வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
தஞ்சாவூர்
கொங்கண சற்குரு பதிகம்
காப்பு
(நேரிசை
வெண்பா)
எங்கடிரு மூலவர்க்கத் தேற்றமிக்க
சீர்த்திபெற்ற
கொங்கணப்பேர்ச் சற்குருவைக் கும்பிட்டுச்
– சங்கப்
புலவரு ணாமதுர புஞ்சத் தமிழா
னிலவருமைப் பாடல்சொல் வேனே.
பதிகம்
(அறுசீர்க்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
மறைகளு மாகம நூல்களு
மோதிய வாழ்வு விரும்பியநா
னிறைகடல் சூழ்தரு பார்மிசை
யிங்ஙனி ரப்புற னீதிகொலோ
வரைகழ லோசை யுடன்றிரு
வம்பல வாடலு மோர்தகையாற்
குறைவறு மாமதி யமுத
மருந்திய கொங்கண
சற்குருவே.
(1)
அன்றுக னாவிலு ரைத்தது
போனன் வானதி லுந்திகழ்நீ
ரொன்றுநல் காது மறைந்த
பெருந்துய ரோட விரைந்தருள்வீர்
பொன்றுத லற்றவ ரிற்றலை
யாயவர் புத்திர னாடல்செயுங்
குன்றுதோ லுள்ளபல் சித்தரு
மெச்சிய கொங்கண சற்குருவே.
(2)
அஞ்ச மதிற்கலை மங்கையோ
டேறுமயன் கைவிதிப்
பிழைதீரத்
தெஞ்ச லிலாயுளு நல்கவ்
வீரெனை யேன்விழை
யீர்நுவல்வீர்
நஞ்ச முதாக நுகர்ந்த
பிரானது ஞான முறுந்தகவாற்
குஞ்ச ரமாமுக னைக்குக
னைத்தெரி கொங்கண
சற்குருவே.
(3)
சேகியல் சிந்தை மதப்புலை
வாதர் செருக்கள மூடலைவேனி
யோகிய ரும்பர ஞானிக
ளும்பெறு முண்மை
யுறத்தருவீர்
பாகியல் வேத முரைத்தவ
னாதிய பஞ்சவர் கெஞ்சொருமென்
கோகில மேநிகர் வாலை
யருட்பெறு கொங்கண
சற்குருவே.
(4)
சீதள கஞ்சம லர்த்தவி
சேறிய சேயிழை மாருறவா
லேத மனைத்து மொழிந்து
வகைக்கட லின்றலை
யென்றமாவே
னாத முடியு மறிந்து
திரும்பிடு நற்றிற முற்றதனாற்
கோதறு மாதவ மண்டல
மும்புகழ் கொங்கண சற்குருவே.
(5)
பற்ற லாஞ்ச வொறுத்து
நலந்தெரிபத் தாதவப் பயன்முற
றற்றம ளித்தரு ளத்தகும்
வெற்றியடைந் தலதி
யான்மகிழேன்
கற்றவ ரும்பல கொள்ள
வரும்புகழ் கார்முகி
லொத்துலகின்
குற்றம றுத்திடு மச்சுத
னட்புறு கொங்கண சற்குருவே.
(6)
மலைதொறு முத்தம் பத்தி
படைத்துவ சித்துன் சித்தரெலாங்
கலையிவர் காலு லவும்புவி
யின்றுயர் கண்டறி யாதவரோ
சிலைமத வேண்மலர் வாளியி
னொந்துதி கைப்ப ரேனுமுயிர்க்
கொலைபுலை யிலவ ராகி
லவர்க்கருள் கொங்கண
சற்குருவே.
(7)
உஞ்ச லெனச்சுழ லுஞ்சிறு
நெஞ்ச மொரேநிலை யெய்தினலாற்
பஞ்சமி லின்பமவ ராதென
வெராந்த பயனறர் முன்வருவீ
ரஞ்சல ளித்தரு ளும்பரமொன்
றெனுமா ரவமு மேவுகிலர்க்
கொஞ்சம திச்சம யத்தர்
விருப்பமறு கொங்கண
சற்குருவே.
(8)
ஆலய நட்புயர் பூசனை
யோக மருட்செய னலகிலவர்
லேல நெருங்குழ லார்மயல்
வென்றில னீன்மின் ஞானநல்கீர்
மால யணிந்திர னாதிய
ராக வகுத்தபல் வானவாதங்
கோல மெடுக்கவும் வல்ல
வார்நிகழ் கொங்கண சற்குருவே.
(9)
சத்திய முந்தரு மங்களு
நொந்து தவிக்குமி
நாளிலெனக்
சித்திர ளாசை வகுத்ததோர்
தெய்வ மிரக்க மிலாததுவோ
சித்திய ளித்தவ னத்திய
தொண்டு செயுந்துணி வாலொருபெண்
கொத்திய கல்லுரு வைக்கொடு
சிட்டிசெய் கொங்கண சற்குருவே.
(10)
என்னி லிளைத்தோர் பக்குவ
னுக்கரு ளெய்தலு முண்டெனிலென்
முன்னில வாரது மறைந்து
திரிந்துள முத்தரு முத்தமரோ
பன்னிரு சூரியர் நோவ
ரினுஞ்சிறு பாடுமெய் தாதளிகூர்
கொன்னிக தாரக மேனியு
மேவிய கொங்கண சற்குருவே.
(11)
மந்தர மேரு முதற்றிகழ்
பற்பல வரைத்தலை தோறவிரோர்
குந்தன நற்பணி யிற்குக
னோடமா கொங்கண சற்குருவைச்
செந்தமி ழோர்மகிழ் தஞ்சையில்
வந்துதி ருப்புக ழோனுவல்பாட
டெந்தவி தப்பய னெனும்வி
ரும்பிலி கத்தும
றித்திடுமே.
(12)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக