தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச்
செய்த
சின்னவேடன்பட்டி
விக்ன விநயாகர் பதிகம்
(கட்டளைக்
கலிப்பா)
மன்னு கங்கை நதிபொதி
கூவிளம்
வயங்கு மாமுடி சிந்துர வத்திரம்,
துன்னும் வானக ஐந்தரு
நாண்ணுறத்
துலங்கும் ஐங்காரம், தூய வடியவர்
பன்னி ஆதரித் தேத்து
திருவடிப்
பங்க யம்பொலி சேவை பணித்தருள்
நன்ன லம்பொலி சின்னவே
டன்பட்டி
நயந்த விக்னவி நாயக வள்ளலே.
(1)
கூடும் அன்பினில்
கும்பிட லுன்புகழ்
கூறல் நல்லடி யாருடன் கூடியே
பாடும் நற்பணி நின்திருப்
பூசனை
பண்ண லாதிய பற்றுறு மெளியனேன்
வாடும் வண்ண முலகியல்
வாசனை
வந்தி டாத வரமருள் செய்குவாய்
நாடு மன்பர்கள் சின்னவே
டன்பட்டி
நயந்த விக்னவி நாயக வள்ளலே.
(2)
ஈறி லாதபெ ருங்கரு
ணைக்கடல்
இணையி லாத வருள்மலை யென்றுனைக்
கூறும் வேத புராண
சரித்திரக்
கொள்கை யாலுன் குரைகழல் போற்றினேன்
மீறுந் துன்ப வழக்கில்
சழக்கினில்
மிளிர்ந்தி டாதருள் விரைவினி லீகுவாய்
நாறு பூம்பொழில் சின்னவே டன்பட்டி
நயந்த விக்ன விநாயக வள்ளலே.
(3)
பாட வைத்தனை நின்திருக்
கீர்த்தியை
பண்ண வைத்தனை நின்திருப் பூசனை
கூட வைத்தனை மெய்யடி
யார்க்குழு
குலவ வைத்தனை குருவருள் நோக்கமே
ஓட வைத்திலை யைம்புலச்
சேட்டையை
ஒழிய வைத்திலை துன்பினை ஒண்பதம்
நாட வைத்தருள் சின்னவேடன்
பட்டி
நயந்த விக்ன விநாயக வள்ளலே.
(4)
கற்ற கல்வியு முற்ற
பதவியுங்
கண்ணை மூடிடக் கால்தலை யின்றியே
உற்ற வன்பர் தமைமதி
யாமலே
உழன்றி டாதுன துண்மை யடியவர்
பெற்ற பண்புகள் பெற்றி
யுடன்பெறப்
பேணி னேனுன் திருவடித் தாமரை
நற்ற வத்தவர் சின்னவே
டன்பட்டி
நயந்த விக்ன விநாயக வள்ளலே.
(5)
எந்தை கந்தபி ரான்முன
மெம்மனை
எய்தக் கான்புக வேண்டலில் வேண்டிலன்
சந்த மாருளக் கோயிலில்
தங்கிடத்
தக்க தேமிக வேண்டினன் தங்கிடில்
பிந்த வோர்வரம் பேசுகி
லேன்சரண்
பிரிய மாயன்பர் பூசனைக் காம்மலர்
நந்த னம்பொலி சின்னவே
டன்பட்டி
நயந்த விக்னவி நாயக வள்ளலே.
(6)
பாலி யப்பரு வத்துனைப்
பூசனை
பண்ண வைத்தனை சற்குரு நாதரால்
மேலி யல்க்குக வேள்பதம்
போற்றிட
மிகவு மருளினை யாணவம் மேலிட
மாலி யல்ப்புவி யாசை
புகுந்திடா
வண்ணங் காக்க வணங்கி யடைந்தனன்
நாலி யல்ப்பொலி சின்னவே
டன்பட்டி
நயந்த விக்னவி நாயக வள்ளலே.
(7)
மண்ணில்ச் சீர்த்த
சிரவண மாபுரம்
வயங்கு ராமானந் தக்குரு நாதரால்
பண்ணு மாலயப் பாலமைந்
தின்னருள்
பாலித் தாயின்று பக்தர்கள் கோயிலை
வண்ண மாகப் புதுக்கினா
ரன்னவர்
மன்னு செல்வம் மலிதர யீகுவாய்
நண்ணு மைங்கர சின்னவேட
ன்பட்டி
நயந்த விக்னவி நாயக வள்ளலே.
(8)
போற்றி டற்காம் முனிவ
ரடியவர்
பொலியத் தண்டணி கைக்குக வேளமர்
ஏற்றி சைச்சிர வைப்பதி
யிலுயர்வு
எய்தும் சீர்க்கவு மாரம டாலய
மேல்தி சைக்கண்நல்
அன்பர்க ளேழிசை
மேவப் பாடிக்கொண் டாடிடு மேன்மைய
நால்தி சைப்புகழ்
சின்னவே டன்பட்டி
நயந்த விக்னவி நாயக வள்ளலே.
(9)
பெற்ற கைப்பொருள்
கொண்டுநின் கோயிலில்
பெரிய தாம்கருங் கல்பணி பொற்புடன்
மற்ற தாம்புது மூர்த்திகள்
மாண்புற
வயக்கிக் கும்ப மணம்மலி நீர்விழாப்
பெற்ற மாகச்செய்
யன்பர்க ளின்பப்
பேறு பெற்றிடு மாறருள் நீடுசீர்
நற்ற கைப்பதிச் சின்னவே
டன்பட்டி
நயந்த விக்ன விநாயக வள்ளலே.
(10)
கந்த மாமலர்ப் பாமலர்
மாலைகள்
கழலில் சூடக் கணித்தருள் வாய்சரண்
கந்த வேளருள் கண்ணருள்
பெற்றொளிர்
கந்த சாமிக் கவின்குரு தாள்துணை
வந்த னைத்தொழில்
செய்யும் சிரவையூர்
வந்த சுந்தரம் வாக்கிவை பாடுவார்
நந்தல் நீக்குக சின்னவே
டன்பட்டி
நயந்த விக்னவி நாயக வள்ளலே.
(11)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக