தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளிச் செய்த
கோயில்பாளையம் கற்பக விநாயகர் பதிகம்
-1
காப்பு
(நேரிசை வெண்பா)
அற்பகலுந் துன்பொன் னடிகொளகத் தன்பரிச்சை
பற்பலவுஞ் சேர்கோயிற்
பாளையந்தோய் – கற்பகவி
நாயகன்மேற் சூட்டுதுதி
நல்கிடுமெய்த் தொண்டடியார்
தூயதிருப் பாதத்
துகள்.
நூல்
(எழுசீர் விருத்தம்)
ஒற்றைவெண் மருப்பார்
துதிக்கைமா முகமு
மொழுகருள் விழிகளும் பவளப்
பொற்றைநேர் வடிவு
மோதகந் தந்தம்
பொலிந்தபா சாங்குச கரமும்
செற்றைநேர் பவந்தீர்த்
தருளிரு பதமுந்
திகழவந் தென்மன மாயைப்
பற்றையற் றிடச்செய்
கௌசிக புரிவாழ்
பகவிநா யகப்பெரு மானே.
(1)
அங்கை கொண்டுன்
மேனிக் கபிடேக
மாற்றியர்ச் சித்திலங் கரிபேன்
சங்கையற் றமையற்
பவமிறப் பினிற்சார்
தாகசோ கங்கெடச் சடைதோய்
கங்கையம் புலியின்
சுதையறு கிதழி
கமழ்புன லாட்டுவாய் கௌரி
பங்கையுற் றவர்வாழ்
கௌசிக புரிக்கற்
பகவிநா யகப்பெரு மானே.
(2)
தாரக மறையுட்
பொருளுணர்ந் தன்பர்
சச்சிதா னந்த வீடணைய
ஊரக மெங்குங்
கோயில்கொண் டுயிர்க
ளுறும்வழி
பாடுமுற் றுவந்து
சாரக வேட்கை யெளிதளித்
தருளுன்
றயவள விசைப்பதென் சொல்லோ
பாரகத் தலைமைக்
கௌசிக புரிக்கற்
பகவிநா யகப்பெரு மானே.
(3)
பூவலர் கொண்டு
தினம்வழி படுமெய்ப்
புண்ணியத் தொண்டரைப் புனித
நாவலர் கவிகொண்
டுன்புகழ்ச் சிறப்பே
நவின்றுரு கண்பரை வியந்து
காவலர் பொழிந்து
தேவரேத் தெடுப்பக்
கதியருள் கருணையங் கடலே
பாவலர் புகழ்சிர்க்
கௌசிக புரிக்கற்
பகவிநா யகப்பெரு மானே.
(4)
கமுத்தியிற் செயலற்
றயர்ந்திடு மெனக்குத்
துல்லப மென்றியன் மறைகள்
வழுத்திடு மனிதப்
பிறவிதந் துலக
மாயையி லமிழ்ந்திடா துனது
முழுத்திருக்
கருணைத் திறங்கரு துணர்வுண்
முகிழ்த்திடச் செய்தனை முதிர்ந்து
பழுத்திடப் புரிவாய்
கௌசிக புரிக்கற்
பகவிநா யகப்பெரு மானே.
(5)
அன்னிய மான கருவிகள்
கரணத்
தார்ப்புறு மவிச்சையி னின்றுஞ்
சென்னிய மான பாவபுண்
ணியத்தாற்
றேவர்மா னிடர்நர கரென
என்னிய மான னாமரூ
பம்பெற்
றிடருறா தன்பினேன் றருள்வாய்
பன்னிய மானக்
கௌசிக புரிக்கற்
பகவிநா யகப்பெரு மானே.
(6)
உடையநா யகநின்
றனிப்பெய ரொன்றே
யோதுவா ரிடர்கெடுத் திடுமுன்
அடையமை சிறப்போ
சக்கரைப் பந்த
ரமைந்ததேன் மாரியா யுனது
கொடையமை கையின்
முன்னுறத் துதிச்சொற்
கூடலொத் தமைதல்கண் டுவந்தேன்
படையமை யணியார்
கௌசிக புரிக்கற்
பகவிநா யகப்பெரு மானே.
(7)
ஊர்தனிற் கோயி
லுருவமொன் றிலதே
லுறுதிரு வில்லட வியெனச்
சீர்தனிற் சிறந்த
நாவினுக் கரசு
செப்பல்போ லொப்பிலா துயர்ந்த
பேர்தனின் மேலாங்
கோயிற்பா ளையமுன்
பெயரினுக் கோரணி கலமே
பாரினிற் சீர்த்த
கௌசிக புரிக்கற்
பகவிநா யகப்பெரு மானே.
(8)
ஆக்கிய வண்ட கோடிக
ளிடையே
யமைசரா சரப்பிற விகளில்
நூக்கிய கன்ம
மாயைக ளறவே
நூறிட வூறிநின் விழியில்
தேக்கிய கருணைக்
கடற்குறு வடவைத்
தீப்பெய ரும்பொருந் திடுமெம்
பாக்கிய மயமாங்
கௌசிக புரிக்கற்
பகவிநா யகப்பெரு மானே.
(9)
சேய்த்திசை கயிலை
மிசைதுதிக் கையாற்
சேர்த்தரு ளௌவையா ரமுத
வாய்த்திரு வாக்கை
யேழையென் னாவில்
வாய்த்திட வழங்கிடி லுலகிற்
பேய்த்தகை நாத்தி
கக்களை களைந்துட்
பிறங்குயிர்க் குன்னதன் பெனுநீர்
பாய்த்திடு வேன்காண்
கௌசிக புரிக்கற்
பகவிநா யகப்பெரு மானே.
(10)
அரவியல் விடநேர்
விக்கிகனப் பகைதீர்ந்
தருளமு தயிலுமா தவர்கள்
பரவிய லின்பக்
கௌசிக புரிக்கற்
பகவிநா யகப்பெரு மானை
வரவிய லிராமா
னந்ததே சிகன்றாண்
மதியமை கந்தசா மிச்சேய்
உரவிய லன்பிற்
போற்றுபா வுவப்பி
லோதுவார் தீதிலா தவதே.
(11)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக