமேலு மிவ்வண
மறையாதே
பொருவேள்கை யொல்லிய மலராலே
புலரா மலையமி லருடாராய்
மருவேற் மல்கிய குரவாரா
வடிநீடு பலபடை புனைதோளா
கருவேடர் மல்வெலு மிளையோனே
கவுமாரர் சொல்லிய
பதியானே.
(7)
430. தழையேறு கையம
ணரைமேனா
டமிழ்பாடி வெல்பவ
னதுசீரே
விழைவேனை யெவ்வழி விடுவாயோ
வினைநாச நல்குனை
மறவேனான்
மழைநாடு மொள்ளிய மயில்வீரா
மறமாது வௌவிய மணிமார்பா
கழைமார னொல்கிய வடிவாளா
கவுமாரர் சொல்லிய
பதியானே.
(8)
431. விடனார்கை
வெள்ளிலை யதனூடே
விதிர்வேலும் வைகிட
விடுநீயா
னிடர்கோடி யெய்தியு மருளார்நீ
ரிலர்போலு மிவ்வித
மறியேனே
சுடர்மேனி யுள்ளசண் முகநாதா
சுரலோக முயவுற வெனமேனாள்
கடன்மாவை யொல்லையின் முனிவோனே
கவுமாரர் சொல்லிய
பதியானே.
(9)
432. தவிசேறி வைகுநர்
பெருவாழ்வோர்
கரமாமென் மையலு
மறவாணீ
புவியூடு கல்லகழ் வினையேனோ
பொருமாறு செய்தனை
புனலீவாய்
நவில்வேத வல்லவ னெடுமாலோ
னடராயன் வௌவிய சிறுபாதா
கவினாள ருள்ளுயர் குகவேளே
கவுமாரர் சொல்லிய
பதியானே.
(10)
433. மலைபாரி னுள்ளமிழ்
வதுதேறா
மடையேனை யவ்வயின்
கழவானே
விலையோவுன் மெய்யரு ளிதுதானோ
வினியேனு மெள்ளலி
லிசையீவாய்
புலையாள ருள்ளரு முருகோனே
புயனாண கல்குப னிருதோளா
கலைஞான வல்லவர் குருநாதா
கவுமாரர் சொல்லிய
பதியானே.
(11)
434. களமாரு மையின்ன
முதலாவாழ்
கவுமாரர் சொல்லிய
பதியான்மேல்
வளமேவு நெல்லையில் வருமோர்சேய்
மலைமீது கெல்லியக்
கிணறூடே
குளநாணு நல்லறன் மிகைதோய்சீர்
கொளுமேன்மை கைவர
நுவல்பாவே
சளமோவ வல்லதெ னுணர்வோரே
தவறாத மெய்யருள்
பெறுவாரே.
(12)
முற்றிற்று.
(நூற்பயன்)
435. உரியதலம்
மாறேயென் றொவ்வொருபாட்
டுரைத்தாற் குமுறு கண்டீர்ப்
பெரியமலை யுடனொருபே யுடற்பிளந்த
வடிவேலான் பேணிக் கொள்ளு
மரியபடை வீடுமுப்பத் தாறெனவொவ்
வோர்பதிக மறையு மென்றன்
கரியகற்கூ பத்தினன்னீர் காட்டியினி
தாளானோ கலைவல் லோரே.
வேலும் மயிலுந் துணை. தெய்வமே துணை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக