வண்ணச்சரபம் தண்டபாணி
சுவாமிகள் அருளிச் செய்த
குமாரபுரி
குகன் மும்மணிக்கோவை
காப்பு
வெண்பா
செம்மணிக் குன்றன்ன
குகன்சேருங் குமாரபுரி
மும்மணிக் கோவை மொழிவதற்குக்
– கைம்மணியொப்
பானமுலைப் பார்ப்பதியா
மங்கைவடி வேலுமன்ன
கானமயில்
வாகனமுங் காப்பு.
நூல்
அகவல்
கார்முகில் பொதிந்து கரியமா லென்னச்
சீர்மிகத் தருபல சிகரி தோறுங்
கொடிநடம் பயின்று குமார புரியி
னடியவர் வாழ்வா னவைமுழு தொல்க
வந்தினி தமர்ந்தென் மனங்கவர்ந்
தொருமை
தந்தியற் பனுவற் றருகென விரந்து
மிசைவுறா மாற்ற மியம்பச் செய்து
நசைமிகை படவே நவிலுமா றசைத்து
முலகினர்க் குரைக்கி லொய்யென நகர்க்காம்
பலவிளை யாடற் பயின்றுவாழ் குகனே
எவ்வகைத் துயரீண் டெய்தச் செயினும்
பௌவநீர் புவியோர் பைம்பொன் வேட்கை
யொன்றும்வந் தென்னிடத் தொன்றா
தின்றுதொட் டின்ன யிற்றுதி யினிதே.
(1)
வெண்பா
இனியகட
லைபய றெள்ளுண்டை பற்பல
கனியனைய
கொள்ளுங் களிறு – நனிவிரும்புங்
கோலத்
துணைவா! குமாரபுரிக் கோமானே!
காலத்துக்
கஞ்சாமற் கா.
(2)
கட்டளைக்
கலித்துறை
காகாவென்
றெத்தனை நாளிரந் தேனெனைக் காண்கிலைகொல்
போகாந்த
காரத்தை நாடாத வண்ணம் புரந்திலையே
யாகாத
பிள்ளையென் றாலந்த ஞாய மறைகுவையோ
வாகார்
குமாரபுரிக் கோயிலூ டென்றும் வாழ்கந்தனே.
(3)
அகவல்
கந்தனென்
றொருவன் கைவே லேந்திக்
கொந்தலர்
சோலைக் குமார புரியிற்
றன்னடி
யவர்பாற் றறுகண் செய்வார்க்
கின்னலு
மேனையர்க் கின்பமு நல்கி
வாழ்ந்துளா
னென்னு மாற்றம் வினவித்
தாழ்ந்துபோற்
றிசைத்துச் சண்முக மலரும்
பவளவெற்
பின்நிகர் பன்னிரு தோளுந்
தவளநீ
றணிவார் தலைமணங் கமழும்
பங்கயத்
துணைப்பூம் பதங்களுங் கருதிச்
சங்கரன்
றிருமால் சதுமுகன் முதலோர்
தமையெலா
மிகழ்ந்து சாற்றரும் பேத
மமைதரு
சமயத் தவரொடும் பிணங்கி
இருந்தவென்
பாலவ னெய்தி யெய்தித்
திருந்துபே
ரறிவாத் திகழ்தரு தன்னை
யன்றிமற்
றின்றென வதட்டி
யென்றிறன்
றனையு மேற்றிலங் கினனே.
(4)
வெண்பா
ஏற்றுப்
பரியாற் கிசைத்ததனை யென்செவியிற்
சாற்றுகெனக்
கேட்கை தகாததோ – கூற்றுமட்டும்
வாராக்
குமாரபுரி வாழ்குகனே வண்டமிழ்க்கொண்
டேரா
கிளிக்குரைத்தா யே.
(5)
கட்டளைக்
கலித்துறை
தாயார்
முதற்பகர் நால்வகைச் சார்புந் தமிழ்விரும்போர்
சேயாய்த்
திகழ்ந்த தன்சீ ருரைக்கிற் செழுங்கமல
மேயானைக்
குட்டித் திருமாலைக் காத்தான் வேண்டுபொருள்
வாயாரச்
சொல்லிக் குமார புரியின் வயினுற்றதே.
(6)
அகவல்
உற்றவ
ரென்ன வுலகினர்க் கருகிப்
பற்றகல்
பெரியோர் படிவங் காட்டிப்
பொன்மயல்
பெருக்கிப் புலருந் தமியேன்
நன்மனத்
தொண்டர் நனந்தலை வைகி
யெவ்வகைப்
பேறு மினிதுபெற் றமைந்து
பௌவநீர்
புரையும் பகைப்பெருக் கொழித்துன்
றண்டையங்
கமலத் தாளிடை புகற்காம்
பண்டை
மாதவப் பயனிலே னெனினுங்
காப்பதுன்
கடனிற் கான்முளை யென்ன
மோப்பவ
ளிளமென் முலைநயம் புணர்வான்
கடம்பமால்
வனத்தோர் கானவ னாகித்
திடம்பெறப்
புரந்த தீயனிற் கடையேன்
அல்லனியா
னறிதிய தன்பயன் சிறிதுள
கொல்லலின்
முயலார் குமார புரியில்
வன்னமா
யிரம்பெறு மயின்மேன்
மின்னகும்
வேலொடு விளங்குதே சிகனே.
(7)
வெண்பா
தேசிகனை
வேலெடுத்த சேகவனைச் செம்பவளப்
பாசியணி
வாட்கினிய பான்மையனை – யாசில்
குமாரபுரி
கோயிற் குகவேளை யன்றி
யெமாதுள
தின்மற்றொன் றிலை.
(8)
கட்டளைக்
கலித்துறை
இலையார்ந்த வெண்பொடி நல்கியன் றென்னோ டியம்பியசொன்
னிலையாமென் றெண்ணி யிறுமாந் துளேனை நிலத்தினரும்
விலையாடும் புன்பொருள் வேண்டவிட் டாயிதோர் வேடிக்கையோ!
தலையாய
செல்வக் குமார புரியிற் சரவணனே.
(9)
அகவல்
சரவுயிர்க்
கொலைக்குஞ் சற்று மஞ்சா
வரவுறழ்
பொல்லா ரளவில் பல்லோர்
வாழ்வுறு
மிந்நாண் மகிதலத் தென்னைத்
தாழ்வுறப்
படுத்த றருமந் தானோ!
வென்னகங்
கரியா வினிது தோன்றி
முன்னவின்
றுளவா முடித்தருள் புரிவாய்
கோதகல்
வளந்தோய் குமார புரியிற்
சீதரன்
முதலோர் தெண்டனிட் டேத்தச்
செந்துவர்க்
கிரியெனத் திகழ்ந்து
முந்துமெஞ்
ஞான மொழிபகர் குகனே.
(10)
வெண்பா
குகனைக்
குமாரபுரிக் கொற்றவனை யீசன்
மகனைத்
தினங்கருதி வாழ்வோர் – புகழு
மிருநாலு
சித்தியுமுற் றெய்துமுத்தி வேண்டித்
தருநாட்டை
யெள்ளுமவர் தாம்.
(11)
கட்டளைக்
கலித்துறை
தாமம்
கருங்குழலார் மையனோயிற் றவிக்கு மென்னைச்
சேமப்படச்
செய்ய வல்லாயன் றோவென்றன் சிந்தையுட்ப
லியாமதத்துஞ் சொன்னசொல் லெல்லாம் பொய்யோசெந் திலேயனைய
காமர்க்
குமாரபுரி யாளும் வேற்படைக் கைத்தெய்வமே.
(12)
அகவல்
தெய்வத்
திருமொழிச் செழுந்தமிழ்ப் புலவோர்
செய்வகை
யாவுந் திரைநீர்ப் புவியோர்
பற்பல வாறு பகரக் கேட்டேன்
னற்ப
நெஞ்சக மலமரல றிந்து
மத்திற
லொருசற் றருளிலை யந்தோ
சத்திவேற்
படையொடு தமியே னிடைவந்
தென்னைநின்
கிளியென் றிசைத்த மாற்றந்
தன்னையிவ்
வுலகோர் தாமு மறியச்
செய்யுநா
னினைத்துத் தியங்கவுங் கண்டாய்
பெய்யும்வால்
வளையார் பிரமையு மோர்பால்
வந்துறச்
செய்தாய் மறுதுணை யறியேன்
சிந்துர
முலவுந் தெருநலங் குலவும்
பொற்புறு
குமார புரியிற்
சிற்பர
மாகித் திகழ்ந்தசண் முகனே.
(13)
வெண்பா
முகமனன்
றென்வார்த்தை யென்னைமுற்றுங் கவர்ந்தாய்
சகலமுநீ
யென்றுணரத் தாரா – யிகதலமும்
வானும்
பரவும் வளஞ்சேர் குமாரபுரி
மானும்
புகழ்வேல வா.
(14)
கட்டளைக்
கலித்துறை
வேலா
யுதப்பெரும் பூசையி னாசை மிகுக்குமென்னை
மாலா தியோர்புக ழத்தகு நாளும் வருவித்திடாய்
சேலார்
கட்குஞ் சரிபாகா! புனத்துச் சிறுமிகொண்கா
கோலா
கலாநங் குமார புரியிற் குருபரனே.
(15)
அகவல்
குருவென
வுலகிற் குலவ லெலாநின்
றிருவுரு
வென்னத் தெளிதரப் பெற்றும்
புலைநெறிக்
கொடியோர் புன்மை நாடி
மலைவுறுங்
கொடுமை மாற்றி யருளாய்!
தண்புனற்
பணையிற் றயங்கும் வாளை
விண்புகி
னுரிஞ்சி விரிபூ வுதிர்தரு
கொன்பொழி
லுடுக்குங் குமார புரியி
னம்புநர்
வேண்டுவ நல்கி
யம்புவி
புரக்கு மயிற்கைவா கனனே.
(16)
வெண்பா
வானவர்தம்
வாழ்க்கையை யுவம்பென் றருவருக்கு
ஞானமுறப்
பெற்றபின்னு நானிலத்து – மானனையார்
பார்வைக்
குருகப் படுமோ குமாரபுரி
யூர்வைகும்
வேலா வுரை.
(17)
கட்டளைக்
கலித்துறை
உரையிறந்
துற்றமெஞ் ஞானானு பூதி யுடைவர்தாந்
தரையினிற் கூடுநன் னாள்வர வேண்டித் தவிக்குமென்னைக்
கரைதவிர்
மாயைக் கடலூ டமிழ்ந்து கலங்கவிடேல்
புரையில்
வல்லோர் மிகப்போற்றுங் குமார புரிக்குகனே.
(18)
அகவல்
புரிமருப்
பாட்டின் புறத்தி லேறி
யெரிவளர்த்
தோம்பு மிகத்து மாதவரும்
வாகனத்
திமையா வாழ்க்கை யோரு
மானமற்
றழியா வண்ணங் காத்த
பெரும்புகழ்
கருதிப் பிறங்கொளி மதுரம்
விரும்புமெய்
புணர்ந்த வியன்றமிழ்க் கவியாற்
போற்று
மென்னைப்பு றம்பெனத் தள்ளா
தேற்று
வாகனத் திறைவ னாதியர்க்
கன்றளித்
தருள்பே றமைக்க வேண்டுங்
குன்றலில்
வளமைக் குமார புரியி
லெவ்வெவ
ரெவ்வா றெண்ணினு மிகழா
தவ்வவர்க்
கவ்வா றவிர்தரு மருள்கொண்
டிருமயி
லன்னார்க் கிடையி
லொருமயிற்
பரிமீ தொளிருர வோனே.
(19)
வெண்பா
உரங்கொண்ட
வேலானை யொண்மழுவான் வேண்டுஞ்
சிரங்கொண்
டுதவுமெழிற் சேயைக் – கரங்கொண்டு
கும்பிடுவார்க்
கிந்தக் குமாரபுரி போலமுற்று
நம்பிடுமூ
ரில்லைசொன்னே னான்.
(20)
கட்டளைக்
கலித்துறை
நானென்ற
வாணவப் பேய்வந் துறுக்க நலியுமென்னைத்
தானென்ற நன்னிலைக் கென்றமைப் பாயருட் சண்முகத்தோர்
கோனென்
றறிகிலர் தம்மையுங் காத்துக் குமாரபுரி
வானென்ற
வாழ்வுறச் செய்யுமெந் தாய்மயில் வாகனனே.
(21)
அகவல்
கனக
மாலறக் கழுவி யப்பா
லனகநின்
றிருவா யறைந்த வாறு
மூவுல
குணர முயல்பெருங் கிணற்றி
லோவுறா
நதியொன் றொளிர்தரக் காட்டி
மீனுறழ்
கண்ணார் வேட்கை முதலா
யானுளத்
தமைக்கு மியாவு நீத்துண்
றிருவடித்
துணையிற் சேர்தரக் கொண்டு
வருபிறப்
பொன்று மருவா தருள்வாய்
சத்தி
வேற்கைச் சரவணன் றானே
முத்தி
முதலெனு முனிவோர் குறிக்குஞ்
சமய
நெறியின் றலைப்பெயர் வாய்ந்து
கமலை
மனையுறழ் கவினொடு பொலிந்து
புகழ்பெருங்
குமார புரியி
னிகரில்வேல்
பிடித்து நின்றசே வகனே.
(22)
வெண்பா
சேவேறு
வார்க்கினிய தேசிகனைச் செங்கமலப்
பூவேறு
வானைப் புடைத்தானைப் – பாவேறுஞ்
செல்வக்
குமாரபுரிச் சேந்தனைப்போற் றாப்புலவர்
சொல்வக்
கணைநந் துயர்.
(23)
கட்டளைக்
கலித்துறை
நந்தமர்
செங்கைத் திருமான் மருக னறைக்கடப்பங்
கொந்தலர் மாலை கொடுத்தாலென் பேதையைக் கோரமதன்
வந்தனஞ்
செய்குவ னிந்தைவிட் டேத்தி வணங்குமர
பொந்தமர்
கிள்ளை பயிலுங் குமாரபுரி முற்றுமே.
(24)
அகவல்
முற்றுநின்
செயலென் மொழிதரு மென்னை
யெய்றுறுந்
தொழிலு மென்வாய்ச் சொற்கள்
காமுறு
நலமுங் கருதிநன் குணரின்
மாமுத
றடிந்து மகபதி முதலோர்
தம்மைமுன்
புரந்த தனிப்புகழ் மறந்து
வெம்மையார்
காட்டில் வியனுருப் பொலிபேய்க்
கணத்தொடு
நடித்துக் கராமக வுமிழப்
பணத்தகு
புலவன் பகர்தரு முதற்பேர்
மெய்ப்படப்
பெற்றோன் விதுவரா நாளி
லுய்ப்பது
பெற்றா னுஞற்றும் பூசை
கொண்டவ
ளருளாற் கொடுத்த மகவெண்
விண்டயர்
கின்றேன் வெறுத்தெனை விலக்கேல்
செந்தி
லோகந் திருமலை முதலா
முந்தியற்
கோயின் முழுமையு மழுக்கா
றெய்தத்
தகும்பே ரியற்கையொன் றெய்திய
புண்ணியக்
குமார புரியிற்
றிண்ணிய
வேல்கொடு திகழ்கிழ வோனே.
(25)
வெண்பா
கிழவனுருக்
கொண்டுகுறக் கிள்ளையிடஞ் சென்றாய்
மழலைமொழிச்
சேயுருவாய் வந்தா – ளழகியபொற்
றோகைமயில்
வீரா! துகடீர் குமாரபுரி
வாகைவடி
வேற்கையிறை வா.
(26)
கட்டளைக்
கலித்துறை
இறையள வேனுநின் மெய்யன்பி லேனெனை யேற்றுமனக்
குறைதவிர்த்
தாளவும் வல்லாய் கொல்லோதென் குமாரபுரி
நிறைதருஞ்
சீரெய்த வந்தாய் தினமு நினைப்பரைப்
பிறைமுடிக்
கும்படி செய்வா யெவர்க்கும் பெரியவனே.
(27)
அகவல்
பெரியவர்
நால்வர் பேணி யேத்த
வரிய
கல்லாற் கீழமருங் குரவன்
பரவுநிற்
பழிச்சும் பான்மை யேனை
விரவுமா
ணவநோய் வேரற முருக்கி
வடவரைப்
புடைத்த வழுதி வலியுங்
கடல்குடித்
தான்றோன் கல்விப் பேறுஞ்
சண்பையூர்ப்
புலவன் றனது மாண்பும்
விண்புரைந்
துருப்போன் விளங்குங் கவினும்
பெறக்கொடுத்த
தாண்டுன் பெய்கழற் றுணைத்தா
ளுறக்கொள்
வானொருசற் றுளமினி திரங்காய்
வால்வளை
மூரலு மலர்ப்பெரு வாவி
சால்வளம்
பொலிந்து தமநிய நகரி
புரைதரு
குமார புரியிற்
றரைமுழு
துய்யத் தழைத்தகாங் கேயனே.
(28)
வெண்பா
காங்கார்
நிறத்தொருத்தி காதல்விஞ்சிக் கானவர்தம்
மாங்காரங்
கொள்றுறச்செற் றாண்டானைத் – தீங்காளர்
போற்றாக்
குமாரபுரி யிற்பணிய வல்லா
ரேற்றாளன்
சீர்பெறுவா ரே.
(29)
கட்டளைக்
கலித்துறை
பெறுவாருக் குண்மைப் பொருளோது ஞானப் பிரான்பிறங்கு
மறுமாமுகத் தெந்தை யைங்கரத் தான்றுணை யான்றபுகழ்க்
குறுமா
முனிக்கருள் கோமானென் பார்கள் கோடியவரைக்
கறுவாண்மை
யோங்குங் குமாரபுரி யன்ன காரணரே.
(30)
நூற்பயன்
வெண்பா
கொய்ம்மலர்த்
தண்சோலைக் குமாரபுரிக் கோன்புனையு
மும்மணிக்
கோவை மொழிவார்க்கு – மைம்மருவு
வானகத்துத்
தேவர் மருவாப் பெருவாழ்வு
மீனமற்ற
வீடுமெய்து மே.
(31)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக