வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
கருந்திட்டைக்குடி
அம்பிகை வெண்பா
(நேரிசை
வெண்பா)
செம்பியனாட் டோங்குகருந்
திட்டைக் குடிச்சிவன்பா
லம்பிகைத்தா யேயருட்சீ
ரன்னமே – கம்பிதப்பட்
டேங்குறுமென் சென்னிக்
கிருதரண்ம லர்சூட்டித்
தீங்குதவிர் சித்தரிடை
சேர்.
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
கருந்திட்டைக்குடி
முருகன் திருப்புகழ்
அலங்கற்
கொத்தபல பாடல்கள் விளம்பத்தக்க
நல்லூக மெழுந்துக் கலிவரதனை – தவிராதோ
வகங்கெட்டுப் பிழைதீர சமரசங் கற்றுத்தவ
மானதிலழுந் திச்சித்தியை நாடுநர் மகிழாரோ
நிலங்கட்டப்
படுதீவினை யறுங்கொற்றச் சமரேமிக
நினைந்துட் சித்தளர் வார்செய் – மடையாரோ
நெடும்பொற் புற்றவிர்தோகை கொள்சிகண்டிப் பட்சியில்
வேலுடனிதங் கிட்டிக்கவு மாரந்னிலை தாராய்
நலங்கட்குச்
சமனேநிகர் கெடும்புற்றுப் பெரியோர்களை
நகுந்துட்டக் குலமியாவையு மடுவீரர் – நடந்தச்சத்
தொடுபோ யெறிகவண் கற்கைக் குறமாதெதிர்
நயஞ்செப்பித் தினைமா மிகநுகர் வோனே
கலங்கித்
தட்டழிவா யயன்வருந்தக் குட்டியதோண்மிசை
கடம்புப் புட்பமொ டோர்கிளி யணிவானே
கலிங்கத்தைச் செறுகோன் மிகவணங்கிப் பத்திசெய
வீறுறுகருந் திட்டைக்குடி மேவிய பெருமாளே.
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
கருந்திட்டைக்குடி
விநாயகர் வெண்பா
(நேரிசை வெண்பா)
சீரார் கருந்திட்டைச் செய்ய விநாயகனே
யாராதிப் பார்க்கருளு மையனே – போராடுந்
கானவரைச் செற்றுச் சதமகன்போற் றத்திகழ்ந்தா
ரானவரிற் சொத்தெனைநீ யாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக