வண்ணச்சரபம்
தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
திருவாமாத்தூர்த்
திரிபந்தாதி
பாயிரம்
கட்டளைக்
கலித்துறை
1.
வெள்ளி
மலையைச் சிலையாம்பொன் மேருவை விற்றனையோ
வொள்ளிய
செல்வக் குபேரன் சினேக மொழிந்ததுவோ
தெள்ளிய
பாவலர்க் கஞ்சிப் பதுங்கித் தியங்குவதேன்
கள்ளியல்
கொன்றைச் சடையாய்தென் மாதையின் காவலனே.
(1)
2. பொதுவாய வென்னைத் தனதாக்கிக் கொண்ட புகழ்பெறுநீ
யிதுகாறுஞ் சித்தியொன் றேனுநல் காம லிருப்பதென்னோ
பதுமா தனன்பொறி தீதாயின் மாற்றும் பலமில்லையோ
விதுவாழ் சடைக்கிழ வாமாதை மாநகர் மேயவனே.
(2)
3. சீதைத் திரிபுணர் கோமான்மு னெய்துஞ் சிறப்படையப்
பேதைத்
திரிபுந்தி யேன்வெஃகி முக்கட் பிரானைநம்பி
மாதைத்
திரிபு கவிதையந் தாதி வகுக்கச்செய்வோ
னோதைத்
திரிபுர சங்காரத் தேரச் சொடித்தவனே.
(3)
பாயிரம்
முற்றிற்று.
நூல்
4. நீர்மலி பம்பை நதிசூழு மாதை நிமலனெடுங்
கார்மலி
பம்பையந் தேங்கச்செற் றோன்பல காலிகுலாஞ்
சீர்மலி
பம்பைத் தொனிசாலு முல்லையின் செல்வமுற்று
மார்மலி
பம்பைத் தலைமாண்பென் சென்னிக் கருளினன்றே.
(1)
5. அருளானந் தத்தை மதியா துலகத் தவர்கொளும்பொய்ப்
பொருளானந் தத்தைய லார்படைக் காமன் பொரலொழித்தா
டெருளானந் தத்தையை யான்மருப் பீந்த சிவாமுன்னைநா
ளிருளானந் தத்தைய னேமாதை வாழு மிறையவனே.
(2)
6. இறையள வாயினு நின்னருட் பேற்றுற வின்றிநெஞ்சக்
கறையள வாய்சொரி பால்போற் றவஞ்செறற் கண்டுநொந்தேன்
மறையள வாவுடை யார்பலர் வாழ்வுறு மாதையப்பா
பிறையள வார்சடை யாய்விடை மேற்றிகழ் பிஞ்ஞகனே.
(3)
7. பிஞ்சு மதியணி செஞ்சடை யாய்மிகப் பேணியன்பிற்
கெஞ்சு மதியணி யார்க்கெளி யாய்நின் கிருபையொன்றே
தஞ்சு மதியணிற் காவார்தென் மாதையிற் சார்ந்தனன்காண்
கொஞ்சு மதியணித் தொண்டர்கு ழாத்தொடெற்
கூட்டுதியே.
(4)
8. கூட்டுக் களப முலைச்சீர்முத் தாம்பிகை கோலமிக
வேட்டுக் களபத் தொடுசேய்தந் தானை விளக்கும்விளை
யாட்டுக் களபமென் னார்மாதை வாழு மழகனைச்சொற்
பாட்டுக் களபமைக் கும்புல வோர்துதி பாடலரே.
(5)
9. பாடல னேகம் பெறுமாதை யாளும் பரன்பிறரை
நாடல னேகம்பம் விட்டுவந் தார்முன் னவில்பனுவற்
சூடல னேகம் பொருளென் றுணர்த்துந் துணைப்பதத்தான்
வீடல னேகம்பி யாரெண்ணம் போன்று விளங்கன்மெய்யே.
(6)
10. விளங்கனி யென்றுறு கொங்கைமின் னார்தரும் வேட்கைமிஞ்சி
யுளங்கனி யென்றுயர் தீர்த்தாளு நாளொன்
றுளதுகொல்லோ
நளங்கனி யென்று மமர்பாக மாதை நகரதிபா
களங்கனி யென்றுற ழத்தகிப் பார்துணைக் காரணனே.
(7)
11. காரண காரிய மானார்தென் மாதைக் கடவுள்பரி
பூரண காரிய மற்கெமன் முக்கட் புராரியிகற்
சீரண காரியன் னார்நீர்மைக் கோர்விதைத்
தேறனையா
னாரண காரியற் பாக்கொன்றை போல நயப்பதுண்டே.
(8)
12. நயந்தந்த வாரண மாகம மாதிய நற்சுருதி
பயந்தந்த வாரணம் பூசிப்ப மாதைப் பதியினின்றோன்
வியந்தந்த வாரணங் கார்மூவர் போற்றும் விமலனருண்
மயந்தந்த வாரண மூதிய மாதி வகைமுற்றுமே.
(9)
13. வகையனந் தம்படப் பேராசை கொண்டு வருந்தெனக்குத்
தகையனந் தம்புனை கையான் பெருமை தரவல்லையோ
திகையனந் தம்பமென் வார்வயன் மாதைச் சிவாசெழுந்தீ
நகையனந் தம்புணை யானாயெந் நாளு நடிப்பவனே.
(10)
14. நடிப்பவ னாதிரை நாளுடை யான்றிகழ் ஞாலமுற்று
முடிப்பவ
னாதி முதலாகி நின்றவன் மொய்த்ததுகிற்
கொடிப்பவ
னாதிக மார்மாதை யூரனென் கோதனைத்தும்
பொடிப்பவ
னாதியுண் ணாநோன்பு நோற்றுப் புலர்ந்தனனே.
(11)
15. புலவரை யன்று துயர்கூரப் பார்த்த புனிதர்சென்னி
நிலவரை யன்றுங்க மோகினி பால்வர நேர்ந்தவள்ளல்
பலவரை யன்றுதி சான்மாதை நாதர் பகடுவிண்ணோர்
குலவரை யன்றும்பிக் கேற்றமென் சாட்சிவெண்
கோட்டினமே.
(12)
16. கோட்டிய தாளவொல் காதானை மாதையின் கோயில்வள
நாட்டிய தாளழ கேசனைக் கோர நமனடுங்க
நீட்டிய தாளனை நம்பிநின் றாலந் நெறிவினையை
வீட்டிய தாளர்க்கும் வீடருண் மாட்சி மிகநல்குமே.
(13)
17. மிகலருக் குள்ளங் களிகூர நாடி மெலிவுறுநா
னகலருக் குத்தலை யிற்றிகழ் பேரின்ப மார்வதென்றோ
விகலருக் கும்புக ழோர்நம்பு மாதையி னெம்பெருமான்
சகலருக் குங்குரு வாவரு வாய்சிவ சங்கரனே.
(14)
18. சங்கர னாரை யொருமூன்றொ டொன்னலர் சாம்பர்படப்
பொங்கர னாரை மலிநீர்த்தென் மாதைப் புனிதப்பிரான்
வெங்கர னாரைய ருய்வானன் றுண்டமை விண்டிறைஞ்சு
மங்கர னாரையும் போற்றவல் லார்க்கெய்து
மானந்தமே.
(15)
19. ஆனந்தக் கண்ணியம் பெற்றோர்த முள்ள மறிபரமன்
மானந்தக் கண்ணி யமர்பாகன் சீர்மலி மாதைப்பிரானி
யானந்தக் கண்ணி யருளோர்சற் றீயி னிகத்தரன்றி
வானந்தக் கண்ணிய தேவருஞ் சோர்வின்றி வாழ்குவரே.
(16)
20. வாழா விரக சியந்தேற நாடி வருந்துமென்னைத்
தாழ விரகத் தழலால் வெதுப்ப றருமங்கொலோ
வாழா விரகர் பலர்போற்று மாதை யழகவன்பர்
தோழா விரகமுள் ளார்கரு தாவருட் டூயவனே.
(17)
21. தூயவெண் ணீறு முழுதணி வேற்குநின் றொந்தமின்றே
லாயவெண் ணீறு பெறாத தகுவர்க்கு மருளல்பொய்யோ
தீயவெண் ணீறுந் திருநல்கு மாதைச் சிவாமகர
மேயவெண் ணீறுன்னு கோட்பகை தீர விரைந்தருளே.
(18)
22. விரைத்த வனக மடவார்தம் மாசை வெறுத்துனன்பிற்
கரைத்த
வனக மனதாள ரோடெனைக் காப்பதென்றோ
திரைத்த
வனகஞ்செற் றோன்றொழு மாதைச் செஞ்சித்தபன்னூ
லுரைத்த
வனகவிற் கொண்டுமண் டேரன் றுகைத்தவனே.
(19)
23. உகைத்தவல் லேறுடை யான்மட வார்படை யோடுவந்து
பகைத்தவல் லேறு மதனையட் டான்பல் பசுக்களுமுன்
றிகைத்தவல் லேறுயர் தீர்த்தாண்ட மாதைச்
சிவனருள்சூழ்
தகைத்தவல் லேறுமஞ் சத்தினங் காக்குந் தரத்தினதே.
(20)
24. தரந்தர மாவிச்சை பலகோடி வந்தென் றனிமனத்தி
னிரந்தர மாக்க முறச்செய்கின் றாயென்று
நீக்குவையோ
வரந்தர மால்விடை மேற்பலர் பான்முன் வயங்கிலையோ
வொரந்தர மாதைப் பதித்திருக் கோயி லுடையவனே.
(21)
25. உடைய விழன்பு பலமாதர் கொள்ளவெள் ளோட்டொடுசெ
னடைய விழவு மலிமாதை யூரத்த நற்குணங்க
ளடைய விழந்தலை யுந்தமி யேனைநன் காதரித்துக்
கடைய விழலனை யானென்னு நிந்தை கழித்தருளே.
(22)
26. கழியவந் தானை மடவார் விளைப்பக் கலங்கியுள்ளீ
டொழியவந்
தானைந்த நெல்லாயி னேனையென் றுய்யக்கொள்வர்
யழியவந்
தானை யெரித்தளித் தாயர வஞ்சநிலங்
குழியவந்
தானை செலும்வீதி மாதைக் குணக்கொண்டலே.
(23)
27. குணக்கஞ்ச மங்கை யரையரும் விட்டுக் குணஞ்செயற்கா
மணக்கஞ்ச மங்கை யரைவேட் டுளேற்கருள் வாழ்வளிப்பா
யிணக்கஞ்ச மங்கை யரையர்கொண் மாதை யிறைவவன்பா
லுணக்கஞ்ச மங்கை யரைத்திருக் கூத்தொன்
றுஞற்றினனே.
(24)
28. இனங்கண் டவச முறத்தக்க சித்தி யியற்றநச்சென்
மனங்கண் டவப்பயன் பெற்றுய்யு நேரம் வருவிப்பையோ
கனங்கண் டவங்கரு துஞ்சிவ மாதைக்கங் காளதினந்
தினங்கண் டவகண்ட மாவிளை யாடொரு சிற்பரனே.
(25)
29. சிற்பர தத்துவ மானார்தென் மாதையின் செல்வர்கனற்
பொற்பர தத்துவ ருந்தாது காப்பவர் போற்றிசைக்கி
லற்பர தத்து வழியில்வி டாரென் றடுத்துளன்காண்
புற்பர தத்துவர் கொண்டூரு மாண்புடைப் பூங்கொடியே.
(26)
30. பூங்கொடி யன்ன மடவாரொ டெய்திப் பொருதுன்கண்ணாற்
சாங்கொடி யன்னல ரெய்யாதென் மீது தயைபுரிவாய்
பாங்கொடி யன்னவில் வார்க்கெளி யாயவன் பகட்டிருகோ
டாங்கொடி யன்ன முவந்தாய்தென் மாதை யழகியனே.
(27)
31. அழகிய நாத னணிமாதை யூர னரியதமிழ்க்
கழகிய நாதரஞ் செய்த லுஞ்சீற்ற கனல்விழியான்
முழகிய நாதவன் பற்கவர்ந் தானென்கண் முன்னிற்கவே
பழகிய நாதரு பாட லனேகம் பகர்ந்துளனே.
(28)
32. பகர விலாசறு பாணங்கொண் டோர்கள் பலரின்மிக்கோன்
சிகர விலாசப்பொற் கோபுர மாதைச் சிவனொருப
துகர விலாசங் கராசம்பு வேயெனச் சொல்லுமெனக்
கிகர விலாசந் ததிமனை யின்றொடர் டீந்தனனே.
(29)
33. தனவர தத்தையர் வீர்தர நாடித் தவிக்குமென்னைக்
கனவர தத்தையென் றோதுநின் சேய்மொழி கற்பனையோ
பனவர தத்தையு வந்தாய்தென் மாதைப் பதியில்வள
ரனவர தத்தைய னேமதிக் கூட்டுற ழைம்முகனே.
(30)
34. முகந்தந்த வானைகள் பெய்ந்நீர் முழுக்குறு முண்டகத்தா
ளிகந்தந்த வானையு மீந்தாலு நெஞ்சகத் தின்பமுறேன்
வகந்தந்த வானைய மாதையில் வேண்டிய வாறருள்வாய்
திகந்தந்த வானையின் மாதுட னேறித் திரிபவனே.
(31)
35. திரியங்க மான வொருதேவன் மாதைச் சிவன்புகர்ச்சீர்க்
கரியங்க மானப்பன் வேற்படை சேந்தன் கரத்தளித்தோ
னரியங்க மானயங் காட்டவுய்த் தோன்பத நாடுமன்பிற்
குரியங்க மானம னாற்றோன்றி மாய்த லொழிப்பதுண்டே.
(32)
36. ஒழியாத வாவெள்ள மீறலி னொந்திங் குழலுமென்னை
விழியாத வாதியிற் றோயரு ளாலென்று மீட்டுக்கொள்வாய்
செழியாத வாபரிப் பாகாவென் றேத்தினுந் தீர்விலருள்
பொழியாத வாமுத்தி யீவாய்தென் மாதைப் புரவலனே.
(33)
37. புரவல வர்க்கமுந் தீதென வெள்ளிநிற் போற்றுமெனக்
கிரவல வாதனை யுந்தீர்க்கி லாயினி யென்றருள்வாய்
பரவல வாவுல வாப்புகழ் மாதைப் பதிநடுவா
ழரவல வாமத னீறாக மாய்த்திட் டளித்தவனே.
(34)
38. அளியார வார மலிசோலை மாதை யழகனன்பிற்
குளியார வாரணத் தின்பொரு ளியாவையுங் கூறிடினுந்
தெளியார வாரத்தம் வற்றிட வெய்தித் தியங்கிமிகு
மிளியார வாரமில் லார்மனை தோறு மிரப்பரன்றே.
(35)
39. இரப்பவ ராகுல முற்றறத் தீர்ப்பதற் கிச்சைகொண்டுங்
கரப்பவ ராகத்தொ டுற்றாரைக் கெஞ்சிக் கலங்குவனோ
சுரப்பவ ராவும்பர் சூழ்தரத் தோற்கழற் றொட்டுஞ்சென்றாய்
சிரப்பவ ராமன் பணிசெய்யு மாதைத் திகம்பரனே.
(36)
40. திகம்பர நாமன் புலித்தோ லுடுத்துத் திரியும்பிரான்
னகம்பர நாமகள் கோன்றலை யோட்டுண்டி நச்சுமம்மான்
சகம்பர நாமல தில்லையென் பார்களைச் சாரவொட்டா
தகம்பர நாமமு றாமாதை வாயென்னை யாண்டனனே.
(37)
41. ஆண்டள வற்ற பலகோடி யாநிக ழாயுளுள்ளார்
மாண்டள வற்ற மறிந்தரு ளீசனை மாதையினில்
வேண்டள வற்றவிர் பொற்காசுஞ் சிந்திடும்
வீறெய்தலா
நாண்டள வற்றரும் பேரரு ணீர்கொளு நன்மனமே.
(38)
42. நன்மையி னாசை பலவாக் கொளுமொரு நாதன்வந்து
புன்மையி னாசைவ ரெய்தாதற் செய்திறம் பூப்பதென்றோ
சென்மையி னாசைமுற் றாள்வாய்தென் மாதையின்
சீர்வளர்க்கு
மன்மையி னாசைய நேர்நிலை யீந்தருண் மாமணியே.
(39)
43. மாமனை யாட்டின் றலைதோயச் செற்றவன் மாறிலுமை
யாமனை யாட்டி களிவேட்டுச் செய்திடு மைந்தொழலோன்
காமனை யாட்டினன் மாதைப் பதியிலெற் காத்தலர்வெண்
பூமனை யாட்டின மேவிப் பலபாடற் புனைந்துளனே.
(40)
44. புனையத ளாடை யனைமாதை யானைப் பொருப்பிமயத்
தனையத ளாடைய கோலங்கொண் டானை யடற்றுர்க்கையாம்
பனையத ளாடைய ராவணம் போற்றிப் பணிதலுன்னி
வினையத ளாடைய லார்படை யானையும் வென்றுய்யுமே.
(41)
45. வென்றண்ட வாணரைத் தக்கனை வேள்வியில் வீறழித்தோன்
வன்றண்ட வாணன் முதலோர்க்கும் பேறருள் வள்ளல்கனற்
குன்றண்ட வாணவ மாலயன் றீர்கைசெய் கோன்றுணையென்
னென்றண்ட வாணமிம் மாதைப் பதியி னிடத்துய்த்ததே.
(42)
46. இடங்கரை யன்று மகவீயச் செய்தரு ளீசனெழிற்
குடங்கரை யன்றலை யோட்டிரந் தான்றுதி கூறுபண்பான்
மடங்கரை யன்பர்க் கெளியான்றென் மாதை வரன்மனுநூன்
முடங்கரை யன்பகை யானா ரனேகர்க்கொர் முன்னிலையே.
(43)
47. முன்னவ னானந்த வாரிதி யீந்தருண் முக்கட்பிரான்
றுன்னவ னான முலையொரு பாகன்மெய்த் தொண்டுய்வான்
றென்னவ னானச் செகுத்தபொற் றாளிடை சேர்ப்பதுண்டுண்
டென்னவ
னானடி யேமாதை யிற்பணிந் தேத்துதுமே.
(44)
48. ஏத்துங்க பாடச் சரக்கொல்கு நீற்றனை யின்சுருதி
சாத்துங்க பாடந் திறந்தடைத் தாருணர் சங்கானை
மாத்துங்க பாடற் புலவோர் பராவிய மாதையினின்
மூத்துங்க பாடமெய் தாச்சித்த ராக மொழிவதுண்டே.
(45)
49. மொழியந்த ரங்கம் பலகூறி யாண்ட முருகனின்னன்
புழியந்த ரங்கடற் பார்முழு தோர்தர வுய்த்திலனோ
வழியந்த ரங்க னெனவாழக் காட்டுதி மாதையினிற்
கழியந்த ரங்கச் சடைச்சித்த னாவளர் கண்ணுதலே.
(46)
50. கண்ணப்ப நாயனை யாண்டவ னெச்சிற் களித்துண்டநீ
விண்ணப்ப நாயனை யேன்சொல்லல் கேட்க விரும்பலென்றோ
தண்ணப்ப நாயனை யச்செற்று மாதைத் தலத்திலுற்றா
யண்ணப்ப நாயனை யப்பனில் லாயென் றறிந்துளனே.
(47)
51. அறியணி யத்த மயன்மே லிடநொந் தயருமென்முன்
மறியணி யத்த முதலாய கோலம் வயங்கவந்தாள்
வெறியணி யத்த வியன்மாதை யூரப்பா வெண்ணெய்தயி
ருறியணி யத்தனை யுங்கவர்ந்த தானொத் தொளிர்தரவே.
(48)
52. ஒளிக்கஞ்ச நாண்மலர் வாவிகொண் மாதையி லுற்றவள்ளல்
களிக்கஞ்ச நாண்மலர் பாவைநல் லார்பலர் கற்பழித்தோன்
விளிக்கஞ்ச னாண்மலர் கூற்றிற்றந் தாற்கிரு
வில்லிகளை
நளிக்கஞ்ச நாண்மலர்த் தந்தானுங் காட்டு
முன்னல்கினனே.
(49)
53. நல்குர வார வயன்விதித் தாலு நறைக்கடம்பிற்
புல்குர வாரத்தி னானென்ன வாழிச்சை பூண்டுளன்காண்
செல்குர வாரண மாத்தேர்கொண் மாதையின் செல்வவுண்மை
சொல்குர வாரங்க னேர்வாழ்வி லேனுமெற் றோய்த்தருளே.
(50)
54. தோயங் கருதிக்கற் றொட்டுநொந் தேற்குப்பஃ றுன்பமிட்டு
வாயங் கருதின மாறவுஞ் செய்திடல் வம்பல்லவோ
நீயங் கருதிருக் கோலத்தொ டெய்த னினைகிலனோ
சேயங் கருதிக்கச் செய்வாய்தென் மாதைச்
சிவலிங்கமே.
(51)
55. சிவந்த கமல மலர்க்காடொப் பாயெனச் செப்பினன்சேர்
நவந்த கமலமுத் திக்கிச்சித் தேனிங்ங னைத்தனன்றோ
வுவந்த கமலச் சடையாய்தென் மாதை யுடையவள்ளால்
வெவந்த கமலறத் தாளொன்றி னாற்செற்ற விண்ணவனே.
(52)
56. விண்ணடங் கத்திருக் கூத்துச்செய் வோன்பல் விரகரவைக்
கண்ணடங் கத்திருக் கோலிடு மாதைக் கடவுளுமைப்
பெண்ணடங் கத்திரு கூறாய வுண்மை பிறங்கக்கற்று
மண்ணடங் கத்திருங் கோரமு மூடமு மாறிலனே.
(53)
57. மாறில னாதிரை யான்முக மாயிரம் வாய்ந்தபுன
லாறில னாதி லுமைபாகன் மக்க ளனேகனிசை
கூறில னாதி யளிப்போன்றென் மாதையின் கோயில்கொண்டோ
னூறில னாதி பரமாகு முண்மை யுணர்வரிதே.
(54)
58. உணரத் தகாத நிலைகாட்டி யாண்டுமிக் குள்ளுடைந்து
துணரத் தகாதலும் விட்டிருந் தேனருட் டோற்றநல்கா
யெணரத் தகாதகர் சேராத்தென் மாதை யிறைவவுமை
புணரத் தகாதசைக் குங்குழை யாவளை பூண்டவனே.
(55)
59. பூண்டலை யாய புனிதனை முக்கட் புராந்தகனை
யேண்டலை யாயவல் லார்புகழ் மாதைக் கிறைவனையான்
வேண்டலை யாயமண் பொன்வேட்டன் றன்றன்று வென்றிமலி
யாண்டலை யாயர் குடிவாழ்க்கை நண்ணு மவரொக்கவே.
(56)
60. அவல மனத்தனை யைம்புல வேட்கை யசடனைப்பொய்
நுவல மனத்தனை யூக்கங்கொள் வேனைக்கண் ணோக்குவையோ
கவல மனத்தனை யந்தாய்தென் மாதையின் காவலவா
குவல மனத்தனை யன்றீர் வெற்புருக் கொண்டவனே.
(57)
61. கொண்டலை யன்னவன் கங்காளந் தோண்மிசை கொண்டுவிதி
வெண்டலை யன்ன முவந்தான்றென் மாதையின் மேயபிரா
னண்டலை யன்னருள் வாரித் திவலை யணுகப்பெற்றால்
விண்டலை யன்னணி மாவாதி செய்திகல் வீட்டுவனே.
(58)
62. வீட்டும னன்றுரைத் திட்டசொற் காத்து வெகுண்டெழுந்த
காட்டும னன்றுசெய் தாங்கே முயன்று கதியடைய
வேட்டும னன்றுளன் கண்பார்தென் மாதை விமலதமிழ்ப்
பாட்டும னன்றுணி வீரமுந் தோய்ந்தவர் பக்கத்தனே.
(59)
63. பக்க மிரட்டிய வெண்காற் பறவைப் படிவெடுத்துச்
சொக்க மிரட்டி யரியடர்த் தானைத் தொழல்விடுத்து
வக்க மிரட்டியற் காதானும் பூசிக்கு மாதைவிடேஞ்
சிக்க மிரட்டி யடைவீ ரெமக்குடற் செய்யன்மினே.
(60)
64. செய்ய விசாலத் திருமாதை யூர்வளர் சித்தன்முன்னாள்
பொய்ய
விசாலப் பெயும்வேள்வித் தக்கனைப் பொன்றவென்றோ
னெய்ய
விசால மிரண்டுங்கொள் வானரு ணேரப்பெற்றா
லைய
விசாலனைத் தாமண்ட மோர்கடு காகுமன்றே.
(61)
65. ஆகுலந் தீர்த்தடி யாரொடெற் கூட்டியொ ரைங்கவிய
மாகுலந் தீர்த்த முறக்காட்டச் சோம்பல்வண்
மாதையிலெ
னியோகுலந்
தீர்த்த மயற்பேய்பின் சென்றிட வுய்யல்பத்து
வாகுலந் தீர்த்தத் தலையெமன் மாய்பதம் வாய்ந்தவனே.
(62)
66. வாயசக் காரனை வென்றுய்கை வேட்டு வருந்துமென்னை
நீயசக் காரனை யன்முத லோர்பின் னிறுவலென்றோ
பாயசக் காரனை பாகாதென் மாதைப் பதித்தலைவா
சேயசக் காரனை யக்கனி பானையிற் செய்தவனே.
(63)
67. செய்தவ சுக்குக் கெடத்தீ நெறியிற் செலுத்தன்மலர்
பெய்தவ சுக்குல முய்ந்தாங் குயச்செய் பிணித்திரடோய்
கைதவ சுக்கு மிளகைநம் பார்வர் கருதரியா
யைதவ சுக்குணர் வாழ்மாதைக் கோயி லமரத்தனே.
(64)
68. அமர பயங்கர திற்கொள்பஃ றேவர்க் கருள்புரிந்து
சமர பயங்கரத் தானவர் முப்புரஞ் சாம்பர்செய்தோ
னெமர பயங்கரந் தாள்வான்றன் மாதை யிடத்திலுய்க்கை
தமர பயங்கர னேகருந் தேறுந் தரத்ததன்றே.
(65)
69. தரத்தரத் தின்றுந் திருத்தியெய் தாதவர் தம்மையொத்து
வரத்தரத் தின்றுதி பற்பல கேட்டு மகிழ்கிலையே
யுரத்தரத் தின்றுணைக் கண்ணுமை பாகவிண்
ணூரினைந்து
மரத்தரத் தின்றும்வெஃ கேன்மாதை வாயென்முன்
வந்தருளே.
(66)
70. வந்தனப் பாட்டு விரும்புந்தொல் பான்மை மறந்தனையோ
செந்தனப் பாட்டுக் கிலக்காக்கி யென்னைத்
தியங்குவதே
னந்தனப் பாட்டு வயன்மாதை யூரத்த நாகனது
மைந்தனப் பாட்டுமெச் சிற்றசை யூணுங்ககொள்
வண்மையனே.
(67)
71. வண்ணம் பலபல பாடியும் வேண்டும் வரநல்கிலா
யெண்ணம் பலபலப் புன்றொழில் சூழ்தலி னெய்த்துளன்காண்
விண்ணம் பலபல வார்சோலை மாதை விமலமின்னார்
கண்ணம் பலபலம் வாட்டாம லேனுமெற் காத்தருளே.
(68)
72. காத்த வலாரிடர் செய்தகு வேசரைக் காய்ந்தமர
ரேத்த வலாரிக் கரசீந் துளாருட னென்னைவைத்தான்
மூத்த வலாரிசைக் கும்புகழ் மாதையின் முன்னவவெண்
ணீத்த வலாரிமைப் பிற்பொடி யாய்விழ நீற்றினனே.
(69)
73. நீற்றணி யானந்த முற்றாரிற் றோய்ந்து நிகரில்பம்பை
யாற்றணி யானந்தண் மாதைப் பிரானென் றறைந்துதொண்டர்
பாற்றணி யானந்த மாறொழில் செய்யப் பதைக்குமென்னை
வேற்றணி யானந்தர் கூற்றாக்கு ஞான்று விடியினன்றே.
(70)
74. நன்றிய லாவினை யேசெய்யு மூர்க்க நரரையெல்லாம்
வென்றிய லாவிதி சொன்னார் நெறியில் விடல்விழைந்தேன்
கன்றிய லாவின முற்றுய்ந்த மாதையின் கத்தவென்னு
ளொன்றிய லாவி கடைத்தேறச் செய்திட் டுரமருளே.
(71)
75. உரத்த கலாபர ணச்சிறு தேவர்க ளொல்கவணி
சிரத்த கலாப மயிற்சேந் தனைத்தரு சித்தவுன்றன்
வரத்த கலாபமென் றேமதித் துன்றிரு மாதையுற்றேன்
றிரத்த கலாபத் துறப்பெயர்த் தானிலுந் தீயனன்றே.
(72)
76. தீயத்தத் தானையர் போற்றிய மாதைச் சிவனடியார்
மாயத்தத் தானைய வொட்டான் மதனை மறையவட்டான்
சேயத்தத் தானை யணிமோ கினிக்கருள் செய்தபிரான்
வாயத்தத் தானைவில் வீடுபெற் றாரயன் மக்களன்றே.
(73)
77. மக்க டலைக்கடை தோறலைந் தேங்கி வருந்துறுநா
னக்க டலைக்கடைந் தோனிகர் பேறிங் கடைகுவனோ
திக்க டலைக்கடைக் கண்டம்வைத் தாய்மந்தர்
தின்னருமெஃ
குக்க டலைக்கடை நேர்பாடன் மாதைக் குருச்சிவனே.
(74)
78. குருச்சிவ னைத்திரு மாதையின் வாய்கண்டு கும்பிட்டன்பா
லருச்சிவ னைந்து கவிமாலை சூட்டுதி யாற்றனெஞ்சே
திருச்சிவ னையமு மெண்வகை யாம்பெருஞ் சித்துமெய்தி
யுருச்சிவ னைவின்றிச் சேர்ந்திட லாம்பல
ருற்றனரே.
(75)
79. உற்றவ ராக நிறத்தான்றென் மாதை யுடையவள்ள
னற்றவ ராகர் முதல்வேண்டு மானையை நல்குமம்மான்
செற்றவ ராக மருப்பொசித் தீந்தசெஞ் சேய்பயந்தான்
கற்றவ ராகப் புனைந்தேகு மந்தக் கதையினிதே.
(76)
80. கதையணி யையனைப் பெற்றானம் மாதைக் கடவுள்வின்னாண்
குதையணி யையதிண் டேருற வைத்துள்ள கொள்கையென்னோ
சுதையணி யையமில் கல்வியொ டெய்திய தோகைநல்லா
யிதையணி யையறி வுங்கடந் தோரு மியம்பினரே.
(77)
81. இயமான னாதிய வாப்பெரி யோர்நுவ லெண்வடிவான்
கயமான னாதிய வாமாதை மாநகர்க் கண்ணுதலோன்
குயமான னாதிய வாயார் பராவினுங் கொள்வனென்கை
யயமான னாதிய வானவர்த் தானவ ராள்வதுண்டே.
(78)
82. ஆளவந் தாரை யணிமாதை யூரரை யங்கசவேண்
மாளவந் தாரையர் முன்னெரித் தாரை வணங்குவது
கோளவந் தாரைகண் பெய்திடச் செய்யுங் கொடுந்துயர்க்
ணீளவந் தாரைக ளேயெனச் சூழ்தர னீங்கவென்றே.
(79)
83. நீங்கா வியங்குயில் பைங்கிள்ளை யாதி நிதம்விளைக்கும்
பூங்கா வியங்குநன் மாதையப் பாமுப் புராந்தகநிற்
றாங்கா வியங்குசத் தான்குகன் போலத் தழைக்குமென்றுள்
வேங்கா வியங்குறை வெய்தாத வண்ணம் விரைந்தருளே.
(80)
84. விரைக்கடங் காலு மயிரா வணத்தின் மிசையிவர்வாய்
கரைக்கடங் காப்பம்பை சூழ்மாதை யூர்வளர்
காவலவா
தரைக்கடங் காதகர் செய்கின்ற தாற்றுயர்
சார்தனன்றோ
விரைக்கடங் காதலித் தான்மெச்சு மாட லெனக்கருளே.
(81)
85. எனக்கந்த ரங்கநின் பாலில்லை யேலென்று மிவ்வுலகோ
ருனக்கந்த
ரங்கனன் புள்ளானென் றோதுவ துண்மைகொல்லோ
சினக்கந்த
ரங்கஞ்செற் றேனையர்க் காப்பச்சிந் திக்கிலனோ
வனக்கந்த
ரங்களிக் குஞ்சோலை மாதையில் வாழ்சிவனே.
(82)
86. வாழ்வார வார மதமுஞ் சினமும் வழக்குமிஞ்சித்
தாழ்வார வாரமிப் புங்காட்டு நீயெனைத் தள்ளுவையோ
கூர்வார வாரணிச் செய்சாலு மாதைக் குழகவன்பி
லாழ்வார வாரண வாகம கோடி யறைந்தவனே.
(83)
87. அறையத் தகுந்த வரமொன் றெனக்கன் றளித்தவுண்மை
நிறையத் தகுந்தத்தெய் யென்றாடுஞ் சேவையை
நீயருள்வாய்
மறையத் தகுந்தனப் பூணார்கண் டொல்க மகிழ்ந்தணிவெண்
பிறையத் தகுந்தயங் கும்பொழின் மாதைப் பெருந்தெய்வமே.
(84)
88. தெய்வ சகாயம் விழையாத தந்திரச் சித்தரெள்ளும்
வைவ சகாயமுண் பாரிறு மாப்பொடு மாய்வதென்றோ
மெய்வ சகாயகத் தார்க்கரி யாய்வெள் விடைப்பரியூர்
சைவ சகாயம னாடாத மாதைத் தனியண்ணலே.
(85)
89. அண்ணலந் தாமரை யான்கைப் பொறியை யணுவளவு
மெண்ணலந் தாமரை யன்னாரைக் கெஞ்சி யிளைக்கலமுக்
கண்ணலந் தாமரை யாங்கோல மெய்துங் கடவுளெம்மை
விண்ணலந் தாமரை தோய்மாதை வாய்வைக விட்டபின்னே.
(86)
90. விட்ட மயலைத் திருப்பியென் னெஞ்சம் வெருளச்செய்தாய்
நட்ட மயலைக் கடல்போ லடைந்தன னன்மைதந்தாள்
சட்ட மயலையர் சில்லோருஞ் செய்யச் சமைத்தளித்தாய்
நெட்ட மயலையுங் காவார்தென் மாதையி னின்றவனே.
(87)
91. நின்றனத் தத்தையி லாதிபெற் றாரிடை நிற்கையவர்
வென்றனத் தத்தையி லாதற நீக்குவ தென்றுகொலோ
வன்றனத் தத்தையி லான்றமுத் தாம்பிகை வௌவுதிண்டோட்
குன்றனத் தத்தையி லாபங்கொண் மாதைக் குடிக்கரசே.
(88)
92. குடிக்கர சேவின் மனைமக வோடிவர் கோலவன்பே
ரிடிக்கர சேங்கவென் றார்ச்செகுத் தாய்மல
ரேந்தியெதிர்த்
தடிக்கர சேக்கணிற் செற்றாய்தென் மாதை யழகவொன்னார்
வெடிக்கர சேவகர்க் கோரெம னாம்வன மேவச்செய்யே.
(89)
93. மேவலங் கையர் பதமேயென் றோர்ந்துபல் வேள்விசெய்வீர்
சேவலங் கையனைப் பெற்றான்முன் மாதையிற்
றெண்டனிட்டுப்
பாவலங் கைய பணிசெய்மி னன்றரம் பைக்கொடியைக்
கோவலங் கையர சீர்த்தமை நாடிலக் கோளெளிதே.
(90)
94. கோளங் கடந்து வரும்பேறுஞ் சிற்சிலர் கொள்ளவிட்டாய்
தாளங் கடந்துள சீர்முலை மாலிலெற் றள்ளிவிடேல்
காளங் கடந்துன்று வேழமட் டாய்திருக் கண்டந்தன்னை
யாளங் கடந்துமத் தாமாதை யூர்க்கர சாஞ்சிவனே.
(91)
95. ஆஞ்ச மனந்தனைத் தேற்றில னன்றோ ரருந்தவன்மேற்
போஞ்ச மனந்தனைந் தக்கரங் கூறிலன் புண்ணியரைக்
காஞ்ச மனந்தனை யந்தோரின் மாதையின் கண்ணுற்றுளே
னாஞ்ச மனந்தனை தீரின்ப வாழ்வொடு நண்ணலென்றே.
(92)
96. நண்ணல ரஞ்ச வுறவோர் களிப்ப நயந்துதவம்
பண்ணல ரஞ்சக் கரஞ்சொல்லி மாதைப் பரன்பதத்திட்
டெண்ணல ரஞ்சமன் னார்பாற் கொள்ளேல்வெறி
யேற்றிறைச்சி
யுண்ணல ரஞ்சகத் தின்றிநை வாரென் னுரிமைநெஞ்சே.
(93)
97. நெஞ்சஞ் சினந்து நமதூ துவரெதிர் நேர்தலற
வஞ்சஞ் சினந்துன்றி டாதோட மாதையின் வள்ளலுரு
வஞ்சஞ் சினந்துல வுஞ்செவி காட்டு மதனைநம்பிக்
கெஞ்சஞ் சினந்துய ரெய்தாயென் பார்மொழி
கேட்கைநன்றே.
(94)
98. கேட்டுக்கு ளஞ்சினர் வந்துறு மாதைக் கிரீசவிண்ணோ
ராட்டுக்கு ளஞ்சித்தர் போற்றிய பம்பை யருகமைத்தாய்
நாட்டுக்கு ளஞ்சிறி யேனா யினுமுன்னை நண்ணிநவில்
பாட்டுக்கு ளஞ்சித்தி முத்தி யினிப்புப்
பயப்பச்செய்யே.
(95)
99. பயந்த மனத்தை யலாராத பேரருட் பண்பிலுய்த்துச்
செயந்த மனத்தை யலாரிடங் கொண்டுயச் செய்குவையோ
நயந்த மனத்தைய லாட்கோது மாதையி னாதபொல்லார்
வயந்த மனத்தைய லாடத்தில் வாழ்நந்தி வாகனனே.
(96)
100. வாகனக் காரனைஞ் சென்னியி லொன்றுகொண் மாதைப்பிரான்
மாகனக் காரனை பாகத்தி னான்வெள்ளை மால்விடையான்
மோகனக் காரனை யான்விழித் தாளனென் முன்னவிர்ந்தாற்
சாகனக் காரனை யப்பாடல் கோடியுஞ் சாற்றுவனே.
(97)
101. சாற்றரு மந்தணஞ் சொன்னநின் சேயெனைத் தள்ளிவிட்டாற்
போற்றரு மந்தனக் கந்நிய மாந்தகை பூண்டொளித்தான்
மாற்றரு மந்தனத் தார்மைய லாழ்ந்துளன் மாதையப்பா
நீற்றரு மந்தரத் தாரும் வியக்கு நெறியருளே.
(98)
102. நெறியனந் தங்கண் டயர்வேனின் றன்னரு ணேடுமன்பைக்
குறியனந் தங்கண்டர் போகமெள் ளேனெற்கைக்
கொள்ளுவையோ
மறியனந் தங்கண்ட கோடரி யாதிகொண் மாதையப்பா
சிறியனந் தங்கண்ட னுண்மணி யாயுந் திகழ்பவனே.
(99)
103. திகழணி மாமகள் கேள்வனைப் போலுஞ் செயலுமுண்மைப்
புகழணி மாமுதற் சித்தியு முத்தியும் போதநல்கு
மகழணி மால்படர் சீர்மதின் மாதை யரனருள்போ
னிகழணி மான்மியந் தோய்பம்பை யாற்றினன்
னீர்முழுக்கே.
(100)
முற்றிற்று.
நூற்பயன்
104. அவன்றனந் தாதியா நல்கற் குருகு மசடனெண்ணில்
பவன்றனந் தாதின மாம்பொய்ய னென்னுமப் பான்மையறுந்
தவன்றனந் தாதித்தெய்த் தாளத்தன் மாதைத்
தலத்திறையாஞ்
சிவன்றனந் தாதித் திரிவொரு நூறுந் தெளிதரினே.
(101)
தெய்வமே
துணை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக