வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
பழனிமலைத் திருப்புகழ்
அருக மதத்தார் களுமேசிய கொடுமை
யுடைய பாதகர் பாழ்மத மழிய
நினைக்காதவர் தீயுற வணுகாதே
வமைமுளை யைப்போ லுறுதோ ளியர்முலை
கருதிப் போர்மத வோர்விடு மலர்கணை
தைத்தாவியு மாகமு மறுகாதே
மருதடு மற்றா ளுறுநா ரணனென்
வுலகத் தேவிளை யாடி நின்மலர்
கமலத்தா ளிடைபோய்மிக மகிழேனோ
மகபதிமுற் பேணிய பாவையும் வனசார்
பெற்றா ளும்விடர் துறமயின் முதுகிற்
றோள்புனை வேலொடு திகழ்வாயே
குருவென முற்கால மொராலிடை சதுரர்
களுக்கா வன்பே சியகுண முறுகித்
தேசர்ப் பரவிய பெரியோனே
குகுகுகுகுக கூவெனும் வாரண மெழுதிய
பொற்றா னையினால் விரகொடி யைவியப்
பாரிக லோர்கெட முனிவோனே
பருவத மொப்பர் முலைமா துமைதரு
மமுதத் தாசை யினாலழு படிறனெனக்
கூறிடு வரையு மகலானே
பலிதமொழிப் பாவலர் மாதவர் முனிவர்
முதற்சீ ரியர்பே ணியப ழனிமலைக்
கோயிலின் மேவிய பெருமாளே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக