தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளிச் செய்த
கோயில்பாளையம்
கவையகாளியம்மன் தேருலாப் பதிகம்
காப்பு
(வெண்பா)
சீருலாம் கௌசைத்
திருக்கோயில் பாளையந்தோய்
காருலா மெய்க்கவைய
காளியம்மன் - தேருலாக்
காட்சிப் பதிகத்தின்
காப்பாகுங் கற்பகப்பே
ராட்சிகொள்முன்
னோன்சே வடி.
நூல்
(எழுசீர் விருத்தம்)
திருவருள்வழி
புன்ன கைமலர் விழிதோய்
திலகவாணுத லணிப்ப டைக்கை,
கருமுகில்ச் சோதி
மேனியுஞ் சிலம்பு
கலித்தபொன் பதங்களு மன்பர்
இருவிழியி தயங்கு
ளிர்திருச் சேவை
யீந்திடும்க வையகா ளித்தாய்
தெருவணிபொ லியக்கோயில்
பாளை யத்தில்
தேருலாக் காட்சிதந் தனளே.
(1)
விண்ணிய லமரர்க்
கிடர்மிகப் புரியும்
வெந்திறல்ம யிடனைச் சுரர்செய்
புண்ணிய வடிவாய்த்
தோன்றுபு செகுத்துப்
பொற்பணித்தாள் மிதித்தி சைசீர்
மண்ணியல் மனிதர்
தேர்தரக் காட்டு
மகிமைசால் கவையகா ளித்தாய்
திண்ணியத் தவந்தோய்
கௌசிக புரியில்
தேருலாக் காட்சிதந் தனளே.
(2)
அறக்கருணை யினாலன்
பர்க ளுளத்து
மாலயத்தும் பொலிவ தல்லால்
மறக்கருணை யினாலன்
பர்தம் பாவ
வகைகெட நோக்கியே வூட்டி
உறக்கருள்ந ருணயஞ்சால்
மகிமைமேற் பொங்கும்
உளங்கொடு கவையகா ளித்தாய்
திறக்கருணை யுளார்கோயில்
பாளை யத்தில்
தேருலாக் காட்சிதந் தனளே.
(3)
அன்னையும் பிதாவுங்
குருவுடன் றெய்வ
மாகியே யாருயிர்க் கெல்லா
முன்னையாம் வினையொத்
திசைதநு கரண
முயக்குறும் புவன போகங்கள்
தன்னையீந் திகவாழ்க்
கையிலமி ழாது
தவந்தரக் கவையகா ளித்தாய்
தென்னைசூழ் பொதும்பர்க்
கௌசிக புரியில்
தேருலாக் காட்சிதந் தனளே.
(4)
நாயெனக் காகம்
நரியெனப் பிணவூன்
நன்கருந்துபு தெய்வங் களையும்
பேயெனப் பலிசெய்
பிசிதருங் கருணைப்
பெருக்குறத் திருவருள் புரிந்து
தாயெனப் போற்றுஞ்
சுத்தசன் மார்க்கச்
சார்புதோய் கவையகா ளித்தாய்
சேயெனப் புரியக்
கோயில்பா ளையத்தில்
தேலுலாக் காட்சிதந் தனளே.
(5)
பார்தரு மனித்த
மெய்கொடுள்ள நித்தப்
பாவமும் மலப்புலப் பகையால்
சோர்தரும் வினைக்காற்
றாலடி யுண்ட
துன்பக்கண் ணீர்துடைத் தின்ப
நீர்தரும் வண்ணம்
விழிவிருந் தாகி
நிறையருள்க் கவையகா ளித்தாய்
சீர்தரும் புனிதக்
கௌசிக புரியில்
தேருலாக் காட்சிதந் தனளே.
(6)
ஆக்கிய மனிதப்
பிறவிதோய் பயனாம்
அறம்முத லாம்புரு டார்த்த
பாக்கிய மனைத்து
மியல்வது கரவாப்
பரிவினா லெளிதளித் தின்பப்
போக்கியன் றிடவே
செலுத்திடுங் கருணை
பொங்குபு கவையகா ளித்தாய்
தேக்கியல் வளமைக்
கோயில்பா ளையத்தில்
தேருலாக் காட்சிதந் தனளே.
(7)
மடம்பிடித் திட்ட
பாவரும் பத்தி
மருவியின் பார்தன திருதாள்
இடம்பிடித் திட்ட
சித்திபெற் றோங்க
இசைத்திடல் வேண்டியே நீண்ட
வடம்பிடித் திடச்செய்
துடம்பிடித் தடங்கண்
வயங்கருட் கவையகா ளித்தாய்
திடம்பிடித் திட்ட
கௌசிக புரியிற்
றேருலாக் காட்சிதந் தனளே.
(8)
ஆண்டுமை யிருமைச்
சுகங்களும் பொருந்த
அமைக்குவ னஞ்சலிர் நீங்கள்
ஆண்டுகள் தோறு
மென்விழாப் பொலிய
ஆற்றுதி ரென்றுளத் தருளால்
வேண்டுவ தனைத்து
மெளிதளித் தாளும்
விருதுகொள் கவையகா ளித்தாய்
சேண்துலங் கிசைசால்
கோயில்பா ளையத்தில்
தேருலாக் காட்சிதந் தனளே.
(9)
நித்தியத் தொடுநை
மித்திகப் பணியும்
நிறைமலர் நந்தனப் பணியும்
சத்திய வால யத்திருப்
பணியும்
தரிசனம் தோத்திரம் புரிவோர்க்
கொத்தியல் குலதே
வதையெனு முரித்தோர்க்
குதவருள்க் கவையகா ளித்தாய்
சித்தியற் புதஞ்சால்
கௌசிக புரியில்
தேருலாக் காட்சிதந் தனளே.
(10)
மூலமாய் முன்நின்
றவருப கார
முயற்சியர் மிராசு கட்டளைகள்
சாலவா தரத்தில் புரிபவர் வமிசத்
தழைப்பருள் கவையகா ளித்தாய்
காலகா லேசன் சேயர்கள்
கருணா
கரவல்லி கரிவர தன்தோய்
சீலமான் மியஞ்சால்
கோயில்பா ளையத்தில்
தேருலாக் காட்சிதந் தனளே.
(11)
பற்றிடு மன்பர்க்
கவமிருத் தாதி
பயமெலா மறும்பய னருளி
முற்றிடுந் தீமை
மயிடன்நேர் வாரை
முடித்தருள் கவையகா ளித்தாய்
தெற்றியி னணியார்
கௌசிக புரியில்
தேருலாக் காட்சிதந்த னளென்
றுற்றிடுஞ் சிரவைச்
சேய்துதித் தணிபா
ஓதுவார் தீதிலா தவரே.
(12)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக