வியாழன், 24 செப்டம்பர், 2026

திருச்சிராப்பள்ளி உச்சிவிநாயகர் பதிகம்

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

திருச்சிராப்பள்ளி உச்சிவிநாயகர் பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

நச்சி வணங்கி நலமார் சிராமலையி

னுச்சி விநாயகனே யோதுகின்றேன் – பச்சிலையொன்

றிட்டார்க்கும் வீடருள்வா னீன்றகுணங் காட்டிலென்னை

நாட்டார்க்கும் வேண்டல்செய்வே னான்.

 

பதிகம்

(கொச்சகக் கலி)

செம்பதுமா தனையுந்தவளந் திகழ்திருவுரு வத்தினளுங்

கம்பலைதீர் தரவந்தெனைமே வொருகாலம் வகத்தருள்வாய்

கும்பல்படத் தினம்வந்து பலுண்டிகுவித்து முறைப்படியே

யும்பருடன றவர்பணிதரு சிரகிரியுச்சி விநாயகனே.

(1)

பத்தர்களாம் வரசித்தம வெவேதனைபட் டுழலாவணமே

நித்தமுநா டுமெனக்கருள் வாழ்வதனிச் சயமெனருளாய்

சத்தமதோ டதனுட்பொ ருளோர்தருசத் துவசீலர்களா

முத்தமர ரரும்வழுத்து சிராமலையுச்சி விநாயகனே.

(2)

திலகமுகத் திளமங்கையர் கொங்கைதிறந் தனையும்படியே

யலகின்முயற் சிசெயுஞ்சிறியோ ருடனழியவு மென்னைவிடேல்

பலகலைகற் றவராரு முதற்பணிபவ ளமதாசலமே

யுலகினர்முற் றுமுணர்ந்துசொல் சிரகிரியுச்சி விநாயகனே.

(3)

பேறுவிரும் பியவாறுற வென்றுபெருந் தளர்வுற்றுளநா

னீறுடன்முற்று நிதம்புனையுந் தவநிரப்பல மாகவிடே

வாறுபுனைந் தசடாடவியா தியவந்த னெனக்கொடுளா

யூறுதவிர்ந் தவர்மேவு சிராமலையுச்சி விநாயகனே.

(4)

கரகமதனில் வருகுறுமுனி யாதியர்கதை மிகமொழிவோர்கள்

பரகதிவேண்டி வருந்துறுமென் னிசைபகரவு மருள்கூர்வாய்

குரகதமென் றொருமூடிக மேறியகுஞ்சர மாமுகவா

வுரகமதணி வயிறுடையவ சிரகிரியுச்சி விநாயகனே.

(5)

தேங்காய்முப் பழமவல யறாதியதிர ளெனமுன்னிட்டிட

டாங்காலந் தொறுமுனைவழி படுநலமதுவு மெய்திலனந்தோ

கோங்காரமென் முலைவல்லவைதோள் புணர்கொண்க னெனிற்குளிரவர்

யோங்காரத் துரவான சிராமலையுச்சி விநாயகனே.

(6)

அலமரலே தொழிலாநிக ழெனமனமாம் வெளியிற்றனீநீ

யிலகுபுசொல் லியசொற்களைநம் புமெனக்கரு ளரதொழியேல்

புலவாதமென் பணியுஞ்சிவ னார்செய்புரா தனமாதவமே

யுலவரிதாம் வளமருவிய சிரகிரியுச்சி விநாயகனே.

(7)

பொன்னியுடன் பொருனைப்புனலுந் தருபுண்ணி யமெண்ணிலாயோ

லிந்நிலமீது வருந்துமெனக் கருளீடு தவற்கிசைவாய்

கன்னியர்மூ வரகளிப்ப மணந்தகடக் களிறேகளிமிக

குன்னினரின் னலொழித்த சிராமலையுச்சி விநாயகனே.

(8)

பாகைநிகர்த்த கவிப்புலவோர் பலர்படியி னினடியாராய்

வாகைபொறுத் தனரென்ற சொலென்றனைவரட் டலுணர்ந்தருள்வாய்

மாகைமிக் ககொள்குகன் பணிகொண்டுமணம் புரிவித்ததனா

லோகைப்படைத் துயர்வாய்வளர் சிரகிரியுச்சி விநாயகனே.

(9)

தெள்ளியலௌ வைமுன்வெள்ளி மலைச்சிவசேவை செயச்செயுநீ

யுள்ளியவா றுபொன்வெற்றிலொ ரதுண்டெனது றொழியத்தருவாய்

கள்ளியல்கொன்றை யொடர்த்தியணிந் தவிர்கண்ணு தலில்வாரணமே

யொள்ளியசீர் பலகொண்ட சிராமலையுச்சி விநாயகனே.

(10)

பூதரமொன் றிலொர்காதை வரைந்தபுரா தனனைப்புலவர்

ரோதநெடுங் கடனாண மதம்பொழியுச்சி விநாயகனைச்

சீதமலிந்த சிராமலைவா யொர்திருப்பு கழோனுவல்பாட

டேதமிலா தனவென்றுகொள் வரார்துயரின்றி யுவப்பவரே.

(11)

முற்றிற்று.

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக