தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளிச் செய்த
கோயில்பாளையம் நடராசர் பதிகம்
காப்பு
(நேரிசை வெண்பா)
சித்துந்து
சீர்க்கௌ சிகபுரமார் பொற்சபையை
நத்துங்
கருணைநடரா சர்துதி - பத்துந்
தருங்கற்
பகமேலோர் தம்போலென் னுள்ளும்
வருங்கற்
பகப்பேர்நால் வாய்.
நூல்
(கலி விருத்தம்)
நிலவணியுஞ்
சடைமுடியு நிறைதலைமாலை கண்முதலாம்
பலவணியும்
பொருந்தவென்கண் பார்த்திடவந் தருள்வாய்நித்
திலவணியார்
தவளநகைச் சிவகாமி யம்மையுடன்
நலவணியார்
கௌசைநகர் நடராசப் பெருமானே.
(1)
மற்பதியுங்
கொடுமனத்தால் வாடிடுவே னுள்ளத்துள்
பொற்பதிகம்
பெறுநடமெய்ப் பூரணவா னந்தநல்காய்
சிற்பதியே
சிவபதியே சிவகாம சுந்தரிதோய்
நற்பதியே
கௌசைநகர் நடராசப் பெருமானே.
(2)
மாதாவுந்
தந்ததையுமுன் வந்தருளுஞ் சற்குருவு
நீதானென்
றுன்னடியேன் நெஞ்சுதளர் வுடையாதே
சேதாவி
லருள்புரியுஞ் சிவகாம சுந்தரிதன்
நாதாவோ
கௌசைநகர் நடராசப் பெருமானே.
(3)
தும்பியென
மதம்பொழியும் துட்டமத வாதரினம்
வம்பிலெனை
யிழுத்துமிக வாதிக்க மெய்தளர்ந்தேன்
தெம்பிசையைக்
காட்டுபுகழ்ச் சிவகாம சுந்தரிதன்
நம்பியணிக்
கௌசைநகர் நடராசப் பெருமானே.
(4)
காயமலச் சிறைக்குள்ளே
கட்டுண்டொ ரைம்புலப்பொய்ப்
பேயரிழுத்
தலைத்திடலில் பித்துற்று வாடுகின்றேன்
சேயநலம்
பெறவருள்செய் சிவகாம சுந்தரிக்கு
நாயகனே
கௌசைநகர் நடராசப் பெருமானே.
(5)
சங்கையிலாத்
துன்பமைக்குஞ் சனனமர ணகடற்குள்
மங்கையர்
பொன்மண்ணாசை வாய்ந்தமதி கேடனெனைச்
செங்கையினா
லஞ்சலெனுஞ் சிவகாம சுந்தரியாம்
நங்கைமகிழ்
கௌசைநகர் நடராசப் பெருமானே.
(6)
நீடுமிசை
யாரணத்தின் நிறைந்தவிர்நின் பேரின்பங்
கூடுமிசை
யத்தனையுங் கூறுமிசை யெனக்கருள்வாய்
தேடுமிசை
மிக்கவருட் சிவகாம சுந்தரித்தாய்
நாடுமிசைக்
கௌசைநகர் நடராசப் பெருமானே.
(7)
தியங்குமட
மாதர்மல தேகத்தை மோகத்தால்
வியக்குமனப்
பேயையனல் விழிநோக்கி நீற்றிடுவாய்
செயக்குணப்
பேரின்பவருட் சிவகாம சுந்தரியுள்
நயக்குமுருக்
கௌசைநகர் நடராசப் பெருமானே.
(8)
வாட்டமுறும்
பயிர்செழிப்ப வான்பொழிந்த வாறேபோல்
வீட்டமையும்
படியெனக்குன் மெஞ்ஞானக் கண்ணருள்வாய்
தேட்டமுறுங்
கருணையுருச் சிவகாம சுந்தரிகண்
நாட்டமுறுங்
கௌசைநகர் நடராசப் பெருமானே.
(9)
பற்றவனே
யாவினுக்கும் பாருலகப் பற்றறுத்தார்க்
கற்றவனே
யெமக்கொர்துணை யானவனே யடையாரூர்
கொற்றவனே
யொப்பிலருள் சிவகாம சுந்தரிதோய்
நற்றவனே
கௌசைநகர் நடராசப் பெருமானே.
(10)
சித்துவந்தா
ருட்குலவுஞ் சிவகாம சுந்தரித்தாய்
நத்துமின்பார்
கௌசைநகர் நடராசப் பெருமான்மேல்
வித்துளஞ்சால்
கந்தசாமிச் சிறியேன்விண் டணிபா
லுய்த்துணர்வார்
மாயையினி லுடையாவின் புடையாரே.
(11)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக