வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
அருளிச் செய்த
வீரகேரளம்புதூர்
திருமால் பதிகம்
காப்பு
(நேரிசை
வெண்பா)
காரைப்
பழித்த கருநிறத்தெங் கண்ணனைத்தென்
வீரைப்
பதியில் விளம்புதற்குத் – தாரைமதத்
தானைமுகநாற்
றோளைந்துகரங் கொண்டவிருஞ்
சேனையர்கோன்
காப்புச் செயும்.
(அறுசீர்க்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
உன்னதுசந்
நிதியினில் வந்துவண மிசையுன்னுருவ
முன்னா நிற்கு
முன்னமென
துளமறியப் புரிகருணை யுலகுணர
முதிர்நா ளென்றோ
பன்னகத்தின்
றலையேறிப் பரதமியற் றியசெழுந்தாட்
பசும்பொற் குன்றே
மின்னகுவேற்
படைவீரர் பலர்போற்றக் குலவுதமிழ்
வீரை மாலே.
(1)
கச்சியிலோர்
புலவனவில் கவியொன்றாற் போய்மீண்ட
கதைமெய்
யாகி
னச்சியவா
றெத்தனையோ பனுவனுவன் றுள்ளேனை
நலிக்க
லாமோ
பச்சிறகொன்
றணிதருசூ ழியக்குருந்தாய்ப் பொதுவர்மனை
பலவற் றுற்றாய்
மெச்சியபா
வலர்பலர்க்கோ ராதரமாத் திகழ்தருதென்
வீரை மாலே.
(2)
பூதலத்தி
லுள்ளவுயி ரத்தனைக்குந் தகுமுணவு
புகட்டும் நீநின்
பாதமற
வேனையிஙன் வருத்தலும்பே ரருட்குரிய
பண்பு தானோ
மாதவனென்
றிறைஞ்சினர்க் கருள்பேற்றை யிகழ்ந்தாற்கும்
வழங்கி யாண்டாய்
மேதகுசிற்
றாற்தன்பால் விளங்குமம ராபதிநேர்
வீரை மாலே.
(3)
அல்லிக்கே
ணியிற்கொடுத்த கடன்சீட்டுந் தலையாகி
யலர்ந்த பூவி
னல்லிக்கே
யெனவனந்தை நகரிலுரைத் திடுமொழியு
நம்பொண் ணாதோ
புல்லிற்றோ
லுரித்தணிந்தான் தலைநடுச்செந் நீரருவி
பொலியத் தாக்கும்
வில்லிக்கோர்
சாரதியாம் விளையாட்டுஞ் செயத்துணிந்தாய்
வீரை மாலே.
(4)
திருவரங்கப்
பெருநகரி லென்னதுபாட் டுவந்துசற்றே
சிரித்த நினவா
யொருவரஞ்சத்
தியமாகக் கொடுக்கிலிவ்வா றூர்தொறும்போ
யுழல்வேன்
கொல்லோ
விருவரன்புற்
றமைவதற்கு மிடங்கொடுத்த நெடுமேனி
யிறைவா விண்ணோர்
வெருவரச்செய்
வார்க்கறுவும் வென்றியுளாய் வியன்குலவும்
வீரை மாலே.
(5)
உரைக்கரும்பற்
பலதொழும்ப ருனைத்துதிக்கின் றார்கதிவேட்
டுன்கை யோர்நாள்
வரைக்குடைதாங்
கியும்புரந்த பசுவினம்வாழ் வதுகுறித்து
வருந்து கின்றேன்
திரைக்கலைப்பா
ரினரிகழா வாறருள்வாய் கவுத்துவமுந்
திகழ்பல் பூணும்
விரைத்துளவுந்
திருமகளு மிளிர்மார்பா வீரர்மலி
வீரை மாலே.
(6)
தெள்ளியசெந்
தமிழ்ப்புலவர் குலமதிக்கும் பேறளித்தாய்
சேணா ருக்கு
மொள்ளியசீர்க்
குளிகையுளா ரினமதிக்கத் தகும்வாழ்வு
முதவி யாள்வாய்
துள்ளியவே
றேழடர்த்தோர் மகட்புணர்ந்தாய் பாண்டவர்கை
சோரா வண்ணம்
வெள்ளியசங்
கொன்றெடுத்தூ தியகனிவாய் முகிலனையாய்
வீரை மாலே.
(7)
கூர்த்தநெடுங்
கோட்டொருமால் களிறழைப்பச் சென்றபுகழ்
குன்றி டாமற்
றூர்த்தகுணக்
கலியாய முதலையினாற் றளருமென்முற்
றோன்றி யாள்வாய்
போர்த்தகுவர்
குலத்தினுக்கோர் கூற்றாகு மாழியங்கைப்
புயலே பொல்லார்
வேர்த்தவச
முறத்தாக்கும் வெங்கலவன் மரபுயர்த்தும்
வீரை மாலே.
(8)
தந்தைசினஞ்
சகிப்பரித்தாத் தன்னுயிர்காப் பதற்கிரங்குந்
தகுவப் பாலன்
சிந்தையுவப்
புறத்தூணி லுதித்ததுண்டே லெனக்குதவி
செயத்தான் வேண்டும்
பந்தைநிகர் கொங்கைமின்னார்
பலர்கலைகொண் டொருத்திபெறப்
பலவாங் கீந்த
விந்தையுளாய்
மண்ணுலகும் விண்ணுலகும் பரவுதிரு
வீரை மாலே.
(9)
துதிபகரென்
றனக்குலவா வருட்பேறுந் திருக்கோயிற்
றொண்டே நாடு
மதியிதயா
லயற்கருமை மகப்பேறு மிக்கணமே
வழங்கி யாள்வாய்
பதின்மர்தமிழ்க்
கருள்புரிந்தாய் பரிமுகன்கைக் கணையெரித்த
பாலற் காத்தாய்
விதிவிதிப்பார்
பலர்பிறக்கும் வியனுந்தித் தாமரையாய்
வீரை மாலே.
(10)
சீதளசந்
திரனொடுசெங் கதிரனைய சங்காழித்
திருக்கை யானை
வேதநெறி
பிழையாம லுகந்தொறும்பல் வாறுருக்கொள்
வீரை மாலைப்
போதவளம்
பொலியுநெல்லைப் பதித்தவமே போன்றதிருப்
புகழோன் பாட
லேதமற்ற
தெனத்துதிப்பா ரெவரேனுங் கருதியபே
றெய்து வாரே.
(11)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக