தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளிச் செய்த
கோயில்பாளையம் கவையகாளியம்மன் திருப்புகழ்
தனனாத் தாத்தன - தனதானா
கானமேற் றோற்றும்விரு
காதிபோல் கூற்றிலுயிர்
காதியேற்
றேப்பமிடு - கொடியோர்நீள்
காலனூர்ப் பாற்புகுத யேவிமீக் கூற்றடியர்
காதல்வாய்த்
தேற்றமுட - னுறுமாறே
நானவாய்ப் போற்றுபல
வானபாக் கேட்டுமுளம்
நாடிடாச்
சீற்றமுறல் - முறைதானோ
ஞானவூற் றாய்க்கொள்பர போகமேற் கூட்டுசுதை
நாயினேற்
வூட்டவெதிர் - வருவாயே
வானவூர்த் தீர்த்தர்மகிழ்
வாகிவாழ்த் தாற்றமிர்த
வாரிபோற்
சீர்த்தமைகண் - ணுடையாளே
மாலறாத் தூர்த்தர்குல மாளுமா றாற்றல்பொலி
வாகைமீக்
கூர்ப்படைகை - வுறுதேவீ
தேனறாத் தாள்க்கவைய
காளியாச் சாற்றுமக
தேவிபார்ச்
சீர்க்கவுசை - நகர்வாழ்வே
சீலர்பார்த் தேத்திமலர் மாரிதூர்த் தார்க்கவுயர்
தேருலாக்
காட்சியருள் – புரிவாயே.
வாழி விருத்தம்
திருவளர் கோயிற்
பாளையம் வாழி
திகழருட் காலகா லேசன்
மருவளர் கருணா
கரவல்லி வாழி
வரதராசன் மெய்க்கற் பகத்தோ
டுருவளர் சண்மு
கப்பிரான் வாழி
யுத்தமத் தொண்டர்கள் வாழி
மருவளர் மறைய
ளாகமம் வாழி
மற்றமை நலங்கள்வா ழியவே.
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக