வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
திருப்புகலூர்ச்
சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம்
காப்பு
(நேரிசை
வெண்பா)
செந்தமிழா லீசனைத்தன்
சேயிழைபாற் றூதனுப்புஞ்
சுந்தரனை நாடியன்பாற்
சொல்கின்ற – விந்தப்
பதிகத்தின் காப்போர்
பவளக் களிறும்
விதிகதறக் குட்டினனு
மே.
பதிகம்
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
எவ்விதத்தி லருள்பெறலா
மெனக்கருதித்
தளர்வேனீ
ரிசைத்த வாற்றாற்
செவ்வியதென் புகலூரை
மிகத்துதித்தேன்
பொருட்பிணக்குந்
தீர வில்லை
யிவ்விதநீ ரறியீரோ
வுடலுடன்வெண்
கயிலையில்
வீற்றிருக் கின்றீரே
நௌவிநிகர் விழிப்பாவை
நலநுகர்சுந்
தரமூர்த்தி
நாய னாரே.
(1)
எல்லதெனத் திகழ்தங்கச்
செங்கலன்று
புகலூரா
னீந்தா னீரே
னல்லவர்போ லெம்மையெல்லா
மவ்வூர்க்கே
கவிதொடுக்க
நவின்றீ ரானால்
வல்லபுல வோர்கயெய்த
மொப்பவில்லை
யானொருவன்
மதித்தேன் கண்டீர்
நல்லருட்சங் கிலியாரை
மணம்புரிசுந்
தரமூர்த்தி
நாய னாரே.
(2)
செந்தாமக் கடுக்கையினார்
திருப்புகலூர்க்
கைந்தெழுத்துஞ்
சிரத்திற் றோய
வைந்தார்வண் டமிழ்க்கவியாற்
றொடுத்துள்ளேன்
விழைந்தபடி
யளிகூ ராம
னொந்தாலவ் விளப்பமவ்வூ
ருடையார்க்கோ
வேவினார்
நுமக்குத் தானோ
நந்தரத்தி ருத்தொண்டத்
தொகைதருசுந்
தரமூர்த்தி
நாய னாரே.
(3)
என்னதவஞ் செய்தீரோ
வுமக்காநும்
மனைவியர்க்கா
வீசன் பட்ட
வின்னலிலா யிரத்தொன்று
மெமக்காகப்
பொருந்துகிலா னிருப்புத் தண்டாற்
றன்னதுவா கனத்தினஞ்சாந்
துயர்தீர்க்கத்
தகுந்திறலுந் தருகின் றில்லா
னன்னயச்செந் தமிழ்மாரி
பொழிதருசுந்
தரமூர்த்தி நாய னாரே.
(4)
இலக்கணக்கட் டிலக்கியச்சீர்
மொழிச்சுவையா
தியகுறித்தே
யீச னந்நாள்
கலக்கணக்காப் பொன்னுமக்குக்
கொடுத்திருந்தா
லின்றெனது கவிக்கு மீவான்
றுலக்கமுறும் பணிச்சிறப்பு
முடைச்சிறப்பும்
பார்த்திடாந் துணிந்தெனக் கண்டீர்
நலக்கழனி நாவலூர்த்
தவம்பொருசுந்
தரமூர்த்தி நாய னாரே,
(5)
ஈசனைப்போற் றிடும்விதியென்
றலையில்வரைந்
திட்டவிதி யெழிலா ரன்னோ
நேசமுகந் தருகுலத்தி
லுடலளித்தா
னிலையெனைப்போ னீரு மூரர்
ரேசவொரு கோவணத்தோ
டிரந்தலைந்தாற்
கொடுப்பானென் றெண்ணி லேன்கா
ணாசமிலா ரக்கயிலை
மிசைவளர்சுந்
தரமூர்த்தி
நாய னாரே.
(6)
வடமொழியுந் தென்மொழியுந்
தருமுடுக்கை
யொருகரத்தில் வைத்த வீசன்
படர்முருகன் பூண்டியிலோர்
வரிநீட்டி
நீரிகழ்ந்த பதிகத் திற்கும்
புடவையும்பொற் பணியுமிட்டா
னின்றெனது
கவிகளுக்கேன் பொருளீ கில்லா
னடலையொரு சுற்றுமிலார்
புகழ்தருசுந்
தரமூர்த்தி நாய னாரே.
(7)
வேடனுருக் கொளுநாளில்
விறகொடுசென்
னியிலடித்த விசையன் வாழப்
பீடளத்தற் கரியகணை
ளயித்தபிரான்
பலவாறு பிறங்கி யின்சொற்
பாடன்மட்டும் புனைகின்றான்
பரிசளிக்கின்
றில்லானிப் பாவ மென்னோ
நாடறிய முதலையுண்ட
சேய்தருசுந்
தரமூர்த்தி நாய னாரே.
(8)
தந்திமுகப் பெருமானைச்
சண்முகனைச்
சிவையையவர்
தம்மை யேசிச்
செந்திருவை நேர்பாவை
விருப்பமுற்றுந்
தரப்பெற்றீர் சிவன்பர னாயேன்
புந்தியறி யளவில்வர
தமக்கெல்லாந்
தமிழ்ப்பனுவல் புகன்று நொந்தே
நந்திமுத லோர்மதிப்பத்
திகழ்தருசுந்
தரமூர்த்தி நாய னாரே.
(9)
வாதவூர டிக்கண்முதன்
மூவர்களுஞ்
சிவனுருவின்
மறைந்த தானீர்
போதநலம் பெற்றீரென்றெண்
ணுகின்றேனி
யானடைதற் பொறுப்பின் றாயி
னேதமுறா தானினங்காத்
திடற்கொருக்கால்
வந்தேகு மிமையா தாரு
நாதர்களுஞ் சித்தர்களு
நவில்புகழ்ச்சுந்
தரமூர்த்தி நாய னாரே.
(10)
ஒருபதிகங் கொடுபுகலூர்ச்
சிவனாரூர்ச்
சுந்தரனுக் கொண்பொற் செய்கற்
றருவதுகொண் டவனுரைத்த
சொல்லைநம்பித்
திருநெல்லைத் தண்ட பாணி
யருமைமலி பிரபந்த
மைந்துரைத்து
மீகையெய்தா வநியா யத்தைத்
திருவுருவோ டுறுமவனைச்
சித்தித்துத்
துதிக்குமிவை தெளிந்துய் வீரே.
(11)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக