தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளிச் செய்த
கோயில்பாளையம் கற்பக விநாயகர் திருப்புகழ்
தத்ததன தானனத் -
தனதான
புத்தமுக
நேர்மொழிச் சித்திமண வாளநற்
புத்திதலை
வாவெனப் - பரிவோடே
பொற்புமலி தூர்வைபச் சைத்தளிர்கள் வாசனைப்
புட்பமிரு
தாண்மிசைப் - பொழிமேலோர்
சித்தமிசை
யாவலுற் றிட்டவைக ளீயவிச்
சித்தமைத
யாவளக் - கணநாதா
சிற்றறிவி னேனுளத் துற்றவிர்சொ ரூபமெய்ச்
சித்தியருள்
வாயடைக் - கலம்யானே
சத்தசுர
வேதமுற் பெற்றவுயர் தாரகச்
சத்தியவி
யாபகப் - பொருளாவாய்
சற்குணத போதனர்க் குட்குலவு பூரணத்
தற்பரசு
சோததிப் - பெருவாழ்வே
கைத்தமருள்
வீணருட் பட்டலைகு வேன்மிசைக்
கட்கடைசெய்
பேரருட் - குருநாதா
கற்பணிகொள் கோயில்வர்க் கக்கவுசை மாநகர்க்
கற்பக
விநாயகப் – பெருமாளே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக