தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளிச் செய்த
கோயில்பாளையம் காலகாலேச்சுரர் பதிகம்
- 1
காப்பு
(நேரிசை வெண்பா)
சீலமலி யன்பர்
திகழ்கோயில் பாளையம்வாழ்
காலகா லேச்சுரமெய்க்
காரணன்றாள் – மேலணியுஞ்
செந்தமிழ்ப்பாட்
டென்னுள்வரச் செய்தருளுங் கற்பகத்தின்
சுந்தரப்பொற்
பாதந் துணை.
நூல்
(எண்சீர் விருத்தம்)
மதிநதியா ராவிதழிச் செஞ்சடைமுக்
கண்கள்
மருவருண்மே னியுங்கரமு மலர்ப்பதமுந் துலங்கக்
கதியருளுங் கடற்கருணா கரவல்லி யுடன்றோய்
காலகா லேச்சுரப்பேர்க் காரணனூர் வினவில்
கதிரிளைப்பா றிடக்கைக ளசைத்தாளிப்பண்
முழக்கிக்
கமழ்பாளை மணமூட்டுங் கமுகின்முடி காறுங்
குதிகொள்வரா லினந்தரளம் பவளமர கதந்தோய்
குளிர்தரங்கத் தடங்கண்மலி கோயில்வளம் பதியே.
(1)
பாசுபதப் படைபெறுவான் பெருந்தவஞ்
செய்யுரஞ்சால்
பார்த்தனிட மிகல்வேடப் படிவமிசைந் தணைந்து
வீசுமடற் சிலையடியுண் டகண்டநிலை
யுணர்த்தும்
வியன்கால காலேசன் விரும்புமிடம் வினவில்
சுகதிர் மணிப்பணிபூம் பட்டுடைதோய்
மாதர்
குங்குமந்தண் களபமணங் கொண்டிசையெண் டிசையும்
கோசுமகழ் கௌசிகமா நதியின்வட கரைதோய்
கொற்றமணித் தெற்றியணிக் கோயில்வளம் பதியே.
(2)
வானவர்க்கு மானவர்க்கு மற்றையர்க்குந்
துன்பம்
வழங்குதிரி புரத்தருடன் மலைச்சிலைகொண் டமர்ந்து
வேனவில்புன் னகையதனாற் கணத்தழிக்குந்
தீரம்
விரிகால காலேசன் விளங்குதலம் வினவில்
மேனலஞ்சால் கோபுரந்தோய் கலசமிசை
கிரணம்
விற்பொலிகோ டீரமென விளங்கவதன் மீதிற்
கூனன்மதி மிலைச்சியுறு தூலலிங்கப்
பெயர்மெய்
கொளக்காட்டும் வளக்காட்சிக் கோயில்வளம் பதியே.
(3)
கன்னல்வரி சிலைபிடித்தைம் பூவாளி
பொழியும்
காமனுருப் பொடித்தருளுங் கனல்விழிதோய் பொறியாய்
மின்னவிர்வேற் குமரகுரு பரனையருள்
மகிமை
மிளிர்கால காலேச விண்ணவனூர் வினவில்
இன்னன்மலி யிச்சையறு மாதவத்தோ ருலகோர்
யிட்டபிச்சை யுடனவருள் ளிசைந்தபிச்சை யேற்றுக்
கொன்னவிர்பொன் னம்புயத்தாள் மகரந்த
மளிக்குங்
கோதில்புகழ் வீதியணிக் கோயில்வளம் பதியே.
(4)
மாதவந்தோ யிமயவரை மன்னன்மடப் பாவை
மாட்டிசைந்து நாட்டமகிழ் வடிவவிருந் தருந்தி
ஆதவந்தோய் சுடுமொழியா மமுதுசெவிச்
சுவைகொள்
ளருட்கால காலேச வண்ணலிடம் வினவில்
பாதவந்தோய் கண்ணீர்ப்பூப் பொழிந்துமுடி
சாய்த்துப்
பரவிமது கனியிரசம் பரிவின்முடிக் காட்டிக்
கோதவந்தோய் பிறப்பிறப்பை யொழித்திமையோர்
தம்மைக்
கூவலிற்கோ கிலத்தொனிசால் கோயில்வளம் பதியே.
(5)
ஆவியினங் கட்குறும்விக் கினமொழித்துக்
காக்கு
மற்புதப்பே ரருண்மகிமைக் கற்பகத்தை யணியார்
தேவியுட னிபவடிவங் கொண்டளித்த மேன்மை
திகழ்கால காலேசன் சிறக்குமிடம் வினவில்
பூவிலரு மானிடமெய் பெற்றமைந்தீ
ரணைந்தென்
புண்ணியப்பூம் புனல்படிந்து பூரணமெஞ் ஞானக்
கோவினருள் பெறுதிரென மாடைமணி தரங்கங்
கொழித்திசைகௌ சிகநதிசூழ் கோயில்வளம் பதியே.
(6)
கடிமுடிபைந் துளவணிமா தவன்பிரம
னுள்ளம்
கவர்ந்துகதழ்ந் தெரிசினந்தோய் கலகமொழித் திடுவான்
அடிமுடியற் றிசையியற்கை யருட்சோதி
மயமாய்
அவிர்கால காலேச னமருமிடம் வினவில்
முடிமுடிகொண் டாம்பையர்சம் போகமயக்
கத்தின்
முரணசுரர் பகைத்தியக்கின் முயக்கீர்வம் மினெனக்
கொடிமுடியின் சைகையினா லமரர்தமை
யழைக்குங்
குணவிடப வடிவமையுங் கோயில்வளம் பதியே.
(7)
வேலமைகைத் தலம்படைத்த ஞானகுரு மணியும்
வேழமுகப் பெருமானும் வெற்பெனவாட் டயருஞ்
சீலமுறு முமைதனத்தின் சுவடமையும்
புயந்தோய்
சிவன்கால காலேசன் சேருமிடம் வினவில்
ஞாலமுறு மானிடர்தம் பவமொழிக்குங்
காலன்
நற்றீர்த்தத் துடன்பதிட்டை நவிற்றிடும்பூ சனையால்
கோலமுறும் வரங்கொடநு கூலமுறு மாட்சி
கொண்டபுகழ் விண்டழைக்கங் கோயில்வளம் பதியே.
(8)
நசைபொலிமெய்த் தொண்டரடியா ருள்ளமுயி
ருடம்பில்
நனிகலந்து கரைந்துருக ஞானவரு ளின்ப
மிசைபரிபூ ரணசச்சி தானந்தா நுபவம்
விளைகால காலேச விமலனிடம் வினவில்
இசைபொலிவே தச்சுரும்ப ரணிக்கமலன்
கிருட்டிக்
கெதிர்புரிகௌ சிகன்வழிபா டியற்றியுளத் துவப்பால்
குசைபொலியா கம்புரியும் பற்பமதா
லுலகோர்
குணந்திருத்தி மணம்பொருத்துங் கோயில்வளம் பதியே.
(9)
அம்பாய விழிப்பரவை யூடலொழித் தருளா
லாளுடைய நம்பியகத் தன்பருளின் புருவாய்
நம்பாவ லளித்தருளும் விருதுகொண்மெஞ்
ஞான
நயக்கால காலலேச நம்பனிடம் வினவில்
வெம்பாவத் தொடர்பகலக் கரிகாற்பேர்ச்
சோழன்
விருப்பணிமெய்த் திருப்பணிகண் மிகப்புரிந்துள் ளுவப்பிற்
கும்பாபி டேகவிழாப் புரிந்துகனிந்
துள்ளம்
குளிர்ந்திசைத்த திருப்பெயர்தோய் கோவில்வளம் பதியே.
(10)
விருத்திபெறும் பொய்யுலக வாதனைக
ளறவே
விலகியென்று மலகிலின்ப வேலைபடிந் திடவே
கருத்திசையுங் கோயில்வளம் பதிகுலவுங்
கருணா
கரவல்லி படர்கால காலேசன் றன்னை
அருத்திபொலி சிரவையிரா மானந்த நாதன்
அடித்தொழும்ப னானகந்த சாமியகத் திருத்தித்
திருத்தியுறத் திருத்திடவேத் திசைப்பதிக
மன்பிற்
செப்பிடுவா ரும்பரின மொப்பிடுமா தவரே.
(11)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக