தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த
மேட்டுப்பாளையம்
பால தண்டபாணி பதிகம்
காப்பு
(நேரிசை
வெண்பா)
மன்னுதமிழ் நாட்டினில்நீர்
வற்றாப் பவானிநதி
பன்னுகரை சேர்மேட்டுப்
பாளையத்தில் – மின்னயில்வேல்
கொண்டதண்ட பாணிக்
குருபரன்மேல் கூறுதுதிக்கு
அண்டர்பணி யைங்கரன்காப்
பாம்.
(1)
நூல்
(எண்சீர்
ஆசிரிய விருத்தம்)
செந்தகை வதன பங்கய
மலரும்
திருவருள் பொழிவிரி இணையும்
கந்தமார் கடம்பு
புனைதட மார்புங்
கவின்தொடை தண்டமை கரமும்
வந்தனை புரிவோர்க்
கிகபரம் நல்கும்
மலரடி களுமெனச் சேவை
தந்தருள் மேட்டுப்
பாளையப் பால
தண்டபா ணிப்பெரு மானே.
(2)
‘‘அன்னைதந் தையும்நீ’’ எனநினைந்
துனதாள்
அணிமல ரகம்புறம் பணியும்
என்னைவல் வினையார்
பந்தபா சங்கள்
எய்திடா தாண்டருள் புரிவாய்
தென்னைவண் கமுகு
கரும்புயர் வாழை
செழும்பலா தேக்குமாஞ் சோலை
தன்னையார் மேட்டுப்
பாளையப் பால
தண்டபா ணிப்பெரு மானே.
(3)
அருணையூர்ப் புலவ
னகத்திய முனிவன்
ஐம்முகச் சிவபிரான் முதலாப்
பெருமையார் மேலோர்க்
கருளுப தேசம்
பேசலால் சிறப்பிலை வினையேன்
இருமைசேர் வினைநீங்
கிடவுப தேசம்
இசைத்தலே மிகப்புகழ் தருமால்
சரணம்யான் மேட்டுப்
பாளையப் பால
தண்டபா ணிப்பெரு மானே.
(4)
கொண்டலை நிகர்த்துச்
சந்தவண் ணங்கள்
கொழித்திடும் அருணையூர் முனிவன்
தண்டபா ணிப்பேர்ச்
சுவாமிகள் முதலோர்
சாற்றுசொற் படியருள் புரிந்தாய்
ஒண்டகை யவர்தம் வழிவழி
அடிமை
ஓதுசொல் ஏற்றருள் புரிவாய்
தண்டலை மேட்டுப்
பாளையப் பால
தண்டபா ணிப்பெரு மானே.
(5)
போக்குடன் வரவு புரிபிறப்
பிறப்பாம்
பிணியினா லுழன்றிடு மென்னை
ஆக்கும்மெஞ் ஞான
வாழ்வளித் துன்றன்
அடியிணை களிலுற வருள்வாய்
பாக்குயர் மரங்கள்
விண்செலும் படிபோல்
பரந்துய ருதகமண் டலத்தைத்
தாக்குசீர் மேட்டுப்
பாளையப் பால
தண்டபா ணிப்பெரு மானே.
(6)
கொலைபுலை யற்ற நிலையினி
லுலகங்
குலவிட மக்களுன் கோயில்
மலைத்தலம் தோறும்
பணிந்திக பரச்சீர்
மருவிட மழைவளஞ் சிறக்க
அலைபுரி தீமை யகன்றிட
கருணை
ஆட்சிமே லோங்கிட வருள்வாய்
தலைமையார் மேட்டுப்
பாளையப் பால
தண்டபா ணிப்பெரு மானே.
(7)
வந்தயிப் பிறப்பி
லுனைநினைந் துறுங்கால்
மாற்றும்மூ வாசைவந் தலைத்துத்
தொந்தமார் உலகத்
தலைத்திடத் துயரந்
தோய்ந்தனன் காத்தருள் புரிவாய்
கந்தம் கமுகுச் சோலைசூழ்
பவானிக்
கரையினில் குபேரனூர் போலச்
சந்தமார் மேட்டுப்
பாளையப் பால
தண்டபா ணிப்பெரு மானே.
(8)
அணிமுரு கானந் தப்பெருந்
தகைசீர்
அவிர்தரு நாகலிங் கர்பொன்
மணியெனு மம்மை ஆதிமூ
லப்பேர்
வாய்ந்திடு மடிகளார் முன்னாள்
பணியுடன் பூசை புரிதரும்
சிறப்புப்
படைத்தநல் தளியுளா யென்றுந்
தணிவில்சீர் மேட்டுப்
பாளையப் பால
தண்டபா ணிப்பெரு மானே.
(9)
எண்ணிய யெண்ணி யாங்கருள்
புரியும்
எந்தையே கந்தநா யகனே
புண்ணிய பொருளால்
திருப்பணி செய்து
புதியதாம் ராஜகோ புரமுந்
திண்ணிய முறையில்
செய்யுமன் பினர்க்குத்
திருவருட் செல்வமீந் தருள்வாய்
தண்ணியல் மேட்டுப்
பாளையப் பால
தண்டபா ணிப்பெரு மானே.
(10)
பராவுசீர்ப் பணிகள்
பலவகை புரிந்து
பண்புடன் கும்பாபி டேகம்
விராவுபே ரன்பா லன்பரைக்
கொண்டு
விழைவுடன் முன்நின்று செய்யும்
இராமசா மிப்பேர்
முதலியார் முதலோர்க்கு
இகபர நலமளித் தருள்வாய்
தராதர மேட்டுப் பாளையப்
பால
தண்டபா ணிப்பெரு மானே.
(11)
வாழி
வெண்பா
(நேரிசை
வெண்பா)
பன்னு புகழ்மேட்டுப்
பாளையத்தோர் தாம்வாழ்க
தன்நேர் புகழ்பால
தண்டணிகை - மன்னவனின்
நற்கோயில் வாழ்க நயந்துபணி செய்யன்பர்
பொற்புடனே வாழ்க பொலிந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக