தவத்திரு
கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த
பூராண்டாம்பாளையம்
முத்துக்குமாரசாமி போற்றிப் பதிகம்
(அறுசீர்
ஆசிரிய விருத்தம்)
கொங்குநாட் டவரே
போற்றி
கோதிலா வமுதே போற்றி
கொங்குவே ளாளா போற்றி
குளிர்மாட குலத்தாய் போற்றி
தங்கர சூராய் போற்றி
தாயுடன் வந்தாய் போற்றி
மங்கல யெலமார் போற்றும்
மாதவா போற்றி போற்றி.
(1)
மாடுகள் மேத்தாய்
போற்றி
மாணருள் பெற்றாய் போற்றி
காடுகள் தோறும் போற்றிக்
கடவுளை நினைந்தாய் போற்றி
நீடருள் பெற்றாய்
போற்றி
நிலையினில் நின்றாய் போற்றி
கூடுமா பட்டி மாட்டைக்
கொணர்ந்தவா போற்றி போற்றி.
(2)
சோதனைக் கஞ்சாய்
போற்றி
தீமழு யெடுத்தாய் போற்றி
வாதனை தீர்த்தாய்
போற்றி
வந்தவர்க் கருள்வாய் போற்றி
நாதனே யென்றும் போற்றி
நல்முக வளித்தாய் போற்றி
கோதுதீர்த் தாளும்
முத்துக்
குமாரனே போற்றி போற்றி.
(3)
காடையங் குலத்தார்
போற்றி
கட்டிய மமைத்தாய் போற்றி
வாடைநோய் தீர்ப்பாய்
போற்றி
வல்விடம் தொலைப்பாய் போற்றி
நீடுடல் தடிப்புத்
தன்னை
நீக்குவாய் போற்றி போற்றி
நீடருட் பூராண் டானூர்
நிமலனே போற்றி போற்றி.
(4)
நீறுதந் தாள்வாய்
போற்றி
நிகழ்தீர்த்த மளிப்பாய் போற்றி
கூறுகைத் தறியாண்
போற்றக்
குறைதவிர்த் தாண்டாய் போற்றி
வீறுநற் குதிரை போற்றி
விளங்கிட வைத்தாய் போற்றி
தேறுசீர் பூராண்
டாப்பேர்த்
திருத்தலம் போற்றி போற்றி.
(5)
தறிக்குழி யேற்றாய்
போற்றி
சத்திவேல் வைத்தாய் போற்றி
நிறுத்துவேல் பூசை
போற்றி
நீள்மர பமைத்தாய் போற்றி
உறித்தவர் செய்யும்
பூசை
உவந்தனை போற்றி போற்றி
பொறுத்துவேல் வடபால்
போற்றி
பொருந்தினாய் போற்றி போற்றி.
(6)
வேல்வணச் சிவனே போற்றி
விளங்கும் ஐங்கரனே போற்றி
வேலணி குமரா போற்றி
விளங்கியல் கோயில் போற்றி
மால்தவிர்த் தருள்வாய்
போற்றி
மாதவத் தினனே போற்றி
சால்திருப் பூசை
கொண்ட
தன்மையாய் போற்றி போற்றி.
(7)
பற்றுசீர் பூராண்
டாப்பேர்
பதியுளாய் போற்றி போற்றி
பொற்புறு ஐவேல் கொண்ட
பூசையாய் போற்றி போற்றி
நற்றிரு நீறு தீர்த்தம்
நயந்தவா போற்றி போற்றி
நற்றவ முத்துக் குமார
நாயக போற்றி போற்றி.
(8)
பண்பனே போற்றி போற்றி
பக்தனே போற்றி போற்றி
நண்பனே போற்றி போற்றி
நாதனே போற்றி போற்றி
கண்மணி போற்றி போற்றி
கருணையாய் போற்றி போற்றி
மண்பணிந் தேத்தும்
எங்கள்
மாதவா போற்றி போற்றி.
(9)
மாதவத் தையன் போற்றி
மலரடி இணைகள் போற்றி
காதலால் வந்து பொங்கல்
கவின்பூசை செய்வோர்க் கெல்லாம்
தீதகன் றின்பம் நல்கும்
சிற்பரா போற்றி போற்றி
ஏதம்நீத் தருள்க
போற்றி
எங்களைக் காத்தாள் போற்றி.
(10)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக