வியாழன், 24 செப்டம்பர், 2026

திருவரங்கம் திருமால் பதிகம்

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

திருவரங்கம் திருமால் பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

அறுத்தவித்த மீனையுயி ராக்கும வன்பால்

வெறுத்துநின்பால் வந்தேன் விரும்பிக் – கறுத்தபொறிப்

பாம்பிற் கிடக்கும் பழையரங்க நாதாநீ

சோம்பிக்கொள் ளாதே துயில்.

 

பதிகம்

(எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

திருவரங் கத்திரு வாயிரம் பாடச்

செய்தநின் றிருவருட் சீர்திக ழாதோ

லொருவரங் காதலித் தேத்துகில் லேன்றன்

னுள்ளக் கண்முற்றோற் றியவுண்மை பொய்த்திடுமோ

செருவரஞ் சாண்மை நட்டுழைத் தவனொருவன்

கிளர்தரச் செய்யினின் தீர்த்திமங் குறுமோ

தருவர சுயந்திடத் தந்திநல் காறோர்

            தாரெனப் புனைதரு தனிநெடு மாலே.

(1)

சதுமுகப் பண்ணவன் சாற்றிய வேதத்

            தலைபுரை பசுவினந் தளர்வது கண்டுங்

குதுகுலந் தவிர்கல ராயினு மாக்குங்

            குருட்டுமக் களொடெனைக் கூட்டிட லாமோ

மதுரவண் டமிழ்ப்பிற தேகிய நீர்மை

            மறைந்தது வோபெரு வஞ்சரிற் காமோ

பதுமை யொடம்புவி மகள்தம் வருடப்

            பாம்பலோ ராற்றிடைப் பள்ளிகொள் வானே.

(2)

சினைமுதிர் பசுக்களுங் கொன்றுதின் றுவப்பார்

            தீக்குடைச் சாயையிற் சீரழி கின்றேன்

றனைவலி தாண்டநின் சத்தியம் பொய்த்தாற்

            றரைமக ளழுந்துயர் தவிர்வதெய் வாறோ

பனைமுத லியசில மாங்குறிக் கொண்டு

            பலியிடு வாரங்கப் படுத்தலு முறையோ

வனையிலெண் மடங்கரு ணமலிதகை யெய்தி

யாற்றிடைத் துயில்கொளு மரங்கப் பிரானே.

(3)

சொற்சுவை லெள்ளள் வேனுமுற் றுணராத்

            தூதருங் கப்பெருந் துயருறல் கண்டாய்

கற்சுனை நீர்முத லாய்பல பேறு

            கருதுமென் னுளத்தருட் களியுதி யாதோ

முற்சுரர் வாழ்வுறத் தானவர்ச் செறுசீர்

            மொழிவதற் கொருபயன் முன்னிநல் காயோ

சிற்சுக வாரிதி யமுதென நாளுள்

            திருவரங் கத்திடை திகழ்பெரு மானே.

(4)

கண்ணகன் மாநிலத் துன்னடி யவரென

            கருத்துணர்ந் துவப்புறக் கருணைசெய் யாயேல்

விண்ணவ ராதியா றியவென் றன்னுள்

            விளங்குநின் னாட்கள் வெறுமை படாவோ

பெண்ணர சாகியுந் தானவர்க் கீறு

            பெரிதுசெய் துள்ளநின் பீடுசொற் றிலனோ

தண்ணளி மாரிபெய் முகிலனை யானே

            தனியரங் கத்திடை சயனஞ்செய் வானே.

(5)

கதிர்நடு விழுப்பொடு ளெம்மதென் றோதிக்

            கமலடிங் கவனமறைக் காதல் கொள்வார்போல்

விதிசில தழுவியுந் தம்மின மறியா

            வீணரொ டென்னையும் விடமன் மிசையேல்

புதியதொண் டேனல னென்றமே யிந்தப்

            பூதல மறிதார் புரியவொண் ணாதோ

வதிரக் கோடிகள் வழிபட நாளு

            மரங்கநன் னகரிடை யமர்பெரு  மானே.

(6)

காசை மென்மலர்த் துணர்நிகர் திருமேனிக்

            கவின்முத லாவன் காண்டொத் தமியே

னாசை மிக்குறும் படிமன் வெளியூடே

            யவிர்ந்தமெய் யுலகமுற் றறியவொண் ணாதே

வோசை  வெண்சங் கமொன்றா லுமொன்னார்

            தம்முர னழித்தாயென வுன்னுகின் றிலனோ

பூசை செய்வார்க் கெளியாய் திருவரங்கம்

            புரந்தருன் மாண்புடைய புண்ணியப் பொருளே.

(7)

தில்லையிற் கூத்தனுஞ் செந்திலிற் சேயுஞ்

            சிந்துர முகன்முதற் றேவர் பற்பலரு

மில்லையென் றுரைப்பவர் தம்மினும் பொல்லாய்

            கியற்றினார் ரெனையெண்ணி வந்த டைந்தேன்

குல்லையென் மலர்மலி யன்நகையிற் செய்த

            கொரணி செய்தின் னுங்குலைய விடாதே

தொல்லைவல் வெழமொன் றுயவுறக் காத்தாய்

            துகளில் பொன்னியினடுத் துயில்வல் லானே.

(8)

தன்னுடற் காய்கனி மித்தமன் றிறைஞ்சுந்

            தான்வச் செயெதிர் தனியரி யேறா

மின்னுபொற் றூணினின் றுதித்ததுண் டாயின்

            வேதமு மாகம விரிவுமிக் குயர்வரப்

பன்னுநர் பசுக்குலம் வாழ்வது நாடிப்

            பதைக்குமென் றனக்கருள் பாலிக்கொண் ணாதோ

மன்னுதொல் சீர்த்திரு வரங்கநன் னகர்வாய்

            மாசுண மேற்றுயிர் வாழ்வுடை யானே.

(9)

வழுதிநன் னாட்டினொண் முகநிகர் குருகை

            மாநகர்ப் புளியிடை வாழ்முனி முதலாந்

தொழுதகைப் பதின்மர்தங் கவிகளொ டென்சொற்

            றொடைபுனை வாயெனிற் றூய்மைகுன் றிடுமோ

வழுதுரு கியமுழுத் தொழும்பருக் கருள்வீ

            டதுசிசு பாலனுக் களித்தனை யன்றே

கழுதுட னாடின்ற சுடலையிற் புரந்தாய்

            காவிரி யாற்றிடை கவின்றரு வானே.

(10)

கலிவலிக் கஞ்சியுத் தமர்பெரி தேங்கக்

            காலிகொன் றுண்பவர் கருங்குடை நிழலிற்

புலிநிகர் வீரமுற் றவிர்திருப் புகழோன்

            பொன்னிநன் னதிநடுப் புயங்கமெல் லணைமாற்

கொலிமலி யாயிரங் கவிகொடு வருநா

            ளுரைக்குமிப் பதிகநன் குற்றுணர் கிற்போர்

குலிசவ லாரியுந் தேவருங் கண்டு

            கூசிடத் திருவருட் கொள்ளைகொள் வாரே.

(11)

முற்றிற்று.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக