வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
திருவரங்கத்திதழகலந்தாதி
விசுவச்சேனர்
துதி
(கட்டளைக்
கலித்துறை)
அரங்கத் திதங்கிய
கண்ணாரை நாடியகங் கரைந்திண்
அரங்கத் திதலைத்
தனங்கதியா நண்ணலற் றிடச்சீர்
அரங்கத் திதழக லந்தாதி
யரிக்க ணிதரக்கின்
அரங்கத் திதர்செறி
சேனையற் செய்தன னஞ்சலியே.
நூல்
நாரா யணன்கதிர்ச்
சக்கரத்தைச் சங்கைநா டறியேன்
நாரா யணன்கதிர் சிந்தேநண்
டேயென்ன நாணிலன்கைந்
நாரா யணன்கதி யாரைய
ரங்கந கரகலா
நாரா யணன்கதி யென்றடைந்
தாரெய் தனத்தினனே.
(1)
நத்தின னாரணனைத்
தந்தசெய் யநளி னத்தினா
னத்தின னாரணனை யர்க்கெங்
கட்கின்ன னல்கிகலா
னத்தின னாரணனை யாயரங்
கத்தினண் ணினன்கா
னத்தின னாரணனை யத்திகாத்
ததைநா டனன்றே.
(2)
நாடகத் தாளரிற் காணரங்
கேசனன் னாகத்ததா
நாடகத் தாளரி னநாணநின்
றனனா கநைந்த
நாடகத் தாளரி நாயேனை
யாண்டன னானிங்கென்ன
நாடகத் தாளரி யார்ச்செறற்
காச்செய்கை நச்சினனே.
(3)
நச்சாட ராக்கினியா
யண்டநா சகர்நாசத் தண்டா
நச்சாட ராக்கினியா
னெய்யளை யயினல் லரங்கா
நச்சாட ராக்கினியா
யஞ்செய்யா ரிந்த ஞாலத்திலா
னச்சாட ராக்கினியாஞ்
செய்த றிண்ணநலங் கண்ணிடே.
(4)
கண்ணியக் கண்ணியன்
றென்னரங்கத் தண்ணல் கானிதழிக்
கண்ணியக்
கண்ணியன் கண்டேங்கச் சாலஞ்செய் காரணன்றாட்
கண்ணியக் கண்ணியலென்
னெஞ்சி லங்ஙனங் காண்டரலாற்
கண்ணியக் கண்ணியடி
யாத்தியேத் தினன்கா தலித்தே.
(5)
காதக ராசலஞ் செய்யநைந்
தேனைக்கடைக் கணித்தால்
காதக ராசலங் காத்ததிற்
காத்திக தறற்கிரங்
காதக ராசலத் தட்டசெஞ்
சக்கரக் கையரங்கா
காதக ராசலஞ் சாதிக்கின்
றார்களைக் காயண்ணலே.
(6)
காயகத் தானையைச்
செற்றடற் கஞ்சற்கடிந்த கண்ணன்
காயகத் தானையராக்
கேதனன் கண்கள் காணநின்றா
காயகத் தானையச் செய்கைதெரித்
தகனத் தரங்கன்
காயகத் தானையை யாகத்தட
னற்கதி யிடற்கே.
(7)
கதிக்கக் கதிக்கண்
காட்டிள நாரியர் காதலென்ச
கதிக்கக் கதிக்கன்ற
ராதென்னை யள்கரங்கா லணைநா
கதிக்கக் கதிக்கத்
தெய்யென்றா டினானயன் காதலரங்
கதிக்கக் கதிக்கலி
யஞ்சிடியே றெனக்காண் டரற்கே.
(8)
காண்டத் தினாரையன்
சேய்க்கன் றிரங்கினை காசிறிரி
காண்டத் தினாரை யனையா
யரங்கங் கழறெனைநன்
காண்டத் தினாரையந்
தீர்த்தாணல் லானினங் காத்தல்செய்யக்
காண்டத் தினாரைய
நீர்க்காட்டி லாடக் கலையளித்தே.
(9)
கலையக் கையானைங்
கணையா னற்றாதை கதியரங்கன்
கலையக் கையானை நத்தீசன்
கைச்சென்னி களைந்தளித்தான்
கலையக் கையானைய னெஞ்சேச
டத்தைக் கனன்றனன்சீர்க்
கலையக் கையானைக்
கணத்தேற்றிற் சாற்றிக் களித்திநன்கே.
(10)
களிதந்தை யாசிந்தை
யிற்றரி யாரிடைகன் றினட்காங்
களிதந்தை யாதடியா
ரேத்தலெய் தியகார ரங்கா
களிதந்தை யாயரஞ் சச்செயித்தா யென்றன் கண்ணெதிச
களிதந்தை
யாயன்னை யாய்ச்சகத்தார் களைக்காக் கின்றையே.
(11)
காக்கைக் கரியகதி
யளித்தா யகடி யளகர்க்
காக்கைக் கரியகதி
யளித்தாய் தற்செய்ச் செய்யேல்
காக்கைக் கரியகதி
யளித்தாய் தனக்கண் கறித்த
காக்கைக் கரியகதி
யளித்தா யரங்கத் தையனே.
(12)
தையனத் தானத்தெ யென்றந்த
நாகத்தலை யினின்ற
தையனத் தானத்த னாடலை
யென்றாலை தாங்கநல்காய்
தையனத் தானந்தர்ச்
செற்றாட னச்சித் தயங்கினனத்
தையனத் தானனைக் கண்டேற்ற
சீரங்கத் தானத்தனே.
(13)
தானந் தராதடைத்தான்
கண்கெடச் செய்தகை யினனைத்
தானந் தராதல நாதனென்
றாரகந் தங்கினனைத்
தானந் தராதலி லாழிநக
நினைத்தா நனியாய்ந்
தானந் தராதனச் சீரார
ரங்கச யனத்திலே.
(14)
சயனத் தனாதிரை யாயற்கினியா
னதிசாத் தரங்க
சயனத் தனாதிய யனைத்தந்
தான்சிலைத் தக்கதனஞ்
சயனத் தனாதிகட் செற்றிடச்
சாற்றணிச் சாரதியாஞ்
சயனத் தனாதியை யானெனிற்
சாநலந் தட்டழிந்தே.
(15)
தட்டத் தகாதனகேட்
டிரந்தேனைத் தயங்கச் செய்தாய்
தட்டத் தகாதன னனியளிந்
தாயன்றித் தையலர்தந்
தட்டத் தகாதன சையேற்றி
னாயடற் றங்கனஞ்ச
தட்டத் தகாதனஞ் சேரரங்கா
நின்கட் சாரச்செய்யே.
(16)
சாரணரஞ் சக்கற் காணத்திட்டா
னடிதாழ் கிலனின்
சாரணரஞ் சகனிற்றாங்
கினானன் னர்ச்சாற் றிலனெஞ்
சாரணரஞ் சனக்கண்
ணாசைநீங்கி லன்றண் ணரங்கஞ்
சாரணரஞ் சலியா ரினட்டே
னின்றரி சனையே.
(17)
சனந்தனந்
தந்தஞ் சந்தானென் றெண்ணார்களைச் சார்ந்திலனஞ்
சனந்தனத் தந்தந்த
நின்னாக நாடிலன் றள்ளிடனஞ்
சனந்தனந் தந்தங்கித்
தண்ணார ரங்கந்தனை யளித்தாய்
சனந்தனந் தந்தறி
தந்தாய்நற் றாயிற் றயையினனே.
(18)
தயையிலி யாசையறியா
னென்றன் றதர்தன் னினடந்
தயையிலி யாசிக்க
நாணிலையாற் றணித்தண் ணரங்கத்
தயையிலி யாடகத் தாசைதந்
திங்ஙன் றளரச்செய்யா
தயையிலி யானடை தற்கான
சீலத்தகை நல்கிடே.
(19)
தகையத் தகையத் தடைநீக்கி
நல்லிளந் தையனல்லார்
தகையத் தகையடை நெஞ்சேனைக்
காத்திதடத் திலழைத்
தகையத் தகையறச் சென்றாய்நல்
லாழியஞ் சங்கந்தரித்
தகையத் தகையநன் னீரரங்கா
தண்டழைக் கத்தனே.
(20)
தழையா லிக்கன்னியல்
சிற்றகட்டாள் சங்கஞ்சக் கரங்கார்த்
தழையா லிக்கன்னிகழ்
காளநிறந் திகழ்தா ரரங்கா
தழையா லிக்கன்னியந்
தீரிசையா டரத்தந் தகடித்
தழையா லிக்கன்னிக
ளித்தாளென் ளாதினித் தாரணியே.
(21)
தாரணி யின்னலைத்
தீர்த்தென்னை யாளத்ததி யிதண்டத்
தாரணி யின்னலை நீத்தெழல்
சத்தியந்தா னெனச்செய்
தாரணி யின்னலை யாயரங்கத்
திற்றழைத் தனையித்
தாரணி யின்னலை யத்தாடென்
சிந்தைதனிற் சகித்தே.
(22)
தனியரங் காதனல் லார்க்கெஞ்
சிடாத தகையினர்சை
தனியரங் காந்தலை
யாதார னந்தன்ற னிற்கிடந்த
தனியரங் காகடலீன்
றாடன் காந்தத ராதலநா
தனியரங் காசங்க சக்கரத்
தாயென்ற சத்தத்தரே.
(23)
சத்தக் கடலை யடைத்தாய்
ககனந்தறை யளந்தாய்
சத்தக் கடலை யணிந்தாற்
றந்தானைத் தரநினைத்தாய்
சத்தக் கடலை யநல்கத்
தந்தாளைத் தடிந்தனையாழ்ச்
சத்தக் கடலையன் றாழரங்
காநன்கெற் றாங்கிடின்னே.
(24)
தாங்கா தலித்தண்ணங்
காரனையா யன்றத்தை யசிச்சித்
தாங்கா தலித்தறைக்
காயகாயக் காத்தந்த தாரரங்கா
தாங்கா தலித்தநல்
லார்நலத் தேர்தியென் றங்கத்தைநீ
தாங்கா தலிதிதகை
காட்டே லிரங்கித் தழீஇக்களியே.
(25)
தழியங் கத்தானை யன்னாட்
ககலத்திடந் தந்தனையி
தழியங் கத்தானைய
லெய்தா தளித்தனை சாத்திரத்தி
தழியங் கத்தானை யராதேனத்
தேகினை தாழ்ச்சியென்றீ
தழியங் கத்தானை யங்காட்
டரங்காதக்க தந்திரனே.
(26)
தந்திரத் தந்தரத்தார்க்
காத்தயித் தியர்தானை யட்டாய்
தந்திரத் தந்தரச்செற்
றிகற்கஞ் சனைத்தாக் கரங்கா
தந்திரத் தந்தரத்
தீகையில் லார்களைச் சார்ந்தினிநித்
தந்திரத் தந்தரற்றா
தெனக்கா னதனந் தந்திடே.
(27)
நந்தந்தச் சக்கரக்
கையழிந்திங் ஙனநைந் தனஞா
னந்தந்தச் சக்கரக்
கையரிற் சேர்த்திடினா லிரண்டா
நந்தத்தச் சக்கரக்
கையனல் லானென்ன நாணடையே
நந்தந்தச் சக்கரக்
கையரங் காசெங்க ணாயகனே.
(28)
நாயகநா தங்கடந்த
நின்றா ளிணைநண் ணிலங்ங
னாயகநா தறையார் தேறச்செய்
திநன்னாகத் தண்டர்
நாயகநா தந்தகீர்த்
தியரன் செய்நசை யரங்க
நாயகநா தநனினத் தியார்சிந்
தைநாட் டத்தனே.
(29)
நாட்டத் திலங்கிய
னாற்றலையா னண்டநாத னெண்ணி
னாட்டத் திலங்கியன்
றேத்திசையா யிதைநண் ணிநல்காய்
நாட்டத் திலங்கியத்
தேற்காச் சற்றே நகனானறிய
நாட்டத் திலங்கி
யறைந்தா யரங்கத்தி னாரணனே.
(30)
நூற்
பயன்
நீரங்க ஞாலத்தை நீத்தரிதாத்
தளர்செஞ் சினர்காள்
காரங்க நாரணனல் லாற்கதியி
லைக்கன்னி நன்னாட்
டாரங்க ணாத்திகழ்ந்
தானாயிரத்தையடைந் தநந்தஞ்
சீரங்கத் தின்னித
ழகலந் தாதியைத் தேர்தனன்றே.
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக