வியாழன், 24 செப்டம்பர், 2026

வீரகேரளம்புதூர் மருதப்பன் கீர்த்தனை, விருத்தங்கள்

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

வீரை மருதப்பன் கீர்த்தனை

 

எடுப்பு

ஏனா னழைத்துநீ யான்பூசித் திடும்வேலை

யெண்ணிவ ணங்க வந்திலாய்.      

(ஏனா...)

தொடுப்பு

வானா டரும்புகழ் வீரகே ரளம்புதூர்

மகராச ராசச்சிரீ மருதப் பாண்டியா

            மற்க டக்குணம் வித்து வச்சன

            ருக்கு ளுற்ற துணர்ச்சி யுற்றுளை.

(ஏனா…)

முடிப்பு

யுத்தஞ்செய் வோர்தலை யுருட்டும்வாள் பிடித்தநா

மூர்தொறும் போய்மண்டை யோட்டிலே றறருந்திய

            பித்தன்மகன் கைவேலைப் பார்க்கப்படா தென்னும்

            பெருமைபா ராட்டியோ பெருமாள்விழி முன்னாள்

பெற்ற பொற்கொ கட்கு வப்புமி

கப்பொ ருத்துபு யத்தி லுற்றது

            பேசு தொண்ட ரெலாம்வி ரும்பரு

            ளாவ தெண்டரு சூரை வென்றது.

(ஏனா…)

கோடி மன்னர் கெஞ்சிக் கேட்டாலுங் கொடுத்திடக்

கூடாத தமிழ்விலை கூறி வருதல் கண்டு

            சாடி யிற்பொன் வைத்துக் காக்க விரும்பு மூடத்

            தன்மை யுடையா ருடனென் னையுமதித் தாயோ

சாலி வாகன னாதி யோர்விழை

வோடு மாறுமு னோதி னேனது

            சரத மென்றுகொ ளெனது நெஞ்சிடை

            யணுவும் வஞ்சக மிலைவ லிந்துமுன்

(ஏன…)

நின்குடைக் கிழுள்ள நகர்த்தொகைக் கதிகமா

நின்மக்க ளாம்படி நினைத்தாலு நினைத்திடு

            மென்குறிப்பின் படியருள் செய்து கலிப்பேயை

            யிருப்புச் செப்பிலடைத்து நெருப்பிற் போடினும்போடு

மேழ்க டற்குளு மோடி ரத்தம

ளாவி டச்சம ராடும் வெற்றியொ

            டேய்ந்த தண்டர்பி ரான்பெ ருந்துயர்

            தீர்ந்து யும்படி தோன்றல் வம்பல

(ஏனா…)

இந்தப் பல்லவி தொட்டே நூறு சரணம் பாடி

யேற்பித் தாலு மேற்பிப் பேனென்று மறிவாயெண்

            சந்தத்துள் ளலுமொரு பாடலிற் காட்டியுந்

            தக்கவுத விகள்செய் விக்கார்போன் றிருக்கின்றாய்

தனைய னார்பலர் மகிழு மாறுநல்

கியகு ணாகர விருத யாலய

            தழையு மீடுறு கிளுவை யாதிப

            முருக தாசனெ னுரிமை மீறியும்.

ஏனா னழைத்துநீ யான்பூசித் திடும்வேலை

யெண்ணிவ ணங்க வந்திலாய்.


வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

வீரை மருதப்பன் விருத்தங்கள்

 

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

மருதப்பன் சபையின்முத லொலியலந் தாதிக்கடலை

            வார்த்திட் டின்பம்

பெருகுதில்லைத் திருவாயி ரப்பனுவற் கவிதுவக்கிப்

            பேசு நாளிற்

பொருவிலவன் கனகசபா பதிமுதலி வருகின்றான்

            போய்நான் கூட்டி

வருகின்றே னைந்தாறு நாளிலெனச் செழும்பவள

            வாய்விண் டானே.

(1)

அழையாத கோயில்கட்டும் போய்த்தனது கட்டளைக

ளமைக்குஞ் சீலந்

தழையுமித யாலயபூ பாலாநின் சத்திரத்திற்

றானா வந்து

நுழைதருநங் குகனைமட்டு மேன்மதித்தில் லாயழைத்து

            நோக்கச் சற்றும்

விழைகிலையே யிதுவுமொரு தருமமென்னு ஞானமுண்டேல்

            விளம்பு வாயே.

(2)

குருபாதத் தாணையுன்னைப் போலுமொரு வடிவமென்னுட்

            குலவி யென்ற

னருகேநின் றொளிர்வேலைப் பார்த்திதென்னிற் பெரிதெனுஞ்சொ

            லறையக் கேட்டேன்

றிருமாதுங் கலைமாது மருவிதயா லயமகிபா

            செவ்வேள் போன்றென்

னருமாந்த தமிழ்க்குருகா வன்மையுநன் மையுங்காட்டி

            யவிர்கோ மானே.

(3)

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக