வியாழன், 24 செப்டம்பர், 2026

திருப்புகலூர்த் திருமேனி வெளுப்பு

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

திருப்புகலூர்த் திருமேனி வெளுப்பு

காப்பு

(நேரிசை வெண்பா)

மல்லன் மலிபுகலூர் வாழ்சிவனுக் காரூரன்

சொல்லதனை நம்பித் துணிந்தர – னல்லதிரு

மேனி வெளுப்பு விளம்புவேன் வேண்டுதுணை

பானிறக்கொம் பானை பதம்.

 

திருமேனி வெளுப்பு

(கட்டளைக் கலித்துறை)

தெண்ணீ ரணிந்த சடையாயென் றேத்திநற் சீரெழுத்தைந்

துண்ணீ டநாடுநர் சிந்தைபொய் யாம்புக லூர்ச்சிவனே

பெண்ணிலி காணத் தினமாடி யோபெரும் பித்தமுற்றோ

வெண்ணீ றுதோய்ந்தி லோதிதிரு மேனி வெளுத்ததுவே.

(1)

எள்வினைக் கஞ்சித் துதிப்பாற் மகிழ்வுற வெண்டிருவு

முள்வினை நீக்கமு நல்கவல் லாய்புக லூர்ச்சிவனே

கள்விடுஞ் சொற்பகர் மோகி னியைப்பல காற்புணர்ந்தோ

வெள்விடை மீதுரைந் தோதிரு மேனி வெளுத்ததுவே.

(2)

பொதுநாட்டந் தோய்ந்து தினமைந் தெழுத்தும் புகலுமன்

ரதுவேட்கை நல்கும் புகலூர்ப் பரவெரி யங்கியொப்பாய்

புதுவேத் திரத்தடி வில்லடி தாங்கிப் பொறுத்ததிலோ

விதுவூற்று நல்லமு தாலோநின் மேனி வெளுத்ததுவே.

(3)

கள்ளிற் சிறந்த தமிழாற் றுதித்துக் கருத்தினித்த

முள்ளிக்கொள் வார்க்கெளி யாய்புக லூரி லுறையுமெந்தாய்

வள்ளிக் குறத்தியைச் சேய்போய் வணங்கி யவர்றெண்ணியோ

வெள்ளிக் கிரியிலுற் றோதிரு மேனி வெளுத்ததுவே.

(4)

நாட்டுமெய் யன்பர்க் கெளியா னெனைக்கை யெழுத்துமந்நாள்

போட்டுவிட் டாய்புக லூர்ச்சிவ னேயுள்ள பொன்னையெல்லாம்

பாட்டுரைப் பார்க்குக் கொடுத்துவிட் டுண்ணும் பலிக்கலைந்தோ

வேட்டுவன் கான்மிதித் தோதிரு மேனி வெளுத்ததுவே.

(5)

உள்ளா துணரு முணர்வோர்க்கு நாடோறு முன்னுநர்க்கு

மெள்ளா தவர்வாழ் வளிப்பாய் புகலூருக் கிறையவனே

புள்ளாகி வெண்ணிறச் சிங்கத்தைக் கொன்று புசித்ததிலோ

வெள்ளானைப் பூசைகொண் டோதிரு மேனி வெளுத்ததுவே.

(6)

அண்டரு மாதவர் தாமுமி ரப்ப வரியதமிழ்த்

தொண்டரைந் தடிப்புக லூர்நின்றார் பண்டு சுந்தரன்சேர்

கண்டனன் சொல்லியா பாற்றூ தெனப்பல கானடந்தோ

வெண்டளைச் சோறுதின் றோதிரு மேனி வெளுத்ததுவே.

(7)

மறமுற்ற நெஞ்சின ரானாலுந் தன்னை வழுத்திலவர்

பிறவித் துயரொழி யாய்புக லூர்வளர் பிஞ்ஞகனே

யறமற்ற தக்கன்றன் வேள்வியிற் போர்செய்த லுத்ததிலோ

விறகுச் சுமைசுமந் தோதிரு மேனி வெளுத்ததுவே.

(8)

அடங்கொண்ட வஞ்சநக் காகாயஞ் சக்கரத் தாதியெந்தாய்

படந்துன்று பாம்பணி வாய்புக லூர்வளர் பண்ணவனே

கடஞ்சென்று பன்றிபின் வேடுவ னாநின்ற காரணத்தோ

விடந்தின்ற வூட்டினத் தாலோநின் மேனி வெளுத்ததுவே.

(9)

கீதம் பொலியக் குயில்கூவற் கேடெண்ணில் கேகயங்கள்

பாதம்பா தம்ப யிலபுக லூரிற் பரிந்தமர்ந்தாய்

தாய்தந்தை யில்லிவெளி யானபெண் பாதியன் றானெனப்பல்

வேதங் களுஞ்சொலக் கேட்டோநின் மேனி வெளுத்ததுவே.

(10)

ஆலையின் சாறனன் கொல்லார் நடிக்கு மணிப்புகலூர்க்

கோலைவன் றூத ரணுகா தளிக்கு மொருதெய்வம்

காலையி லுச்சியின் மாலையி லஞ்சக் கரம்பகர்வார்

வேலையெல் லாஞ்செய்வ தாலோநின் மேனி வெளுத்ததுவே.

(11)

மண்பார் முழுமையு முண்டுமிழ்ந் தான்றன் மலரக்கணிமுந்

தண்பாதத் தாமரை யாய்புக லூர்வளர் சங்கரனே

பெண்பாவு சிந்தையிடை யன்பன்னா றாமிட விக்கொட்டும்

வெண்பான மிக்ககுளித் தோதிரு மேனி வெளுத்ததுவே.

(12)

தெள்ளமிழ் தன்ன மிழச்சீர் மலியுந் திருப்புகலூர்

வள்ளலென் றேத்துநர்க் கெல்லா மெறிய மயேச்சுரனே

கள்ளமில் லார்தம்வெண் ணெஞ்சகந் தோறுங் கவின்றதிலோ

வெள்ளஞ் சுமந்தத னாலோநின் மேனி வெளுத்ததுவே.

(13)

மைப்படி யுங்களத் தெந்தாயென் றேத்துநல் வாயுடையார்க்

கெப்பய னுங்கொடுத் தேபுக லூரினி டத்துறைவாய்

கப்பணஞ் சூல்மழு மான்சுமந் தெய்த்தகார ணத்தோ

வெப்பம யானந்தொ றேற்றோநின் மேனி வெளுத்ததுவே.

(14)

தண்ணாருந் தென்புக லூர்த்திருக் கோயிலிற் றத்தைவெட்கும்

பண்ணார்மென் சொல்லி யுடனுறைவாய் வெந்த பலபிணத்து

னுண்ணா மகிழ்வுறும் பேய்களொ டாடி யுளஞ்சலித்தோ

விண்ணாடாக் காவழு தோதிரு மேனி வெளுத்ததுவே.

(15)

வலைப்பட்ட மானென மின்னார் மயக்கில் வருந்தெனக்கு

நிலைப்பட்ட வாழ்வருள் வான்புக லூரிடை நின்றவனே

தலைப்பட்ட பட்டினத் தெந்தைக்கும் பாணன் றனக்குமந்நாள்

விலைப்பட்ட வாறெண்ணி யோதிரு மேனி வெளுத்ததுவே.

(16)

ஐந்நீலப் பூந்தடஞ் சூழ்புக லூர்வம ணர்முன்னந்

தந்நீர்மை காத்துநின் றார்திரு நாவின் றமிழ்விழைந்து

முந்நீரிக் கற்றாங்கி முரண்வேழம் போக்கி மொகுமொகுத்த

வெந்நீற் றறைபுகுந் தோதிதிரு மேனி வெளுத்ததுவே.

(17)

மருவார் மதிளெந்த தாய்புக லூரிடை வண்டமிழாற்

பெருகார்வத் தாதிப் பிரானே தனக்கெழிற் பெண்கொடுத்த

வொருமா மன்கல்லுரு வானது மற்றவ னோங்குறுப்பின்

மிருகாங்கம் பெற்றறுங் கண்டோர்நின் மேனி வெளுத்ததுவே.

(18)

எள்ளென்ற மெய்யன்பு மில்லாத பாதக னென்றுதியுங்

கொள்ளெந்தை யேபுக லூரிடை நாளுங் குடியிருந்தாய்

கள்ளென்சொற் செந்திரு வாணிச்சி மின்க ணவர்தங்கள்

வெள்ளென் பணிந்தணிந் தோதிரு மேனி வெளுத்ததுவே.

(19)

பண்கொட்டுஞ் சொல்லியர் மோகாந்த கார்ப்ப டுகுழியென

மண்கொப்பத் தேற்கு மருள்புக லூர்நின்மைத் தன்செற்ற

திண்கொற்றக் கேழன் மருப்பணிந் தோமத்தஞ் சோத்ததிலோ

வெண்கொக் கிறகுதொட் டோதிரு மேனி வெளுத்ததுவே.

(20)

மச்சகந்த னைத்தொழு தாற்கண்ட பேரண்டம் வந்துதொழு

நிசமும் பெறக்கொடுப் பாய்புக லூரிடை நின்றவனே

கசமென்ற சென்னித் தலைமகன் சாமனைக் கண்ணுமுண்ணும்

விசனம் பெருத்ததி லோதிரு மேனி வெளுத்ததுவே.

(21)

சடைக்காட்டுப் பொன்மலை போற்புக லூரிடை தங்குமெந்தா

யிடைச்சேரி யூட்டிபட்டு வெண்மே னியிருந்தை யொப்பாய்ப்

படைத்தோ பதினெட்டு நாளொட்டி நீரிற் படுத்துக்கொண்ட

விடைத்தாக்க நீஙனெட் டோதிதிரு மேனி வெளுத்ததுவே.

(22)

பத்தகமென் றாமையி னோடணிந் தாய்தமிழ்ப் பாங்கறியேன்

பிதற்றலுங் கொள்புக லூர்ப்பெரு மானுன்றன் பேரிர்த்

மதக்கணத் தோரெள்ள வாழ்விண்மேற் செல்வார் கடலின்

மிதப்பது கண்டுநொந் தோதிரு மேனி வெளுத்ததுவே.

(23)

வண்சங் கமலம்புகைப் பார்ப்பதி யாளொடும் வான்புகலூர்

நண்சங் கராவுனைச் செய்யனென் பார்பலர் நாற்கவிச்சீர்த்

திண்சங்கத் தாரெதிர் வாதமிட் டோநற் செவியிலிட்ட

வெண்சங்கத் தின்றிர ளாலோநின் மேனி வெளுத்ததுவே.

(24)

பருங்கறிற் றீருரி போர்த்துநின் றாடும் பவளவெற்பே

யிரும்புவி போற்றும் புகலூர்ப்பா நின்னிடத்த மைந்த

பெருங்கரு ணைக்கன்னி தூண்ட லினியார்க்கு மெப்பேறுமவர்

விரும்பிய வாறளித் தோதிரு மேனி வெளுத்ததுவே.

(25)

நூற்பயன்

(நேரிசை வெண்பா)

ஐயைந்து வெத்தணிப் புகலூ ரம்மான்றன்

செய்ய நிறம்வெளுத்த சீர்கருதி – வையமெச்சு

நெல்லையான் போற்றுமிவை நித்தமுஞ்சிந் திப்பவருக்

கில்லையே கூற்றணி கல்.

முற்றிற்று.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக