தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச்
செய்த
வடுகப்பட்டி
முத்துமாரியம்மன் பதிகம்
(எழுசீர்
ஆசிரிய விருத்தம்)
திருவளர் கமல மனையவள் விழியுந்
திங்கள்நேர் மங்கள முகமுந்
தருநிகர்த் தடியார்
தமக்கருள் கரமுந்
தகுபடைக் கலங்களும் பணிவோர்
கருவளர் பிறவிப்
பிணிதவிர் பதமுங்
கவின்றிடக் காட்சிதந் தாள்வாய்
முருகலர்ச் சோலை
வடுகபட் டியில்வாழ்
முத்துமா ரித்திருத் தாயே.
(1)
கற்றவர் போற்றுங்
கருணையங் கடலே
கழலடி பணிபவர்க் கெல்லாம்
நற்றகை யருளை நல்கிடுந்
தேவீ
நாடியுன் திருவடிப் புகழைச்
சொற்றிடப் பாவ மற்றிடப்
பக்தி
தோய்ந்திட யெண்ணுமென் எண்ணம்
முற்றுமீந் தருள்வாய் வடுகபட் டியில்வாழ்
முத்துமா ரித்திருத் தாயே.
(2)
உன்னியுன் திருத்தா
ளுருகியேத் திடவும்
உலகிடைத் தீமையே புரிவோர்
நன்னிலை யுறவுங்
கொலைபுலை யகன்று
நாட்டவர் வாழவும் பதமே
பன்னியா தரித்திட்
டிரவுடன் பகலும்
பாடவும் நாடவும் நாளும்
முன்னுமெற் கிரங்காய்
வடுகபட் டியில்வாழ்
முத்துமா ரித்திருத் தாயே.
(3)
தொழுவது முன்னைத்
துதிப்பதுங் கோயில்
சூழ்வதுந் தாழ்வதுந் திருமுன்
அழுவது மன்பால் விழுவது
முள்ளம்
அனலிடை மெழுகென வுருகி
எழுவது மான நிலையினை
யருள்வாய்
எண்ணியே பணிபவ ரெண்ணம்
முழுவதும் நல்க வடுகபட்
டியில்வாழ்
முத்துமா ரித்திருத் தாயே.
(4)
அம்மையே நின்சேய்
திருச்செவி ஏற்க
அகத்துள குறையினைக் கூறல்
செம்மையோ வுடல்தாய்
தேர்குவ ளென்னில்
செகமெலாங் காத்திடு முயிர்த்தாய்
இம்மையிங் குள்ள
குறைகளை யறியாது
இருப்பையோ பணிபவர் தமக்கு
மும்மையுந் தருவான் வடுகபட் டியில்வாழ்
முத்துமா ரித்திருத் தாயே.
(5)
நனிவிருப் புடன்கோ
யில்பணி புரிவோர்
நலமுறத் திருப்பணி செய்வோர்
பனிமலர் கொண்டு பூசனை
புரிவோர்
பாடுவோர் பணிகுவோர் யார்க்கும்
மனிதர்க ளிகத்தி
லடைந்திடற் குரிய
வளத்தினை வழங்கியாண் டருள்வாய்
முனிவர்கள் போற்றும்
வடுகபட் டியில்வாழ்
முத்துமா ரித்திருத் தாயே.
(6)
கறைபொலி கண்டத் திறைவனார்
மகிழுங்
கற்பகப் பொற்கொடீ நாலா
மறையினை விரித்த
வேதனின் தந்தை
மனம்மகிழ் சோதரீ யெந்தை
இறைவனாம் முருகோன்
கையிடத் தயிலாய்
இலங்குவாய் தயங்கடிச் சிறியேன்
முறையையேற் றருள்வாய்
வடுகபட் டியில்வாழ்
முத்துமா ரித்திருத் தாயே.
(7)
இதமருள் கருணை யம்மையே
சிமய
இமயமேல் வளர்ந்தபைந் தருவே
பதமலர் பணிவோர்க்
கிகபர நலங்களை
பாலிக்கும் பராபரன் துணையே
நிதம்பல மலரால் பூசனை
புரிய
நீடுநின் திருவுருக் கருத
முதல்விநீ யருள்வாய்
வடுகபட் டியில்வாழ்
முத்துமா ரித்திருத் தாயே.
(8)
நற்றிருக் கோயில்
கற்றளி யாக்கி
நயம்பெற விமானமு மமைத்துச்
சுற்றிலு முள்ள தளிகளைப்
புதுக்கித்
தூய்மையார் கும்பநீ ராட்டும்
பொற்புறச் செய்யு
மரங்கசாமி யெனும்
பொன்னியா ருன்னும்நன் னலங்கள்
முற்றுமீந் தாள்வாய்
வடுகபட் டியில்வாழ்
முத்துமா ரித்திருத் தாயே.
(9)
மன்னுமா லயத்தில்
பூசனை புரிவோர்
மாண்புறத் திருவல கிடுவோர்
பன்னுநாண் மலரா லருச்சனை
யாதி
பண்ணுவோர் நண்ணுவோ ரன்பால்
நன்னல மாகத் திருவிழாப்
புரிவோர்
நலமெலாம் பெற்றிலங் கிடநீ
முன்னியாண் டருள்வாய்
வடுகபட் டியில்வாழ்
முத்துமா ரித்திருத் தாயே.
(10)
நூற்பயன்
வளரும்நல் தென்னை
கமுகுடன் கரும்பு
வாழைநெல் வயல்வளத் துடனே
முளரியார் பொய்கை
வடுகபட் டியில்வாழ்
முத்துமா ரித்திருத் தாயைச்
சளம்தவிர் சிரவைத்
திருக்கவு மாரர்
தாள்பணி சிறியனேன் புகல்பா
உளமகிழ்ந் தன்னை
முன்னுரைப் பவர்கள்
உயர்நலம் பலபெறு வாரே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக