தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளிச் செய்த
கோயில்பாளையம் காளியம்மன் பதிகம்
காப்பு
(நேடிச வெண்பா)
வாளிநிகர் கண்கருணை
மாரிபொழி சீர்க்கௌசைக்
காளியம்மை பச்சைக்
கழையனைய - தோளிலணி
தோத்திரப்பா வோதத்
துணையாம்பொன் மேருநிகர்
காத்திரயைங் கைக்கற்
பகம்.
நூல்
(எழுசீர் விருத்தம்)
பூரண மதியம் நிகர்திரு
முகமும்,
புயலென வருள்மழை பொழியும்
கூரண வியவாள்
விழிகளுங் கதிர்தோய்
குழைபொலி செவிகளும் பதமும்
வாரண வியபொன்
தனங்களும் பிறவும்
வயங்கிடச் சிங்கவா கனத்துன்
காரணக் காட்சி
யெனக்களித் திடுவாய்
கௌசைவாழ் காளியம் பிகையே.
(1)
தள்ளையா யுலகத்
துயிரெலாம் பெறுநின்
சந்நிதி யிடத்தினில் சிறிய
பிள்ளையா னிரக்கும்
பொருளெலா மின்பம்
பெறும்படி யிரங்கீந் தருள்வாய்
கொள்ளையா ருலகி
லாலயங் களைப்பேய்க்
கோயிலென் றறிஞர்க ளவர்ப்பக்
கள்ளையூ னினைவைப்
ப ரவர்த் தெறுவாய்
கௌசைவாழ் காளியம் பிகையே.
(2)
வளைபிடுங் கிப்போய்
மறைமுய லெருமை
வாரண மாட்டினம் பெற்ற
முளைபிடுங் கிடுபேர
ரக்கரால யத்தின்
முன்வதைத் தூத்தைவா யாகுந்
துளைபிடுங் கிடவே
திணித்திடு காட்டிற்
றோய்வயிற் றமைத்தனர் குலமாம்
களைபிடுங் கிடநீ
படையெடுத் திடுவாய்
கௌசைவாழ் காளியம் பிகையே.
(3)
நாட்டுள்வாழ்
கோழி யாடுபன் றிகளும்
நனிபுசித் தேப்பமிட்ட வர்மெய்
காட்டுள்வாழ்
நரிநாய் கழுகுகாக் கைகளும்
கடித்தயின் றுளம்களி கூர
மூட்டுகா லன்சேர்
பதிபுகுத் திடுநோய்
முத்திரையவர்க் கமைத்த ருட்சீர்
காட்டுவாய் தாய்நின்
னாலின் மகிமை
கௌசைவாழ் காளியம் பிகையே.
(4)
சிட்டராந் தெய்வ
பத்தர்க ளெவருஞ்
சிந்தையு ளுவகை பெற்றிடவுந்
துட்டராங் கொடிய
நாத்திகர் துன்பத்
தொடுகட லாழ்ந்தயர்ந் திடவும்
இட்டமுற் றின்றே
யியற்றுவ னென்றுள்
இசைந்துகங் கணங்கரத் திடைநீ
கட்டவுன் றிருத்தாள்
வணங்கின னிரங்காய்
கௌசைவாழ் காளியம் பிகையே.
(5)
இமையவர் வாழ மயிடனைத்
தடிந்த
இறைவிநீ யிருந்தயிப் பதிதான்
அமைவளப் பொலிவு
குன்றியுற் றிடல்கண்
டகமிகப் பதைத்தன னுனது
தமைய னாலயங் கண்டாய்
கொலோமற்றைத்
தளிகள் பார்த்தாய் கொலோகண்டும்
கமையுட னுள்சம்
மதித்தமைந் தனையோ?
கௌசைவாழ் காளியம் பிகையே.
(6)
நிணம்பெறு முணவை
நின்னினத் தவர்கள்
நேர்வதாய் நினைத்துரைத் தலகைக்
குணம்பெறு கொடியோர்
தாமுடம் பெடுத்த
குலமறக் கல்லிடக் குறிப்பாய்
மணம்பெறு களப
புளகிதத் திதலை
மருவுபொன் தனமதி முகத்தாய்
கணம்பெறு தொண்ட
ரினங்களித் துலவுங்
கௌசைவாழ் காளியம் பிகையே.
(7)
நினைவளம் பெறவே
நினைத்தடி தொழுவார்
நிறைவளம் பெறவுமங் கவர்வாழ்
மனைவளம் பெறவும்
பொருள்வளம் பெறவும்
மைந்தர்கள் நல்வளம் பெறவும்
முனைவளம் பெறுகண்
கடையினால் நோக்கி
முற்றும்நீ காத்திட வேண்டும்
கனைவளம் பெறுமைம்
முகிலணி மாடக்
கௌசைவாழ் காளியம் பிகையே.
(8)
வரம்பறு மின்ப
வரங்கனிந் தருள்நின்
வாரிசத் தாள்பணிந் திடுமெம்
பரம்பரை யிகத்தில்
பொலிவுறும் வண்ணம்
பாலனம் புரிவதுன் பரமே
நரம்பவிர் யாழுங்
குழலுமஞ் சுகமும்
நாணுற மிழற்றுகோ கிலமே
கரம்பயில் பூசைத்
தொண்டர்தம் வாழ்வே
கௌசைவாழ் காளியம் பிகையே.
(9)
பொலிவுறு கருணை
சீல மாசாரம்
பொறையற மாதிசற் கன்மம்
மலிவுற வளர்த்துத்
தமர்க்குப கரிக்கும்
மறுவில்பே ரருள்நிறை யுன்னில்
ஒலிதரு மதன்மர்க்
குதவிசெய் தெதிர்தோய்
யுகந்தனில் மடிவுறு பாவக்
கலிவலி யவனென்
றுற்ற னைகொல்
கௌசைவாழ் காளியம் பிகையே.
(10)
துதிநலம் பெறச்செய்
துன்னடி போற்றிச்
சுத்த பூசனை புரிவார்கள்
மதிநலம் பெறவுஞ்
சகலபாக் கியமும்
வாய்ந்துதீ வினைத்தொடர் பகலும்
விதிநலம் பெறவும்
பதிநலம் பெறவும்
விழிகொடு நோக்கியே மறுமைக்
கதிநலம் பெறவுந்
துணைசெய்வாய் வாழி!
கௌசைவாழ் காளியம் பிகையே.
(11)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக