ஞாயிறு, 18 அக்டோபர், 2026

பெரிய நாயக்கன் பாளையம் மீனாட்சியம்மன் பஞ்சரத்தினம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

பெரிய நாயக்கன் பாளையம் மீனாட்சியம்மன் பஞ்சரத்தினம்

காப்பு

(நேரிசை வெண்பா)

நாடு புகழ்பெரிய நாயக்கன் பதியிலவிர்

பீடுபெறு சொக்கலிங்கப் பெம்மான்பால் - கூடுமுயர்

மீனாம் பிகையை விரும்பித் துதித்தைங்கைக்

கோன்நாடும் பாடலைநல் கும்.

(1)

நூல்

(நேரிசை வெண்பா)

பேசுநலம் நீடும் பெரியநாய்க் கன்பதிவாழ்

தேசுறுமீ னாம்பிகைப் பேர்த்தேவியே - மாசுபெறும்

நெஞ்சமுளேன் மெய்யன்பர் நேய பணிவுறச்செய்

தஞ்சமுற்றேன் நின்தாள் சரண்.                                 

(2)

(கட்டளைக் கலித்துறை)

சரணென் றுனைப்பணிந் தேத்தாம லிந்தச் சகத்துழலும்

முரணொன்று மென்றனை யாளத் திருவுளம் முன்னுவையோ

பரணொன்றும் வள்ளி மணாளனை யைங்கைப் பரனைப்பெற்றாய்

அரணம் பெரியநாய்க் கன்பதி வாழும்மீ னாம்பிகையே.                                           

(3)

(வெண்டளைக் கலிப்பா)

மீனக்கண் ணம்மேசீர் மேவுசொக்க லிங்கருடன்

ஞானத்தர் வாழ்பெரிய நாய்க்கன்றன் பேரூரில்

வானத்தர் போற்றிசெய மன்னு முன்னைப் போற்றுதற்கு

நானற்பி னோடுவந்தேன் நல்லருள்செய் தாண்டருளே.        

(4)

(இரட்டையாசிரிய விருத்தம்)

ஆண்டடியார் தங்களுக் கமரரும் புகழ்சீர்

                        அளித்தநின் சீர்விரும்பி

            அடியனே னுனருள் புகழ்ப்பாநு வன்றிடற்கு

                        ஆவலுற் றுத்துதித்தேன்

வேண்டதைய ளித்திடத் திருவுளமி சைந்தருள

                        வேண்டுமின் னும்தாமதம்

            விளைக்கவேண் டாஞ்ஞான சம்பந்த ரன்றுண்ண

                        மெஞ்ஞான வமுதளித்த         

நீண்டபுகழ் மறையாமல் நீயருளு மாறுன்றன்

                        நெஞ்சுமிசை வுறிலுன்றனை

            நீதமல ஈதெனநி கழ்த்தவல் லாரிந்த

                        நீள்நிலத் தில்லைகண்டாய்

தாண்டவம் செய்சொக்க லிங்கப்பி ரானுடன்

                        சார்பெரிய நாய்க்கநற்பேர்

            தகுபதியி லவிரும்மீ னாம்பிகைத் தேவியே

                        சலசநாபன் தங்கையே.                                  

(5)

(நேரிசை ஆசிரியப்பா)

தங்கநன் மலைச்சிலை தன்கையில் கொண்டு

சங்கரன் முப்புரம் தகித்தமாண் புனது

சார்புறு மிடக்கையின் றன்திற மன்றோ

சீர்பெறு மரனார்  சிறக்கும்நின் கழுத்தணி

வயங்கப் புனையும் மங்கல நாணின்

தயங்குமாண் பதனால் சார்பல்வா னவரும்

இறந்து மிறவா இன்பவாழ் வுற்றான்

சிறந்தகல் யாண சுந்தரத் திருப்பெயர்

பெற்றுத் திகழ்ந்த பெருமையைப் பெற்றான்

மற்றும்நின் னருள்பெறு மாண்புறு சித்தர்

அழியாத் தேக மவிர்ந்துபற் பலவாம்

செழிசீர் மலைக்குகை சேர்ந்துவாழ் கின்றார்

ஆதலால் நின்னை யடியனேன் வேண்டுதல்

யாதெனில் நின்றன் னின்னுள மிசைந்து

நாடதில்ப் பலரும் நலம்பெறப் புரிய

நீடருள் செல்வம் நிலவப் புரிவாய்

நலமவிர் பெரிய நாய்க்கன்பா ளையத்தில்

பலரும் கண்டு பரவிடு மாறு

கண்முன் காட்சி கனிவுடன் காட்டித்

திண்மையாய் ஒருசொல் செப்பி

உண்மையை உணர்த்தி, யானய்யவாண் டருளே!     

(6)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக