வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
திருப்புகலூர்க் கருந்தார்குழலி
பதிகம்
காப்பு
(நேரிசை
வெண்பா)
கவினார் புகலூர்க்
கருந்தார் குழலி
செவியா ரவமெய்துதுதி
செப்பப் – புவிவானு
முற்றுதிக்கு மானை
முகனுங் குகனுமென்னைச்
சுற்றுமதிள் போலுந்
துணை.
பதிகம்
(கலித்துறை)
வங்கரர்
மெனத்தீய வாதம்மொடு மருவுந் தமியேனுங்
கொங்கண
னாதியசித்தர் கொண்டாடிடக் குலவுந் தினமுளதோ
வங்கணர்
பங்குடையாய் மறைநூல்பகர் றமியாவும் வளர்க்குங்
கங்கணக்
கையுமையே புகலூர்வளர் கருந்தார் குழலம்மே.
(1)
செங்கரு
டப்பரிமீ திவர்மாயனின் தீரா ரருட்கூறென்
றிங்கறி
யத்தகுமேல் வாதம்முட னியானென் றமைவேனோ
தங்க
மலைச்சிலைக்கைச் சிவையேயிழி தசையார் புலைத்தகையாற்
கங்கமொப்
பார்க்கரியாய் புகலூர்வளர் கருந்தார் குழலம்மே.
(2)
வெண்பொடி நீடுறச்செய் வதற்காவொரு விடலைக் கமுதீந்தாய்
வண்பசுக் கூட்டமுய்வா னதிற்சற்றொரு மகறகீ யவொணாதோ
தண்பொழிலிற் சினைக்கார்வருந் தோறும்விண் டலமாதர் கண்டொலக்க
கண்படர் தோகைமிக்கால் புகலூர்வளர் கருந்தார் குழலம்மே.
(3)
புண்டரி கத்தயனென் றலைமேல்விதிப் பொல்லாங் கமைத்தாலு
மண்டரு மெச்சுநலங் கொடுத்தப்பிழை யகற்றற் கறியாயோ
வெண்டலை யிற்பலிகொண் டுழல்வானதி விரகங் கொடுபோற்றக்
கண்டன சொற்பகர்வாய் புகலூர்வளர் கருந்தார் குழலம்மே.
(4)
கோவிலெங் குந்துதித்தார் சிலர்மெய்ப்பயன் கொண்டா ரெனநம்பி
யாவியெய்க் கும்படிநான் முயன்றுங்களிப் பணுவே னுமெய்திலனே
சேவினிற் சேயொடுங்கேள் வரொடுந்திகழ் சீரும் பெறுதேவீ
காவிரி நீர்நலத்தோய் புகலூர்வளர் கருந்தார் குழலம்மே.
(5)
மாமகப் பேறொருபாவை யெய்தற்கவண் மாதா வெனத்தோற்று
நீமதுரத் தமிழ்ப்பாடல் சொல்வேனுய் நினைத்தியா துநல்குவையோ
தாமரைப் பூமுதலாய் வைங்கோல்களுந் தனிவிற் கழையொன்றுங்
காமனுக் குங்கொடுத்தாய் புகலூர்வளர் கருந்தார் குழலம்மே.
(6)
விண்ணவரும் பலசித்தரு முத்தரும் வியக்கும் பெரும்பேறே
நண்ணவிட்டாய் நாராயினு மெச்சிசை நல்கா துறன்முறையோ
பண்ணலந் தோய்புலவர்க் கவர்நண்ணிய பரிசீந் தருள்பண்பாற்
கண்ணகன் ஞாலமுற்றோர் புகலூர்வளர் கருந்தார் குழலம்மே.
(7)
பொய்தொனிக் குஞ்சமயத் தொடர்பாளரும் பொல்லா னெனநொந்தேன்
வெய்தொளிர் பானுவினா டுருக்கொண்டெதிர் மேவற் குளமிசைவாய்
செய்தொழிற் றொண்டர்களா குமொரைவருந் தினமுந் துதித்தன்பாற்
கைதொழு மாதரசே புகலூர்வளர் கருந்தார் குழலம்மே.
(8)
சந்தனக் குன்றுடையா னொர்கனாவினிற் றரும்வெண் பொடிப்பயனு
மிந்தநி லத்தில்விரந் திடப்பெற்றில னினியெங் ஙனமுய்வே
னந்தமு மாதியுமின் றியதன்னரு ளாற்செய் தொருவேலெங்
கந்தனுக் கீந்தளித்தாய் புகலூர்வளர் கருந்தார் குழலம்மே.
(9)
சட்சம யத்தினர்க்கும் பொதுவர்நிகழ் தருசங் கரமுனிவன்
பட்சமொன் றேயினிக்கும் படியாண்டனை பயனே னருகில்லா
யெட்சணி டாகிணிமோ கினியோகினி யென்பார்க் கவணவிர்வாய்
கட்சல சத்தடஞ்சூழ் புகலூர்வளர் கருந்தார் குழலம்மே.
(10)
கள்ளமில் லார்பரவும் புகலூர்வளர் கருந்தார் குழலம்மை
யெள்ளலில் சித்தியுமுத் தியுநம்பினர்க் கீவா ளெனநம்பித்
தெள்ளமு தேநிகராய் திருப்புகழ்ச் சிறுவன் பகர்பதிகம்
விள்ளவல் லார்வரவேண் டுவயாவையும் விரைவிற் பெறுவாரே.
(11)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக