ஞாயிறு, 18 அக்டோபர், 2026

சிவஞானபாலைய சுவாமிகள் தோத்திரப் பதிகம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

சிவஞானபாலைய சுவாமிகள் தோத்திரப் பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

அயிலைப் புனைந்துபத்த ரன்பால்ப் பணிய

மயிலைச் செலுத்துகுகன் வாழும் - மயிலச்

சிவஞான பாலையப்பேர்த் தேசிகனா மண்ணல்

தவமார் அறியுந் தரம்.

(1)

நூல்

(அறுசீர்ச் சந்த விருத்தம்)

திருமே வும்கயி லைப்பர மேசன்

            திருவரு ளேனென்னும்

பெருவாய் மைக்கிணை யாகிச் சிவநெறி

            பெருமைத் தவநெறியும்

உருவா யுற்றதெ னச்சொலும் வண்ணம்

            ஒளிர்ந்தசி வக்கனியே

பருதிக் கிணையா யவிர்சிவ ஞான

            பாலைய மாமுனியே.                                     

(2)

நிகரற் றிடும்நின் தரிசனை காண

            நிலவுந் தொறும்நீசெய்

தகவா ரன்பும் பெருமித நண்பும்

            தமியேன் சாற்றரிதே

புகலென் றுனைவந் தடைவார் மகிழப்

            புரிபே ரருள்வண்மை

பகர்தற் குளதோ வுயர்சிவ ஞான

            பாலைய மாமுனியே.                                     

(3)

சிரவைப் பதிவாழ் யெங்குல தேவாத்

            திகழ்ரா மானந்தக்

குரவன் றனைநேர் வந்திடு வோருங்

            குலவிய நற்காட்சித்

தரமெம் கண்மு னின்றும்நி லாவுந்

            தகைமைத் தாமன்றோ

பரவும் புகழ்மிக் கவிர்சிவ ஞான

            பாலைய மாமுனியே.                                     

(4)

மயிலக் கிரியின்வி ழாவூ டென்றனை

            வருமா றுபணித்தே

நயமுற் றிடுசொற் பொழிவாற் றிடநீ

            நவிலுங் கனிவதனை

இயலில் தமியேன் சொலிமுற் றுவதோ

            எவர்நிற் கிணையாவார்

பயில்மெய்த் தவமே வியசிவ ஞான

            பாலைய மாமுனியே.                                     

(5)

அடல்வே லவன்வாழ் மயிலத் தினில்நீ

            அணியார் திருக்கோயில்

திடம்மே வச்செய் நசைமிக் கேற்றாய்

            செயல்செய் குழுஒன்றும்

இடமுற் றிடுமா றமைத்தாய் பணிமுற்

            றிடுமுன் சிவமானாய்

படர்தற் கருள்வா யுயர்சிவ ஞான

            பாலைய மாமுனியே.                                     

(6)

வடநாட் டுறும்நற் றலங்கண் டுவக்கும்

            வாஞ்சை மிகவுற்றாய்

திடமா ரருளாய்ச் சென்றுவ ணங்குஞ்

            சீரும் பொலிவுற்றாய்

வடமா மொழியுஞ் செந்தமி ழும்தெரி

            மாண்பார் பெரியோனே

படியும் வானும் புகழ்சிவ ஞான

            பாலைய மாமுனியே.                                                 

(7)

மென்மைப் பொருளே மேலெழும் வன்மை

            மேவும் பொருள்தாழும்

நன்மைத் தரம்காட் டும்துலை போல

            நண்ணுந் துறவுள்ளத்

தன்மைக் கிசைய வாடம் பரச்சீர்

            தாங்கா தெளிமையில்நீ

பண்ணத் திகழ்ந்தா யேசிவ ஞான

            பாலைய மாமுனியே.                         

(8)

கற்றவர் தாமும் நற்றதவர் தாமுங்

            கவின்மற் றவர்தாமும்

பெற்றிட வேண்டும் பெற்றிக ளன்பால்ப்

            பிறங்கக் கண்டுள்ளேன்

நற்றகை சால்வீ ராகம சைவர்

            நண்ணும் குருவானாய்           

பற்றறு முள்ளத் தாய்சிவ ஞான

            பாலைய மாமுனியே.                                     

(9)

ஏடணை மூன்றையு மெய்தா மல்ச்செய

            ஏற்கும் நெறியுண்டு

நீடறு விதமா முணவின் சுவையற

            நிற்குந் தகைமேலாம்

பீடவி ரந்நெறி பட்டம் பெற்றுப்

            பிறங்கு முதற்கொண்டு

பாடற வுற்ற சீர்ச்சிவ ஞான

            பாலைய மாமுனியே.                                     

(10)

ஞாலத் திடைவா ழைக்குறு கன்றென

            நவிலுன் திருமரபுஞ்

சீலத் துடனே மேவிப் போரூர்ச்

            சிதம்பர முனிமடமும்

கோலப் பொலிவார் மயிலக் கிரியுங்

            குளிர்பொம் மையபுரமும்

பாலித் திடநின் றருள்சிவ ஞான

            பாலைய மாமுனியே.                         

(11)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக