தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளிச் செய்த
கோயில்பாளையம் காலகாலேச்சுரர் திருப்புகழ்
தானனா தாத்தனத் - தனதானா
பாவமா
றாப்புலைத் தீமைதோய் தூர்த்தருட்
பாசமார்
வாழ்க்கையிற் - றளராதே
பாகமார்
சாற்றினிற் றேனினோ ரூற்றினிற்
பாடிநானேத்தியுட்
- குளிரேனோ
சேவலோ னேய்க்குமெத் தூயர்வாழ் கூட்டமுட்
சேருநீண்மாட்சியெற்
- கிடுவானீள்
சேவின்மீ
தாய்ச்சிவைத் தாயினோ டேற்புறச்
சேவையோர்
காற்களித் - தருள்வாயே
ஆவலோ டேத்துமப் போதிலோர் பூக்குறைக்
காகமால்
சாத்துகட் - பதமீதே
யார்வமா
யேற்றிகற் கூடினார் கூற்றையொப்
பாழிபா
ராட்டிமுற் - றருகோவே
காவலா ராக்கையைப் பாழிலே காத்திறக்
காதுநேர்
தோற்றுசற் - குருவாவாய்
காவுளார்
போற்றணிக் கோயிலார் சீர்ப்பதிக்
காலகா
லேச்சுரப் – பெருமானே.
துதி
போற்று
தென்திசைக் காலன்நின் சந்நிதி புரிந்துன்
மாற்று
யர்ந்தபே ருள்திரு வுருப்பெற வயக்கி
ஆற்று
பூசையின் சிறப்பும் பின்னாஞ்செய லனைத்துஞ்
சாற்று
காலகா லேசவென் நாவினில் தழைத்தே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக