தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளிச் செய்த
கோயில்பாளையம் காலகாலேச்சுரர் பதிகம்
- 2
காப்பு
(நேரிசை வெண்பா)
கோலா
கலப்பொலிவார் கோயிற் பதிக்கௌசைக்
காலாகா
லேசர் கவின் மலர்த்தாட் - பாலாகச்
சூட்டும்
பதிகத் துணையாகும் யானைமுகங்
காட்டும்
புகழ்க்கற் பகம்.
நூல்
திரைபொலி
கங்கை பைங்கொன்றை - யிளந்
திங்கள் சடையும் முக்கண்ணும்
அரைபொலி
யும்புலித் தோலுந் - துணை
அம்புயத் தாள்களு மின்பப்
பரைபொலி
யுமிடப் பாலுமென் - கண்
பார்த்துவப் பாகமுன் தோன்றிக்
கரையறு
சிற்சுக மீவீர் - கௌசைக்
காலகா லேச்சுர னாரே.
(1)
பொற்பணிக்
கொன்றையொப் பாம்மெய்த் - தொண்டர்
பொற்பணிப் பாடல்கொண் டாள்வீர்
எற்பணி
யுங்கொளும் பண்பே - யென
வெற்பணி
கொண்டரு ளானும்
சொற்பணி
நல்கிட வேண்டென் - சிறு
சொற்பணியுங் கனிந்து ஏற்பீர்
கற்பணிக்
கோயில்கள் மல்குங் - கௌசைக்
காலகா லேச்சுர னாரே.
(2)
ஊனமை
புன்புலக் காயந் - தனை
யோம்பி வத்துழல் வேனை
வானமை
நும்பதந் தோயும் - பெரு
வாழ்வில மைந்திட வைப்பீர்
தேனமை
கொன்றையு மாறுஞ் - சிறு
திங்களுந் தங்குங்கோ டீரக்
கானமை
சுந்தர மிக்கீர் - கௌசைக்
காலகா லேச்சுர னாரே.
(3)
ஈன்றிடு
வாள்புணர் வானுங் – கதி
யெய்திட வேட்டுருக் கொண்டு
தோன்றிடு
வீர்துதிப் பேனை - மிகச்
சோதித் திடல்முறை தானோ
வான்திகழ்
மாரி கொலன்ன - மது
மாமல ரின்றிரள் சாலக்
கான்றிடு
கான்பொலி சோலைக் - கௌசைக்
காலகா லேச்சுர னாரே.
(4)
எத்தனை
பேரை முன்னாளில் – வலி
தீர்த்தரு ளீந்தனி ரென்மேல்
இத்தனை
வன்மமுட் கொள்வீ -ரெனில்
ஏழையென் செய்துய வல்லேன்
பத்தனை
யஞ்சலன் கையில் – பொலி
பாசத்தில் வீக்குதென் திக்கின்
கத்தனை
யஞ்சலென் றாளுங் - கௌசைக்
காலகா லேச்சுர னாரே.
(5)
மற்பக
டூர்தரு மேமன் - கரம்
மாட்டமை யாமுன மஞ்சல்
சொற்பகர்
வீருமை யல்லால் - துணை
தொல்லுல கில்பிறி தில்லேன்
வெற்பகந்
தோறுமுற் றோங்கு – வடி
வேலனு மைங்கர மேவும்
கற்பக
மும்திகழ் சீலக் - கௌசைக்
காலகா லேச்சுர னாரே.
(6)
பூதலரும்
திகழ்வா னத்து - அமை
புங்க வருவளம் பொங்கும்
பாதலரும்
புகழ்சீ ரீந்தும் - பொற்
பாதமு மெய்துறப் பாரீர்
மாதவ
மிக்கமை காதிப் - பெயர்
மன்னவன் மெய்த்தவப் பேறாம்
காதலன்
நோன்புசெய் மாட்சிக் - கௌசைக்
காலகா லேச்சுர னாரே.
(7)
மாரணம்
வன்பிறப் பென்னுங் - கொடு
மாயை யினில்சுழல் வேனைப்
பூரண
மாகுநுஞ் செம்பொற் - கஞ்சப்
போதி லிசைதர வாள்வீர்
பாரணங்
கின்முகம் போலுங் - கோயிற்
பாளைய மென்றிறை வன்சார்
காரணப்
பேர்சிறந் தோங்குங் - கௌசைக்
காலகா லேச்சுர னாரே.
(8)
அஞ்சப்
புடையமர் வானும் – மல
ரஞ்சப் புடையமர் வேளும்
வஞ்சச்
சமனுமா மின்னோர் – புரி
வாதனை யால தளர் வேற்குத்
தஞ்சப்
பதம்பெறுந் தொண்டர் - மனம்
சார்நிலை சேர்தரக் காட்டீர்
கஞ்சக்
களைப்பணை மல்குங் - கௌசைக்
காலகா லேச்சுர னாரே.
(9)
வலைப்படும்
மானென வந்தோ - கொடும்
மாயா மலத்தினுட் பட்டோர்
நிலைப்பட
லின்றியான் வீணே - மிக
நெஞ்சயர்ந் தேன்விழி முன்பாய்த்
தலைப்படு
மானந்தம் நல்கும் – பத
தாமரை சார்ந்திடச் செய்வீர்
கலைப்பனி
யிந்தணி மாடக் - கௌசைக்
காலகா லேச்சுர னாரே.
(10)
திருந்தரு
ளோங்கு மிராமா - னந்த
தேசிக னாப்புறத் தூடும்
கருத்தினுள்
ளுங்குடி கொள்ளுங் - கௌசைக்
காலகா லேச்சுர னாரைத்
தருத்திர
ளோங்கணிச் சிரவைக் – கந்த
சாமி யுவப்பினில் போற்றும்
மருத்துறழ்
செந்தமிழ் வல்லா - ருயர்
வானுல கேறவல் லாரே.
(11)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக