தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளிச் செய்த
கோயில்பாளையம்
கரிவரதராசப் பெருமாள் பதிகம்
காப்பு
தேடும்
புகழ்க்கௌ சிகபுரியி லன்பருள
நாடுங்
கரிவரத ராசன்மிசை - சூடும்
பதிகத்தி
னுக்கவன்பொற் பாதமல ருங்கை
வதிசங்கு
மாழியுங்கா வல்.
நூல்
(எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
கிரணமலி
மரகதவான் கிரியனைய வடிவுங்
கிருபைமழை பொழிநயனங் கிளர்ந்ததிரு முகமும்
பரணமறும்
படையினங்கொண் டவிர்கரமும் பீதாம்
பரமிளிருந் திருவரையும் பரிமளப்பைந் துளவார்
சரணமலர்
களும்பிறவு மென்னகத்தும் புறத்தும்
தணவாது விளங்கியின்பத் தரிசனந்தந் தடியேன்
கரணமுற்றுங்
கரைந்துருகக் கடைக்கணித்தல் வேண்டும்
கௌசைவளர் கரிவரத ராச பெருமாளே.
(1)
அகத்துடனிந்
திரியமுற்று மள்ளிவிழுங் கிடும்பேர்
அழகுடன்மா வலிமனைக்க ணணையவவன் சுதையிம்
மகத்துவனைப்
பாலனெனப் பாலருந்துந் திருநாள்
வருங்கொலெனுஞ் சங்கற்பம் வாய்த்திடப்பூ தகியாய்ச்
சுகத்துடன்
சூசுகத்துறுபா லருத்தவுயி ருடனேதுய்த்
துயர்வீட்ட மைத்தனையென் றுயரறியாய் கொல்லோ
ககத்தரசின்
மிசையுன்னருள் காட்சிதர வேண்டும்
கௌசைவளர் கரிவரத ராச பெருமாளே.
(2)
பரிமளமுன்
திருமேனி மிசையிசைய வொருகால்
பரிந்துதவுங் கூனியுடல் பரிசித்தக் கணத்தே
விரிமலர்ச்செந்
திருவனையா ளாக்கிமணந் தருளும்
விமலாநின் திருப்புகழ்ச்சீர் விரவியசெந்
தமிழ்ப்பாட்
டுரியவதற்
கிணையிலதென் றோதிடநின் னுள்ள
மொப்புவதோ செப்பிடுவாய் யுண்மையுண ருறவே
கரியெனயா
ருயிர்கண்முற்றுங் கலந்தருளுங் கரியோய்
கௌசைவளர் கரிவரத ராசபெருமாளே.
(3)
உண்டிடவு
முடுத்திடவு முறங்கிடவும் பருவமொண்
தொடியாரு டல்புனைந்திட் டுவப்பொடவர் போகம்
கொண்டிவு
மதிகாரஞ் செலுத்தவும்பொன் றேடிக்
குவித்திடவும் விரும்புமிருள் குருட்டுலகு
வழக்கில்
அண்டிடவும்
வேண்டிலனுன் னருட்புகழ்ச்சீர் பாடி
யாடிடவு முன்பதத்தில் கூடிடவும் விழைந்தேன்
கண்டிடநின்
திருக்காட்சி யெனக்கருளக் கருதாய்
கௌசைவளர் கரிவரத ராச பெருமாளே.
(4)
எத்தனையோ
பெரும்பவமுன் னியற்றியவை யொழிக்கு
மெண்ணமின்றிப் பின்னுமிகப் பண்ணமுயல் பாவ
இத்தனையோர்
தங்களையுங் காத்தவிதங் கருதி
விட்டுவிடா னெந்தையென்பேன் மிகமயங்கப் பார்த்தாய்
இத்தனையோ
நின்னருளென் மீதிசைத லருள்வான்
எண்ணினையோ சோதனைசெய் திருந்தனையோ யுளத்தே
கைத்தனையோ
கைத்தனையேற் கதியறியே னபயம்
கௌசைவளர் கரிவரத ராசபெருமாளே.
(5)
சினமடங்குந்
தவமறியேன் சாகாத கல்வித்
திறமறியே னுணர்வளிக்குந் திருவருட்சீர் தெரிந்தே
மனமடங்கும்
பெருநிலையில் நின்றறியேன் றுன்ப
மரணமுதிப் பெனுமயக்க மாற்றறியே னெனினும்
வனமடங்கும்
பரிமளப்பைஞ் சோதியுருக் காட்டி
வரம்பறுபே ரின்பநிறை வாழ்விலுறப் புரிவாய்
கனமடங்கும்
நீள்சிகரிக் கோயில்வளம் பதியாம்
கௌசைவளர் கரிவரத ராசபெருமாளே.
(6)
தூலவுடல்
யானெனவே காட்டுமகங் காரச்
சுமையெடுத்துத் திடர்குழியாஞ் சுகதுக்க மாயா
சாலமயல்
பொய்யுலகக் கானகத்தி லலையச்
சார்கருமம் பிடர்பிடித்துத் தள்ளவிழுந் தயர்ந்தேன்
கோலமுறு
மகண்டபரி பூரணநின் றாள்வை
குந்தமருள் பெரும்பதியில் கொண்டெனைநீ சேர்த்தும்
காலமெது
தான்கொல்லுணர்ந் திடவருள வேண்டும்
கௌசைவளர் கரிவரத ராசபெருமாளே.
(7)
அண்டமெலாஞ்
சிற்றனுவாஞ் சொரூபமுற் றவற்றுள்
அமையவணுவுள் ளணுவுருவ மாகியவை விரும்பும்
பண்டமெலாம்
வழங்கியது பலித்திடவைத் தருளால்
பக்குவமுள் தோற்றுவித்துப் பவமிறப்பற் றுமிசை
குண்டமெலாம்
பெறக்கொடுக்க வருள்விருது கட்டிக்
கொண்டமைநிற் கடியேனென் குறைபகர்தல் மிகையே
கண்டமெலாங்
கலந்தசகு ணத்தகண்ட வடிவோய்
கௌசைவளர் கரிவரத ராச பெருமாளே.
(8)
தருமங்கை
வரநினையார் கலியியற்றுக் கிரத்தாற்
தாரணிவாழ் மனிதரந்தோ தாரமெனத் தம்பால்
வருமங்கை
யரைக்கூடி மக்களைப்பெற் றவர்க்காம்
மாடைகொள்ளும் பேற்றிலிறு மாந்துன்மதி மறந்தார்
திருமங்கை
மன்பத்தி ராசலதா சனனார்ச்
செனிப்புறவைத் துன்கோயில் திருப்பணியா தியசற்
கருமங்கை
வரப்புரிகா ணாச்செயலன் றிதுநீ
கௌசைவளர் கரிவரத ராச பெருமாளே.
(9)
ஆரணமா
கமமுதலாங் கலையினங்கொ ளளவால்
அறியமுடி யாதசச்சி தானந்த மயமாம்
பூரணமே
யாயெனதென் போதமின்ஞா னாநு
பூதியுணர் வோருணர்விற் பொங்கியபே ரின்ப
வாரணமோர்
காலாதி மூலமென வழைக்க
வந்ததிறம் வாய்மைபெற வாழ்த்திடுமென் பொருட்டோர்
காரணம்நீ
காட்டிலதில் கதிக்குநின்சீர் கண்டாய்
கௌசை கர்க் கரிவரத ராச பெருமாளே.
(10)
புவிநடையி
லெனையமிழ்த்தும் புலநடையி லுறுதற்
போதநடை யறவருண்மெய்ப் போதநடை காட்டிக்
கவிநடையில்
செலுத்துமிரா மானந்த குருவாய்க்
கௌசைவளர் கரிவரத ராசபெரு மாளைக்
குவிநடைபெற்
றிடுமடியார் கவினடைத்தாள் தூளி
கொண்டகந்த சாமியென்நாக் கூறுநடைப் பதிக
நவினடைவா
யன்பரெல்லாம் நாரணன்மெய் யருட்சீர்
நன்னடையும் பொன்னடையும் நண்ணுதல்சத் தியமே.
(11)
வாழி விருத்தம்
இலங்கிசைக் கோயிற்
கௌசைநகர் வாழ்க
காலகா லேசன் வாழ்க
துலங்குகரு ணாகரப்
பேர்க்கொடி வாழ்க
கற்பகமுந் துணையும் வாழ்க
நலங்கொண்ட ராசர்
கரிவரத ராசன்
பணிசெய்
நல்லோர் வாழ்க
புலங்கொள் மறையோ
ரிறைவர் வாழ்க
காலமுற் றின்பம்பொங்கி வாழ்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக