தவத்திரு
கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த
பெரிய
நாயக்கன் பாளையம் சொக்கலிங்கப் பெருமான் பதிகம்
காப்பு
(நேரிசை
வெண்பா)
நக்க னமர்பெரிய நாயக்கன்
பாளையம்வாழ்
சொக்கலிங்கப் பெம்மான்மேல்
சொல்துதிக்கு - மிக்கதுணை
சித்திபுத்தி மத்தியினில்
சீலமுடன் விளங்கும்
அத்தி முகன்திருத்தா
ளாம்.
(1)
நூல்
(எழுசீர்
ஆசிரிய விருத்தம்)
செம்பொனே அனைய மேனியும்
மழுமான்
திகழும்மேற் கரங்களு மடியார்
நம்பிடும் அபய வரதமார்
கரமும்
நற்றிருத் தாள்களு முமையுந்
தும்பிமா முகவன்
சோதரக் குகனுந்
தோற்றவந் தருள்செய்வாய் சூடும்
தும்பையாய் பெரிய
நாய்க்கன்பா ளையம்வாழ்
சொக்கலிங் கேச்சுரப் பரனே.
(2)
விடுத்திடாத் தவமும்
நின்திருத் தொண்டு
மேவும்மெய் யடியவர் பணியும்
அடுத்தவர்க் குதவு
மீகையு மருள
அணிகொள்வெள் விடைமிசை வருவாய்
எடுத்தவில் லுடனே
போர்செயும் விசயன்
எதிரினில் வேடனா யம்பு
தொடுத்தவா பெரிய நாய்க்கன்பா ளையம்வாழ்
சொக்கலிங் கேச்சுரப் பரனே.
(3)
செங்கனல் பொறியா
யன்றுவேல்க் குகனைத்
தேவர்தம் விருப்பமோத் தளித்து
வெங்கய முகனா தியர்தமை
வெல்ல
விடுத்தநின் புகழ்சொல லெளிதோ
அங்கயல் கண்ணி அம்மையோ
டவிர்ந்த
அண்ணலே விண்ணவர் போற்றுந்
துங்கனே பெரிய நாய்க்கன்பா
ளையம்வாழ்
சொக்கலிங் கேச்சுரப் பரனே.
(4)
தொல்லுல கிடத்தில்
மானிடப் படிவுந்
தூயநின் னடிமலர் போற்றும்
நல்லுணர் வதுவும்
தந்தனை இதற்கு
நான்செய்கைம் மாறுள தேயோ
அல்லுடன் பகலும்
நின்னுரு மறவாது
அகத்தினில் நினைக்குமா றொருசொல்ச்
சொல்லுவாய்ப் பெரிய
நாய்க்கன்பா ளையம்வாழ்
சொக்கலிங் கேச்சுரப் பரனே.
(5)
நாடுணர் தரவே நின்தலந்
தோறும்
நண்ணியின் தமிழ்த்துதிப் பதிகம்
பாடுமோர் நால்வர்
போலவென் றனையும்
பணித்திடத் திருவுள மிசைவாய்
கோடுகள் பலவற் றினுமுயர்
வெள்ளிக்
குன்றெனும் கயிலையாய் கொன்றை
சூடுவாய் பெரிய நாய்க்கன்பா ளையம்வாழ்
சொக்கலிங் கேச்சுரப்
பரனே.
(6)
மங்கல மாக மாதரா
ரணியும்
வளையலை விற்கவம் மானாய்ச்
சங்கம்மீ தேறி வாதிட
வுயர்ந்த
மாணிக்கம் விற்றிட அந்நாள்
அங்கயல் கண்ணி தன்னுடன்
விளங்கும்
ஆலவாய் நாய்க்கனா யவிர்ந்த
துங்கனே பெரிய நாய்க்கன்பா
ளையம்வாழ்
சொக்கலிங் கேச்சுரப் பரனே.
(7)
சூதிய லமணர் வாதையை
அகற்றத்
துகளில்சீர் ஞான சம்பந்தர்
வாதியற் றிடநின்
னருளிசை வறிந்த
வாதினில் வென்றியை வழங்கிப்
பூதியோ டக்கும் சைவநன்
னெறியும்
பொலிவுறப் புரிந்திடும் புனித
சோதியே பெரிய நாய்க்கன்பா
ளையம்வாழ்
சொக்கலிங் கேச்சுரப் பரனே.
(8)
மைந்தனை விரும்பி
மகம்புரிந் திட்ட
மலயநல்த் துவசபாண் டியன்றன்
சிந்தனை மகிழத் தடாதகை
யாகத்
தோன்றிய மலைமகள் தன்னைச்
சொந்தமா மணக்கக்
கயிலையை விட்டுத்
தூயசீர் மதுரைசேர் சோம
சுந்தரா பெரிய நாய்க்கன்பா
ளையம்வாழ்
சொக்கலிங் கேச்சுரப் பரனே.
(9)
நேயமோ டுன்னை வழிபடு
மன்பர்
நுவலும்நின் னருள்பெற வேண்டிக்
காயமீ தக்கு மாலையும்
நீறும்
கவின்றிடப் புரிவர்நீ மதுரைச்
சேயநற் பதியில் மணம்பெற
மனிதத்
திருவுருக் கொண்டதே னருளார்
தூயனே பெரிய நாயக்கன்பா
ளையம்வாழ்
சொக்கலிங் கேச்சுரப் பரனே.
(10)
மிகவள மாகக் கமுகெனக்
கழைநீள்
வியனுறுங் கொங்குநன் நாட்டில்
தகவவிர் கோவைப் பதிக்கணி
யாகத்
துலங்கிடும் பதிபல வற்றுள்
அகமகிழ் வுடனே மீனநோக்
கவிரும்
அம்மையோ டநுதின மவிர்வாய்
துகளிலாப் பெரிய
நாய்க்கண் பாளையம்வாழ்
சொக்கலிங் கேச்சுரப் பரனே.
(11)
நூற்பயன்
அரவுடன் தும்பை யாத்திவெண்
திங்கள்
அணிந்தவே லவன்கண பதிமால்
விரவிய கடவுள் குழுவுட
னுமையும்
விளங்கிடக் கோயில்கொள் சிறப்பால்ச்
சுரர்புகழ் பெரிய
நாய்க்கன்பா ளையம்வாழ்
சொக்கலிங் கேச்சுரப் பரனைச்
சிரவையி லவிருஞ்
சுந்தரன் புகல்பாத்
துதிப்பவர் மதிப்புடை யவரே!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக