வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
திருவரங்க
நிட்டூரப் பதிகம்
காப்பு
(நேரிசை
வெண்பா)
திருவரங்கக் கோயிலிலோர் சீறரவப் பாயின்
மருவுகருங் காரனைய மாயா – பொருள்வளமு
மெற்கிசையச் செய்தில்லாயே மாற்றி யடல்கொண்டாய்
நிற்கிடம்ப மித்தனையே னேன்.
பதிகம்
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
அன்றுதிருப் பாணாழ்வா னறைந்தகவி யொருபதுகொண்
டயிக்க
மீந்தா
யின்றுதமி யேனுவல்பாட் டாயிரங்கொண் டியாதொன்று
மீயா துற்றாய்
நன்றுனது மருமகளா தியபுலவ ரனைவர்களு
நகுவா
ரன்றோ
கொன்றுதசை நுகர்வாருக் கரசுதவி யாய்மதிற்
குடிகொள்
வானே.
(1)
சக்கரமு நின்மனைமா ரனைவர்களு நீசமுறுஞ்
சளந்தீர்ந்
துய்வர்
னெக்கணமுங் கருதிமுய லெனக்கருட்பே றளித்தானிற்
கிளப்பங்
கொல்லோ
திக்கடங்க வுண்டுமிழ்நின் றிருவாயெய் குரைத்தவெலாந்
திருட்டுச்
சொல்லோ
பொக்கமுளார் பலர்க்குவகைப் பெருக்களித்திட் டாங்கமதிற்
பொலியும்
மாலே.
(2)
வீரையினும் பார்ப்பனப்பட் டியினுமென்வாய்த் துதிகொளுநாள்
வெப்ப
மீந்த
நீரையிந்நாள் காட்டாம லெனைச்சார்ந்தோ ருடன்புரந்து
நிரப்புத்
தீரர்
தூரைவிட்டுப் போமாறு விடுப்பதுமோர் கருணையென
வுணர்ந்தேன்
கண்டாய்
சீரையெல்லா மீனர்பெறக் கொடுத்தரங்கக் கோயிலில்வாழ்
திருட்டும்
தேவே.
(3)
ஒருகவிப்பின் போய்மீண்ட புகழையிந்நா ளவரைக்காத்
தின்றொழித்
தாய்ந்தோ
வருகரினும் புத்தரினுந் தமிழ்சுவைதே ரகுநருளார்
லறைவார்
கண்டாய்
தருகவியா யிரத்துளொன்றுந் தக்கதன்றென் றாணையிட்டுஞ்
சாற்று
வாயோ
மருகனுடன் போராடி யெனையிழுத்தே மாற்றரங்கர்
வஞ்சா
கோவே.
(4)
மானிடதைத் துதிப்பதொஞ்சி மலர்மகள்கோ னாகுமுனை
வழுத்து
வேனுக்
கானிரைகாப் பதற்காச்செய் தவமுடிக்கு முதவியுஞ்சற்
றாற்றொண்
ணாதோ
பானிறச்சங் காழ்முதற்படை முழுதுமிழ்ந் தனையோ
பாவ மிஞ்சி
நானிலம்வாய் விடல்வினவான் போன்றரங்கப் பெருங்கோயி
னடுவாழ் வானே.
(5)
இடியொலியுந் துழாய்மணமுந் தேன்சுவையும் பெறுகவிகட்
கிரங்காய்
போலு
மடிகுறைந்து தொடைசிதைந்து மோனையின்றிப் பாடிடிற்றா
னருள்செய்
வாயோ
படியின்முதற் சங்கத்தோர் புலவனென வாழ்ந்தகல்விப்
பண்பெங்
குய்த்தாய்
கொடிமதிற்றென் னரங்கநகர்ச் கோயிலிடை நெடுமலைபோற்
குலவு
வானே.
(6)
கந்தையிலோர் கிழப்பனவன் கொடுவருஞ்சிற் றுண்டியினுங்
கடையென்
றெண்ணில்
விந்தைபெறு தமிழ்வண்ணக் கவிகளையு நீயிகழ்ந்து
வெறுக்க
லாமோ
பந்தைநிகர் முலையொருத்திக் களவில்கலை யீந்தகுணம்
பறிபோ
யிற்றோ
நிந்தையினுந் களிப்போனென் றொருபெயர்கொண் டரங்கமதி
னிதமுற்
றோனே.
(7)
கோட்டானை தான்வாழக் கூவியநாள் புரந்ததுண்டோ
கொடியோர்
கொல்லுங்
காட்டானுங் கன்றுமுய்யத் துதிக்குமெனைச் சிறிதேனுங்
கருதாய்
கொல்லோ
விட்டானந் தம்பழித்த சிசுபாலற் கருளியது
மெய்யென்
றெண்ணிப்
பாட்டானிற் பழிச்சியுய்ந்தா ரொருவருமின் றோவாங்கப்
பள்ளி
யானே.
(8)
நின்பெயர்கூ றினர்ச்செகுக்கு நீசன்மனைத் தூணிலொரு
நிமிடத்
தோன்றித்
தன்பெயர்கூ றியநிமித்த மவன்புதல்வன் றனையாளல்
சாத மானா
லென்பெயரு நின்னடியார் பெயரெழுது மேட்டிலெய்தா
திருக்க
லாமோ
வின்பெயரா யிரமுரைத்துப் பலர்போற்றத் திருவரங்கத்
திலங்கு
வானே.
(9)
பொருனையின் றென்கரைத்தமிழ்ப் பாட்டாயிரங் கொண்டாய்வடபாற்
புகன்ற
வாகு
மருமைய பாட்டாயிரங் கொண்டருள்புரி யாதிருப்பது
நல்லறமன்
றோர்வாய்
குருகையர்கோன் முதலினரிற் கொலைமறவற் றனைக்கூட்டுங்
குணமின்
றின்றோ
திருவரங்கத் திடைகிடந்தே பழனிவிட்டியான் வருமாறு
செயக்கற்
றோனே.
(10)
கவியாசை யொடுகிடந்து கபடவிளை யாடல்களாற்
கவர்ந்து
கொண்டு
புவியோரும் பெறத்தகுபைம் பொன்னுநல்கா தேமாற்றும்
பொல்லாப்
பண்போத்
தவிர்சோதிச் சக்கரக்கை யரங்கனுக்கு மானமொரெள்
ளளவுண்
டாவான்
செவிடோவென் றைமுறத்தி ருப்புகழோன் பகருமிகை
தெளிந்துய்
வீரே.
(11)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக