வியாழன், 24 செப்டம்பர், 2026

திருப்புகலூர்ச் சித்தர் பெருமான் பதிகம்

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

திருப்புகலூர்ச் சித்தர் பெருமான் பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

சித்தர்பெ ருமானாத் திருப்புகலூர் வாழ்நின்ற

வத்தனடி போற்றுமெனக் கானதுணை – மத்தகய

மாமுகத்தா னறுங்க வடிவேற் குகப்பெருமா

ளாமுகத்தா னாதியரெல் லாம்.

 

பதிகம்

(எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

தங்கமதரச் செங்கலைச்செய் தன்றுதித் திடுமோர்

தமிழ்ப்புலவற் கீந்தீரத் தரும்குண சீல

னெங்களையெல்லா மும்தூரப் பாடும்வண்ணஞ் சொன்னா

னென்னினத்தார் பலருமதை யேற்றிலர்நா னிசைந்தே

னிங்கடியேன் வேண்டியபே றத்தனையுந் தருவீ

            ரில்லையென்றா லிளப்பமுண்டா மெனப்பதறி யீரோ

செங்கமலக் கண்முகுந்த னாதியரே வாழ்த்துந்

            திருப்புகலூர் வாழ்நின்ற சித்தர்பெரு மானே.

(1)

அப்பனெனுந் தமிழ்ப்புலவற் காடகமு மணியு

            மணங்கினமுங் கொடுத்தீராங் கவனிகழ்ந்தா னுணடீ

ரிப்படிநான் வருந்தல்கண்டு மிரங்குகில்லீ றந்தோ

            விகதலத்துச் சிறுமியர்க்கு மீனர்தங்கைப் பொருட்கு

மெப்படியா யினுங்கிடைத்தா னலமெனவே(ண் டியரு)ளே

            னென்றமிழும் விழைகின்றீ ரியாதுசெய்வீர் கொல்லோ

செப்பமுறு தெருவளமும் வயல்வளமுங் காட்டுந்

            திருப்புகலூர் வாழ்நின்ற சித்தர்பெரு மானே.

(2)

வாதவூர டிகண்முதற்சிற் சிலர்போன்று மதுமல

ரடியேவேண் டுமெனுமவ ரயினனியா னலலேன்

காதலுற்ற படியாடச் சித்தியெட்டும் வேண்டுங்

            கடலுலகிற் கொலைபுலைவோ களைந்தெறிய வேண்டு

மோதலுற்ற சமயமுற்றுந் தொழவிளங்க வேண்டு

            முமைக்கலக்கு முத்தியிது முறவேண்டுங் கண்டீர்

சீதளநன்னீ ரொடுவெண்மதி யிருந்தசடை யீர

            திருப்புகலூர் வாழ்நின்ற சித்தர்பெரு மானே.

(3)

அன்றுதண்டி யடிகளும்மா லத்தனைபே றடைதற்

            காதார மாயிருந்த வர்னினம்பற வலவீண்

டின்றுலக்கை யாலடியுண் டிறப்பதனைக் கண்டு

            மெரியில்வீ ழாதுமதருட்பே றெண்ணியிருக் கின்றே

னொன்றாயட வும்முடனே கலக்குமுத்தி யினனே

            யுதவிடினும் பொருந்தேன்கா ணுரமிகத்தனி தாள்வீர்

சென்றுபொல்லார் புரமூன்றும் பொடியாக நகைத்தீர்

            திருப்புகலூர் வாழ்நின்ற சித்தர்பெரு மானே.

(4)

கொன்றைமதிச் சடைமுதலாஞ் சீர்துலங்க யிடபாற்

            கோல்வளையாள் வசிப்பநடுக் குகன்குலவ வெள்ளிக்

குன்றைநிகர் மால்விடைமே லுமைக்கருதா ரேபோற்

            குலைகின்றேன் சேவைநல்கிக் கோதொழித்தான் டருள்வீர்

ரென்றைநிக ராழியொன்று மாயனுக்கன் றளித்தீ

            ரெனக்கிரங்கா திருக்கும்வித மியாதுகொலோ வறியேன்

தென்றலவரைக் கோன்முதலோர் வழிபடுஞ்சீ ரோங்குந்

            திருப்புகலூர் வாழ்நின்ற சித்தர்பெரு மானே.

(5)

மீன்பாய்ந்தாங் கிறங்கும்விழிப் பாவையர்தம் மாசை

            விடமாட்டா வெனக்கிரங்கா விகற்பமுமக் குண்டேன்

மான்பார்வைச் சங்கிலியும் பாவையுஞ்சே ரொருவன்

            வழிபாடு கொண்டுகொண்டு மாழைநல்கு வீரோ

வேன்பாசாங் கடிக்கின்றீர் நீரசையா விட்டா

            லெனக்கென்றோர் செயலுளதோ வெட்டிலொன்றியா னலனே

தேன்பாய்தண் பணைவரம்பி லோதிமங்கண் டுயிலுந்

            திருப்புகலூர் வாழ்நின்ற சித்தர்பெரு மானே.

(6)

மெய்யடியார் பதத்துகளே தஞ்சமெனக் கொண்டு

            மவிரிஞ்சன றியாதியரா விளம்புமெந்தத் தேவு

மையமின்றி யுமதுறுப்பே யென்றுணரப் பெற்று

            மகிலமிசை யான்படும்பா டறியாரோ வருளீர்

வையகத்திசை கொன்றையிலவா ரின்றியொழி யாமுன்

            மலரடிசே ரேனெனுமிவ் வண்குணமே னளித்தீர்

செய்யவளுங் கலைமகளுஞ் சிறிமேவிட்டு நீங்காத்

            திருப்புகலூர் வாழ்நின்ற சித்தர்பெரு மானே.

(7)

வசைதவிர்முத் தமிழ்விரகன் மொழிபிழையா தன்றோர்

            மதலையொரு தொண்டனுக்கு வழங்கலுண்மை யானா

லிசைமலியும் வன்றொண்டன் பதிகமுற்றும் பொய்யா

            தெனக்கிந்நா ளருள்புரியா திருப்பீர்கொல் லடியே

னசைகொடுமமைப் பாடவசை கின்றதுநீ ரன்றோ

            நல்வழக்கீ தறியாம னாட்கழிந்த வன்றோ

திசையறிந்த வில்லடிக்கும் பாசுபத மீந்தீர்

            திருப்புகலூர் வாழ்நின்ற சித்தர்பெரு மானே.

(8)

பாவிகளே யுலகமுற்றும் பங்கிடுமிந் நாளிற்

            பசுந்தமிழல் லாமலொரு பற்றுமறி கில்லா

வாவியினேற் குடலறித்த காரணமே னந்தோ

            வழிவில்லாத் தவசிகளிங் காருமில்லார் போலுங்

கோவிலெங்கு முதற்பூசை கொள்ளுமைந்த னாணை

            குகனாணை யினியேனுங் கொடியவர்தங் கையாற்

சேவினமா தியமடியா தருள்புரிய வேண்டுந்

            திருப்புகலூர் வாழ்நின்ற சித்தர்பெரு மானே.

(9)

தென்மதுரை யுக்கிரனுக் களித்தவைவேன் முதலாச்

            சிறியனேன்வி ரும்புகின்ற சீர்பலவும் வேண்டும்

பன்மகளிர்க் கோர்துணையா முல்லையிலன் றாடல்ப்

            பிற்றினான னையாமெச்சும் பான்மைகளும் வேண்டும்

வன்மமுற்ற சாரணரைக் கழுவிலிட்டோன் முதலா

            வகுத்துரைக்கு நால்வர்பெற்ற வாய்வுலியும் வேண்டுஞ்

சென்மம்வா ரதும்முடனே கலந்திடவும் வேண்டுந்

            திருப்புகலூர் வாழ்நின்ற சித்தர்பெரு மானே.

(10)

எத்தனையோ மலைகளையுந் கரகளையுந் தெய்வத்

            தினங்களையுஞ் செந்தமிழா லிசைத்திசைத்துப் பாடி

யத்தமுமெய் தரிதாகிய பரதவிக்குங் கொடிதால்

            லுத்ததிருப் புகழோனுக் கருள்விளக்கந் தன்னாற்

புத்தமுத மொழிப்பாவை கேள்வனந்நாள் புலவீர்

            புகலூரைப் பாடுமெனப் புகன்றவிதந் தோன்றிச்

சித்தர்பிரா னென்றவ்வூர்ச் சிவனைநுவன் றிட்ட

            திருப்பதிக மிவைகற்பார்தீ வினைதீர தருமே.

(11)

 

முற்றிற்று.

           

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக