தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளிச் செய்த
கோயில்பாளையம் நடராசர் திருப்புகழ்
தனத்தன்னத் தனதன தானத் - தனதானா
பிறப்பொடிறப்
பினிலெனை வாடப்
படுத்துமலப் பிணியுடன் மூடப்
பெருக்கவிருட் குணமய லோடப் - புவிமீதே
பிணித்தவினைப் பகுதிகள் வீடப்
பரத்தமைபத் திமையருள் கூடப்
பிரிப்பறுசிற் சுகநிலை மூடப் - பெறுமாறே
திறச்சடையிற்
பிறையர வாடத்
திரைத்தொனிமிக் கமைநதி யாடத்
திருக்கைகளிற் பரசுழையாடக் - தழலேநேர்
சினப்புலியத் தியினுரி யாடப்
பதத்துணையிற் றொனிகழ லாடச்
செழித்தநடத் தரிசன நீடத் - தருவாயே
புறத்தொடகப்
பிரிவறு நேசப்
பணித்தவர்கட் குறுசக வாசப்
புலப்பகையற் றிசையுப தேசப் - பதமீவாய்
புயத்தடன்மிக் கிடர்மிகை தோயப்
பலர்க்குமிகற் படுமவர் மாயப்
புரத்தைநகைச் செயல்கொடு தீயப் - புரிவோனே
சிறப்புறுசற்
குணமலி நோன்மைத்
திறத்தரவைப் புடையிழி பான்மைத்
தியக்கனுறப் புரிதரு மேன்மைத் - தயவோனே
செழித்தலர்கற் பகமர வாசத்
துறக்கமொல்கக் கரிமுகன் வாசத்
திருக்கவுசைப் பதிநட ராசப் - பெருமானே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக