தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளிச் செய்த
கோயில்பாளையம்
வரதராஜப் பெருமாள் திருப்புகழ்
தனனதான
– தனதானா
மறையின்மோலி யெனநிலாவுன்
வனசபாத – மலர்மீதே
மணம்விராவு துளவம்வேரி மலர்கள்தூவி – யுளமூடே
நிறையுமாவல் பெருகுமேவல்
நியதிநாளும் – வழுவாதே
நிகரின்ஞான சகுணதேசவை நெடிதுகாண – அருள்வாயே
கறைகொளேதி பெறுகைமேய
கலியன்வேதம் – இசைகாதா
கரையிலாத வுலககோடி களையுளேகொள் – கனிவாயா
வறையலேசெய் பிறவிமாயை
மடியநாடு – குருநாதா
மகிமைநீடு கவுசையூர்கொள் வரதராஜ – பெருமாளே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக